பகிர்கிறேன்
1) வள்ளியூரில் ஒரு பாதிரியார் விபச்சாரியிடம் தொடர்பு கொண்டிருந்தார். சேதாரத்திற்கான செய்கூலி வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் விபச்சாரியை அடித்துக் கொலை செய்து விட்டார்.
2) மூலக்கரைப்பட்டியில் ஒரு பாதிரியார் வெளிநாட்டில் வேலை செய்கிற கணவன்மார்களின் மனைவியரைக் குறி வைத்து களியாட்டங்கள் நிகழ்த்தி வருகிறார்.
3) நெல்லையில் ஒரு பாதிரியார் வேலைக்கார பெண்ணிடம் 'சபை குப்பையாக இருக்கிறது...கொஞ்சம் சுத்தம் செய்' என்றாராம். கூட்டிப் பெருக்க குனிந்த பெண்ணை பின்னால் நின்று அணைத்து வம்பு செய்தார்.
மேற்கண்ட காமரசம் சிந்துகிற கதைகள் 'ஆன்மீக சமுதாய இதழ்' என்ற அறைகூவலுடன் வெளியாகும் 'பசுத்தாய்' இதழில் இடம் பெற்றிருந்தவை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இராம. கோபாலன்!
***
'மாற்றத்தை விரும்பினால் அதை உன்னில் இருந்தே துவங்கு' என்பார்கள். உருவாகி இருக்கும் பஞ்சத்தை எதிர்கொள்ள தங்களது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 20 சதவீதத்தினையும், வெளிநாட்டுப் பயணங்களையும் குறைத்துக்கொள்ள முன் வந்திருக்கிற காங்கிரஸின் முடிவு பாராட்டுக்குறியது. இதுமாதிரியான முடிவுகள்தாம் மக்கள் மனதில் ஆள்வோரை இடம் பிடிக்க செய்யும்.
***
'பொஸ்தகமெல்லாம் மேட்டரே இல்ல. பாராளுமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பிறகு கட்சித்தலைமை மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதான் சமயம் பார்த்து சாக்குப் போட்டுட்டாய்ங்க...' என்பதுதான் டெல்லி பத்திரிகையாளர்களின் அபிப்ராயமாக இருக்கிறது. பதிவர்கள் சார்பாக தனி நபர் உண்மை அறியும் குழு நொய்டாவிலிருந்து கிளம்பி சென்றிருக்கிறது :)
***
தினமும் இரண்டு மணி நேரம் என மூன்று நாட்கள் வகுப்பிற்கு ஏழாயிரம் ரூபாய் கட்டணம் வாங்குகிறார் தோழி விஜிராம். இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டுக்கு எழுதிப் போட்டிருக்கிறேன் :)
***
வேய்ன் டையரின் 'ஸ்கை இஸ் தி லிமிட்' நூலினைப் படித்து 'பிரசெண்டேஷன்' கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் படித்தேன். அவர் எழுப்பும் கேள்விகளுள் ஒன்றினை உங்கள் முன் வைக்கிறேன்.
Are you away from time robbers?
***
முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகிக் கொள்..
என்கிற தண்டோராவின் கவிதை என்னை ஈர்த்தது. பகிர்ந்து கொள்கிறேன்.
***
"வால்பையன், குசும்பன், கோட்டிக்காரன் என்றெல்லாம் புனைப்பெயர்கள் வைத்திருப்பவர்களை எனக்குப் பிடிப்பதில்லை. இவர்கள் வால்பையனா இல்லையா என்பதை இவர்களே எப்படி தீர்மானிக்க முடியும்? கவிப்பேரரசு, ஜனங்களின் கலைஞன், இளைய தளபதி போன்ற சுய முடிசூட்டுதல்களுக்கு கொஞ்சமும் குறைவானதல்ல இவை" - இப்படிச் சொன்னவர் க.சீ. சிவக்குமார்.

Comments
rasiththeen nanba
Most of the time No.....!
Very few (infact one or two time).....Yes
When reading interesting things lke......yours......
ஐய்யா என் பெயர் பித்தன்...... இது நானாக வைத்துக் கொண்டது இல்லை, சிறிது நேரம் என்னுடன் பேசினாலோ அல்லது என் பதிவுகளைப் படித்தாலோ உங்களுக்கேப் புரியும் என் பெயர் காரணம்.....
இது எப்படி இருக்கு....? அது.....!
இத காமெடி மேட்டர் இதுவரக்கும் தெரியாம போயிடுச்சி. தமிழ்ல நல்ல காமெடி பத்திரிகை இல்லையென வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன்.
//வெளிநாட்டுப் பயணங்களையும் குறைத்துக்கொள்ள முன் வந்திருக்கிற காங்கிரஸின் முடிவு பாராட்டுக்குறியது.//
வெளிநாட்டில் சேர்க்கும் பணத்தையும் குறைத்துக்கொள்வது என முடிவு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
//'ஸ்கை இஸ் தி லிமிட்' படித்தேன்.//
நல்லதை பகிந்துக்கொள்ளுங்கள்.
//தண்டோராவின் கவிதை என்னை ஈர்த்தது. பகிர்ந்து கொள்கிறேன்//
யதார்த்தமான கவிதை. நண்பரின்மேல் எப்போதும் தனி பிரியம் உண்டு.
//சுய முடிசூட்டுதல்களுக்கு கொஞ்சமும் குறைவானதல்ல இவை//
பெயர் வைத்துக்கொள்வது ஒரு ஐடென்டிடிக்காகத்தான், பட்டத்துக்காக அல்ல...
பிரபாகர்.
நல்லா சொன்னாரு போங்க..
இதை சொன்னா நம்மளை பைத்தியகாரங்பாய்ங்க
பிரேமானந்தா பண்ணிய லீலைகள் அந்த பத்திரிக்கையில் வராதா!?
ஹாஹாஹா!
இந்த சிவக்குமார் ப்ளாக்கரா!?
இந்த வாங்கு வாங்குறார்!
அவரது ப்ளாக் ஐடி கிடைக்குமா தல!
//
நல்லவேளை நான் சிவக்குமார் அண்ணன்கிட்ட இருந்து தப்பிச்சேன். நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் எம்.எம்.அப்துல்லா :))
யாருங்க அது?
//மூன்று நாட்கள் வகுப்பிற்கு ஏழாயிரம் ரூபாய் கட்டணம் வாங்குகிறார் தோழி விஜிராம்//
என்ன பண்ணறார். யோகாவா?
ம்...... அப்புறம் எங்க பேரெல்லாம்?
அடுத்த ரவுண்டுக்கு சட்டை கையை மடிச்சு விட்டாச்சு போல.......
நடக்கட்டும்....
வர வர அவர மாதிரி ஆயிட்டிருக்கீங்க செல்வா......
விஜி, எஸ்.ஏ.பி எனப்படும் சாப் மென்பொருள் கன்சல்டண்ட். அவர் செய்கிற நூற்றுக்கணக்கான வேலைகளுள் ஒன்றுதான் மேற்கண்ட பயிற்சி வகுப்பும். திருப்பூர் பதிவர்களுக்கு ஈரவெங்காயம் எப்படியோ அப்படித்தான் கோவை பதிவர்களுக்கு விஜிராமும்.
நன்றி மண்குதிரை!
வாங்க பித்தன். உங்களுக்கான ஒரு போட்டியாளரை சீக்கிரத்தில் அறிமுகப்படுத்துகிறேன்.
பகிர்வுக்கு நன்றி பிரபாகர்
வாங்க கார்த்திகேயன் ஜி
யோவ் வால், என்ன கிண்டலா...?! விகடனில் 'குமார சம்பவம்' எழுதுகிற எழுத்தாளர் க.சீ. சிவக்குமார்யா அது.
வாங்க தண்டோரா
அசோக், ஊர்க்காட்டுல நம்மள விசாரிச்சி பாருங்க... மொத்த ஊரே கோரஸா சொல்லும் 'சல்லிப்பயவுள்ள'ன்னு
மயில், தள்ளுபடியெல்லாம் இருக்கட்டும். ஒழுங்கா வருமான வரி கட்டுங்க...
எம்.எம்.அண்ணே, 'இணைய இளவரசன்னு' அன்னிக்கு சொன்னீங்களே?!
நன்றி சிவக்குமரன்...
நானும் இதைப்போன்ற கதைகளை இவ்விதழில் படித்துள்ளேன். எதுக்காக இவங்க இத மாதிரியான செய்திகளை சொல்றாங்கன்னுதான் தெரியல.
நல்ல பகிர்வு அன்பரே...
கல்யாணமாமே? வாழ்த்துகள் :)))
தினமும் இரண்டு மணி நேரம் என மூன்று நாட்கள் வகுப்பிற்கு ஏழாயிரம் ரூபாய் கட்டணம் வாங்குகிறார் தோழி விஜிராம். இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டுக்கு எழுதிப் போட்டிருக்கிறேன் :)
//
அண்ணே நடத்துங்க.. நடத்துங்க..
வாழ்க உங்கள் சேவை..
டிபார்ட்மெண்ட்ல இருந்து கமிசன்கிமிசன் வருமா..
எம்புட்டு கெஞ்சுனாலும் மெட்ராசுல இருக்க முடியாத சீவன் தானே அது..
பாசகி said...
கல்யாணமாமே? வாழ்த்துகள் :)))
/
வாழ்த்துக்கள்!
அதுமாதிரிதான் அவங்களும் வால்,குசும்புன்னு வச்சுக்கிறாங்க :)
பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடறான்...... :-)))
Congress party has said 20% expenses they would reduce but for Rajiv Ghandhi's birthday they spent a lot , 30+ minsiters visited chennai (flight cost, Taj hotel food expenses) to show their loyalty to sonia.
//
க்கும்.இப்ப அது ஓன்னுதான் எனக்கு குறைச்சல் :)
நல்ல ‘பகிர்கிறேன்'...
பாலியல் தொழிலாளி என்கிற சொல் அவர்களின் மீது படிந்திருக்கும் ஆண்களின் வக்கிரப் புத்தியை சற்றுக் குறைந்திருக்கிறார்போல் ஒரு நம்பிக்கையைத் தரும்.மனிதம் சமூகம் என்றெல்லாம் பேசும் நீங்கள் இவ்வார்த்தையை பயன்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது.(அந்த புத்தகத்தில் அப்படித்தான் இருந்தது/கிறது என்கிற போதிலும்)
க.சீ சிவக்குமாரைப் பற்றி முதன் முறையாய் இங்கு பகிரும்போது சொல்ல வேரெதுவும் கிடைக்கவில்லையா என்ன?பிறர்களை பற்றி இன்னொருவர் சொன்னதையெல்லாம் எழுதாமல் இருப்பது எல்லாருக்குமான நேர்மைச் செயல்.
விஜிராம் என்பது பெண் பெயராய் இருப்பதால் என்ன க்ளாஸ் என்பதையும் சேர்த்து சொல்லிவிடுவது நல்லது.
அந்த சவத்து மூதி சல்லிப்பயலிடமிருந்த எழுத்துப் பொறுப்பு இப்போதெல்லாம் காணாமல் போய்விட்டிருக்கிறது.
வாழ்க பிரபலங்கள்..
ஆனா, நண்பர்கள் இப்படி கூப்பிட்டதால இந்த பேர நான் வச்சிகிட்டேன்க. அதோட நான் நல்லாவே ஊரும் சுத்துவேன். :)
சென்னையில எந்த இடத்திற்கு எந்த பேருந்துல போகணும்னு 70% சரியா சொல்வேன்னு நினைக்கிறேன்.
மத்தபடி,
இராம.கோபாலன் அவர்களுக்கு நன்றி.
ஏதாவது சொங்கி கதை படிச்சவங்க, இதுக்கு பதில் சொல்லலாமா :)
:)
குழந்தைக்கு "அழகு"ன்னு பேர் வெக்கரதில்லயா? "உன் பிள்ளை அழகான்னு ஊர் பஞ்சாயத்துதான் முடிவு பண்ணும்"ன்னு சொன்ன எப்டி? நிஜத்துல எப்புடியோ, பேர்லயாவது "அழகு" இருக்கட்டுமேன்னு வெக்கறது தான் .
அது சரி, "பித்தன்", "கிறுக்கன்" - இந்த ப்ளோக்கர்கள் கீழ்பாக்கத்தில் போய் சர்டிபிகேட் வாங்கணுமோ?
அது சரி, "பித்தன்", "கிறுக்கன்" - இந்த ப்ளோக்கர்கள் கீழ்பாக்கத்தில் போய் சர்டிபிகேட் வாங்கணுமோ? //
எனக்கும் சப்போர்ர்டுக்கு ஒரு ஆள் இருக்கு!
இனி சூப்ரீம் கோர்ட் வரைக்கும் போவேன்!
No, i am right now giving in to one!
//அது சரி, "பித்தன்", "கிறுக்கன்" - இந்த ப்ளோக்கர்கள் கீழ்பாக்கத்தில் போய் சர்டிபிகேட் வாங்கணுமோ? //
:-))))