இப்படித்தான் இருக்கிறது வலைப்பூ உலகம்

வலைப்பூவில் எழுத ஆரம்பித்து சில நாட்கள்தான் ஆகிறது என்றாலும், வலை உலகத்தில் நடந்து வரும் சிலவற்றைக் கணிக்க முடிகிறது. வலை திரட்டிகள் வலிமை வாய்ந்த அமைப்பாக இருக்கிறது. பதிவர்களுக்கிடையே மூர்க்கத்தனமான அரசியல் இருக்கிறது. சில மூத்த பதிவர்கள் 'க்ளாஸ் லீடர்' போல நடந்து கொள்கிறார்கள். கொள்கைகளில் முரண்பட்டவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள். கடவுள் மறுப்பாளர்களாக அறியப்படும் பெரியாரிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தங்களது வலைப்பூவை படிக்க வைக்க சிலர் அடிக்கும் குரங்கு பல்டிகள் நகைக்க வைக்கிறது. 'ஹிட்ஸ்' களுக்காக அபத்தமாக தலைப்பு வைக்கிறார்கள். அளவுக்கதிகமான பதிவுகளை போட வேண்டும் என்பதற்காக 'இன்று மூத்திரம் மஞ்சளாக போனது' என்றெல்லாம் எழுதி இம்சிக்கிறார்கள். கொஞ்சம் முரண்பட்டு பின்னூட்டம் இட்டால், அவர்களை ஒழித்துக்கட்ட ரகசிய கூட்டம் போடுகிறார்கள். கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும் என சுஜாதா, தனக்கு நேர்ந்தது, உணர்ந்தது, ரசித்தது எல்லாம் கலந்து கட்டி எழுதும் கட்டுரைகளின் அப்பட்டமான பாதிப்புகள் கிட்டத்தட்ட எல்லாரிடமே இருக்கிறது. வலையின் ஓரே பலம் அதன் சுதந்திரம்; பலவீனம் கட்டுபாடற்ற எதேச்சதிகாரம். இதெல்லாம் இல்லாமல் எந்த இசங்களுக்கும் அரசியல்களுக்கும் ஆட்படாமல் நல்ல படைப்புகளை சத்தமில்லாமல் படைத்துக்கொண்டிருக்கும் பதிவர்களும் இருக்கிறார்கள். வெகுஜனப் பத்திரிக்கைகளில் பிரசுரமானால் பலத்த கவனிப்பை பெரும் தகுதியுள்ள எண்ணற்ற கவிதைள், கதைகள் வாசிக்க கிடைக்கின்றன. தற்போது வலையில் பிரபலமான பலரது கவிதைகள் ஆனந்த விகடன் போன்ற பலமிக்க ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வருவது பதிவர்களுக்கு உற்சாகம் அளிக்ககூடும்.

Comments

Anonymous said…
KASTAM THAN......
நீங்கள் (மட்டும் :) ) நமது சங்கத்தில் இருப்பதை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். ஆனால் சங்கம்தான் எங்கே இருக்கின்றது என்று எனக்குத் தெரிய வில்லை. நான் எவ்வளவு புத்திசாலி பார்த்தீர்களா? இங்கே பின்னூட்டம் இட்டு நமது சங்கத்தை விளம்பரப் படுத்தி விட்டேன். ஐயையோ சங்கத்து பேரைப் போட மறந்துட்டேனே....
selventhiran said…
செந்தில் உம்ம யாரோ கடத்திட்டாங்கன்னு நினைச்சு நான் பி2 ஸ்டேசன்ல கம்ளைண்ட் கொடுத்திட்டேன். எங்கய்யா போயிருந்திரு இவ்வளவு நாளா?
செல்வேந்திரன்!

அகம் அழகாயின் அனைத்தும் அழகாம். உங்கள் எழுத்து அழகாயிருக்கிறது.
தொடர்க!
வாழ்த்துக்கள்.
Anonymous said…
sir,
ungalin atrputhamana pathivugalai padithu magizhugintren.

Thangal rasithha tharamana(good--best)pathivugalai-um veliettal nandraga irukkum.

sundar
Anonymous said…
-- Don't Publish this --
செல்வேந்திரன் ரொம்ப அழகா இருக்கீங்க அழகாவும் எழுதுறீங்க

உங்க போட்டாவ எடுத்திடலாமே . . . . .
இல்ல இல்ல எடுத்திடுங்க. . . . .

அது தான் நல்லது.
சுஜாதாவின் பாதிப்பு வலைப்பூ எழுதும் அனைவருக்கும் இருக்கும், வாசகர்களாய் இருப்பதால். எனக்கென்னமோ அவர் கலந்து கட்டி எழுதுவதே வலைப்பூ அல்லது அதை ஒத்த ஊடகத்தின் பாதிப்பு எனத் தோன்றுகிறது.

ஆனால், நீங்கள் வலைப்பூ உலகை மிகச்சரியாக அவதானித்திருக்கின்றீர்கள்.
//எந்த இசங்களுக்கும் அரசியல்களுக்கும் ஆட்படாமல் நல்ல படைப்புகளை சத்தமில்லாமல் படைத்துக்கொண்டிருக்கும் பதிவர்களும் இருக்கிறார்கள்.//

Romba Pugazureenga!

Hihi! Koochama irukku!
எதுக்கு இத்தனை உணர்ச்சி வசப்படுறிங்க செல்வேந்திரன்(எதிர்பார்த்த அளவுக்கு உங்களுக்கு பின்னூட்டம் வரவில்லையா?) எழுதுவதை எழுதுங படிக்கிரவங படிக்க போறாங்க , படிக்கலைனாலும் ஒன்றும் நஷ்டமில்லை. சரியானது வென்றே தீரும். இன்று இல்லை ஆனாலும் என்றாவது.

வலைப்பதிவில் எழுதி இழப்பதற்கு எதுவும் இல்லை , பெறுவதற்கு கிடைத்தால் மகிழ்ச்சியே என பழகி விட்டால் , எளிதாக எடுத்துக்கொள்வீர்கள்.

உங்கள் பதிவை நாலுபேர் கவனிக்கவில்லை என்று வருத்தமா , கவலை வேண்டாம் , இதோ சில வழிகள்,

நீங்களே அதர் ஆப்ஷனில் போய் , வழுக்கி விழுந்தவன் ,வாந்தி எடுத்தவன் என்று கண்ட பெயர்களிலும் பின்னுட்டம் போட்டுக்கொள்ளுங்கள் , யாரும் உங்களை ஏன் என்று கேட்க மாட்டார்கள்!

இல்லை எனில் முட்டை பரோட்டா தின்போர் சங்கம் என்று போட்டு நாலு பேரை சேர்த்து கும்மி அடியுங்கள்!
செல்வேந்தி,

அது எப்படி அவ்வளவு தீர்க்கமாக எல்லோரிடத்திலும் காண்பதாக கூறமுடிகிறது?

அப்படியெனில் சுஜாதா என்ன திருக்குறல் எழுதிய வள்ளுவரா? நீங்கள் குறிப்பிட்ட எந்த சுஜாதா படைப்புகளையுமே படிக்காத மக்களும் தனது சுய சிந்தனையின் பொருட்டு எழுதியிருக்க வாய்ப்பே இல்லையென்றல்லவா பொருள்படுகிறது.

இருந்தாலும் நிரம்ப புத்திசாலியாக இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன்!!
செல்வேந்திரன்
நல்ல கட்டுரை
Anonymous said…
மிக நல்ல கட்டுரை.

பல விஷயங்களோடு ஒத்துபோகிறேன். சுஜாதா சாயலே இல்லாதவர்களும் பலர் இருக்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும் மிக நல்ல கட்டுரை.

எனக்கு ஒரு டவுட். ஏங்க ஒரு மனுஷன் ஆதங்கப்படக்கூடாதா?? தனி நபரை திட்டி தாக்கி பதிவு போட்டா கூட விட்டுடராங்க. ஆனா ஆதங்கமா ஏன்பா இப்படி இருக்குன்னு கேட்டா ரொம்ப உணர்ச்சி வசப்படறன்னு கேட்கறாங்க..

//நீங்களே அதர் ஆப்ஷனில் போய் , வழுக்கி விழுந்தவன் ,வாந்தி எடுத்தவன் என்று கண்ட பெயர்களிலும் பின்னுட்டம் போட்டுக்கொள்ளுங்கள் , யாரும் உங்களை ஏன் என்று கேட்க மாட்டார்கள்!

இல்லை எனில் முட்டை பரோட்டா தின்போர் சங்கம் என்று போட்டு நாலு பேரை சேர்த்து கும்மி அடியுங்கள்! //

இது ரொம்ப நல்லா இருக்கே.....
Anonymous said…
This comment has been removed by a blog administrator.

Popular Posts