மனக்காளான்

மீட்டிங்கில் போன வருஷத்து புரொடக்டிவிட்டி என்ன என்று கேட்டார்கள். பழம்பெருமை வேண்டாம் சார். எதிர்காலத்தைப் பற்றி யோசிப்போம் என்றேன்.

'விச் காஃபி யூ வாண்ட் டூ ஹேவ்?’ என்ற காஃபி டே நங்கையிடம் ‘சுக்கு காஃபி’ என்றேன். முறைத்துச் சிரித்தாள்.

யானையைக் கட்டியும் யூனிகார்னை ஓட்டியும் சோறு போட முடியாது!

சிந்தனையாளர்களை ஏன் இந்த உலகம் சோம்பேறிகள் என்கிறது?!

ரங்கநாதன் தெருவைப் பற்றிய ‘அங்காடித் தெரு’ பாடலில் சில வரிகள் மு.சுயம்புலிங்கத்தினுடையவை.

கட்டிய கணவனை, பெற்ற மகனை, ஆசைப் பேரனை களப்பலி கொடுத்த மறத்திக்கு இடமில்லையெனில் இத்தேசம் ஒழிதல் நன்றாம்!

கொடியது கேட்கின் வரிவடிவேலா...ஞாயிறில் வேலை :(

அப்படியே றெக்கை கட்டி பறக்குற மாதிரி இருக்கு... கேப்டன் டிவி ஆரம்பிச்சுட்டாங்க..

மனிதக் கூட்டங்களால் நிரம்பி வழியும் பூமியில் தனிமை ஒரு சாக்கு! உடைக்கத் துணிந்தால் பிரயத்தனங்கள் தேவையில்லை.

அப்பா அனுப்பிய கூரியரில் மஸ்கோத் அல்வாவும், சம்பா அவலும், அன்பும் இருந்தன.

பரிசல் உயிரோடுதான் இருக்கிறார் என்று ட்வீட்டச் சொல்கிறார். மதிய சாப்பாடு அவரோடுதான். சிறுகதைகள் பற்றி பேசவில்லை :)

மேலவை உறுப்பினராகப் போறேன்... எழுத்தாளர் கோட்டாவில்...

கமாண்டோக்களுக்கானப் பயிற்சிகளில் மேரி பிஸ்கட் சாப்பிடுவதையும் சேர்க்க வேண்டும்.

நான் பழுத்திருந்த காலங்களிலும் வராத, பட்டபின்னும் வராத மனம் கொத்தி நீ! (லாசராதான் இல்லையே...)

இக்கட்டு தருணங்களில் திக்கெட்டும் அடிப்பவனே சச்சின்! ஆட்டம் காக்க சச்சின் உண்டு. வாட்டம் வேண்டாம்.

ஸ்வீட்டி ஒண்ணு கொடுங்க என்றேன். கொல்லென சிரித்தது பேருந்து எனை கொன்றவள் நீயென தெரியாமல்...

காதல் காமத்தின் கண்றாவிப்பெயர்!

வரும்வரை துணி துவைத்துக்கொண்டிரு... வந்தவுடன் உன்னைத் துவைக்கிறேன்.

நாஞ்சில் நாடன் கவிதைகளுக்கு யாரெனும் பொழிப்புரை எழுத மாட்டார்களா?!

நான் புத்தகம் எழுதினால் அதை என் பால்யகால சினேகிதன் கருணாநிதிக்கு சமர்ப்பணம் செய்வேன். கருவாட்டு மண்டி வைத்திருக்கிறான்.

பாதசாரியின் ‘நல்லியல்புகள்’தானே பேயோனிடத்தில் காணக்கிடைக்கின்றன...

விமர்சனங்கள் படித்துவிட்டு சினிமாவிற்குச் செல்வது - ஏற்கனவே புணர்ந்த பெண்ணுடனான முதலிரவு போன்றது.

வழக்கமாக ஆன்மாவைக் கரைத்துத்தான் எழுதுவேன். கரைக்க தோசை மாவைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லாததால் எழுதவில்லை.

குடிக்காமல் எடுத்த வாந்தி கவிதை ஆகிறது!

இளையராஜா ஒரு சிறந்த மனிதனா?! எனும் விவாதம் துவங்கியுள்ளது. எதிர்வீட்டுக்கார ஆடிட்டரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதி உயிர்மைக்கு அனுப்பனும்.

ட்வீட்டுகளை முதன்முதலில் தொகுத்தவர் கோபிகிருஷ்ணன். நூலின் பெயர் ‘டேபிள் டென்னிஸ்!’

செய்யதும், சொக்கலாலும் ஜாய்ண்ட் வெஞ்சராக பஞ்சு வைத்த பீடிகளை ஏன் உருவாக்கக் கூடாது?!

சகல பாவங்களையும் கட்டணமின்றி மன்னிக்கவும் கடவுளே காதலி!

யோனிகள் பசித்திருக்கும் நாட்டில் மழை பொய்க்கும்.

விஜயகாந்த் ஆக முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். கோபக்கார இளைஞன் வேடம் சுலபமாக இருக்கிறது...

இஞ்சி மொரப்பாவை எறும்புகள் மொய்ப்பதில்லை...!

மேலாளர் வீட்டு விருந்தில் கரப்பானே கிடந்தாலும் "கண்ணம்மா கம்னு கிட...!"

மாமனாரின் இன்பவெறியை க்ளேஸில் அடித்தால் நவீனம். நியூஸ் பிரிண்டில் அடித்தால் செக்ஸ் புக்!

நீ மழை கழுவி வைத்த இலை... நான் இலையேறும் கட்டெறும்பு...

அறமெந்தும் கலைஞன் சமூகத்தின் பிள்ளை!

பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் நரகாசுரன் மீதான வெஞ்சினம் மறையவில்லை. விழாக்கோலம் பூண்டிருக்கிறது வீதிகள்...

அடித்த கதையை எழுதினால் ஹீரோயிசம் என்கிறார்கள்... அடிபட்ட கதையை எழுதினால் சுயகழிவிரக்கம் என்கிறார்கள்...

வாஸ்து பார்த்து வாழைக்குலை மாட்டு... உடனே ஏறும் எட்டணா ரேட்டு...

அண்ணாமலை, மருதமலை, மலை மலை, திருவண்ணாமலை, அழகர் மலை என மலைப் படங்கள் எல்லாம் ஏன் மொக்கையாக இருக்கிறது?!

விளம்பர இடைவேளை மாதிரி பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சண்டையிடும் காதலியை என்ன செய்யலாம்?

சேர்த்துக்கொள்வது உசிதம்.

வீடு நீங்கும் ஒவ்வொரு முறையும் ‘பாடி ஸ்பிரே’ அடித்துக்கொள்கிறேன். எனக்கு சமூகப் பிரக்ஞை இல்லை என்று எப்படி சொல்லப் போகும்?!

உன் அழகைப் பாட மொழிக்கு திராணி இல்லை. எனக்கும்.

மேலாளர்களே, வேலைக்காரர்களிடத்தில் அன்பாகவும், மூளைக்காரர்களிடத்தில் எச்சரிக்கையாகவும் இருப்பீராக! ஆமென்!

வக்கற்றவனுக்கு வாயே துணை!

நினைவில் கார் உள்ள பெண்ணை எளிதில் வீழ்த்த முடியாது!

ஈக்கி குத்தி செத்தவனும் இருக்கான். ஈட்டி குத்தி பொழைச்சவனும் இருக்கான். குத்துக்கும் சாவுக்கும் சம்பந்தம் இல்லை.

இனிய இரவாகட்டும் விடியல் நமதாகட்டும். நாளைக்காவது தினமணி நனையாமல் வரட்டும். ஜெய்ஹோ!

இணையத்தில் மேய்ந்தது போதும் இணையோடு மேயேன் என்கிறாய். உன் மோனையில் மோகம் கொள்கிறேன்.

ட்வீட்டர் மூலமாக அழகிகளின் சகவாசம் கிடைக்க வாய்ப்பே இல்லை!

நா.கதிர்வேலன் பேட்டிகளில் மட்டும் மொக்கை இயக்குனர்கள் கூட மொரட்டு எளக்கியவாதியா மாறி பேசறாய்ங்க

அசலான சர்க்குலேஷன் ஆசாமி பெட் காஃபி குடித்திருக்கவே மாட்டான். நான் குடித்ததில்லை.

எளிமையாக எழுதுகிற எழுத்தாளன் மீது இளக்காரம் எனும் மனக்காளான் முளைக்கிறது.

சிதிலத்தின் அதீதம் அழகியல்!

இலக்கியத்தின் உச்சம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். துவக்கம் என்னவோ ‘போலச் செய்தல்’தான்!

Comments

எனக்கு என்னமோ சந்தேகமாக தான் இருக்கிறது தல பேயோன் என்கிற பெயரில் எழுதும் ஆசாமி நீங்கள் தான் என நினைக்கிறேன் , ஏற்கனவே இந்த சந்தேகத்தை நமது அண்ணாத்தே ஜெமோ கூட ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட இருந்தார், எது எப்படியோ மிக அருமையான வார்த்தை விளையாட்டு தலைவரே, உங்களை ஏன் செம்மொழி மாநாட்டிற்கு அழைக்கவில்லை பாவி பயல்கள், அதிலும் குடிக்காமல் எடுக்கும் வாந்தி தான் கவிதை (கவுஜை) சத்தமாக வாய் விட்டுசிரித்து விட்டேன் பாஸ்
தோழமையுடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
http://thurvasar.blogspot.com
elam nachu dhan - ipa iruka ofce mood ku -
//மீட்டிங்கில் போன வருஷத்து புரொடக்டிவிட்டி என்ன என்று கேட்டார்கள். பழம்பெருமை வேண்டாம் சார். எதிர்காலத்தைப் பற்றி யோசிப்போம் என்றேன்.
//
//கொடியது கேட்கின் வரிவடிவேலா...ஞாயிறில் வேலை :(// nala set aguthu :) :)
சில வரிகள் நன்றாக இருந்தன.
செல்வா,

அடடா மழைடா ...தமிழ் மழைடா...

அனைத்தும் ரசனை..
:)))

டவுட்டெல்லாம் டவுட்டாவே தொடருது !
Ashok D said…
//யோனிகள் பசித்திருக்கும் நாட்டில் மழை பொய்க்கும//
Extreme :)

//ட்வீட்டர் மூலமாக அழகிகளின் சகவாசம் கிடைக்க வாய்ப்பே இல்லை!//
அப்படியா நான் ட்வீட்டர் பக்கம் போகவில்லையே என்ற ஆதங்கம் தீர்ந்தது

நிறைய தேறிச்சு... nice நொறுக்ஸ்

(பத்திரிக்கைகளில் தனிக்கை செய்த வரிகளை மொத்தமாக இறைத்தியிருக்றீர்கள் சரியா)
ஜெய் said…
// காதல் காமத்தின் கண்றாவிப்பெயர்! //

இது மாதிரி சிலது மட்டும் ஒப்புக்க முடியல.. மத்ததெல்லாம் சூப்பர்..
ட்வீட்டர் பக்கம் வந்தது கிடையாது செல்வா.. புரியாதுங்கிறது வேற விஷயம்.. அடிக்கடி இந்த மாதிரி இடுகைகள்ல மொத்தமா போடுங்க..செம..:-)))
அட! அவ்வப்பொழுது ட்விட்டரில் அடித்த கூவலை ஒரு வேகமான கட்டுரை போல் ஆக்கிவிடலாம் போலிருக்கிறதே...அபிதா- கல்யாண்ஜி சாரின் கவிதைதானே அந்தக் காலத்தில் படித்தது....
//அடித்த கதையை எழுதினால் ஹீரோயிசம் என்கிறார்கள்... அடிபட்ட கதையை எழுதினால் சுயகழிவிரக்கம் என்கிறார்கள்//
செம ஆட்டம், நல்லவைகளை இப்படி மேற்கோள் காட்டினால் பதிவின் அளவும் என்னுடை பின்னூட்டமும் ஒரே அளவில் இருக்கும்
Unknown said…
இதேனிகி... நாயனா... மம்மலனி ச்சம்ப்பாலனி ஆலோசன உண்ட்டே செப்பொச்சுகா... மேமே ஆத்மஹத்தி செஸ்குண்டாமுகா...

தேனிகம்மா இந்த்த பயங்கரமைன போஸ்டு
selventhiran said…
ராகவா, அது நான் இல்லை என்பது பேயோனுக்கே தெரியும் :)

வாங்க குட்டிபையா!

வருகைக்கு நன்றி சுரேஷ் கண்ணன்

வாங்க மறத்தமிழன்!

ஆயில்யா, நம்ம வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்யா...

அசோக், இப்பல்லாம் பத்திரிகைகள் மொத்த வரிகளையும் தணிக்கை பண்ணிடுறாய்ங்க... :(

வாங்க ஜெய்!

வாங்க கார்த்திகைப் பாண்டியன்!

கேவி, கல்யாண்ஜி லாசராவைத் தட்டி அபிதா எழுதினார். நான் அவரைத் தட்டி ட்வீட்டினேன். மூலம் லா.ச.ரா

வால், சிங்கிள் அர்த்தம்தானே?! :)

வாங்க இளா!
நன்றி ரமேஷ். இதுவரைக்கும் இது போன்ற நடையில் இது போன்ற விசயங்களை படித்தது இல்லை. யோசிக்க வைத்துள்ளீர்கள்.
Sanjai Gandhi said…
ட்விட்டர் ஒழிக..!
Saravana kumar said…
//யோனிகள் பசித்திருக்கும் நாட்டில் மழை பொய்க்கும்.
நிதர்சன உண்மை

//குடிக்காமல் எடுத்த வாந்தி கவிதை ஆகிறது!
சூப்பர்

//விமர்சனங்கள் படித்துவிட்டு சினிமாவிற்குச் செல்வது - ஏற்கனவே புணர்ந்த பெண்ணுடனான முதலிரவு போன்றது.
என்னத்த சொல்றது

KEEP ROCKING
manjoorraja said…
விமர்சனங்கள் படித்துவிட்டு சினிமாவிற்குச் செல்வது - ஏற்கனவே புணர்ந்த பெண்ணுடனான முதலிரவு போன்றது.//


இது நல்லா இருக்கு
//கொடியது கேட்கின் வரிவடிவேலா...ஞாயிறில் வேலை :( //

//கமாண்டோக்களுக்கானப் பயிற்சிகளில் மேரி பிஸ்கட் சாப்பிடுவதையும் சேர்க்க வேண்டும்.
//

//காதல் காமத்தின் கண்றாவிப்பெயர்!
//

//இஞ்சி மொரப்பாவை எறும்புகள் மொய்ப்பதில்லை...!//

//மேலாளர்களே, வேலைக்காரர்களிடத்தில் அன்பாகவும், மூளைக்காரர்களிடத்தில் எச்சரிக்கையாகவும் இருப்பீராக! ஆமென்!//

//நா.கதிர்வேலன் பேட்டிகளில் மட்டும் மொக்கை இயக்குனர்கள் கூட மொரட்டு எளக்கியவாதியா மாறி பேசறாய்ங்க// -

ட்வீட்டு சிறுசானாலும் மேட்டர் பெருசு...

(வழக்கம் போலவே) லொட லொட கல கல... :-)

ஒவ்வாக்காசு.
//நினைவில் கார் உள்ள பெண்ணை எளிதில் வீழ்த்த முடியாது!//

//
செய்யதும், சொக்கலாலும் ஜாய்ண்ட் வெஞ்சராக பஞ்சு வைத்த பீடிகளை ஏன் உருவாக்கக் கூடாது?!//

//யோனிகள் பசித்திருக்கும் நாட்டில் மழை பொய்க்கும்.//

சூப்பரு.. பின்னுறீங்கப்பு!!!
"நறுக்குத் தெறித்தார் போல் ட்விட்டுதல் எப்படி?"ன்னு ஒரு பொஸ்தகம் போடுங்க.
அன்பின் செல்வேந்திரன்

படிக்க ஆரம்பிக்கும் போது ஒன்றுமே புரியவில்லை - போகப் போகப் புரிந்தது - மறு மொழிகளும் படித்தேன் - நன்று

பல புதியனவற்றைப் படித்தேன்

நல்வாழ்த்துகள் செல்வேந்திரன்
நட்புடன் சீனா
பத்மா said…
காளான் பெருகி பல்கட்டும்
vaanmugil said…
//நீ மழை கழுவி வைத்த இலை... நான் இலையேறும் கட்டெறும்பு...//

கவித! கவித!

//மேலவை உறுப்பினராகப் போறேன்... எழுத்தாளர் கோட்டாவில்...//

உண்மையாவா செல்வா?
Aranga said…
அடிச்சுக்கூட கேப்பாங்க , நீங்கதான் பேயோன்னு ஒத்துக்காதீங்க ......
//
அண்ணாமலை, மருதமலை, மலை மலை, திருவண்ணாமலை, அழகர் மலை என மலைப் படங்கள் எல்லாம் ஏன் மொக்கையாக இருக்கிறது?!//

ஒருவேளை, சுழித்திருந்தால் ரசித்திருப்பீர்கள்.
அதில் ஒரு ஸ்மைலி விட்டுப்போயிருக்கலாம். இங்கே சேர்த்துவிடுகிறேன்.

:-)

ஓகே?

(தலைப்பு அபாரம்)
//
அண்ணாமலை, மருதமலை, மலை மலை, திருவண்ணாமலை, அழகர் மலை என மலைப் படங்கள் எல்லாம் ஏன் மொக்கையாக இருக்கிறது?!//

ஒருவேளை, சுழித்திருந்தால் ரசித்திருப்பீர்கள்.

:-)
JDK said…
//அண்ணாமலை, மருதமலை, மலை மலை, திருவண்ணாமலை, அழகர் மலை என மலைப் படங்கள் எல்லாம் ஏன் மொக்கையாக இருக்கிறது?!//

Also add "Thirumalai" to the list :D
JDK said…
//விமர்சனங்கள் படித்துவிட்டு சினிமாவிற்குச் செல்வது - ஏற்கனவே புணர்ந்த பெண்ணுடனான முதலிரவு போன்றது.//

Ayyayo!! Inimey naan review padichittu Padam paakavey maataen, appadi padichaalum padathukku poga maataen.
வித்தியாசமா தலைப்பு
தலைப்புக்கு ஏற்ற மாதிரி செய்திகள்

நிறைய காளான்களை சுவைத்தேன் சாரி ரசித்தேன்
இதை இரண்டு அல்லது மூன்று பதிவுகளாக போட்டிருந்தால் படிக்க சோர்வு தட்டாது என்று நினைக்கிறேன்.

அடுத்த தபா, இவ்ளோ பெர்சா வேண்டாம் தலீவா
எனக்கும்........

டவுட்டெல்லாம் டவுட்டாவே தொடருது !!!!!!!!!!

Popular Posts