கவிதைகளைப் போன்றதொரு வஸ்து

'எங்களுக்குள் இருப்பது
வெறும் நட்புதான்' என்றவர்களில்
25% பேரை
காவல் நிலையத்திலும்
25% பேரை
ரிஜிஸ்டர் அலுவலகத்திலும்
25% பேரை
குடும்ப நல நீதிமன்றங்களிலும்
25% பேரை
தண்டவாளங்களில்
சதை துணுக்குகளாகவும்
பார்த்தேன்.
மீதம் இருந்தவர்களுக்குள்
இருந்தது நட்பு மட்டும்தான்...

வேண்டியவர்களைக் காட்டிலும்
வேண்டாதவர்களின் எண்களே
தேவையாயிருக்கிறது.
அழைத்தால்
எடுக்காமலிருக்க...

அத்தனைப் பக்கங்களையும்
புரட்டியாகி விட்டது
அலுவலக அரசியலில்
தப்பிப்பது குறித்தோ
குடிப்பது குறித்தோ
சாலைகளைக்
கடப்பது குறித்தோ
யாதொரு குறிப்பும்
இல்லாத இந்த
புத்தகத்தை வைத்து
என்னதான் செய்வது?!

அடுத்தவன் விஷயத்தில்
மூக்கை வேண்டுமானால்
நுழைத்துக்கொள்ளுங்கள்
நாக்கை நுழையாதிருங்கள்...

Comments

//அடுத்தவன் விஷயத்தில்
மூக்கை வேண்டுமானால்
நுழைத்துக்கொள்ளுங்கள்
நாக்கை நுழையாதிருங்கள்...//

நன்று..!
Anonymous said…
நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறீர்கள்... தகவல் உள்ள சிறப்பான கவிதை, வாழ்த்துக்கள்.
//அடுத்தவன் விஷயத்தில்
மூக்கை வேண்டுமானால்
நுழைத்துக்கொள்ளுங்கள்
நாக்கை நுழையாதிருங்கள்...
//
இது நல்லாயிருக்கு செல்வேந்திரன்.. ரொம்ப பிடிச்சிருந்தது இந்தக் கருத்து..

ஆமாம்.. இப்போ விகடனில் 'முடியலத்துவம்' பார்க்க முடிவதில்லையே..!!
என்ன ஆச்சு?

அன்புடன்,
சீமாச்சு
selventhiran said…
வாங்க உண்மைத் தமிழன், விக்னேஸ்வரன் அப்படியென்ன தகவல் கண்டீங்க?!:)
சீமாச்சு, பதினைந்து வாரங்கள் தொடர்ந்து வந்தது. இதுக்கு மேலயும் வாசகர்களின் பொறுமையை சோதிக்க விரும்பாம முடிச்சிக்கிட்டோம்.