குரங்கு புணர்ச்சி

தொடர்மழை ஓய்ந்து கொஞ்சம் வெயிலடிக்க ஆரம்பித்திருந்த ஒரு நாளில் ஊட்டிக்கு பயணித்துக்கொண்டிருந்தேன். நான்கைந்து நாட்களாய் இருப்பிடம் விட்டு தலைகாட்ட முடியாத குரங்குகள் பசியும், வெயிலும் தேடி ரோட்டோரங்களில் அலைந்து கொண்டிருந்தன. குரங்குகள் எனக்கு பிடிக்கும். சில குரங்குகள் விளையாடிக்கொண்டும், சில குரங்குகள் பேன் பார்த்துக்கொண்டும், சில பிறப்புறுப்பை நோண்டிக்கொண்டும் இருந்தது. பேருந்து ஒரு நிறுத்தத்தில் உணவிற்காக நின்றது. ஓட்டுனர் சாப்பிட்டு வருவதற்குள் கொஞ்சம் காலார நடக்கலாம் என கீழிறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தேன். ஆச்சர்யம் ஒரு பாறைக்கு பின்னே இரண்டு குரங்குகள் புணர்ந்து கொண்டிருந்தன. கடூர சப்தம் எழுப்பியபடி வரும் கனரக வாகனங்கள், வேடிக்கை பார்க்கும் மானிட கண்கள் குறித்து எந்த சலனமும் இன்றி இயங்கி கொண்டிருந்தன குரங்குகள். எதிர்பாராத இந்தக் காட்சியினால் திகைப்பும், ஆர்வமும் கொண்ட நான் இன்னும் கொஞ்சம் நெருங்கினேன். லேசாக தலையை தூக்கி ஒரு அலட்சிய பார்வை பார்த்த ஆண்குரங்கு (ஆணாகத்தான் இருக்க வேண்டும்) மீண்டும் இயங்க ஆரம்பித்தது.



பேருந்து ஓட்டுனர் ஹாரன் சப்தம் எழுப்பினார். ஓடிப்போய் பேருந்தில் இருந்த எனது பயணபையை எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டேன். 'தம்பி ஊட்டிக்கு இன்னும் ரொம்ப தூரம் போகனும்' என்றார் கண்டக்டர் கனிவுடன். தெரியும் சார் அடுத்த பஸ்ஸில வர்றேன் என்று கூறிவிட்டு குரங்குகள் புணரும் இடம் நோக்கி நடந்தேன். அங்கே மாடு மேய்க்க வந்த படுகர் இன சிறுவர்கள் அந்த குரங்குகளை கேலி செய்து தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். ஒருவன் கல்லெடுத்து எறிந்தான். பயந்து பிரிந்த குரங்குகளைப் பார்த்து ஹோவென கூச்சலிட்டார்கள். பொங்கி வந்த ஆத்திரத்தில் நான் சிறுவர்களை திட்டினேன். ஏதோ பாரஸ்ட் ஆபிசர் என நினைத்து பயந்த சிறுவர்கள் சரிவில் குதித்து ஓட ஆரம்பித்தனர்.



ஏமாற்றத்துடன் திரும்ப யத்தனித்தபோது, அதே குரங்குகள் சற்று தொலைவில் ஒரு மரத்தின் தாழ்வான கிளையில் ஒரு விசித்திரமான கோணத்தில் புணர்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. சிரித்துக்கொண்டே சாலையின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் அமர்ந்து அவைகளை கவனிக்க ஆரம்பித்தேன். ஆண் குரங்கின் வேகமும், கிளையின் ஆட்டமும் தாங்காமல் தவறி கீழே விழுந்தது பெண் குரங்கு. அது சுதாரித்து எழுவதற்குள் அதன் மீது பாய்ந்தது ஆண் குரங்கு. அது விலக, இது விரட்ட பலவிதமான கலவி விளையாட்டுக்குப் பின் ஒரு வழியாக ஓய்ந்தது ஆண் குரங்கு. நான் ஒரு பிஸ்கட் பாக்கெட்டினை பிரித்து ஒரு பிஸ்கட்டை அந்த இரண்டுக்கும் மத்தியில் வீசினேன். பெண் குரங்கு பாய்ந்து எடுத்தது. அடுத்த பிஸ்கட் ஆண் குரங்கு எடுக்க பெண் குரங்கு அடித்து பிடுங்கியது. நான் ஒவ்வொன்றாக வீச, வீச அவை தங்களுக்குள் மூர்க்கமாக அடித்துக்கொண்டன. "புத்தர் போன்ற பெரிய மேதைகள் எப்படி குரங்கிலிருந்து வந்திருக்க முடியும்?" என்று ஒரு முறை ஜியானி ஜெயில்சிங் கூறியது நிணைவுக்கு வந்தது.

இந்த குரங்குகளைப் போலத்தான் மனிதர்களும். எவ்வளவு அசெளகர்யமான சூழலிலும், வாழ்க்கை நெருக்கடிகளிலும் புணர்வதையும் சண்டையிடுவதையும் நிறுத்துவதேயில்லை. சாலையோரங்களில், கூடாரத்தில், நீர்க்குழாயினுள், பாலத்திற்கடியில், புகைவண்டி கழிப்பறையில், இண்டர்நெட் செண்டர்களில், வைக்கோற் படப்பில், மோட்டார் ரூமில், புதரடியில் என எல்லா இடங்களிலும் புணர்ந்து கொண்டே இருக்கிறார்கள். டார்வின்மீதான கேள்விகளும் தீர்க்கப்படாமலே இருந்து கொண்டிருக்கிறது.

Comments

Anonymous said…
// டார்வின்மீதான கேள்விகளும் தீர்க்கப்படாமலே இருந்து கொண்டிருக்கிறது.
// Could you please explain us what are these questions ? Interesting view...! Thanks.
G.Ragavan said…
:) நல்லதொரு கோணம். க(தை)ட்டுரையின் முத்தாய்ப்பே முடிவுதான். உண்மைதான். இந்தக் கோணமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
selventhiran said…
வருகைக்கு நன்றி ராகவன், அணானி
Anonymous said…
செல்வேந்திரன் அய்யா,
என்ன சொல்லவர்றீங்க.இந்த மாதிரி குரங்குகள் புணர்ந்தா மனுஷன் பிறப்பான்;ஆனா மனுஷங்க இந்த மாதிரி புணர்ந்தா குரங்குகள் தான் பிறக்கும்னா?இதையா டார்வின் அய்யா சொன்னாரு?
நீங்க சொல்வது சரிதான் செல்வா.. சில சமயங்களில் நமக்கு கூட அவர்கள் செயலை பார்த்து கூச்சம் வந்துவிடுகிறது. ஆனால் அவர்களுக்கு வருவதில்லை...

ஆனாலும் தலைவா, புணர்ச்சிகள் இடங்கள் அனைத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறீர்களே! அனுபவம் போல... அதாவது, இந்த மாதிரி சம்பவங்களை பார்த்து!
////////////////////////////
"புத்தர் போன்ற பெரிய மேதைகள் எப்படி குரங்கிலிருந்து வந்திருக்க முடியும்?" என்று ஒரு முறை ஜியானி ஜெயில்சிங் கூறியது நிணைவுக்கு வந்தது.
////////////////////////////


அவரே சென்னை மெரினா பீச் வந்து பாத்தார்னா

புத்தர் போன்றவர்கள் எப்படி மனிதனில் இருந்து வந்திருக்க முடியும்னு கேட்ருப்பாரு.
:)) வித்தியாசமான பயண அனுபவம் !!

இங்கே மனித வாழ்க்கையை ஒப்பிட்டுப்பார்க்கும் உங்கள் பார்வை, எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் பயணக் கட்டுரைகளையும் நினைவுபடுத்தியது :)
selventhiran said…
வெங்கட்ராமன் well said. புன் முறுவல் பூக்க வைத்தது தங்களது பின்னுட்டம்.
கதிரவன், பிரேம்குமார் தங்களது வருகைக்கு நன்றி,
Anonymous said…
மந்தியில் இருந்து மனிதன் தோன்றினானா? அல்லது மனிதனில் இருந்து மந்தி தோன்றியதா? ம்ம்ம்... பொறுத்திருந்து பார்ப்போம்!
ஏன் இப்படியிருக்கலாமே? மனிதர்கள் பாறையின் பின் புணர்வதைப் பார்த்த மந்திகள் தாங்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டன!
அடுத்தமுறை, மனிதர்கள் புணர்வதை மந்திகள் பார்த்தால், பிள்ளகள் கல் எறிந்ததுபோல், அவையும் கல் எறியும்!
மிக முக்கியமான ஒரு கேள்வியை உங்கள் பதிவு எழுப்புகிறது நண்பரே. புணர்வு ஒரு அடங்கா பசி போல மானுடத்தின் எல்லா நிலைகளிலும் விரவி இருக்கிறது. சண்டையிடுதல் எவ்வாறு ஆளுமையின் வெளிப்பாடோ - அதுபோல புணர்ச்சியும் ஆளுமையின் வெளிப்பாடுதான். வெற்றிக்கு போரிடுதல் என பொதுவாக சொல்லலாம். புணர்ச்சி எனும் பசி இல்லாவிட்டால் - அந்த பசி சரியான முறையில் தீராவிட்டால் - மனித மனம் என்ன என்ன குரங்கு வேலைகள் செய்யும் என சிந்தித்து பாருங்கள்.
murugesh said…
sex is the vital energy of man, without that one will not able to be intelligent, definitely he will be a fool. if one suppress sexual energy he has most chance to be a psychotic patient.

Popular Posts