Saturday, November 3, 2007

ஆசிப்மீரானுக்கு ஓர் பகிரங்க கடிதம்

அன்புள்ள அண்ணாச்சி அவர்களுக்கு,

கவிமடத்தின் தலைமைக் கொத்தன்களில் ஒருவனான அடியேனின் கவிதைகள் விகடன் தீபாவளி சிறப்பிதழில் வெளியாகி தமிழ் நாடு முழுவதும் அதிர்வலைகள் உருவாக்கியிருக்கும் தருணத்தில், கவிமடத்தின் சார்பில் எனக்கொரு பாராட்டு விழா நடத்தினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

இதுபோன்ற கோட்டிக்காரத்தனங்களை உங்கள் அன்பு இளவல்கள் செய்தபோது, 'சபாஷ்.... என் இனமடா நீ!' எனத் தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய நீங்கள் என்னைப் பாராட்டி ஒரு வார்த்தை கூட உதிர்க்காதது ஏன் என்பது என்னையொற்றி முடியலத்துவக்கவிதைகளை எழுத முற்படும் ஆயிரமாயிரம் இளைஞர்களின் கேள்வியாக இருக்கிறது.

வாரிசு அரசியல் தலைவிரித்தாடும் கவிமடத்தின் இரண்டாம் கட்டத்தலைவனான நான், உங்கள் தலைமைப்பீடத்தை அபகரித்துவிடுவேன் என உறக்கம் கொள்ளாமல், உணவு எடுக்காமல் நடுக்கம் எடுத்து திரிகிறீர்கள் என்பதை தமிழ்க்கவியுலகம் அறியாததல்ல.

இந்தக் கவிமடத்தையே புரட்டிபோடும் நெம்புகோல் கவிதைகளை செய்துவிட்டு மடத்தின் பாரம்பரியத்தைக் கெடுப்பவனல்ல நான் என்பதை அறிந்தும் தாங்கள் மவுனம் காப்பது.... எனக்கு மட்டுமல்ல கவிதை என்ற பெயரில் ஜல்லியடித்து வரும் லட்சோபலட்சம் தமிழர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்

9 comments:

செல்வேந்திரன் said...

அன்புத்தம்பி

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்றாலும் 'ப்டை' வந்து அரிப்பெடுத்தால் மருத்துவரிடம் போகாமல் இருக்க முடியுமா? அதுபோலத்தான் இதுவும்


உன் தோளில் மாலைகள் விழுந்தால் அது மடத்துக்கு கிடைத்த மரியாதை அல்லவா? மடச்சீடர்கள் எல்லாம் புகழ் பெறுவதும் பாராட்டுதலகளைப் பெறுவதும் மடத்தலைவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருமென்று உனக்குத் தெரியாதா?

உன்னைப் போன்ற 'அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியயகும்' என்ற ம்னப்பக்குவம் இல்லாத கவுஞர்களின் மனநிலை எனக்குத் தெரியாதா தம்பி?!

'முடியல்த்துவம்' உருவாகிய காலகட்டத்திலெயே தமிழை அடுத்த கட்டத்துக்கு தாயம் போடாமலேயே நகர்த்தும் நெம்புகோள் கவிதை இதுதானென்று நான் கட்டியக் கூறவில்லையா?

நான் சொன்னதைத்தானே இப்போது ஆனந்த விகடன் அங்கீகரித்திருக்கிரது. நான் சொன்னபோதே பாராட்டில் மகிழாத நீ ஆவி சொன்னதால் ஆனந்தக் கூத்தாடும் மடமையை என்ன செய்வது?

எப்படியோ, மடக்கண்மணிக்ளே, கவுஞர்களே, கும்மிகளே

ஒரு கவுஜை வந்ததுக்கே பிரேமைக் கும்மியவர்களுக்கு முழுமையான பாராட்டு விழா வாய்ப்பு

யாரெல்லாம் பங்கெடுத்து செல்வேந்திரனை வாழ்த்தப் போகிறீர்கள். பாராட்டு விழாவிம் முக்கிய நோக்கமாக கடைசியில் ஏற்புரை வழங்கும்போது செல்வேந்திரன் முடியலைன்னு சொல்லணும்

தொடங்குங்க மக்கா!!
ஆசிப்மீரான்

Anonymous said...

பைத்தியகார தெருநாயே, தமிழ்செல்வன் மறைந்த துக்கத்தில் தமிழ் வலையுலகம் திளைத்திருக்கும் நேரத்தில் உன் சுயவிளம்பரம் தான் முக்கியமா? பொண்டாட்டி இருந்தால் கூட்டி கொடுத்து வாழுடா இழிபிறவி.

செல்வேந்திரன் said...

வருகைக்கு நன்றி அணானி

Boston Bala said...

கவிதை எங்கேப்பா

வவ்வால் said...

செல்வேந்திரன்,
//இந்தக் கவிமடத்தையே புரட்டிபோடும் நெம்புகோல் கவிதைகளை செய்துவிட்டு மடத்தின் பாரம்பரியத்தைக் கெடுப்பவனல்ல நான் என்பதை அறிந்தும் தாங்கள் மவுனம் காப்பது.... எனக்கு மட்டுமல்ல கவிதை என்ற பெயரில் ஜல்லியடித்து வரும் லட்சோபலட்சம் தமிழர்களின்//

உங்களை நான் என்னமோ என நினைத்திருந்தேன், இப்படி இருக்கிங்களே,

ஆனந்த விகடனில் கவிதை வருகிறது என்றால் அது கேவலம் அல்லவா? அவர்கள் ஏன் , எப்படி ஒரு படைப்பை வெளியிடுகிறார்கள் என்பது ஊருக்கே தெரிந்த ரகசியம்!(ஒரு வேளை உங்களுக்கு தெரியவில்லை எனில் நான் சொல்வதற்கு ஏதும் இல்லை)

நீங்கள் ஆனந்த விகடனில் வேலைப்பார்ப்பதால் தான் அக்கவிதை வந்தது என நான் சொல்ல மாட்டேன்! ஆனாலும் என்னைப்பொருத்த வரை விகடனில் வரும் எதுவும் ஒரு தர நிர்ணய அளவு கோல் இல்லை!

ஒரு வேளை உங்களுக்கும் ஆசிப்க்கும் இடையே நடைப்பெறும் ஒரு "உள்ளார்ந்த உரையாடல்" எனில் எனது பின்னூட்டத்தினை ஒரு காமெடி துணுக்காக நினைத்து புறம் தள்ளவும்!

கவிதை என்ற பெயரில் ஜல்லி அடிக்கும் தமிழர்கள் என்ற உங்களது வாக்கு மூலத்தை திரும்ப பெறுங்கள்!

இல்லை எனில் எனது எதிர் வினை ரொம்ப கடுமையாக இருக்கும் என அன்புடன்!!?? சொல்லிக்கொள்கிறேன்!

செல்வேந்திரன் said...

வவ்வால் அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும் அன்பான (!!??) பின்னூட்டத்திற்கும் நன்றி. அடியேனது வார்த்தைகள் தங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

1)ஒரு தன்னிலை விளக்கம்: தமிழர்களே கவிதை என்ற பெயரில் ஜல்லியடித்து வருகிறார்கள் என்பது பொருளல்ல... ஜல்லியடித்துக்கொண்டிருக்கும் தமிழ் கவுஜர்களைத்தான் அது குறிப்பிடுகிறது.

2)ஆனந்த விகடனில் கவிதை வெளிவருதில் எனக்கென்ன கேவலம் இருக்க முடியும்? பல லட்சம் தமிழர்கள் விரும்பி வாங்கி வாசித்து நேசிக்கும் ஒரு முன்னனி பத்திரிகையில் என் கவிதை வெளியாவதில் எனக்கு பெருமகிழ்ச்சியே.
3) எதுவும் ஒரு தர நிர்ணய அளவு கோல் இல்லை! // ஒரு டவுண் பஸ்ஸில் பயணிப்பவர்களில் ஒருவர் கடன் வாங்க செல்வான், ஒருவர் வாங்கிய கடனை கொடுக்க போய்க்கொண்டிருப்பான், ஒருவர் பிரசவத்திற்கு மனைவியை மருத்துவமனையில் சேர்க்க போகலாம், இன்னொருவர் பிரசவத்திற்கு போனவளை அழைத்து வர போகலாம், ஒருவன் படிக்க போகலாம் மற்றொருவன் சொல்லிக்கொடுக்க போகலாம். அத்தனை பேரும் போய் சேரும் ஊர் ஒன்றேயென்றாலும், ஊர் செல்லும் நோக்கமும் காரணங்களும் வேறு வேறானவை. வெகுஜனப்பத்திரிக்கைகளும் அப்படித்தான். ஒருவர் சினிமா செய்திகளுக்காக ஒருவர் துணுக்குகளுக்காக, ஒருவர் கவிதைகளுக்காக, மற்றொருவர் சிறுகதைகளுக்காக, இன்னொருவர் கேள்வி பதில் பகுதிக்காக. வேறொருவர் தலையங்கத்திற்காக, கார்ட்டூன்களுக்காக என வெகுஜனப்பத்திரிக்கையை பல்வேறு ரசனைகள் உடைய பரந்துபட்ட வாசகர் வட்டம் நாடுகிறது. அவர்கள் அத்தனைபேரின் ரசனையையும் ஈடு செய்யும் வகையில் ஒரு பத்திரிகை வெளிவருவதில் இருக்கும் சவால் கடினமானது. தங்களது ரசனை மட்டம் உயர்வானதாய் இருக்கலாம் என்பதற்காக தங்கள் தரத்திற்கு ஒரு பத்திரிக்கை வருகிறதென்றால் அது சாதாரண வாசகனை எந்த அளவில் ஈர்க்கும்?
4) "உள்ளார்ந்த உரையாடல்" // இதில் உங்களுக்கு சந்தேகம் வேறு வருகிறதா என்ன?
5) அன்புடன்!!?? சொல்லிக்கொள்கிறேன்! // எப்பவும் உங்கள் அன்புக்கு பாத்திரமானவராக இருப்பதில் களிபேருவகை
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்

Seemachu said...

செல்வேந்திரன்.. பாராட்டுக்கள்... உங்க ரஜினி கதை விகடனில் வந்திருக்கு...

அன்புடன்,
சீமாச்சு..

செல்வேந்திரன் said...

வாங்க சீமாச்சு எப்படி இருப்பீங்க? எல்லாம் பதிவர்கள் தந்த ஊக்கமும், உற்சாகமும்தான். விகடனில் தொடர்ந்து முடியலத்துவம் என கவிதைகள் (!) எழுதி வருகிறேன். அதையும் படித்துவிட்டு ஒரு தனிமடல் விமர்சனம் கொடுத்தால் தன்யனாவேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Anonymous said...

அனானி!!!
"பைத்தியகார தெருநாயே, தமிழ்செல்வன் மறைந்த துக்கத்தில் தமிழ் வலையுலகம் திளைத்திருக்கும் நேரத்தில் உன் சுயவிளம்பரம் தான் முக்கியமா? பொண்டாட்டி இருந்தால் கூட்டி கொடுத்து வாழுடா இழிபிறவி."


உங்கங்ளைப் போன்ற சிலரால்தான் தமிழ நல்ல உள்ளங்களூம் உதவத் தயங்குகின்றார்கள்.
ஈழத்தில் கொண்டாடம் நடத்துபவர்களைக் கண்டித்திருந்தால் அதில் நியாயம் உண்டு.
மாற்றுக் கருத்து உள்ளாவர்களையும் கவரவேண்டிய தேவை ஈழத்தமிழர்களான எங்களூக்கு உண்டு. தயவுசெய்து யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.

ஒரு ஈழத் தமிழன்

பி+கு= ஆசிப்மீரான் அவர்கள் ஈழத் தமிழர்களின் பெரும் மதிப்பிற்குரிய அப்துல் ஜபார் ஐயாவின் மகன் என்பதை அனானி நண்பர் தெரிந்துகொள்ளுங்கள். எங்கள் தமிழ்ச்செல்வன் மற்றும் தேசியத் தலைவர் அவர்களின் நல்ல நண்பர்.