அப்துல்கலாம் ஏன் ஜனாதிபதி ஆக கூடாது?
1. அவர் என்ன சொன்னாலும் கேட்க, செயல்படுத்த ஆர்வமுள்ள குழந்தைகள், மாணவர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் அரைத்த மாவாக கூறியது கூறலாகத் தொடந்து ஓரே மாதிரியான "கனவு காணுங்கள்" பிரச்சாரம்.
2. சமூகத்தில் பெரிய அத்துமீறல்கள் நடக்கும்போது நமக்கு ஏன் வம்பு என வாயை மூடிக்கொண்டிருப்பது... அது தமிழ்நாட்டில் நிகழும் 'மதுரை வன்முறையானாலும் சரி' வேறு மாநிலங்களில் நிகழும் மதக்கலவரமாக இருந்தாலும் சரி.
3. 'காந்திஜியின் எளிமை செலவினமிக்கது' என்று ஒருமுறை சரோஜினி நாயுடு சொன்னதுபோல கலாமின் எளிமையும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு முறை கலாமின் வருகைக்கு ஹெலிபேடு அமைக்க பல மரங்கள் என் கண் முன்னால் வெட்டப்பட்டபோது மனசு துடித்தது.
4. நமக்கென் வம்பு என முகமது அப்சல் விவகாரத்தில் இன்றுவரை ஒரு முடிவு எடுக்காமல் இருப்பது. ஒன்று தூக்கில் போட சொல்லுங்கள், இல்லை மன்னித்து விடுங்கள் இரண்டுமில்லாமல் அமைதியாக இருந்தால் என்ன சார் கணக்கு?
5. அரசியல்வாதிகள் அனைவரிடமும் நாகரீக போக்கை கடைபிடித்தவர். எவரோடும் உரசல் இல்லை என புகழ்கிறார்கள். அப்படி ஒருத்தர் ஐந்தாண்டுகள் காலம் தள்ளியிருப்பது ஒருவகை வெங்காய தனம். மோதி மிதித்திருக்க வேண்டும், தவறுகளை, ஊழல்களை வன்மையாக கண்டித்திருக்க வேண்டும். விமர்சித்திருக்க வேண்டும்.
2. சமூகத்தில் பெரிய அத்துமீறல்கள் நடக்கும்போது நமக்கு ஏன் வம்பு என வாயை மூடிக்கொண்டிருப்பது... அது தமிழ்நாட்டில் நிகழும் 'மதுரை வன்முறையானாலும் சரி' வேறு மாநிலங்களில் நிகழும் மதக்கலவரமாக இருந்தாலும் சரி.
3. 'காந்திஜியின் எளிமை செலவினமிக்கது' என்று ஒருமுறை சரோஜினி நாயுடு சொன்னதுபோல கலாமின் எளிமையும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு முறை கலாமின் வருகைக்கு ஹெலிபேடு அமைக்க பல மரங்கள் என் கண் முன்னால் வெட்டப்பட்டபோது மனசு துடித்தது.
4. நமக்கென் வம்பு என முகமது அப்சல் விவகாரத்தில் இன்றுவரை ஒரு முடிவு எடுக்காமல் இருப்பது. ஒன்று தூக்கில் போட சொல்லுங்கள், இல்லை மன்னித்து விடுங்கள் இரண்டுமில்லாமல் அமைதியாக இருந்தால் என்ன சார் கணக்கு?
5. அரசியல்வாதிகள் அனைவரிடமும் நாகரீக போக்கை கடைபிடித்தவர். எவரோடும் உரசல் இல்லை என புகழ்கிறார்கள். அப்படி ஒருத்தர் ஐந்தாண்டுகள் காலம் தள்ளியிருப்பது ஒருவகை வெங்காய தனம். மோதி மிதித்திருக்க வேண்டும், தவறுகளை, ஊழல்களை வன்மையாக கண்டித்திருக்க வேண்டும். விமர்சித்திருக்க வேண்டும்.
Comments
அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதைக் கொண்ட என் எண்ணத்தில் உதித்தக் கருத்தும் இதுவேதான்.
நல்லவேளை அவர் மறுத்து விட்டார்!
முதலில் இந்திய ஜனாதிபதி என்பது ஒரு figure head மாதிரியான பதவி. ஒரு கம்பெனியின் non-executive chairman மாதிரி. செயல் தலைவர் எல்லாம் பிரதம மந்திரி தான் (தற்போது அவரும் 'கொஞ்சம்' செயலற்றுதான் இருக்கின்றார்).
அவர் அந்த பதவியில் இருந்த வரை அதற்கான மரபுகள் காப்பாற்றப் பட வேண்டும். ஒரு கட்சியோ, இல்லை அதன் செயல்பாட்டையோ ஜனாதிபதி என்பவர் விமர்சிக்க முடியாது.
அவர் என்னவோ எல்லாரையும் 'கனவு காணுங்கள்' என்று மட்டும் சொன்னார் என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் அவரைப் பற்றி முழுவதும் படிக்கவில்லை என்பது.
குறைந்தது அவர் எழுதிய 'wings of fire' என்ற புத்தகமாவது படித்துப் பார்த்துவிட்டு விமர்சியுங்கள்.
தற்போது பிரதீபா பாடீல் ஜனாதிபதி ஆவது முடிவாகிவிட்ட நிலையில், அவர் மட்டும் என்ன 'சிவாஜி' மாதிரி ஆபீஸ் ரூம் கட்டி வைத்து எல்லாரையும் திருத்தி விடப் போகிறாரா?
ஒரு கண்ணியமான, நாகரீகமான, தன் நாடு முன்னேற வேண்டும் என்று உளமார நினைக்கின்ற ஒருவரை, அதற்கான எதிர்காலம் இளைய சமுதாயத்திடம் இருக்கின்றது என்று இனம் கண்டு சொல்லும் ஒரு நல்ல மனிதரை, இந்திய 2020-ல் வல்லரசாக உயர என்னென்ன முறையில் முன்னேற வேண்டும் என்று எடுத்து சொல்லும் திறன் படைத்த ஒருவரை, உங்கள் அரசியலுக்கு ஒத்து வரவில்லை என்று உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. தயவுசெய்து அரைவேக்காட்டுதனமாய் விமர்சிக்காதீர்கள்.
ஏதாவது தவறாய் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
கடிதம் எழுதி வைச்சிருக்காராம்.கொண்டுபோயி டில்லில
கொடுக்கரதுக்கு ஆளைத்தேடிக்கிட்டிருக்கறாரு. எப்பிடியாச்சியும் வாங்கி கொடுத்துட்டிங்கன்னா,வேலை முடிஞ்சுடும்.
இதோடு உடன்படுகிறேன். பிற குடியரசுத் தலைவர்கள் அதிகம் பயணம் செய்வதில்லை. இவர் குடியரசுத் தலைவராகப் பல இடங்களுக்குப் பயணம் செய்வதால் பாதுகாப்பு, போக்குவரத்து நெருக்கடிகளால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். முன்பு இருந்தது போல் scientistஆக மட்டும் பயணம் செய்தால் கெடுபிடிகள் குறையும். அதற்கு அரசு செய்யும் செலவும் குறையும்.
முக்கியமான ஒன்று இந்தியா ஏன் வல்லரசாக வேண்டும்? கனடா, சுவிட்சர்லாந்து மாதிரி முதலில் நல்லரசாகட்டும். அப்புறம் காணலாம் நல்லரசு கனவுகளை...!
அதே..
நான் அடிக்கடி சிந்திக்கும் விசயமும் இதுவே.சரியாகச் சொன்னீர்கள்
நீங்கள் 100 புத்தகங்கள் வாங்கி கொடுத்துவிட்டு... கலாம் கனவு மட்டும்தான் காணச் சொன்னார்... அவர் விஞ்ஞானியாக மட்டுமே தொடர முடியும்... என்றால் என்ன சொல்வது என்று புரியவில்லை. அத்தகைய சிந்தனை ஆழம் கொண்ட ஒருவர் முதல் குடிமகனாக தகுதியில்லை என்று சொல்லும் நீங்கள்... இனி வரப்போகும் பிரதீபா பாடீலையோ, அல்லது இதுவரைக்கும் ஜனாதிபதியாக இருந்த கியானி ஜெயில்சிங்கோ, சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, கே.ஆர்.நாராயணன் போன்றவர்கள் என்ன மாதிரி தகுதியுடன் ஜனாதிபதி ஆனார்கள் என்று விளக்கினால் நலம்.
வல்லரசு / நல்லரசு கேள்வி ஒரு நல்ல கேள்வி. நீங்கள் வெளி நாடுகளை சுற்றி வந்திருக்கும் அளவுக்கு உள் நாட்டை சுற்றி வந்திருந்தால் இந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கும்.
எதற்கு வட கொரியா அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும்? எதற்கு ஈராக் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறேன் என்று உதார் விட வேண்டும்? அதே அளவு எண்ணெய் வளம் கொண்ட சவுதி அரேபியா இப்படி எல்லாம் உதார் விடாமல், அமெரிக்க அண்ணனோடு சமரசமாய் இருப்பது எப்படி? எதற்கு பாகிஸ்தான் அண்டை நாடான இந்தியாவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு அணு ஆயுத சோதனைகள் செய்ய வேண்டும்?
கனடா / சுவிஸ் போன்ற நாடுகள் geographical stature மற்றும் இயற்கை வளங்கள் வேறு நமது நாட்டின் இயற்கை வளங்கள் வேறு.
நமது நாட்டின் அணி சேரா கொள்கையும், அண்டை நாட்டினரின் செய்து கொள்ள வேண்டிய சமரசமும் முற்றிலும் வேறானவை.
இன்றைக்கு வெனிசுவாலாவின் சாவேஸ் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு மூலம் அமெரிக்காவிற்கு அறைகூவல் விடுகிறார். சார்க் கூட்டமைப்பு மூலம் ஆசிய / கிழக்காசிய நாடுகளை ஒன்று கூட்டி பஞ்சீல கொள்கைகளை நேரு அன்று அறிவித்தது 'நல்லரசு' அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான். இலத்தீன் அமெரிக்க நாடுகள் போல் நமக்கும் எண்ணெய் வளம் மிகுதியாக இருந்து, அண்டை நாட்டு அடிதடிகள் இல்லாமல் இருந்திருந்தால்... இதே முயற்சியை 20 வருடங்கள் முன்னர் இந்தியா எடுத்திருக்கும்.
8 அண்டை நாடுகளை கொண்டு 3 போர்களை சந்தித்து, இன்றும் சீனா போன்ற அண்டை நாடுகள் நமது சொந்த மாநிலத்தை அவர்களுடைய நாட்டில் ஒரு பாகமாக பிரகடனம் செய்து கொண்டிருக்கும் இந்த நிலையில், கொஞ்சமாச்சும் முதுகெலும்போடு ஒரு secular state -ஆக, சுதந்திரமாக நாம் நிற்க சொந்த பலம் மிக அவசியம். கிட்டத்தட்ட 50 வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்னையாக காஷ்மீர் இருப்பதை பார்க்கும் பொழுதே உங்களுக்கு இந்திய துணைகண்டத்தின் அண்டை நாட்டு அரசியல் புரிந்திருக்கும்.
வல்லரசாவது யாரையும் வம்பிழுப்பதற்கு அல்ல. நம்முடைய 110 கோடி மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வலிமையை பெறுவதுதான்.
உங்களுடைய உதாரண நாடுகள் அந்த வலிமையை இயல்பாக பெற்றிருக்கலாம். அல்லது அந்த வலிமை தேவை இல்லாமல் இருக்கலாம்.
கனடா / ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பரப்பளவு மிக அதிகம். மக்கள் தொகை மிக குறைவு. அவர்களைச் சுற்றி நாடு பிடிக்கும் ஆசை கொண்ட நாடுகள் கிடையாது.
இன்னும் விரிவாக பேசலாம். தற்சமயம் நேரம் அதிகமில்லை. மன்னிக்கவும்.
மோதி மிதித்திருக்க வேண்டும், தவறுகளை, ஊழல்களை வன்மையாக கண்டித்திருக்க வேண்டும். விமர்சித்திருக்க வேண்டும்.
/////////////////////////////////
இதெல்லாம் நடவாத காரியம்.
அவர் மோதி மிதிக்க முற்பட்டிருந்தால் அவரையே மிதித்திருப்பார்கள் நம் அரசியல் வாதிகள்,
இதை நானும் வழி மொழிகிறேன்.
உங்களையும் இந்த 8 விளையாட்டிற்கு அழைக்கிறேன்.
http://rajapattai.blogspot.com/2007/06/8-28.html
ஆனாலும் நீங்க கூப்பிட்ட அந்த எட்டு பேர் தாங்கமுடியலடப்பா சாமி.
இங்கு கலாம் இரண்டாம் முறையாக ஜனாதிபதி ஆக்கலாமா வேண்டாமா என்பதுதான் விவாதம். கீழ்க்கண்ட கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை.
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பதவியை ஏன் இரண்டு முறை வகிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
ஒருவேளை எஸ்.டி.சர்மாவும், கே.ஆர்.நாராயணனனும் ஆசைப்பட்டபடி இரண்டாம் முறை வாய்ப்பு கிடைத்திருந்தால், இன்று கலாம் நாற்காலியில் உட்கார்ந்திருப்பாரா?
ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஒருவர் தான் நினைத்ததை செயல்படுத்த இந்த 5 ஆண்டுகாலம் போதவில்லை என்று கருதுவாரா? அப்படியானால் அந்த 5 ஆண்டுகாலத்தில் முடியாததை இன்னொரு 5 ஆண்டில் முடிக்கப் போகிறாரா?
ஒவ்வொரு 5 ஆண்டு காலமும் ஒரு வித்தியாசமான தலைமை வரக்கூடிய வாய்ப்பை நிராகரித்து ஒருவருடனே அலுத்துப் போகலாமா?
இரண்டாம் முறை கொடுக்கக்கூடாது என்று சட்டம் சொல்லவில்லை. அதே சமயம் ஒருவர் பத்தாண்டு ஆட்சியில் இருந்தால் அதுவும் நல்லதா?
இந்த கேள்விகளுக்கு விடை தாருங்கள்.
எஸ்.என்.ஆர்.,
நான் ஏற்கெனவே சொன்னபடி... இந்திய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி என்பது ஒரு figure-head மட்டுமே.
ஒரு நிறுவனத்தின் non-executive chairman பதவி போன்றது அது.
அவருடைய ஒப்புதலோ, அல்லது தலையீடோ எல்லா விஷயங்களுக்கும் தேவையில்லை. தேவைப்பட்ட சில விஷயங்களுக்கும் அவர் அமைச்சரவையின் (அல்லது அதன் தலைவரான பிரதம மந்திரியின்) ஆலோசனைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும் (மரபு).
அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சரவைக்குத்தான் அதிக அதிகாரங்கள். மக்களவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கும் பெரும் அதிகாரங்கள் ஒன்றுமில்லை.
இங்கு பேசப்படும் பொருள் செல்வேந்திரன் போன்றவர்கள் 'அப்துல் கலாம்'க்கு தகுதியில்லை என்று கூறுகிறார். அதுதான் எனக்கு சற்று வருத்தமாக இருக்கிறது. பிரதீபா பாட்டீல், ஜெயில் சிங், சஞ்சீவ ரெட்டி போன்றோர் வகித்த பதவியை கலாம் வகிக்க என்ன தகுதி குறைந்து விட்டார்? ஒரு அரசியல் பின்புலமுமில்லாத அவரை பாராட்டவில்லை என்றாலும், நிராகரிக்க என்ன அரசியல் காரணங்கள் என்று புரியவில்லை.
ஒரே ஆளை 2 / 3 முறை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வாதிடவில்லை. அவருக்கு ஏன் தகுதியில்லை என்பதுதான் எனது கேள்வியே.
நியாயமான கேள்விகள்!
உங்களைப்போல எனக்கும் சில ஆதங்கம் உண்டு!