ஒரு விசாரணை

சொன்னதைச் செய்யாவிட்டால், காத்திருக்க வைத்தால் – ‘யோவ்…நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா?’ என்கிறாள் கேண்டி. ‘யோவ்’-ல் காதல் பாதி; கடுப்பு மீதி;

‘நீ ஏவே என்றழைக்கும் ஒவ்வொரு கணமும் உழுத நிலத்தில் அம்மணமாய்ப் புரண்டெழுந்த உணர்வெனக்கு’ என எப்போதோ படித்த கவிதை நினைவில் ஆடுகிறது. இவ்வளவு அசலான கவிதையை சுயம்புலிங்கமோ அல்லது மகுடேஸ்வரனோதான் எழுதியிருக்க முடியும்.

***

துடியலூர் துவங்கி மேட்டுப்பாளையம் வரையிலான சாலையின் இருமங்கிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை விரிவாக்கத்தின் பெயரால் வீழ்த்துவதுதான் அடுத்த அஜெண்டா. மரம் வெட்டும் ஏலம் எடுக்க வந்தவர்கள் ஒன்றல்ல..நூறல்ல...மூவாயிரம் பேர்கள்! இத்தனைக் கூட்டத்தில் ஏலம் நடத்த முடியாது என ஒத்தி வைத்து விட்டார்கள்.

தென் மாவட்டங்களில் சாராயநதி பிரவாகமெடுத்தபோது ஜாங்கிட் அவதரித்தார். சாராய ஊறல்களை அழித்ததோடு காய்ச்சிப் பிழைப்போர் மறுவாழ்வுக்கும் வகை செய்தார். அதைப்போலவே உடனடியாக மரம் வெட்டிப் பிழைப்போர் மறுவாழ்வு மையம் துவங்கியாக வேண்டும் போல இருக்கிறது.

பழைய ஜன்னல், கதவு, நிலைகளை விற்கும் கடைகள் ஊருக்கு நூறு இருக்கிறது. கொள்வாரில்லை. வீடு கட்டுகிறவர்கள் பத்து வட்டிக்கு வாங்கினாலும் புதுமரம் வெட்டித்தான் கட்டித் தொலைக்கிறார்கள். ஒரு பழைய கதவை வாங்கினீர் என்றால் ஒரு பெரு மரத்தின் மரணத்தை தள்ளிவைத்தீர் என்று பொருளய்யா...!

மர விஷயத்தில் என்னை விடவும் வீணாய்ப்போன ஆர்வலர் ஆர்.எஸ். நாராயணன் சொல்வனத்தில் அற்புதமாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

***

சென்னையில் எனக்கு பாஸ்கர் அண்ணாவைத் தவிர வேறு போக்கிடம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது. ஒருவாரம் சென்னையில்தான் இருப்பேன். உங்களுக்குச் சவுகர்யப்படும் நேரத்தில், சவுகர்யப்படும் இடத்தில் சந்திக்கலாம் என்று பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். தாமிரா மட்டும் ‘சந்திக்க முடியாது; பிஸியாக இருக்கிறேன்’ என்று பதில் அனுப்பினார். ’அண்ணே’, ‘சகா’, ‘தம்பீ’, ‘தல’, ‘பாஸ்’ போன்ற நுனிநாக்குச் சக்கரையை உண்மையென்று நம்பினது என் தப்புத்தானே.

‘நீ நட்பில் பெட்ரோல் ஊற்றி வளர்க்கிறாய்’ என்பது கேண்டியின் குற்றச்சாட்டு. ‘முறைவாசல்’ சரியில்லை என்கிறது மனதின் குரல்!

***

பாஸ் அண்ணா புண்ணியத்தில் பரிக்ஷாவின் ‘ஒரு விசாரணை’ நாடகத்தைப் பார்க்க முடிந்தது. நவீன நாடகங்களை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. கதாபாத்திரங்களின் காலடியில் சம்மனமிட்டு நாடகம் பார்ப்பது புதுமையான அனுபவம்.

1945ல் ஜே.பி. பிரீஸ்ட்லீ எழுதிய ‘அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ்’ நாடகத்திற்கு ஞாநி தமிழ்வடிவம் கொடுத்திருக்கிறார். எழுதப்பட்டு 65 ஆண்டுகளாகியும் நாடகத்தின் பொலிவு கெடாமல் இருப்பது சமூகத்தின் குற்றம். மேல்தட்டு வர்க்கத்தின் மனசாட்சியைக் கேள்விக்குட்படுத்தும் பிரீஸ்ட்லீயின் கேள்விகள் இன்றளவும் தீர்க்கப்படாமல்தான் இருக்கின்றன.

சிறுகதை ஒன்றினை லயித்து வாசிப்பது போலவும், நாடகத்தின் ஒரு பாத்திரமாகவே இருப்பது போலவும் தோன்றியது. அனைவரும் பிரமாதப்படுத்தி இருந்தனர். மொழிபெயர்ப்பு வாடை அடிப்பது பிரக்ஞையோடு செய்த காரியம் எனப்படுகிறது.

நாயகி ஜெயந்தியின் கூர்நாசியும், அதில் மின்னும் மூக்குத்தியும், ஐம்பது தடவைக்கும் மேல் அவர் சொன்ன ‘நெனைச்சிப் பாக்கவே ரொம்பக் கேவலமா இருக்குப்பா’ வசனமும் இன்னும் நினைவில் வாழ்கிறது.

Comments

vaanmugil said…
//வீடு கட்டுகிறவர்கள் பத்து வட்டிக்கு வாங்கினாலும் புதுமரம் வெட்டித்தான் கட்டித் தொலைக்கிறார்கள். ஒரு பழைய கதவை வாங்கினீர் என்றால் ஒரு பெரு மரத்தின் மரணத்தை தள்ளிவைத்தீர் என்று பொருளய்யா...! //

புது வீட்டுக்கு டிஸ்டி கழிக்க முதல் பலி மரம் தான்!
Athisha said…
எனக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம்.

மற்றபடி ஒருவிசாரணை நாடகத்திற்கு நானும் வந்திருந்தேன். உங்களை இருட்டில் பார்க்க தவறியிருக்கலாம்.

அடுத்த முறை சென்னை வரும்போது மெயிலவும் நிச்சயம் சந்திக்கலாம்.
// ’அண்ணே’, ‘சகா’, ‘தம்பீ’, ‘தல’, ‘பாஸ்’ போன்ற நுனிநாக்குச் சக்கரையை உண்மையென்று நம்பினது என் தப்புத்தானே //

ஆள் வச்சு உங்கள அடிக்காம விட்டது தப்புத்தான்!னு இப்ப அவங்க நினைச்சிருப்பாங்க :)
Thamira said…
பகிர்வு வழக்கம் போல சிறப்பு.

எனினும் 'நுனி நாக்கு சாக்கரை' பதப்பிரயோகம் நண்பர்களைக் காயப்படுத்தக்கூடும். நகர வாழ்வின் அவலங்கள் ஓரளவு புரிந்த நீங்களே இவ்வாறு எழுதியிருப்பது தவறு.
selventhiran said…
ஆதி, பார்க்க வரத்தானேய்யா அலைக்கழிக்கும் அன்றாடம்! மெயிலுக்கு ரிப்ளை பண்ண என்ன கேடாம்?!
மணிஜி said…
எனக்கு எதுவும் மெயில் வரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.(ஆனால் பேசின நியாபகம்)
செல்வா,

நீங்கள் சென்னை வருவது பற்றி பதிவிட்டதும்
நிச்சயம் உங்களைச் சந்திக்க வேண்டுமென நினைத்திருந்தேன்..

அதே ஆதி சொன்ன காரணமாக‌ சந்திக்க முடியாமல் போயிற்று.
விரைவில் கோவையிலோ/சென்னையிலோ சந்த்திப்போம்..

அன்புடன்,
மறத்தமிழன்.
சந்திக்க இயலாது என்று கூற மெயிலா என்றெண்ணம் கூட இருக்கலாம் இல்லையா?

போகட்டும். நம்ம செல்வாதானே...
//’அண்ணே’, ‘சகா’, ‘தம்பீ’, ‘தல’, ‘பாஸ்’ போன்ற நுனிநாக்குச் சக்கரையை உண்மையென்று நம்பினது என் தப்புத்தானே.//


இதுக்காக ஈரோடு வர்றப்ப சொல்லாம இருந்திருராதிங்க!
Romeoboy said…
எனக்கு மெயில் வரலையே ...
//அண்ணே’, ‘சகா’, ‘தம்பீ’, ‘தல’, ‘பாஸ்’ போன்ற நுனிநாக்குச் சக்கரையை உண்மையென்று நம்பினது என் தப்புத்தானே.

‘நீ நட்பில் பெட்ரோல் ஊற்றி வளர்க்கிறாய்’ என்பது கேண்டியின் குற்றச்சாட்டு. ‘முறைவாசல்’ சரியில்லை என்கிறது மனதின் குரல்!
//

ஒரு கேடும் இல்லை செல்வேந்திரன். ஆனால் ஒன்று சொல்ல வேண்டிய நிலை ஏனெனில் நானும் நீங்கள் குறிப்பிட்ட நுனிநாக்கு சக்கரை இடத்தில் இருப்பதால்...

இதுபோன்ற இரண்டு மூன்று நபர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு பொத்தாம் பொதுவாக ஒரு மடலை “இந்த தேதியில் இருந்து இந்த தேதி வரை இங்கே இருப்பேன்” போன்ற வாசகங்களுடன் வரும்போது சரி யாரேனும் பதில் அளிப்பார்கள் என்று எல்லோரும் விட்டுவிடுவது சகஜம்தான். ஏனெனில் Neither you give importance nor the people mentioned in mail.

எல்லோரும் கையில் பிடித்துகொண்டேதான் அழைகிறோம்-மொபைலை. அழைக்கும்போது எடுக்கமுடியவில்லை என்றாலும் மறுபடியும் அழைத்துப்பேச தவறியதில்லை.

இங்கே சக்கரைகள் அனைவருமே எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஒரு போனில் எங்கேனும் பார்த்துக்கொள்கிறோம்.
selva i'm neither got mail nor in chennai.

so i'm escapped................
செல்வேந்திரன், நண்பர்களுக்கு மெயில் அனுப்பும் பொழுது இப்படி ரிப்ளே வராமல் இருந்தால் கஷ்டமாக தான் இருக்கும், ஆனால் நண்பர்களில் "அண்ணே" அவர் பிஸியாக இருந்தாலும் சகாக்களிடம் சொல்லி செவ்வனே ஏற்பாடுகள் செய்வார், அதுபோல் "தல"யும், மூன்று முறை வந்தபொழுதும் அவசரமாக மனைவி மட்டும் வந்த பொழுது ஆள் அனுப்பி கடைசிவரை கூடவே இருந்து உதவியது மட்டும் இன்றி ட்ரையின் ஏற்றி வழி அனுப்பும் வரை கூட இருந்தவர்கள். இதுவரை அவர்களை பற்றி பொதுவில் சொன்னது இல்லை இப்பொழுது தான் முதல் முறையாக சொல்கிறேன்.
Unknown said…
//பார்க்க வரத்தானேய்யா அலைக்கழிக்கும் அன்றாடம்! மெயிலுக்கு ரிப்ளை பண்ண என்ன கேடாம்?//

:-)
சொல்வனம் பற்றிய பகிர்வுக்கு நன்றி்.
இதெல்லாம் தான் acid test.
இப்போதாவது தெரிகிறதா என்னை?
பனிக்கட்டியைக் குளிர்ப் பெட்டியில் வைக்காமல் கொடும் வெயிலில் உருக்கி விட்டீரே!
//நானெல்லாம் மாசத்துக்கு ஒரு தடவ மெயில் செக் பண்றவன்!?//
நர்சிம் said...
//அண்ணே’, ‘சகா’, ‘தம்பீ’, ‘தல’, ‘பாஸ்’ போன்ற நுனிநாக்குச் சக்கரையை உண்மையென்று நம்பினது என் தப்புத்தானே.

‘நீ நட்பில் பெட்ரோல் ஊற்றி வளர்க்கிறாய்’ என்பது கேண்டியின் குற்றச்சாட்டு. ‘முறைவாசல்’ சரியில்லை என்கிறது மனதின் குரல்!
//

ஒரு கேடும் இல்லை செல்வேந்திரன். ஆனால் ஒன்று சொல்ல வேண்டிய நிலை ஏனெனில் நானும் நீங்கள் குறிப்பிட்ட நுனிநாக்கு சக்கரை இடத்தில் இருப்பதால்...

இதுபோன்ற இரண்டு மூன்று நபர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு பொத்தாம் பொதுவாக ஒரு மடலை “இந்த தேதியில் இருந்து இந்த தேதி வரை இங்கே இருப்பேன்” போன்ற வாசகங்களுடன் வரும்போது சரி யாரேனும் பதில் அளிப்பார்கள் என்று எல்லோரும் விட்டுவிடுவது சகஜம்தான். ஏனெனில் Neither you give importance nor the people mentioned in mail.

எல்லோரும் கையில் பிடித்துகொண்டேதான் அழைகிறோம்-மொபைலை. அழைக்கும்போது எடுக்கமுடியவில்லை என்றாலும் மறுபடியும் அழைத்துப்பேச தவறியதில்லை.

இங்கே சக்கரைகள் அனைவருமே எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஒரு போனில் எங்கேனும் பார்த்துக்கொள்கிறோம்.
மின்மடல், தொலைபேசி அழைப்பு எதுவும் செய்யாமல் திடீர் பயணமாய் கோவை வந்தபொழுது, என்னை அன்புடன் அழைத்துச்சென்று சக பதிவ நண்பர்களுடன் கலந்துரையாட வைத்து உபசரித்து, விடாமல் கலாய்த்துக் கொண்டிருந்த செல்வாவின் நட்பும் சஞ்சயின் அறையும் நினைவிற்கு வருகிறது..
Manikandan AV said…
சரி விடுங்க பாசு!
பெங்களுர் வந்தா மறக்காம சொல்லி அனுப்புங்க.
விருந்தே வச்சுறலாம்! :)
நீங்க கோவையிலே எங்கே இருக்கீங்க, வந்தால் சந்திக்கலாம்னு ஒரு எண்ணம் தான்.

ஆமா என்ன தொழிலிலே இருக்கீங்க? சாப்ட்வேரா?