Sunday, November 1, 2009

ஆத்தா...நான் குடுமி ஆகிட்டேன்...

நண்பர்களே,

ஐந்தாண்டு கால மேன்ஷன் வாழ்க்கையிலிருந்து விடுபடும் முயற்சியாக நாளை முதல் தனிமனை புகுகிறேன். பிரம்மச்சாரிகளுக்கு வீடு கொடுப்பதில்லை என்கிற சர்வதேச இலக்கணத்தை அப்படியே கடைபிடிப்பவர்கள் கோயம்புத்தூர்காரர்கள். வடகரை வேலன் அண்ணாச்சியின் பெருமுயற்சியில் வடவள்ளியில் அருமையான வீடு கிடைத்தது. பெருநகரின் சலம்பல்கள் எட்டாத தொலைவில், வீட்டைச் சுற்றி பசும் புல்வெளிகள் சூழ்ந்த ரம்மியமான வீடு. உரிமையாளர் அருகில் இல்லை என்பது கூடுதல் வரம்.

மாலை மங்கினால் மனித சஞ்சாரமே இல்லை. கனத்த இருளும், பெயர் தெரியாத பூச்சிகளின் ரீங்காரமும் மட்டுமே துணை. தனிமைதான் இவ்விடத்தின் பெரிய சவாலாக இருக்கும் என்பதை யூகிக்கிறேன். தனியார் நிறுவனங்களின் இணைய வசதி அறவே இல்லை. பி.எஸ்.என்.எல் மட்டுமே கதி. தொலைபேசிக்கு விண்ணப்பித்து, பிராட்பேண்டிற்கு விண்ணப்பித்து... முதல்வர் வரை சிபாரிசுக்கு ஆள் பிடித்து இணைப்பு வாங்க இன்னும் இரண்டு மாதங்களேனும் பிடிக்கும்.

இந்த இடைப்பட்ட காலங்களில் வாசிக்காமல் வைத்திருக்கிற புத்தகங்களையும், பார்க்காமல் வைத்திருக்கிற படங்களையும் பார்த்துவிடலாமென்கிற நப்பாசை இருக்கிறது. வாசலில் விரிந்திருக்கும் மைதானத்தின் துணை கொண்டு ரப்பையைக் கரைக்கலாம் என்ற நீண்டகால திட்டம் இருக்கிறது. இடையில் விடுபட்டுப்போன சமைக்கிற வழக்கத்தை திரும்பவும் ஆரம்பிக்க வேண்டும்.

லெளகீக வாழ்விற்குத் தேவையான கட்டில், பீரோ, டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் இன்னபிற சப்புச்சரவுகளையும் சேகரம் செய்ய துவங்க வேண்டும். இந்த சமாச்சாரத்தில் சுணங்கினால் கேண்டி முகவாய்க்கட்டையில் இடிப்பாள். சந்தா கட்டி இருக்கிற பத்திரிகைகள் துவங்கி வங்கிகள் வரைக்கும் முகவரி மாற்றத்தை உடனே தெரிவிக்க வேண்டும். காஸ் சிலிண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். தினமணிக்கு ஏஜெண்ட் யார் என்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்... ஆஹா! நான் குடுமி ஆகிவிட்டேன்....

வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும், எவ்வித முன்னறிவிப்பு புடலங்காய்களுக்கும் அவசியமின்றி வீட்டில் தங்கிக்கொள்ளலாம், குடிக்கலாம், ஆடலாம், சண்டையிடலாம். அனைவரும் வருக... ஆதரவு தருக...!

எனது புதிய முகவரி:

செல்வேந்திரன்,
28, ராம்ஸ் நகர்,
பி.என். புதுர்,
வடவள்ளி,
கோயம்புத்தூர் - 641 041

51 comments:

butterfly Surya said...

கண்டிப்பா வருவோம்.. ஆதரவு தருவோம்..

வாழ்த்துகள் செல்வா...

Romeoboy said...

நீங்க சொல்லுற மாதிரி இரண்டு மாதம் எல்லாம் ஆகாது இணைப்பை பெறுவதற்கு. கொஞ்சம் மேனகேட்டல் பத்து நாட்களுக்குள் வாங்கிவிடலாம்.

புது வீடு உங்களுக்கு புதியதோர் வாழ்கை அமைத்திடும். வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

வாழ்த்துக்கள் நண்பா, வந்துடுவோம், பாத்துடுவோம்...

பிரபாகர்.

Rajalakshmi Pakkirisamy said...

:) Have good time...

கோபிநாத் said...

நான் கூட வேற ஏதே அறிவிப்பு போலன்னு ஓடிவந்தேன்...;)

வந்தாச்சி..வாழ்த்துக்கள் ;)

இளவஞ்சி said...

யோவ் செல்வு,

தலைப்பை படிச்சுட்டு ஒரு நிமிசம் அப்படியே ஷாக் ஆகிட்டேன்! தமிழ்மணத்துல அடுத்தவெடி கொளுத்திப்போடறீங்களோன்னு. குடும்பின்னு தானே சொல்ல வந்தீங்க?!


// எவ்வித முன்னறிவிப்பு புடலங்காய்களுக்கும் அவசியமின்றி வீட்டில் தங்கிக்கொள்ளலாம், குடிக்கலாம், ஆடலாம், சண்டையிடலாம். அனைவரும் வருக...//

ஏழரையைத் தூக்கி தோள்ல வைச்சிக்கிட்டு நாளை நமதேங்கற மாதிரி இத்தையும் சொல்லிட்டு நான் குடும்பின்னா எப்பூடி? மொதல்ல எங்க சகவாசத்தையெல்லாம் கட் பண்ணுமைய்யா!!

புதுவீடு சிறக்கவும் தொப்பை கரையவும் வாழ்த்துகள் :)

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் செல்வா. கோவையில் எனக்கு இன்னொரு புகலிடம்

பித்தன் said...

சொல்லிட்டீங்க இல்ல வந்துருவோம்......! ஆமா கேண்டி வந்தால் இத்தனிமையை விரும்புவார்களா.....? குடுமி ஆனதற்கு வாழ்த்துக்கள்...... என்ன மஞ்சள் அரைத்தாலும் உங்கள் குடுமியிலிருந்து ஒரு முடி கூட உதிராமல் நீண்ட காலம் வாழ்க....

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாழ்த்துக்கள் தோழா..
வீடு பார்த்தாச்சு..அப்புறம்..?

D.R.Ashok said...

காஸ் சிலிண்டர் வந்தவுடன் தெரியப்படுத்தவும். குடிக்கறதுக்கு ஐஸ் வாட்டர் இல்லன்னாலும் குளிக்கறதுக்கு ஹாட் வாட்டர் கண்டிப்பாவேனும் ஹிஹி.

(போட்டவுல ரொம்ப யூத்தாதெரியரப்பா)
(நிஜமான யூத்து பெரிய அண்ணன் கேபிளாருடன் வருகிறேன், அவருக்கு எந்த தண்ணினாலும் ஓகே)

Sure said...

Selva ,analum umakkuu thigriyem koncham jasthithan

செந்தில் நாதன் said...

சொல்லிபுட்டிகல்ல...வந்துறோம்..

க. தங்கமணி பிரபு said...

வாழ்த்துக்கள் செல்வா! விரைவில் திருமணம், நல்மக்கட்பேறு, சொந்த வீடு, காரூ, வளரும் வங்கி இருப்பு என எல்லா வசதிகளுடன் உங்களின் வாசிப்பு, எழுத்து, சினிமா ஈடுபாடுகள் தடையின்றி இனிதே நடந்தேற வாழ்த்துக்கள் செல்வா!

வெண்பூ said...

"குடுமி"ன்னு பாத்தவுடனே நான் கூட வேற என்னமோ பதிவுலக அரசியல்னு நெனச்சி அவசர அவசரமா வந்து பாத்தேன்.. புதுவீட்டுக்கு வாழ்த்துகள் :))))

ICANAVENUE said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! புது வீட்டிலிருந்து இன்னும் நிறைய புது படைப்புகளும் வரும் என்று எதிபார்க்கலாமா?

Cable Sankar said...

எப்போ பீர் காச்சுறீங்க..?:)

venkatramanan said...

செல்வா!
நம்ம வீடும் அந்தப் பக்கந்தான்!
மிக்க சந்தோஷம்.

BSNL அகலப்பாட்டைக்கு அருகிலுள்ள வீட்டின் குடும்ப அட்டை போதுமானதுனு கேள்விப்பட்டிருக்கேன்.

அஞ்சல் துறையின் அடையாள அட்டை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்(ரூ.240+10). பெரிதாக கெடுபிடிகளேதும் கேட்காதவொரு அடையாள அட்டை. வங்கிக்ணக்கு, சமையல் அடுப்பு இணைப்பு முதற்கொண்டு பலவற்றிக்கு இது பயன்படும்.

திருமண (அ) குடுமி வாழ்க்கைக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

ஸ்ரீ said...

வாழ்த்துகள். குடுமி ஆனதற்கு.

சி. கருணாகரசு said...

வாழ்க வளமுடன்...

கார்க்கி said...

சகா..நடத்துங்க.. சீக்கிரமே கோவைக்கு பிரபல இயக்குனரும், அவரின் ஹீரோவும் வரலாமென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தண்டோரா ...... said...

சமையலில் நான் எக்ஸ்பர்ட் செல்வா..வந்து விடுகிறோம்..கூத்தடிக்க

☼ வெயிலான் said...

குடுமியாரே!

சாய்பாபா காலனியில் இருக்கும் வீட்டு உரிமையாளருக்கு இப்பதிவின் நகல் அனுப்பி வைக்கப்படுகிறது :)

பித்தனின் வாக்கு said...

// வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும், எவ்வித முன்னறிவிப்பு புடலங்காய்களுக்கும் அவசியமின்றி வீட்டில் தங்கிக்கொள்ளலாம், குடிக்கலாம், ஆடலாம், சண்டையிடலாம். அனைவரும் வருக... ஆதரவு தருக...! //
கடைசியா சொன்னாலும் நாலு வார்த்தை நச்சுன்னு சொன்னீங்க பாஸ். கோவை வந்தால் அவசியம் வருகின்றேன். அது என்ன சண்டையிடலாம்( மூக்குக்கு கவசம் போட்டு வரனுமா??) ஹி ஹி ஹி.

வால்பையன் said...

இப்படி அட்ரஸ் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குறிங்களே!

பேரு முருகேஷ் பாபு said...

அன்பு செல்வா... உங்கள் அறைக்கே நம்பி வந்தவன், வீட்டுக்கு வரமாட்டேனா... இனிமே கோவை வந்தால் ஹோட்டல் செலவு மிச்சம்னு சொல்லுங்க!
எனிவே, தனிமையைப் போக்க படிப்பது, சமைப்பது, பார்ப்பது எல்லாம் குடும்பிகள் செய்யும் வேலை அல்ல... தீவிரமாக ஆலோசியுங்கள்!
(அது குடுமி அல்ல... குடும்பி... குடும்பஸ்தனின் சுருக்கம்!)

RaGhaV said...

ஓ, நல்ல செய்தி.. அந்த பக்கம் வந்தா, நேரா உங்க வீடுதான்.. :-)

வாழ்த்துக்கள் செல்வா.. :-)

கல்வெட்டு said...

//வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும், எவ்வித முன்னறிவிப்பு புடலங்காய்களுக்கும் அவசியமின்றி வீட்டில் தங்கிக்கொள்ளலாம், குடிக்கலாம், ஆடலாம், சண்டையிடலாம். அனைவரும் வருக... ஆதரவு தருக...!//


நல்ல செய்தி!

இருமனம் திருமணம் ஆனவுடன் ... அப்போது வீடு உரிமை அறிவிப்பு புடலங்காய் முடிவு எல்லாம் இணைந்து எடுக்கப்படவேண்டிய ஒன்று அல்லவா? எதற்கும் குடுமி அடுத்தவர் கையில் மாட்டும்வரை என்று டிஸ்கி போட்டுவிடுங்கள். :-)))

திண்ணைகள் முற்றிலும் அழிந்துபோன காலத்தில் இதுபோல வந்து தங்குங்கள் என்று சொல்லும் உறவுகள் மதிக்கப்படவேண்டும்.

வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தால் யாராவது ஒருவர் திண்ணையில் இருப்பார். அவர் வளையல் விற்க வந்தவரோ அல்லது தயிர் விற்கும் பாட்டியோ அல்லது மாதம் ஒருமுறை ஊருக்கு வரும் அலுமினியப்பாத்திர வியாபாரியோ அல்லது யாரோ ஒரு பாதசாரி. என்ன இது யாரு? எங்க போறீங்க ? வெயில்தாழ போலாம் என்ற பாசாங்கற்ற உறவுகள் இப்போது இல்லை. காம்பவுண்டு வந்து ரவுண்டுகட்டிவிட்டது.

**

நிச்சயம் உங்களின் மனம் மகிழுமாறு வந்து தங்கிச்சொல்வேம் என்றேனும் ஒருநாள்.

நல்ல இதயங்கள் வாழவேண்டும் நிறைய ஆண்டுகள்.

ஆயில்யன் said...

//தினமணிக்கு ஏஜெண்ட் யார் என்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்... ஆஹா! நான் குடுமி ஆகிவிட்டேன்...//

LOL:)))))

kalapria said...

பதினேழு நாட்களுக்குப் பின் ஒரு குடும்பியாய்..(ஒண்டுக் குடித்தனக் கூட்டுக் குடும்பி கண்டு பிடித்தது ரப்பர் வளையல்... இது நீலமணியின் 1970-ஆம் வருஷக் கவிதை...நீங்கள் வடவெள்ளி வீட்டில் கண்ணாடி வளையல்களுடன்... கல்யாண வளையோசை கொண்டு.....பாடலாம்
ரப்பை/ரெப்பை என்பது புருவ மயிரைக் குறிக்கும்...

kv said...

சூர்யா சார், பெரும்பலான நல்ல.... சாரி பெரும்பாலான நல்ல படங்களுடன் கூடலாம்.

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் அன்பரே...புதுமனையில் புகுவதற்கு. பேச்சிலருக்கு ரூம் கிடைச்சது பெரிய விசயம்தான். வடகரைக்கு ஒரு பெரிய நன்றி சொல்லிடுங்க....

SanjaiGandhi™ said...

ஹிஹி.. எல்லாத்துக்குமே சூபப்ர் ஏரியா தான். வாக்கிங்.. டாக்கிங்.. :)

செய்யது முகம்மது ஆஸாத் said...

வாழ்த்துக்கள்

செய்யது முகம்மது ஆஸாத் said...

தனி வீடு, தனிமை இரவுகள்... இனி எழுத்துக்கள் இணைய உலகில் தனி ராஜாங்கம் படைக்கட்டும்... பி.எஸ்.என்.எல். தொடர்போடு...

விக்னேஷ்வரி said...

வாழ்த்துக்கள் செல்வா. அப்படியே சகல வசதிகளையும் செய்திட்டு கல்யாணமும் பண்ணிக்கோங்க.

யாழினி said...

சீக்ரம் இருவருமா சேர்ந்து வாழ எனது வாழ்த்துக்கள்

குசும்பன் said...

//வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும், எவ்வித முன்னறிவிப்பு புடலங்காய்களுக்கும் அவசியமின்றி வீட்டில் தங்கிக்கொள்ளலாம், குடிக்கலாம், ஆடலாம், சண்டையிடலாம்.//

பிரம்மச்சாரிகளுக்கு வீடு கொடுப்பதில்லை என்கிற சர்வதேச இலக்கணத்தை அப்படியே கடைபிடிப்பவர்கள்!!!

இப்ப தெரியுதா ஏன் அப்படின்னு!

அடுத்த முறை வேலன் என்ற பெயரை கேட்டாலே அந்த ஹவுஸ் ஓனர் ஓட்டம் எடுக்கனும் அப்படி அண்ணாச்சிக்கு பேரு வாங்கி கொடுக்க வாழ்த்துக்கள்:))

விக்னேஷ்வரி said...

ஒரு தொடர் பதிவுக்கு வருமாறு உங்களை அழைக்கிறேன்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

””ஆனாலும் அண்ணனுக்கு தெகிரியம் சாஸ்திதேன்

அட்ரஸ் கொடுக்குறதுக்கும்
வாங்கண்ட்டு வம்பனுஙகளான நம்பலை அழைக்குரதுக்கும் ””

டம்பி மேவீ said...

valthukkal

செல்வேந்திரன் said...

வாழ்த்தியவர்களுக்கும், கலாய்த்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல... இன்னும் இணையம் வந்தபாடில்லை...விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

செல்வேந்திரன் said...

வாழ்த்தியவர்களுக்கும், கலாய்த்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல... இன்னும் இணையம் வந்தபாடில்லை...விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

வெங்கட்ராமன் said...


பெருநகரின் சலம்பல்கள் எட்டாத தொலைவில், வீட்டைச் சுற்றி பசும் புல்வெளிகள் சூழ்ந்த ரம்மியமான வீடு.


பார்க்கனும் போல் இருக்கு, பார்த்துடுவோம்.

வெங்கட்ராமன் said...

செல்வேந்திரன், TATA indicom ன் கம்பியில்லா இனைய சேவையை நேற்று தான் வாங்கினேன். நன்றாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசிக்கவும். பென் ட்ரைவ் அளவே இருப்பதால் எங்கும் எடுத்துச் செல்ல முடியும்.

http://www.tataindicom.com/speedkabaap-personal.aspx

Kirubanandhini said...

‘குடுமி ஆகிட்டேன்’கிறதுக்கு என்ன அர்த்தம்?

காற்றில் எந்தன் கீதம் said...

வாழ்த்துக்கள் நண்பரே ............
உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் ஆனாலும் இது தான் என் முதல் பின்னூட்டம். உங்களை எல்லாம் படித்து நானும் எழுத முயன்றிருக்கிறேன் நேரம் இருந்தால் வந்து செல்லுங்கள்.

KaveriGanesh said...

தம்பி,

பொருத்தது போதும், பொங்கி எழுந்து வா.

அப்பா, சீக்கிரம் வாப்பா, உன் பதிவை எதிர்னோக்கி.

அன்புடன்
காவேரி கணேஷ்

cheena (சீனா) said...

ஆகா வாழ்த்துகள் செல்வேந்திரன் - குடும்பி ஆனதற்கு - ஆவதற்கு

வரேன் வரேன் கோவை தானே - வந்துடுவோம்ல

அப்புரம் ஆடுவோம் பாடுவோம் குடிப்போம் சண்டை இடுவோம் - அப்புறம்

ம்ம்ம்ம்

மதுரைலே பிஎஸெனெல் உடனே இணைப்பு உடணே தொடர்பு - ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் குடும்பி ஆவதற்கு

Patta Patti said...

வாழ்த்துகள் ....
கோவை வந்தால் ஹோட்டல் செலவு மிச்சம்...

ஹிஹி..

RAMYA said...

சமைக்க தெரியுமா செலவா அடுத்துமுறை வருபோது உங்க வீட்டுலே தான் எங்களுக்கு சாப்பாடு.. ஹி ஹி ஹி :))

முகவரி... தைரியம்தான்... ஆட்டோ அனுப்பலாமா:))

அன்புடன் அருணா said...

ஓ இவ்வ்ளொதானா விஷயம்?