செல்போன் மேலாண்மை

உலகிலேயே செல்போனை மகா கீழ்த்தரமாகப் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்தாம் என்பது தொழிலதிப நண்பர் ஒருவரின் அசைக்க முடியாத வருத்தம். மறுத்துப் பேச வழியில்லை. பல மரம் கண்ட தச்சன். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில்
அவரது அலுவலக ஊழியர்களிடத்தில் ‘செல்போன் மேலாண்மை’ பற்றி பேசினேன். நமக்குத் தெரிந்ததையே மேடையேறி ஒருவன் பேசினால் விழி விரிய கேட்பார்கள் ஜனங்கள். நீங்களும் கேளுங்கள் 

1) நட்பின் மேன்மை, காதலின் புனிதம், அன்னையின் அன்பு மாதிரியான பார்வர்டு சமாச்சாரங்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பாதீர்கள். இவை கிட்டத்தட்ட ஸ்பாம் மெஸெஜுகள்தாம்.

2) வெல்கம் ட்யூன் நாகரீகமாக இருக்கட்டும். ஒரு எம்.என்.சியின் வைஸ் பிரஸிடெண்டை அழைத்தால் ‘ச்சீ..ச்சீய் சிச்சீய் என்ன பழக்கம் இது...” என்று வைத்திருக்கிறார். நம் கவுரவத்திற்கு அழகல்ல.

3) ரிங்டோன் உங்களை மட்டும் எழுப்பட்டும். சிலரது ரிங்டோன் சத்தத்திற்கு மொத்த உலகே திரும்பிப் பார்க்கும்.

4) போன் புக்கில் சக ஊழியர்களின் உண்மையான பெயரை சேவ் செய்யுங்கள். ஒருவர் தன் மேலாளர் பெயரை ‘ராஜபாளையம்’ என்றும் மனைவி பெயரை ‘விதி’ என்றும் வைத்திருந்து இருவரிடமும் சிக்கினார். பட்டப்பெயர்கள் உங்களைத்தான் பறக்க விடும்.

5) சிலர் தங்களது பாஸ் அழைத்தால் ‘நாய் குரைப்பது’ போன்ற ரிங்டோனை வைத்திருப்பர். இது நாகரீகமல்ல.

6) மெஸெஜ் ஆப்ஷனில் அட் சிக்னேச்சரில் உங்களது பெயரையும் நிறுவனத்தின் பெயரையும் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் உங்களது பெயரை டைப் செய்ய வேண்டி இராது. போன் புக்கில் உங்களது எண் இல்லாதவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் அவர் புரிந்து கொள்வார்.

7) உங்கள் டீமில் உள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என தனித்தனி குரூப் உருவாக்கிக்கொண்டால் குறுஞ்செய்திகள் அனுப்ப வசதியாக இருக்கும். ஒவ்வொரு எண்களையும் தேடும் நேரம் மிச்சம்.

8) பிறிதொரு நபர் உங்கள் அருகே இருக்கையில் ஒருபோதும் லவுட் ஸ்பீக்கரை உபயோகிக்காதீர்கள். உங்களது ஹானஸ்டி உடனே கேள்விக்குள்ளாக்கப்படும். தேவையற்ற பிரச்சனைகளும் உருவாகலாம்.

9) எஸ்ஸெம்மெஸ் மொழியின் ஷார்ட் பார்ம்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். சிலர் ரெஸ்பெக்டட் சார், சப்மிட்டட் ப்ளீஸ் என்றெல்லாம் பார்மலாக மெஸெஜூகிறார்கள்.

10) ஸ்க்ரீன் சேவர் படமாக என்ன இருக்கலாம் என்பதை விட என்ன இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். நடிகைகள், சாமியார்கள் எல்லாம் உங்களைப் பற்றிய முன் தீர்மானம் உருவாக்குவதாக இருக்க வேண்டாம்.

11) அலுவலக நேரம் தாண்டி அழைக்க வேண்டியிருப்பின் உயரதிகாரியோ அல்லது உங்களுக்கு கீழே இருப்பவர்களோ ‘நான் உங்களை அழைக்கலாமா?!’ என ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அழைப்பது உங்களது மரியாதையைக் கூட்டும்.

12) திடீர் விடுப்பு, விபத்து, மரணச் செய்தி போன்ற செய்திகளை ஒருபோதும் குறுஞ்செய்தியில் தெரியப்படுத்தாதீர்கள். அழைத்துச் சொல்லுங்கள்.

13) எந்த ஒரு எண்களை அழைப்பதற்கு முன்னும் யாரிடம் பேசப்போகிறோம், என்ன பேசப் போகிறோம், இந்த அழைப்பின் புரொடக்டிவிட்டி என்ன என்பதை ஒரு நிமிடம் யோசித்து விட்டுப் பேசுங்கள்.

14) அலுவலகத்தில் இருக்கும் போது ஹெட் போனோடு வளைய வராதீர்கள். நீங்கள் இருப்பது அலுவலகத்தில் சுற்றுலா தளத்தில் அல்ல.

15) இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேசுகிற விஷயத்தில் நிச்சயம் அரட்டை கலந்திருக்கிறது. ஆண்டவனே அழைத்தாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வேண்டாமே.

16) உங்களுக்கு வரும் அழைப்புகளை தவிர்க்க முடியாத தேவையின்றி ரிக்கார்டு செய்யாதீர்கள்.

17) அடுத்தவர் செல்போனை ஒருபோதும் நோண்டாதீர்கள். நவீன யுகத்தில் செல்போன் ஒருவரின் டைரியைப் போல. அடுத்தவர் அந்தரங்கம் நமக்கெதற்கு?

18) ஒருவரறியாமல் கான்பரன்ஸ் அழைப்பில் அழைத்துப் பேசுவது நாகரீகமல்ல. பிற்காலத்தில் பெருங்கொண்ட பஞ்சாயத்துக்களை ஏற்படுத்தும்.

19) சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் உயரதிகாரிகளை அழைத்துத் தொந்தரவு செய்யாதீர். குறுஞ்செய்தி வசதியை எஃபெக்டிவாகப் பயன்படுத்துங்கள்.

20) அவுட் கோயிங் போறதில்லை, லோ பேட்டரி ஸ்விட்ச்டு ஆஃப் போன்ற நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். செயல்திறனைக் குறைக்கும் வைரஸ்கள் இவை.

21) வீட்டிலிருக்கும்போது அழைப்பு வந்தால் தொலைக்காட்சி, ரேடியோ ஒலிகளைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்.

22) வேறு டிப்பார்ட்மெண்டைச் சார்ந்தவர்கள், வேறு கிளைகளைச் சார்ந்தவர்களைக் காரணங்களின்றி அழைக்காதீர்கள். அக்கப்போர் வைக்கப்போரில் தீ வைப்பது மாதிரி.

23) வந்திருக்கும் குறுஞ்செய்தி அலுவல் சார்ந்தது எனில் கட்டாயம் ரெஸ்பாண்ட் செய்யுங்கள். ஓகே என்றாவது ரிப்ளை முக்கியம்.

24) அலுவலகம் செல்போன் பில்லைத் தருவதாக இருந்தால் ஒரு போதும் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதில்லை எனும் சுயக்கட்டுப்பாட்டில் இருங்கள். ப்ளூ டூத் பரிமாற்றங்கள், ஸ்கேண்டல் வீடியோக்களைப் பரப்புதல் போன்றவை உலகெங்கிலுமிருக்கிற முதலாளிகள் வெறுக்கப்படுகிறது.

25) பெண் ஊழியர்களிடத்தில் பேசுகையில் பேச்சில் கூடுதல் மரியாதையும், வார்த்தைகளில் கூடுதல் கவனமும் இருக்கட்டும்.

Comments

Anonymous said…
மிக நல்ல பதிவு செல்வேந்திரன் - ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கொடுத்தால் பலர் தங்களுடைய அலுவல் தோழர்களோடு பகிர்ந்துகொள்ள உதவும்!

- என். சொக்கன்,
பெங்களூரு.
நிறைய விசயங்களை மைண்ட்ல ஃபிக்ஸ் செஞ்சுக்கறதுக்கு ரொம்ப உபயோகமாக....!


நன்னி :)
ஆகா... இதைப்பத்தி எல்லாங்கூட கூட்டம் போட்டுப் பேச வேண்டி இருக்கா....

வலையேத்தினதுக்கு நன்றிங்க!!
Anonymous said…
செல்வா, கான்ஃப்ரென்ஸ் போடுவது பத்தி ஒண்ணும் சொல்லலை :)
கணேஷ் said…
பயண் தரும்...நன்றி ணா....
அழைப்பின் புரொடக்டிவிட்டி...

:)
அவசியமான பதிவு இனிமேலாவது கவணிப்பார்களா?

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்
Karthik said…
என்னது காலேஜ் முடிஞ்சு வெளியே வந்ததும் மொபைலை தூக்கி கடாசிடனுமா? ஆவ்வ். :))
RRSLM said…
கான்பரன்ஸ் அழைப்பில் இருக்கும் பொழுது எல்லோருக்கும் பொதுவான ஒரு மொழியில் பேச வேண்டும்.........என் கூட வேலை பார்க்கும் ஆந்தரா மக்களுக்கு அந்த பழக்கமே கிடையாது, எரிச்சல ஊட்டுவனுங்க.
உலகிலேயே செல்போனை மகா கீழ்த்தரமாகப் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்தாம் என்பது தொழிலதிப நண்பர் ஒருவரின் அசைக்க முடியாத வருத்தம்.
நல்ல, தேவையான, பதிவு.
செல் பேசிகளின் செவிக்கு எட்டட்டும்.
அனைவரும் இதுவரை ஒன்றிரண்டையாவது கடைபிடிதிருக்க மாட்டார்கள்.
பயனுள்ள நல்ல பகிர்வு செல்வா. நன்றி.
- கபிலன்
//ஒருவரறியாமல் கான்பரன்ஸ் அழைப்பில் அழைத்துப் பேசுவது நாகரீகமல்ல. //

சாமிய்ய்ய்ய்.... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் :)
ராங் காலுக்கே நான் அரை மணி நேரம் பேசறேன். இதை குறைக்க வழி இருக்கா செல்வேந்திரன் :)
Unknown said…
Cell Phone Use pannamal Irunthal Intha Prachanayea Illai ......
அலுவல் மற்றும் அலுவலகம் சார்ந்த செல்போன் மேலான்மையை சொல்லி இருக்கீங்க. நல்ல பகிர்வு, நன்றி


பர்சனல வாழ்க்கை சாக்கடை ஆகாமல் இருக்க செல்போன் மேலானமை ஏதும் இருக்கா ?
Thamira said…
சரிங்க ஆஃபீஸர்.! :-))
செல்வாவோட இந்த பதிவுல எனக்கு உடன்பாடு இருந்தாலும், தமிழனோட அடிப்படை உரிமையில அவர் கை வைக்கிறார்.
//3) ரிங்டோன் உங்களை மட்டும் எழுப்பட்டும். சிலரது ரிங்டோன் சத்தத்திற்கு மொத்த உலகே திரும்பிப் பார்க்கும். ///

நாங்க ரிங் டோன் வைக்கிறதே அடுத்தவங்க கேக்கிறதுக்குதான்.

///15) இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேசுகிற விஷயத்தில் நிச்சயம் அரட்டை கலந்திருக்கிறது. ஆண்டவனே அழைத்தாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வேண்டாமே.//

நாங்க பேச ஆரம்பிக்கிறதே அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம்தான்.

///17) அடுத்தவர் செல்போனை ஒருபோதும் நோண்டாதீர்கள். நவீன யுகத்தில் செல்போன் ஒருவரின் டைரியைப் போல. அடுத்தவர் அந்தரங்கம் நமக்கெதற்கு?///

அந்த சொகம் இருக்கே!!! அப்ப்ப்ப்பப்ப்பா!!

///23) வந்திருக்கும் குறுஞ்செய்தி அலுவல் சார்ந்தது எனில் கட்டாயம் ரெஸ்பாண்ட் செய்யுங்கள். ஓகே என்றாவது ரிப்ளை முக்கியம்.///

உடனே ரெஸ்பான்ஸ்....அதுவும் நாம!!!!!!?????
Asir said…
நன்று..

அருமையான கருத்துக்கள்..
Kumar said…
Nice one Selva!.
Saravana kumar said…
நல்லா இருந்தது அண்ணா
Deepa said…
மிக அவசியமான பதிவு. சுவாரசியமாகவும் எழுதி இருக்கிறீர்கள்.
4 and 5 :))
Anonymous said…
என் நண்பர்களிடம் நான் வலியுறுத்துபவை இவையே. என்னை ஏதோ ஜந்துவைப் பாக்கற மாதிரி பார்ப்பார்கள். இங்கே பாக்கறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு. ஃபோர்வேட் பண்ணனும்
நல்ல தகவல்கள். நன்றிங்ணா...
Anonymous said…
to display only post titles as like s.ramakrishnan having in his blog follow d steps in this site http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

Thursday, June 10, 2010 6:10:12 AM GMT+04:00


to have label in drop down format follow steps in http://jacqsbloggertips.blogspot.com/2010/02/how-to-create-dropdown-labels-menu-in.html

June 10, 2010 7:41 AM
Nathanjagk said…
அருமை செல்வேந்திரன்!

புத்தியில் புகட்டவும் பூட்டவுமாய் நற்சிந்தனைகள்.
செல்லறம் காப்பதே இனி நல்லறமாகும் :)

என் செல்போனில் ஏட் ஸிக்னேச்சர் வசதியில்லை. இருந்தும் ஒரு கணிப்பில் சில எண்களுக்கு பெயரை இணைத்து அனுப்பும் பழக்கமுள்ளவனாகிறேன்.
கைவசமுள்ள மாடல்களுக்கு தகுந்த மாதிரி யுக்திகள் பின்பற்றப்படுகின்றன. 25 கருத்துக்களும் 2ஜி, 3ஜி பாகுபாடின்றி எல்லா செல்களுக்கும் புது ரத்தம் பாய்ச்சும் என்று நம்புகிறேன்.

இன்னும் வெறும் எண்களா வரும் அழைப்பின் என்னடா எப்படியிருக்கே என்ற கரகரக்கும் குரல்கள் என்னைப் பதற்றமாக்கிவிடுகின்றன. நம் செல்போனை அடுத்தவருக்கு கொடுக்கும் போது துடைத்துவிட்டு கொடுப்பது நலம். ஹெட்போன்களுக்கு என்னமாதிரியான யுக்தி பின்பற்றப் படுகிறது எனத் தெரியவில்லை.

என்னை இன்னும் பதற்றமாக்கும் குரல்காரர்களின் காதுகளை ப்ளூ-டூத் கவ்வியிருக்கிறது. ஹாண்ட்-ப்ரீயாக நம் அருகில் நிற்பவர் சடாரென ஜஸ்ட் லிஷன் டு மீ எனும் போது அதிர்ந்து திரும்பி பார்டன் மீயாகிறேன்.
என் சமீபத்து இடுகை கூட செல் பற்றியதுதான்.

25ம் எனக்குத் தேவைப்படுகிறன தான். நன்றி!
வினோ said…
Mikka Nandri...Nalla Pathuvi Selva...
butterfly Surya said…
தேவையான பதிவு..

பதிவுலக நண்பர்கள் போன் செய்தால் எடுத்து பேசுங்க.. அப்படின்னு ஒரு வரி சேர்த்திருக்கலாம்.
Krishnan said…
Thanks selva.Good one.
Unknown said…
//அலுவலகத்தில் இருக்கும் போது ஹெட் போனோடு வளைய வராதீர்கள். நீங்கள் இருப்பது அலுவலகத்தில் சுற்றுலா தளத்தில் அல்ல//.;))) nice post selva
நிறைய பேருக்கு இது தேவைப்படுது செல்வேந்திரன்!
Unknown said…
ஷெல்வேந்திரா...

என்ன கொடுமையடா இது...

ஷெல்போன் மேலாண்மை குறித்துப் பதிவிட்டு வாரம் மூண்றாகிவிட்டதடா... மூண்றாகிவிட்டது...

இன்னுமா பதிவெழுத நேரம் கிடைக்கவில்லை....

ஷெம்மொழித் தமிழ் கண்ட கோவையிலிருந்துமா இந்த ஷோம்பல்...

எழுந்திடடா மகனே... எழுந்திடு...

புது வெள்ளமாய்ப் போர்வாளாய்ப் பழந்தமிழர் பரணிப் பாட்டாய், எழுந்திடடா, எழுந்திடு...

மாதா அழைக்கிறேன்... மணித்துளியில் எழுந்துவாடா என் கண்மணி....

நொந்து போய் அழைக்கிறேனடா... நொடியில் வந்துவிடு...

தாமதத்தைக் கைவிடு... ப்ப்பொறுத்தது போதும்.... ப்ப்பொங்கி எழுந்திடடா... ப்ப்பொங்கி எழுந்திடு...
மிக அழகாகக் கூறியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்..! ஆனால்... இன்னும் விட்டுப்போன சில விஷயங்கள் இருக்கின்றன!