குருட்டு கும்ப்ளே


கும்ப்ளே. வேகமும் இல்லாத, போதிய சுழற்சியும் இல்லாத இரண்டும் கெட்டான் பவுலர். தோல்வியின் விளிம்பில் இருந்த ஆட்டத்தை மந்திரப் பந்து வீச்சினால் வெற்றியின் பக்கம் திருப்பிய வரலாறு எதுவும் இல்லை. ஆசிய துணைக்கண்டத்தைத் தாண்டி வேறெந்த மைதானத்திலும் பருப்பு வெந்தது இல்லை. கிரிக்கெட்டிற்கு சற்றும் தொடர்பில்லாத சோம்பேறித்தனமான உடல் மொழி. வெற்றிக்கான வேட்கையை அவரது முகத்தில் ஒருபோதும் கண்டதில்லை. உலகின் மிக மோசமான பீஃல்டர்களுள் ஒருவர். கேட்சுகளை அடிக்கடி தவற விடுவதால் எங்கள் வட்டாரத்தில் 'குருட்டு கும்ப்ளே' என்ற பட்டப்பெயர் பிரபலம். ஆனாலும் ஆனாலும் பதினெட்டு ஆண்டுகளாக இந்திய சுழற்பந்து வீச்சின் முகமாக அறியப்பட்டவர் கும்ப்ளே. சர்வதேச அளவில் வார்னே, முரளீதரன் போன்ற ஜாம்பவான்களுக்கு இணையானவராகவே கடைசிவரை கருதப்பட்டவர்.

டைட்டன் கோப்பையின் போது ஸ்ரீநாத்துடன் சேர்ந்து அற்புதமாக பேட் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்ததும், நாடியில் காயத்திற்குக் கட்டுப்போட்டு வந்து பெளல் செய்து லாராவை அவுட் ஆக்கியதும், சயீத் அன்வர் சேப்பாக்கத்தில் அவரை நாயடி அடித்து காயப்போட்டதும், அதே பாகிஸ்தானுக்கு எதிராக பத்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியதும் எப்போதும் மறக்காத 'கும்ப்ளே மெமரீஸ்'.

கும்ப்ளே தன் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அப்பழுக்கற்ற ஜென்டில்மேனாக இருந்தார். ஒழுக்கமும், சுயகட்டுப்பாடும், எதிரணியினரோடு பழகும் விதமும், சர்ச்சைகளற்ற நெடிய வாழ்வும், பந்தின் மீதான அவரது ஆழுமையும் இளம் கிரிக்கெட்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை. தற்போது இந்திய அணியின் அதிகாரப்பூர்வ புகைப்படக்காரராக இருக்கும் கும்ப்ளே, அதே பணியைத் தொடர்ந்தால் அணிக்கும் அவருக்கும் பிரிவுத் துயர் இருக்காது. கும்ப்ளேயின் ஓய்வுக்காலம் இனிமையானதாக இருக்க ஒரு சாமான்ய தெருமுனைக் கிரிக்கெட்டரின் "வாழ்த்துகள்"

Comments

ரவி said…
கடைசி இரண்டு பத்தி அற்புதம்...

கும்ப்ளே ஒரு ஸ்பின் பவுலர் அல்ல...அவர் ஒரு மீடியம் பாஸ்ட் பவுலர் ஹி ஹி !!
Anonymous said…
// தோல்வியின் விளிம்பில் இருந்த ஆட்டத்தை மந்திரப் பந்து வீச்சினால் வெற்றியின் பக்கம் திருப்பிய வரலாறு எதுவும் இல்லை. ஆசிய துணைக்கண்டத்தைத் தாண்டி வேறெந்த மைதானத்திலும் பருப்பு வெந்தது இல்லை. //

எதற்கு இப்படியெல்லாம் எழுத வேண்டும்? 'எனக்கு புள்ளி விவரம் எதுவும் தெரியாது' என்று எல்லாருக்கும் சொல்லனுமா?

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நார்தாம்ப்டன்ஷேருக்கு அவர் ஆடி அந்த சீஸனின் சிறந்த பந்து வீச்சாளராக சில்வர் ஸ்டெம்ப் வாங்கியிருக்கிறார். 619 விக்கெட்டுகளில் கிட்டத்தட்ட 300 விக்கெட் வெளிநாட்டில்தான்.

ஏனோதானோன்னு எழுதிட்டு 'பந்தின் மீதான அவரது ஆழுமையும் இளம் கிரிக்கெட்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை' அப்படின்னு எழுதினா என்ன அர்த்தம்? பருப்பு வெந்ததில்லையாம், மேட்ச் ஜெயித்ததில்லையாம், ஆனால் பந்து மீதான ஆழுமையாம் தேவுடா!
selventhiran said…
வாங்க ரவி... வருகைக்கு நன்றி.

அணாணி, நீங்கள் கவுண்டி ஆட்டங்களில் அவர் வாங்கிய சில்வரைப் பற்றி சிலாகித்திருக்கிறீர்கள். விக்கெட் பந்து வீசும் எவர்க்கும் கிடைக்கும். எந்த மாதிரியான விக்கெட்டுகளை, எந்த மாதிரியான தருணங்களில் வீழ்த்தினார் என்பதே பவுலரின் இருப்பை அதிகரிப்பது.

அப்புறம் பந்தின் மீதான் ஆழுமை என்பது குறித்து:

கும்ப்ளேவால் பந்தினை வேறெந்த சுழற்பந்து வீச்சாளர்களைக் காட்டிலும் அதிகமாக பவுன்ஸ் செய்ய முடியும். தொடர்ந்து பந்து வீசும் ஸ்டெமினா (பாக்கிஸ்தானுக்கு எதிரான இன்னிங்ஸில் தொடர்ந்து வீசினார்)போன்றவற்றை மனதில் வைத்து எழுதியது....
Anonymous said…
கும்ப்ளே ஒரு ஸ்பின் பவுலர் அல்ல...அவர் ஒரு மீடியம் பாஸ்ட் பவுலர் ஹி ஹி !!

-- Repeat


Nakul
Anonymous said…
//அப்புறம் பந்தின் மீதான் ஆழுமை என்பது குறித்து://

யோவ், அது ஆளுமைய்யா. சுட்டிக் காமிச்சாலும் மாத்த மாட்டேன்னு எழுதறீங்க.

//எந்த மாதிரியான தருணங்களில் வீழ்த்தினார் என்பதே பவுலரின் இருப்பை அதிகரிப்பது//

எழுதறது எப்படி வேணா எழுதலாம், ஆனா அப்படி என்னத்த பருப்பை வேகாம பாத்தீங்கன்னா அதுக்கு டேட்டா கொடுக்கனும். அத்த விட்டுட்டு அதையே திருப்பி திருப்பி பேசிட்டு இருக்கறதில அர்த்தமே இல்லை.

Popular Posts