இன்கிரிமென்ட் பெற இனிய வழிகள்!

விசாரித்துப் பார்த்ததில் அப்பரைசல் பேப்பர்களைக் கிழித்து காது குடைவதுதான் உலகியல்பு என்பது தெரியவருகிறது. சாதித்துக் கிழித்தெல்லாம் ஊதிய உயர்வு பெறும் யதார்த்த காலகட்டத்தைத் தாண்டி பின் நவீனத்துவ யுகத்தில் வாழ்கிறோம். பயமுறுத்தியோ அல்லது பரிதாபப்பட வைத்தோதான் சல்லி பெயர்த்தாக வேண்டும். நெடுநாள் ஆய்வுகளுக்குப் பின் எனது லட்சோப லட்ச வாசகர்களுக்காக சில டிப்ஸூகளை வழங்குகிறேன்.


1) ‘ஹேங்க் ஓவர்’-ல் வரும் தாடிக்காரன் போல தோற்றம் மாறுகிறவரைக்கும் முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், தலை சீவுதல் ஆகிய நான்கினையும் தீவிரமாக கைவிடல் வேண்டும். உங்களது பார்வை டிஷ் ஆண்டனா போல் வான் நோக்கியோ அல்லது தெரு விளக்கு போல தரை நோக்கியோ மட்டும் இருக்கட்டும். ‘ஏன் தம்பி சேவிங் பண்ணலையா’ எனக்கேட்கும் எவரிடமும் ‘காசில்லை சார்...’ என கூசாமல் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

2) பரணில் ஏறி தாத்தாக்களின் பழைய பட்டன் போன சட்டைகளைத் தேடி எடுத்து அணிய வேண்டும். பித்தான்கள் இல்லாத இடங்களில் ஊக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இம்முறையில் ஒரு சட்டைக்கு குறைந்தபட்சம் 4 ஊக்குகளேனும் இருத்தல் உசிதம்.

3) ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை மேலாளரின் வீடு தேடிப் போய் ‘சார்... பழைய சட்டை, பேண்ட் எதுனா இருந்தா கொடுங்க சார்...’ என கேட்டு கலவரப்படுத்தலாம்.

4) உங்களது மேஜையில் மானேஜர் கண்ணில் படும்படி சீசன் டவல், டூத் பிரஷ், டூத் பேஸ்ட், சோப்பு டப்பா, சீயக்காய் பொடி ஆகியவற்றை அடுக்கி வைத்துக்கொள்ளவும். என்ன தம்பி இது என பரிவுடன் விசாரித்தால் ‘வீட்டுல தண்ணி பில் கட்டி ஆறு மாசம் ஆச்சி சார்... இப்ப இங்கனதான் சார் குளியல்’ என பதிலளிக்கவும்.

5) சாயங்காலம் மணி 5:00-ஐ தொட்டதும் மின்னல் வேகத்தில் ஆபிஸிலிருந்து ஓடி மறையவும். ‘ஏம்பா அவ்வளவு சீக்கிரம் கெளம்பற’ என விசாரித்தால், ‘சாயங்காலம் 6:00 டூ 11:00 ஒரு தட்டுக்கடையில பார்ட் டைம் ஜாப் பாக்கிறேன் சார்’ என பதில் சொல்லலாம்.

6) அலுவலக கார் பார்க்கிங் ஏரியாவில் ஒரு கூடையைக் கவிழ்த்து 4 கோழிகளை வளர்க்க ஆரம்பிக்கவும். அப்புக்குட்டி ஸ்டைலில் அவற்றை வாஞ்சையோடு வளர்த்து அலுவலகத்திற்குள்ளேயே முட்டை வியாபாரம் ஆரம்பிக்கவும்.

7) அடிக்கடி மேனேஜருக்கு போன் செய்து, ‘சார், பெட்ரோல் இல்லாம மவுண்ட்ரோட்டுல நிக்கிறேன்; யார்கிட்டயாச்சும் ஒரு 20 ரூபா கொடுத்து அனுப்புங்கன்னு’ சொல்லனும்.

8) அலுவலகத்திற்கு சாப்பாடு எடுத்து வரும் டப்பர் வேரை கடாசி விட்டு தூக்கு வாளியில் ‘தண்ணியும் பழையதுமாக’ எடுத்து வரவும். மானேஜர் சாப்பிடச் செல்லும் நேரமாகப் பார்த்து, டைனிங் டேபிளில் அவருக்கு எதிரில் அமர்ந்து கொள்ளவும். அவர் கொண்டு வந்திருக்கும் பொரியல், அவியல் சமாச்சாரங்களில் சரிபாதியை கேட்டு வாங்கி சாப்பிட வேண்டும்.

9) டேபிளில் நல்ல ஆங்காரமான காளி படம் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். போட்டோவின் அடியில் ஏராளமான குங்குமத்தை கொட்டி வைத்து அதன் மீது ஒரு எலுமிச்சையை வைத்துக்கொள்ளவும். டேபிளின் இடது ஓரத்தில் மலையாள மாந்தீரிக போதகம், ஏழே நாட்களில் ஏவல் கற்றுக்கொள்ளுங்கள் போன்ற புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொள்ளுதல் நல்ல பலன்களைத் தரும்.

10) இணையத்திலிருந்தும், நாளிதழ்களிலிருந்தும் ‘வாண்டட்’ விளம்பரங்களை சேகரம் செய்து சக ஊழியர்கள் அனைவருக்கும் நாளொன்றுக்கு 15க்கும் குறையாமல் மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டும். தவறாமல் மேலாளருக்கு சிசி போடவும்.

11) எப்போதும் பாய்சன் விலை எவ்வளவு; சயனைடு எங்க கிடைக்கும்; தூக்கு போட கயிறு எவ்வளவு முழம் வேண்டும் என்று விசாரணையை முடுக்குதல் உடனடி பலன் தரலாம்.

12) கம்பெனி சார்பில் நடத்தப்படுகிற ‘பால் ரூம் பார்ட்டிகளுக்கு’ வீட்டிலிருந்து பாத்திர பண்டங்களை கையோடு எடுத்து வரவேண்டும். பார்ட்டி நடக்கும்போதே பாத்திரங்களில் உணவுப்பொருட்களை வாங்கி அடைக்க வேண்டும்.

13) பேச்சில் எப்போதும் நகரில் பிரபலமான பள்ளிகள், கல்லூரிகள் இவற்றின் பிரின்ஸிபால், தாளாளர்கள் பெயர் அடிபடட்டும். எப்படியும் மகளுக்கு சீட்டு, மச்சானுக்கு சீட்டு என இவன் உதவி தேவைப்படும் என மேலாளர்கள் பவ்யம் காட்டுவார்கள்.

14) ‘உயிர் காக்க உதவுங்கள்’ பாணி அட்டைகளை தயார் செய்துகொள்ளவும். (சாம்பிள் அட்டைகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கிடைக்கும்; நானே தயாரித்து கொடுக்கவேண்டுமெனில் காப்பிரைட்டிங் செலவினங்கள் தனி) லிஃப்டிற்குள் நுழைந்ததும் உள்ளிருப்போரிடம் மவுனமாக வினியோகியுங்கள். (ஒரிருவர் பழக்கதோசத்தில் சில்லறை தருவார்கள்)

15) முகநூலில் ‘உடல் உறுப்புகள் விற்பனைக்கு... சிறுநீரகம் - 2 லட்சம் (இரண்டையும் வாங்குவதாக இருந்தால் 20% சிறப்பு தள்ளுபடி!); கல்லீரல் - 3 லட்சம்; ரத்தம் லிட்டர் ஒன்றுக்கு - ரூ.2,475/-’ என அறிவியுங்கள்.

எதற்கும் மசியவில்லையெனில் ‘அன்னா ஹசாரே... எனக்க சின்னையாக்க மவந்தானேன்னு’ சொல்லிப் பாருங்க...!’

Comments

Prabu Krishna said…
ஹா ஹா ஹா ஹா ஹா

முடியல ஸார் எதையும் தனியாக குறிப்பிட முடியவில்லை எல்லாமே சூப்பர்.

இன்கிரிமெண்ட் கிடைக்க இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கணும் போல.
Chitra said…
‘ஹேங்க் ஓவர்’-ல் வரும் தாடிக்காரன் போல தோற்றம் மாறுகிறவரைக்கும் முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், தலை சீவுதல் ஆகிய நான்கினையும் தீவிரமாக கைவிடல் வேண்டும். உங்களது பார்வை டிஷ் ஆண்டனா போல் வான் நோக்கியோ அல்லது தெரு விளக்கு போல தரை நோக்கியோ மட்டும் இருக்கட்டும். ‘ஏன் தம்பி சேவிங் பண்ணலையா’ எனக்கேட்கும் எவரிடமும் ‘காசில்லை சார்...’ என கூசாமல் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.


...... முதல் பாயிண்ட்லேயே சிக்சர். !!!
Anonymous said…
///15) முகநூலில் ‘உடல் உறுப்புகள் விற்பனைக்கு... சிறுநீரகம் - 2 லட்சம் (இரண்டையும் வாங்குவதாக இருந்தால் 20% சிறப்பு தள்ளுபடி!); கல்லீரல் - 3 லட்சம்; ரத்தம் லிட்டர் ஒன்றுக்கு - ரூ.2,475/-’ என அறிவியுங்கள்.///

ஃபைனல் வின்னிங் ஷாட்... சூப்பர்
great.. cant stop laughing..
அருமை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
தராசு said…
எப்பிடிங்க இதெல்லாம் யோசிக்கிறீங்க....
DR said…
பதிவு அருமையா இருக்குது. ஓட்டு குத்துறதுக்கு கையி பர பரங்குத்து... ஓட்டுப் பெட்டியையே காணோமே...
எனக்கு இங்கிரிமெண்ட் கூட வேண்டாம். இதைப் படிச்சப்போ வந்த சிரிப்பே போதும்.
தாங்க முடியலை.பாவம் அந்த டேமேஜர்.
sakthi said…
அச்சோ பாவம் ::(((
விஜி said…
:))))))))) இப்படித்தான் இன்கிரிமெண்ட் வாங்கினியா? தாடியோட திரியும் போதே நினைச்சேன் :)))))
vaanmugil said…
ஹா ஹா இதுல எதாவது ஒன்னு பண்ணி ஜெயச்சுபுடனும்ங்க!
அடடா!இப்பிடில்லாம் வழியிருக்கிறது தெரியாம மாங்கு மாங்குன்னு வேலை செய்துக்கிட்டிருக்கேனே!!!!
இன்னும் தம்பியோட ஆபீசில இன்க்ரிமென்ட் பத்தி பேச்சே வரலையோ...
செம காமெடியாக, மண்வாசனை கமழ எழுதியிருக்கிறீங்க பாஸ்,
ரசித்தேன்.
sriram said…
Hahaha!.. Loved it dude. :))
jalli said…
nalla irykku manakkalan supper ithey
paniyil ezhuthunka.
jalli said…
jallipatty palanisamy ikku parithapappattathrku nantri.uurukku
vaanga selva, pattai saarayamum, nattukozhi varuvalum ready pannurean.
sooria said…
Really nice you understand contemporaneity....in India
// ஏழே நாட்களில் ஏவல் கற்றுக்கொள்ளுங்கள் போன்ற புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொள்ளுதல் நல்ல பலன்களைத் தரும். //

செம பாயிண்ட்டு, இதுக்கே பயந்துடுவார்....

நம்ம தளத்தில்

அறிய படங்களின் தொகுப்பு-1

நாங்களும் லிங்க் போட கத்துகிட்டோம்ல....
mani said…
vara companyku poda ,,.....
வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு கண்கள் முட்டுகிறது அடக்கி வைத்த சிரிப்பு ...............யாருமற்ற இடம் தேடிகொண்டிருகிறேன் அடக்கி வைத்த சிரிப்பை இடியென கொட்டி தீர்க்க ......................நகை செய்ய வருதுங்க உங்களுக்கு
சூப்பர் நிச்சயமா வேலைய வுட்டு தூக்கிருவாங்க! :D

Popular Posts