ஆண்டவராகிய ஏசு பாகம் - 2

கோவை சித்தாபுதூரில், அற்புத சுகமளிக்கும் பேரின்ப பெருவிழாக்களை நடத்தி வரும் மதபோதகர் சார்லஸ். மூன்று மாதங்களுக்கு முன் திருச்சியிலிருந்து அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார் உடன்பிறந்த தம்பி செல்வகுமார். போன மச்சான் திரும்பி வரலியேன்னு அடிக்கடி போனில் விசாரித்திருக்கிறார் செல்வகுமாரின் மனைவி அனுராதா. அவர் ஊழியத்திற்கு போயிருக்கிறார். உடம்பு சரியில்லை என சார்லஸ் சொல்லி வந்த சால்ஜாப்புகளில் நம்பிக்கை இல்லாமல் தேடி வந்திருக்கிறார் இன்னொரு சகோதரர் ஆன ராஜேந்திரன். கதை இங்கேதான் டாப் கியர் எடுக்கிறது. வந்து பார்த்தவர் வீடு பூட்டியிருக்கிறதே என்று விசாரித்ததில் ஊழியத்திற்கு (அதாங்க அற்புத சுகம்) போயிருக்கிறார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. ஊர் திரும்பி இருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து திரும்பி வந்தபோதும் வீடு பூட்டியிருக்க அதே பதில் தான் வந்திருக்கிறது. 'ங்கொய்யால அது என்னடா மாசக்கணக்கா ஊழியம். பூட்டை உடைங்கடான்னு' உடைச்சு பார்த்தா உள்ளே ஆண்டவராகிய ஏசுவின் நேரடி மக்கள் தொடர்பாளர்களுள் ஒருவரான சார்லஸ் அவரது மனைவி, குழந்தைகள் எல்லாரும் ஒரு டெட் பாடிய சுத்தி உட்கார்ந்து அல்லேலுயா போட்டுகிட்டு இருந்திருக்காங்க.

டெட் பாடி யாரு? கரெக்ட். தம்பி செல்வகுமார்தான். போலீஸ்காரங்க வந்து நோண்டி நொங்கெடுத்ததில் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளது. ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஏதோ காரணத்திற்காக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கிறார் செல்வகுமார். போதகர் சார்லஸ் தன்னுடைய பிரார்த்தனையால் அவரை உயிர் பிழைக்க வைத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் குடும்பமாய் உட்கார்ந்து குமுறி இருக்கிறார் (அதாங்க ஜெபம்) அறுபது நாட்களாய். பிணம் நாறி விடாமல் இருப்பதற்காக சில மூலிகை எண்ணெய்களை உபயோகித்ததாக சொல்கிறார்கள் (அது என்ன மூலிகைங்க!) இந்த கூத்துக்கு ஹவுஸ் ஓனரும் உடந்தையாக இருக்கிறார். சார்தான் அறுபது நாட்களுக்கும் இந்த காமெடியன்களுக்கும் கதவிடுக்கு வழியாக உணவும், நீரும் வழங்கியவர். வெளிப்பக்கம் வீட்டைப்பூட்டி விட்டு, உள்ளே இறந்தவரை உயிர்த்தெழவைக்க நடந்த முயற்சியில் எனக்கு என்ன வருத்தம்னா? ஒரு வேளை உயிரோட எந்திரிச்சார்னா 'ஆண்டவராகிய ஏசு - பாகம் 2' கிடைச்சுருப்பாரு! கெடுத்துட்டாய்ங்க....

Comments

Anonymous said…
Aamen !!!!!!!!!!!
ஏசுவ ஏபா இழுகுறீங்க அவருக்குஇதுல சம்பந்நமில்ல.காசுசம்பாதிக்க,ஒவ்வோரு சமயத்திலேயும் இது நடக்குது.சமயம் என்னப்பா செய்யும்,எல்லா சமயங்களும் நல் வழியைத்தான் போதிக்கிறது.
Boston Bala said…
தலைப்பு டக்கர்!
selventhiran said…
வாலிபி, பாஸ்டன் பாலா சார் தங்களது வருகைக்கு மிக்க நன்றி.
ஏபா அதென்னா,
வாலிபி,எம.ஜி.ஆரை வாலிபனா கூபுட்டிங்க,வாதியாரு,தலைவர்னு சொல்லுல.ஒன்னு என்னை வாத்தியாரம்மானு சொல்லுங்க,இல்ல தலைவினு சொல்லுங்க.ஆமா.

Popular Posts