மேலதிகாரியின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

ஒரு சிறுகதை எழுதினாலும் எழுதினேன். என்னை நடுரோட்டில் நிற்க வைத்து பாண்டை அவிழ்க்க வேண்டும் என்றெல்லாம் பதிவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, அவர்களது நீண்டநாள் பிரச்சனையான 'மேனேஜர் டார்ச்சருக்கு' ஒரு தீர்வு சொன்னால் மன்னித்து விடுவார்கள் என இப்பதிவை எழுதுகிறேன்.

1. பணத்திற்காக நீதான் இந்த வேலையை தேர்ந்தெடுத்தாய். உன்னுடைய சம்பளத்தை அவர்கள் தவறாமல் கொடுத்து விடுகிறார்கள். ஓ இவர்கள் என்னை அடிமை போல் நடத்துகிறார்கள் என ஏன் புலம்புகிறாய்?
2. சிறிய விஷயங்களையெல்லாம் ஏன் பெரிது படுத்துகிறாய்? யாரும் உன்னை அடிமைப்படுத்தவில்லை. இப்போதைய உனது சூழ்நிலை சாதகமாக இல்லையென்றால் அதற்கு வேறு யாரையும் குறை கூறாதே.
3. நீ அவர்களின் கீழ் வேலை செய்வதும் செய்யாததும் ஒரு பொருட்டு அல்ல. உன்னை விட்டால் அந்த வேலையை செய்ய நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
4. முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு. அப்போது உலகமே உனக்கு நல்லதாக தெரியும்.
5. பிறரிடம் குற்றம் காணும் பழக்கத்தை விட்டுவிடு. நீ வெறுப்பவர்கள் எல்லாம் படிப்படியாக உன்னை ஏற்றுக்கொள்வதை நீ காண்பாய்.

மேற்படி ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவதில் உதவியாக இருந்தவர் திரு. சுவாமி. விவேகானந்தர், மனிதவள மேம்பாட்டாளர்.

Comments

Anonymous said…
இந்த கதையில் ஜட்டியோ, ப்ராவோ இல்லை. அதனால் இந்த கதையை ஏற்றுக்கொள்ள முடியாது. கெட் அவுட். உடனே நல்லதொரு கதையுடன் வரவும். I really like your story. நிறைய எழுதவும். மற்றவர்கள் பற்றி கவலை வேண்டாம்.
//////////////////////////////////
நீண்டநாள் பிரச்சனையான 'மேனேஜர் டார்ச்சருக்கு' ஒரு தீர்வு சொன்னால் மன்னித்து விடுவார்கள் என இப்பதிவை எழுதுகிறேன்.
//////////////////////////////////

Sellathu, Sellathu. . . . .
selventhiran said…
பாத்தீங்களா வெங்கட்ராமன் இந்த உலகம் நம்மளை திருந்தவிட மாட்டேங்குறாங்களே
//என்னை நடுரோட்டில் நிற்க வைத்து பாண்டை அவிழ்க்க வேண்டும் என்றெல்லாம்//

அவிழ்த்தார்களா .. இல்லையானு சொல்லவே இல்லையே செல்வேந்திரன் சார்.. :))
வீ எம்

Popular Posts