நெய்வேலி புத்தகக் கண்காட்சி


பத்தாம் ஆண்டு நெய்வேலி புத்தகக்கண்காட்சி வரும் ஜூலை 7ம்தேதி முதல் துவங்க இருக்கிறது. பத்து தினங்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்கள் ஸ்டால்களை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பிரபல எழுத்தாளுமைகள் கலந்துகொள்ளும் இலக்கிய நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடல், மாணவர்களுக்கான போட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம் என ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்துவருகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் விற்பனை சாதனை படைத்துவரும் விகடன் பிரசுரம், நெய்வேலி புத்தகக்கண்காட்சியை ஓட்டி 'தில்லானாமோகனாம்பாள்' புகழ் கொத்தமங்கலம் சுப்புவின் சில நூல்களை வெளியிட தீர்மானித்துள்ளது.

Comments

செல்வேந்திரன் சென்னைக்கு வெளியே நடத்தப்படும் புத்தக சந்தைகளில் பெரியதாக நடப்பது நெய்வேலி புத்தக சந்தை தான்.அதிக அளவிள் படித்தோர் உள்ள நகரம் என்பதால் அங்கு நல்ல வரவேற்பு இருக்கும்.ஒரு முறை அங்கு சென்றிருந்த போது போய் இருக்கிறேன். இப்பொழுதும் செயின்ட் பால்ஸ் பள்ளி திடலில் தான் நடைப் பெறுகிறதா.
selventhiran said…
வவ்வால், நடைபெறும் இடம், பங்குபெறும் பதிப்பகங்கள், எழுத்தாளர்களின் இலக்கிய நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்களை பதிப்பாள நண்பரிடம் கேட்டிருக்கிறேன். வந்தவுடன் விரிவான பதிவிடுகிறேன்.

மிக்க அன்புடன்
செல்வேந்திரன்