யாருங்க அது கேனக்கூ....?!

எம்.ஜி.ராமச்சந்திரன், குண்டுராவ் முதலமைச்சரா இருந்தப்போ அவரோட வீட்டுக்கு சாப்பிட போயிருந்தாராம். அங்கே சிக்கன், மட்டன்னு எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டுன நம்ம எம்.ஜி.ராமச்சந்திரன் குடிக்கிறதுக்காக வச்ச ஒரு டம்ளர் தண்ணிய மட்டும் குடிக்க மாட்டேன்னு மறுத்துட்டாராம். என்னன்னு கேட்டா, காவிரி தண்ணீர் இல்லாம தமிழனெல்லாம் கஷ்டப்படுறான்... நான் உன் வீட்டுக்கு வந்தாகூட அந்த தண்ணீரை சாப்பிடமாட்டேன்னுட்டாராம். எம்.ஜி.ராமச்சந்திரனின் தமிழுணர்வு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் அதே வேளையில், மேற்படி மட்டன், சிக்கனெல்லாம் எந்த தண்ணீரில் சமைக்கப்பட்டது என்கின்ற இயல்பான கேள்வி எழுகிறது. ஒருவேளை முல்லைத் தமிழ் மணக்கும் நெல்லைச்சீமை தாமிரபரணியிலிருந்து குண்டுராவ் பிரத்யேகமாக தண்ணீரை வரவழைத்து சமைத்து கொடுத்திருப்பாரோ?! கேக்கறவன் கேனைக்கூ....ண்ணா புறட்சித்தமிளங்கய்ங்க கேப்பையில நெய் வடியுதும்பாய்ங்க... நாமளும் கூட்டமா வந்து நக்கிட்டு போக வேண்டியதுதாங்...

Comments

மகா கேவலமாகப் பேசினானப்பா. சரியாச் சொன்னே.
G.Ragavan said…
அந்தப் பேச்சைக் கேட்டப்போ தோணுனது இதுதான். :) ஆனா இதுல ஒரு நுண்ணரசியல் இருக்குறதாத்தான் படுது. ஏன்னா... காவிரிப் பிரச்சனை எம்.ஜி.ஆர் காலத்துல வெளிய வராம இருந்துச்சு. அதுக்கு அவரு தனிப்பட்ட நட்பு விவகாரங்கள் மூலமாவே பேசித் தீத்திருப்பாரோ... விஷயம் வெளிய தெரிஞ்சாத்தானே... ரெண்டு பக்கமும் அரசியல்வாதிங்க பேசுனாத்தானே பிரச்சனை பெருசாகும்!

இது ஊகந்தான்...எம்.ஜி.ஆர் காலத்துல என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியாது.
Boston Bala said…
கோழி சாப்பிட்டதை சிக்கன் என்று மாற்றிய புரட்டுத்தனத்தை கண்டிக்கிறேன்
selventhiran said…
கோவி.கண்ணன், ரமேஷ் அண்ணா, ராகவன், பாலா வருகைக்கு நன்றி.

கோழி சாப்பிட்டதை சிக்கன் என்று மாற்றிய புரட்டுத்தனத்தை கண்டிக்கிறேன்// வீடியோவை திரும்ப கேட்டேன். சிக்கன்னுதான் புறட்சிதமிளன் சொன்னாருங்க...
உட்காந்து யோசிபிங்க்களோ

வால்பையன்
மைக்கைக் கண்டாலே புரச்சிக்கு போதை தலைக்கேறிடும் போலிருக்கு!.
"அதிகமா சம்பளம் வாங்கறவனுக்கு அதிக கைத்தட்டல்,குறைஞ்ச சம்பளம் வாங்கறவனுக்கு குறைஞ்ச கைத்தட்டல்.".உனக்கென்யா இத்தனை காண்டு.வக்கிருந்தா நீயும் வாங்கு.உனக்கு வக்கில்ல வயித்தில அடிச்சிக்கோ! நல்லா சம்பளம் கொடுத்த காலத்தில நீ பெரியார் படத்தில நடிக்கல.வீட்டில சும்மா வுக்காந்து ஈ ஒட்டுறப்போ தானே.வெற வழியில்லாம நடிச்சே!.சாமி வேஷம் போட்டவன் சாமியாரதில்ல.பெரியார் வேஷம் போட்டதால நீ ஒண்ணும் பெரியாரில்ல.எதப் பத்தி பேசணுமோ அத மட்டும் பேசணும்.மத்ததப் பற்றி உன் வீட்டில மட்டும் பேசு.
மேகம் மிதந்தாலும். . .
காகம் பறந்தாலும். . .
ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு. . . .
செல்வேந்திரன்,
நமீதா சம்பளத்த விட தன் சம்பளம் கம்மியா இருக்கேங்கிற ஆதங்கத்துல தான் அவரு ஒரு மாதிரியா பேசி இருக்காரு.

நமீதா பேர சொன்னா ஜனங்க கை தட்டுவாங்களா மாட்டாங்களா. . . ?

அதனால தான் அவர் பேர சொல்ல மாட்டேன்னு பேசி இருக்காரு. தப்பா நினைக்காதீங்க.
selventhiran said…
நமீதா சம்பளத்த விட தன் சம்பளம் கம்மியா இருக்கேங்கிற ஆதங்கத்துல // அடப்பாவமே த்சோ... த்சோ...
Anonymous said…
செ(சொ)ல்வேந்திரன் டச் :)
selventhiran said…
வாங்க சேவியர் சார்...
அவரு தேநீர் குடிக்கலீங்களா?
அவரு தேநீர் குடிக்கலீங்களா?
selventhiran said…
இளா அப்படியே குடிச்சாலும் கங்கா தீர்த்தத்து காபியாத்தான் அது இருக்குமே தவிர காவிரித்தண்ணீரா இருக்காது.
selventhiran said…
மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் ஜெனோவா படத்தின் மூலம் நுழைந்ததிலிருந்தே மகோன்னதமான நடிப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார்.! ரிலீஸான காலத்தில் நான் பிறந்தே இராத போதிலும, அந்தப் படத்தின் திரைப்படச் சுருள் நைந்து போயிருந்த நிலையில் அந்தப் படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.! அந்தப் பட டைட்டிலில் 'ராம்சந்தர்' என்று போடுவார்கள்.
பிறகு அவரது திரைவாழ்வில் ஏறுமுகத்தைத் தவிர எதையுமே அவர் சந்தித்ததில்லை!
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரைக்கும் அவரின் நடிப்புத் திறன் தென்னகம் முழுவதையும் தன் வசப்படுத்தி வைத்திருந்தது!
என் வாழ்வின் மகத்தான சோகம், அவர் இறுதியாக நடித்த அண்ணா நீ என் தெய்வம் படம் ரிலீஸ் ஆகாததுதான்! இனி என்ன ஆனாலும் நான் செத்தால் என் ஆன்மா கரையேறாது!
அவரது அரசியல் வாழ்க்கையும் அபாரமான சாதனைகளை உள்ளடக்கியது. உலகத்திலேயே முதல் முறையாக சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்! ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார்! அவரது மேடைப் பேச்சுகளும் ஒவ்வொருவரையும் சிந்திக்கவைக்கும்! ஓர் அசம்பாவிதத்தால் உச்சரிப்பில் சிறிது தடங்கல் இருந்தாலும் மிகவும் தெளிவாக, சுற்றிவளைக்காமல் தன் கருத்துகளை வெளியிடுவார்! இறுதி வரை எதிரிகளால் எதிர்கொள்ளப்பட முடியாத சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்!
ஆட்சிக் காலத்தில் அவரோ அவர் தலைமையின் கீழ் நாடாண்டவர்களோ இம்மியளவும் ஊழல் செய்யாதது சமகாலச் சரித்திரம்! அவரைத் தானைத் தலைவராக ஏற்றுக்கொண்ட செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களும் தலைவரின் வழியில் ஆட்சி நடத்த வழிவகுத்துவிட்டுப் போனார்!
அந்த மகானை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது!‌‌
- ரமேஷ் வைத்யா
Anonymous said…
superoo........

Popular Posts