பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாக...

சேர்ந்தாற் போல இரண்டு வரிகள் எழுதத் தெரிந்துவிட்டால் உடனே புத்தகம் போட்டு விடுகிற தீவிர நோய் தமிழ் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. புது சிம்கார்டுக்குப் படிவம் நிரப்ப ஆகும் நேரத்தை விட மிகக்குறைவான நேரத்தில் முழுப்புத்தகத்தையும் எழுதி சாயங்காலத்திற்குள் அச்சடித்து இருட்டுவதற்குள் ’இலக்கிய சாம்ராஜ்’ என அறிவித்து விடுகிறார்கள்.

அப்படி வெளியாகிற புத்தகங்களை ஆசிரியரையும், பிழை திருத்துபவரையும் தவிர வேறு யாரும் படிப்பதில்லை என இன்ஸ்டண்ட் எழுத்தாளர்களில் பலரும் மனச்சோர்வில் இருப்பதாகத் தெரிய வருகிறது. ‘நமக்கு நாமே மாமே’ திட்டத்தின்படி செயல்பட்டால் சுமார் பத்தாயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்யலாம்.



1) ’ஒரு லட்சம் பிரதிகள் விற்பனைச் சாதனையை நோக்கி...’ எனும் முழக்கத்துடன் மல்டி கலர் போஸ்டர் அடித்து தமிழகம் முழுவதும் உள்ள புத்தக விற்பனையகங்களில் ராவோடு ராவாக ரகசியமாக ஒட்டி வைக்கலாம். இவ்வளவு பிரதிகள் விற்ற ஒரு புத்தகத்தை எப்படி வாங்காமல் போனோம் என அவனவன் குழம்பி உடனே ஒரு பிரதி வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்பான்.

2) புத்தகம் பற்றிய விசாரணைகளின் வீரியம் தாங்காமல் வியாபாரிகள் நம்மைத் தொடர்பு கொண்டு ‘100 புத்தகங்கள் அனுப்பி வையுங்கள். நிறைய டிமாண்ட் இருக்குது’ என்பார்கள். ‘பப்பரக்கா’ என உடனே அனுப்பி வைத்து விடக்கூடாது. “சாரி ஸார். நோ ஸ்டாக்! சிக்ஸ்த் எடிஸன் பிரிண்ட்ல இருக்குது. ஒன் வீக் ஆகும்”னு லேசா நூல் விட்டு அனுப்பினாத்தான் உடனே பேமண்ட்!

3) “கொன்னுட்டாம்யா... இதே மாதிரி ஒரு கதையாவது சாருநிவேதிதா எழுதி இருக்கானான்னு’’ யாரையாவது விட்டு பதிவு போடச்சொல்லனும். மிஸ்டர். உன்மத்தம் மேடைகளில் புத்தகங்களையும், பிளாக்கில் ஆசிரியனையும் கிழிப்பார். சர சரன்னு சரவல் பத்திக்கும். நெகட்டிவ் மார்க்கட்டிங்!

4) “ஐம்பதாண்டு கால நவீன இலக்கிய வரலாற்றின் ஓரே ஈவு ‘லவ் நிலாக்கள்’தான். மத்ததெல்லாம் அடாசு!” என முறையே எஸ்ரா, ஜெமோ துவங்கி அயன்புரம் சத்தியநாராயணன் வரைக்கும் மிட்நைட் மெஸெஜ் அடிச்சா விடியறதுக்குள்ள ஜெ. நானுறு பக்கங்கள், எஸ்ரா நாற்பது பக்கங்கள்னு இணையத்துலேயே நாறடிச்சுருப்பாங்க... காம்பவுண்ட் நெகட்டிவ் மார்க்கெட்டிங்!


5) ஏதாவது இலக்கிய அமைப்பிலோ, வாசகர் வட்டத்திலோ அடித்துப் பிடித்து பதவிகள் வாங்கிவிட வேண்டும். உறுப்பினராக நீடிக்க வேண்டுமானால் ஆளுக்கு பத்து புத்தகங்கள் வாங்கி உறவினர்களுக்குப் பரிசளிக்கும்படி தீர்மானம் கொண்டு வரலாம். அப்புறம் குடும்பத்தில் அவர் உறுப்பினராக இருப்பாரா என்பது அவரது சொந்தப் பிரச்சனை!


6) விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு விமர்சனத்திற்குப் புத்தகம் அனுப்பும்போது, ஃப்ரம் அட்ரஸில் முகவரி எழுதாமல் ரத்தச் சிவப்பில் மண்டை ஓடு படம் மட்டும் வரைந்து அனுப்பினால் திகிலாகி ஏதேனும் க்ளூ கிடைக்கிறதா என முழுப்புத்தகத்தையும் படித்து விடுவார்கள். அப்புறம் படித்து விட்ட காரணத்தினாலேயே வரவேற்பறை பகுதியில் ‘கவனிக்கத் தகுந்த’ படைப்பு என்று பப்ளிஷ் ஆகலாம். உங்கள் நேரம் சனியன் சடை பின்னும் நேரமாக இருந்தால் கமிஷனர் ராஜேந்திரனே கவரைப் பிரித்து ’தக்க’ பின்னூட்டமிடுவார்.

7) “அகமனதின் அணத்தல்களை அனாயசமாகப் பின்னிப்பிணைந்து புனைவுலகின் உச்சத்தை நோக்கி முன்நகரும் இந்தப் பிரதி அந்தரங்கமான ஆனால் தீவிர நிராயுதத் தன்மையான கேள்விகளை முன் வைக்கிறது” என ஒரு மார்க்கமான மொழியில் ரிவிவ்யூ எழுதி ஏதேனும் சிற்றிதழ்களில் இடம்பெற வைத்தால் இலக்கிய அந்தஸ்து வந்துவிடும். அடுத்த இதழிலே ’எதிர்வினைகள்’ தூள் பறக்கும். உங்களுக்கான ஒளிவட்டமும், புதிய கோஷ்டியும் உருவாகி விடும்.


8) உங்கள் இலக்கிய எதிரிகளின் பட்டியலை முகவரியோடு தயார் செய்துகொள்ளுங்கள். அனைவருக்கும் வார நாட்களாகப் பார்த்து வி.பி.பியில் புத்தகங்களை அனுப்பி வையுங்கள். உங்கள் எதிரி வேலைக்குப் போயிருக்கும் சமயமாக தபால்காரர் வருவார். “நம்ம வீட்டுக்கோட்டிதான் ஆர்டர் கொடுத்திருக்கும்” என்ற நம்பிக்கையில் அவர்தம் மனைவியரும் தொகையை செலுத்தி பார்சல்களை வாங்கிக் கொள்வர்.

9) முதலில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்தி இருபது புத்தகங்கள் வாங்க வேண்டும். பிறகு அவரே இருபது பேர்களைச் சேர்த்து விட்டால் சிங்கிள் ஸ்டார். அவருக்கு டேபிள் பேன். இருநூறு பேர்களைச் சேர்த்து விட்டாரெனில் சுப்ரீம் ஸ்டார். அவருக்கு ஒரு சீலிங் பேன். இரண்டாயிரம் பேர்களைச் சேர்த்து விட்டால் சூப்பர் ஸ்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் வைக்கும் ராட்சஸ புரொபல்லர் ஃபேன்! மல்டி லெவல் மார்க்கெட்டிங்!

10) புத்தகம் வெளியான அடுத்த நாளிலிருந்தே “வண்ணதாசன் ஒரு அழுகுணி!; சுஜாதா ஒரு புழுகுணி!; க.நா.சு ஒரு காப்பிரைட்டர்!; ஜெயகாந்தனை நிராகரிக்கிறேன்”னு சிற்றிதழ்கள், பிளாக், கை துடைக்கிற டிஸ்யூ பேப்பர் எது கிடைச்சாலும் ‘டிஸ்கார்ட் ஸ்டேட்மெண்ட்ஸா எழுதிக்கிட்டே இருக்கனும். இந்த மசுராண்டி அப்படி என்னதான் எழுதி கிழிச்சிருக்கான்னு வாசகன் உங்க புத்தகத்தை தேட ஆரம்பிப்பான்.

11) புத்தகத்திற்கான விளம்பரத்தை மாஜிக் பாட், பாடி பில்டர்ஸ், டிரினிட்டி மிரர், ந்ருசிம்ஹப்ரியா, மூலிகை மணின்னு சம்பந்தா சம்பந்தமில்லாத பத்திரிகைகளுக்கு கொடுங்கள். என்னமாதிரியான புத்தகம் இதுன்னு யாரும் ஒரு முடிவுக்கே வந்துடக்கூடாது.

12) “என் பால்ய கால சினேகிதன் கலைஞர் கருணாநிதிக்கு”ன்னு புத்தகத்தை சமர்ப்பணம் பண்ணிடுங்க. லைபரரி ஆர்டர் அலையாமலே வரும்.

13) தொலைதூர ரயில் பயணங்களில் யார்கிட்டயும் பேசாமல் நகரும் மரங்களை வெறிச்சு பார்த்துக்கிட்டே ஏக்கப் பார்வை ஏகாம்பரங்கள் டிராவல் பண்ணிக்கிட்டு இருப்பானுங்க. மெள்ள அப்ரோச் பண்ணி “என் வாழ்க்கையையே மாத்தின புக்கு சார் இதுன்னு… ” டைரக்ட் மார்க்கட்டிங்ல இறங்கிறனும்.

இன்னும் அட்டகாசமான ஏழு யோசனைகள் இருக்கின்றன. அவற்றைப் பெற ரூ.2,000/-க்கான வரைவோலையுடன் நேரில் வரவும்.

Comments

:))))))))))))))))))))))))))
//அகமனதின் அணத்தல்களை அனாயசமாகப் பின்னிப்பிணைந்து புனைவுலகின் உச்சத்தை நோக்கி முன்நகரும் இந்தப் பிரதி அந்தரங்கமான ஆனால் தீவிர நிராயுதத் தன்மையான கேள்விகளை முன் வைக்கிறது” என ஒரு மார்க்கமான மொழியில் ரிவிவ்யூ எழுதி//

நல்லாத்தான் இருக்கு பாஸ்!

இந்த வார்த்தைகளெல்லாம் எந்த மொழியில கிடைக்கும் ஃப்ரீயா?

நம்ம செம்மொளியில அவயலபுலா இருக்கா?

#நானும் ரவுடியாக :)))))))))))
நீங்க சொன்னா ரொம்ப சரியாதான் இருக்கும்!

வேலைலயும் இதே டெக்னிக்கா??

:)))))))))))
Kumky said…
இன்னமுமா கொலவெறி அடங்கல...

ஒரு ஹிண்ட் கொடுத்தா நாங்களும் அந்த புத்தகம் வாங்கிடுவம்ல...

:))
Unknown said…
:))))))))))))))) அட்டகாசம்.
Asir said…
Congrats..
Kalakkal...
ஜெய் said…
அடேங்கப்பா.. 13 பாயிண்டா?? குப்புற படுத்து யோசிப்பீங்களோ.. :-)

ஆனா, காமெடி இல்ல செல்வேந்திரன்.. நிறைய பேர் நிஜமாவே இதைத்தான் செய்யறாங்க.. அதுவும் ஒர்க் அவுட் ஆகுது..
ஏன் இந்த ரத்த வெறி ... anyway செல்வனுக்கு பாராட்டுக்கள்... நாங்களும் போடுவோம்ல புக்... உங்களுக்கும் ஒரு copy அனுப்பிவைக்கிறேன் ...
Raju said…
யெண்ணேய்..கொல்றீயேண்ணேய்ய்.
selventhiran said…
ஆயில்யன், ரவுடியாக தொடர்ந்து அய்யனார் பக்கங்களைப் படிக்க சிபாரிசிக்கிறேன்.

யோவ் மங்களூரார், கோர்த்து உடுறதுலயே கவனமா இருக்கீரய்யா...!

சித்தார்த், ஆதவன், பாளை கிங்க்ஸ், ஜெய், வெயிலான் - வாங்க வாங்க...

யோவ் கும்கீ, சடை பின்னாதீரும். நான் பொதுவாச் சொன்னேன்.

காயத்ரி, ரெண்டு பேர் மெயில் ஐடியும் இல்லை. கொஞ்சம் அனுப்பி வையுங்கோள்.
Anonymous said…
அட.. நான்கூட எனது பதிப்பியல் ஆய்வில் இத்தகவல்களை பயன்படுத்திக் கொல்லலாம் போல :-))
ilavanji said…
அடடா! எம்புட்டு நாளாச்சு.. உம்ம இந்தவகை எழுத்தை படிச்சு! :)

// “நம்ம வீட்டுக்கோட்டிதான் ஆர்டர் கொடுத்திருக்கும்” என்ற நம்பிக்கையில் அவர்தம் மனைவியரும் // பகீர் சிரிப்புக்கு உத்தரவாதம் :)
Sanjai Gandhi said…
ஒரு புத்தகம் போட துப்பில்லை.. எங்க எழுத்தாளர்களைப் பார்த்து பொறாமைல பொங்கறதே வேலையா போச்சி..
manjoorraja said…
புரியுது புரியுது உன் புத்தகம் வரப்போறதுக்கு முன்னாலெயே இவ்வளவு பில்டப்பா!
நீங்கள் சொன்ன தகவல்கள் முழுக்க முழுக்க உண்மையா அல்லது பொய்யா என்பது எனக்கு தெரியவில்லை அதை நீங்கள் சொன்ன விதம் அந்த மொழி நடையில் நான் என்கவலைகளை மறந்து தனியாக சிரித்து கொண்டிருந்தேன் உண்மையில் ஒரு நகைச்சுவை படைப்பு இது மகிழ்ச்சி நண்பா
Kumar said…
//அட.. நான்கூட எனது பதிப்பியல் ஆய்வில் இத்தகவல்களை பயன்படுத்திக் கொல்லலாம் போல :-))//

Repeatuuuu. :)
இருப்படிக்கிற இடத்துல ஈக்கு(என்னைய சொன்னேன்) என்ன வேலை!
அதானே.. சஞ்செய்..

கேபிள் சங்கர்
RaGhaV said…
என்னா ஒரு வில்லதனம்.. ;-)
//இன்னும் அட்டகாசமான ஏழு யோசனைகள் இருக்கின்றன. அவற்றைப் பெற ரூ.2,000/-க்கான வரைவோலையுடன் நேரில் வரவும்.//

த‌லைவா

அந்த‌ ஏழ‌ எழுப‌தா எழுதி வையுங்க‌

நாம‌ இத‌ த‌னி புத்த‌க‌மா போட்றோம்

ப‌த்தாயிர‌ம் பிர‌தி விக்குறோம்!!!!!
Unknown said…
நல்லாச் சொன்னீங்க பாஸு
Unknown said…
//இன்னும் அட்டகாசமான ஏழு யோசனைகள் இருக்கின்றன. அவற்றைப் பெற ரூ.2,000/-க்கான வரைவோலையுடன் நேரில் வரவும்//


ரூவா ரெடி நைனா...எங்க எத்துகினு வரணும்..அட்ரஸ் கொடுப்பா....:-)))
யாரை அடிச்சோம்னு தெரியாம எல்லாரையும் ரவுண்டு கட்டி அடிக்கிறது இதானா..

உம்மோட சேர்க்கை சரியில்ல :)
Aranga said…
செல்வா ,

2000 ரூபாய் மதிப்புள்ள வேறெதும் பொருள் கொடுத்தால் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா ?

7 வது வழி லவ்நிலா இலக்கிய வட்டமா ? (வசந்த் நாஞ்சில் ரெடியா?)
Ganesan said…
சும்மா கிடக்காம, வயசானவாட்டம் சுடுமாடு தலயில சுத்திக்கிட்டு ஏந்தாம் இம்முட்டு தகறாறு பண்ணிறியோளோ?

உம்ம எல்லாம் குத்த வச்சு உக்கார வச்சா தான் அடங்குவியோளோ?
Kumky said…
Saralafrom said...
நீங்கள் சொன்ன தகவல்கள் முழுக்க முழுக்க உண்மையா அல்லது பொய்யா என்பது எனக்கு தெரியவில்லை அதை நீங்கள் சொன்ன விதம் அந்த மொழி நடையில் நான் என்கவலைகளை மறந்து தனியாக சிரித்து கொண்டிருந்தேன் உண்மையில் ஒரு நகைச்சுவை படைப்பு இது மகிழ்ச்சி நண்பா

:)

அடப்பாவிகளா...

பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் மொத்தமா இங்க ஒரு ஆளு ஆப்பு வச்சிட்டாரே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
நகைச்சுவை படைப்பாம்ல.....
:)))))

சொக்கப் பனை
நீங்கள் செய்த பரிசலின் புத்தக விமர்சனம் எந்த வகை மார்க்கட்டிங்
நீங்க சொன்னா ரொம்ப சரியாதான் இருக்கும்!
“அகமனதின் அணத்தல்களை அனாயசமாகப் பின்னிப்பிணைந்து புனைவுலகின் உச்சத்தை நோக்கி முன்நகரும்

< இந்தப் பதிவு >

அந்தரங்கமான ஆனால் தீவிர நிராயுதத் தன்மையான கேள்விகளை முன் வைக்கிறது”
ஒவ்வொரு பாயிண்ட்-ம் சரவெடி... :-))))

எல்லாத்தையும் அடிச்சு நொறுக்குவதால், இனி நீ "Bull-Dozer" செல்வா என்று அழைக்கப்படுவாய்....

ஒவ்வாக்காசு.
நல்ல ஐடியாஸ்...ஆனா யாருக்கோ அடிவிழுற மாதிரி இருக்கு..
எல்லாமே தமாஷான பார்வை தானய்யா உமக்கு..! ஏதோ நாலு காசை கணக்கு காண்பிக்க முடியாம அருணாச்சலம் படம் ஸ்டைல்ல நாலு,மூனு கம்பெனிங்க கார்ப்ரேட் லெவலாக்கும்னு புத்தகம் ஆரம்பிச்சா..அதை சாக்காக வைத்து புத்தகம் ஆரம்பிக்கறது சுலபம்ன்ற மாதிரி எழுதிடறது.
சிஸ்டத்துல லொட்டுன்னு லொட்டுன்னு தட்டி, அதை சிடியாக்கி, சி.டியை ப்ளேட் போட்டு அதை பலவிஷயங்களுக்கு பிறகு புக்காக்கி., அதுக்கப்புறம் மானங்கெட்ட தனமா சர்க்குலேஷன் டிபார்டுமென்டுக்கு அனுப்பினா.., அவன் சொத்தைன்னுவான்..

இந்த ரேப்பர் ஓடுமடா..பின்னும்டா..தூள்கிளப்பலாம்டான்னு அவன்கிட்ட கேடுகெட்ட தனமான டகுல்பாஷா வேலை காண்பிச்சு..கடைக்கு கொண்டு போனா, ரெண்டாவது ஃபார்ம்.., மூணாம்பக்கம் பின்னாகிடுச்சுன்னு கடைக்காரன் என்னவோ படிச்ச மாதிரியே சொல்வான். உடனே பைண்டிங் தவறை அடுத்த முறை சரிசெய்துடலாமுன்னு ஓர் அறிவிப்பை கொடுத்துட்டு, உட்கார்ந்தா, போஸ்ட் ஆபிஸ்ல அனுப்ப ஆயிரதெட்டு தொல்லை. அதையும் தாண்டினா ஏஜெண்டுகிட்ட பணம் வாங்கிறது தண்ணிப்பட்ட பாடு..
இது மட்டுமில்லாம, ஆபிசுக்குள்ள வேலைவெட்டி இல்லாம இருக்கிற ஆளுங்ககிட்ட பாலிடிக்ஸ் வேற..இதையெல்லாம் தாண்டி புக்ல சம்பாதிக்கிறவன் நிஜமாவே கெட்டிக்காரன்.
இதுக்கு ஐடியாவாம்..இவருக்கு டி.டி.யோட நேர்ல வரணுமாம்.நல்லா இருக்குதய்யா உங்க டீட்டியலு!
இது ப்ளாக் இல்ல..ப்ளாக் ( மார்க்) எப்பூடி..!
செல்வா,

தூள்...!

அன்புடன்,
மறத்தமிழன்.
அடி தூள் பதிவு இது..
ஆனால் கும்க்கி சொன்னதும் கவனிக்கத் தக்கது போல இருக்கே...

இன்னுமா கொலவெறி அடங்கல..
ம்ம் ... வழக்கம்போல இதசுட்டு சைடுலவிட்டு நாலுகாசு பாத்துடலாம் போல இருக்கே ;-))
selva sir,eppidyum marketing panna mudiyuma.
இன்னைக்கு படிச்சாலும் பொருத்தமா இருக்கு!

நடிகையை கூப்பிட்டு புத்தகம் வெளியிடுவதையும் சேர்த்து கொள்ளலாம்!

Popular Posts