இருக்கிறேன்

தமிழாய்ந்த முதுகூகை அவர். அவ்வப்போது பட்டாயாவில் பட்டையைக் கிளம்பும் வழக்கமுண்டு. அன்பு கலக்காத கலவி - வம்பு வளர்க்காத கிழவி என்பது என் அபிப்ராயம். மறுத்தார் அவர்.

ஒவ்வொரு முறை போகும்போதும் மறக்காமல் சின்னச்சின்ன கவரிங் நகைகள், ஸ்டிக்கர் பொட்டுக்கள் வாங்கி வைத்துக் கொள்வாராம். உடை தளர்த்தும் முன்னர் உனக்காகத்தான் வாங்கி வந்தேனென நீட்ட அகம் நெகிழ்ந்து அன்பு பெருக்கெடுக்கும் என்கிறார். அரை நாள் சகவாசத்திலும் அன்பை எதிர்பார்க்கிறது மனம்.

***

மகுடேஸ்வரன் சந்திப்பு வந்தவனை பஸ் ஸ்டாண்டில் மடக்கி பெரிய கொடிவேரிக்கு அழைத்துச் சென்றார்கள் திருப்பூர் நண்பர்கள். வழியில் ஒரு கிராமத்தில் கண்ணுக்குள் புல்லினை விட்டு கற்கள் எடுக்கும் வைபவம். மயிர்க் கூச்சம் எடுத்து திரும்பி நின்று கொண்டேன். கல்லெடுக்கும் கிழவிதான் சாமிநாதனின் ஆஸ்தான கண் வைத்தியராம். அடிக்கடி கண்களைச் சுத்தம் செய்துகொள்வேன் என்றார். எதையும் அறிவியல் அடுப்பிலெற்றி அவித்துப் பார்த்தால் மட்டுமே நம்புவது எங்கள் குல வழக்கம்.

யாரும் அறியா வண்ணம் தண்ணீருக்குள் அமிழ்ந்து தனியாகக் குளித்துக் கொண்டிருப்பவர்களின் கால்களைப் பிடித்து அமுக்கி கொலை செய்து பாறைக்குள் ஒளித்து வைப்பதை குலத்தொழிலாக செய்யும் விற்பன்னர்கள் கொடிவேரியில் இருக்கிறார்கள். பிணத்தை தேடி எடுத்துத் தர பல்லாயிரம் தொகை. தேனிலவுக்கு வந்து தாலியைத் தொலைத்தவர்களின் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் நண்பர்கள். அழகின் இருப்பிடமெல்லாம் ஆபத்தின் பிறப்பிடமாய் இருக்கிறதே ஈசுவரா!

***

நட்புகளால் நிரவப்பட்டதென் வாழ்வு. பரிசளிப்பதும், பரிசு பெறுவதும் அன்றாட நிகழ்வுகள். பரிசளிப்பது சந்தேகமில்லாமல் ஒரு கலைதான். என்னுடைய வெளிநாட்டு நண்பர்களுள் சிலர் (வாசகரென்று எழுதினால் சண்டைக்கு வருவார்கள்) உயர் ரக மதுப் போத்தல்களையெல்லாம் உறவுகளிடம் கொடுத்தனுப்புகிறார்கள். எழுதுகிறவனுக்கு குடிப்பழக்கம் இருக்கும் என்ற நம்பிக்கை.

மதுவிற்கு எதிரானவனாக அதை எவருக்கும் மறுபரிசளிக்கவும் முடியாது. தொலையட்டும் சனியனெனெ வீசியெறியவும் முடியாது. நண்பர் கொடுத்ததாயிற்றே. அலங்காரப் பொருளாய் இருக்கட்டுமென அலமாரியில் அடுக்கி வைத்திருந்தேன். ஓ இந்தப் பழக்கமெல்லாம் வேற வந்தாயிற்றாவெனக் கேட்கிறார் திடீர் விருந்தாளி.

புத்தகப் பரிசுகள் வேறு ரகம். ஏற்கனவே படிக்க வேண்டிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் இருக்க பாவ மூட்டை போல் சுமையேறிக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடிக்காத புத்தகம் உருவாக்கும் மன அழுத்தம் கடுமையானது.

கூலர்ஸ், ஐபாடு, இசைத்தட்டுக்கள், ஜீன்ஸ், காலணிகள் இவையெல்லாம் ஏன் பரிசுப் பொருட்களுக்குரிய அந்தஸ்தினை அடையவில்லை?!

***
ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.

‘ஏழ்வை, பயலுவல, என்னத்தையாவது, நோக்கம், சவம், செஞ்சிக்கிட்டு வச்சிக்கிட்டு’ போன்ற பிரத்யேக தூத்துக்குடி பதப்பிரயோகங்களைக் காது குளிர கேட்டுவிட்டு வீடு திரும்பினேன்.

***

உதவி ஆசிரியராய் வெளியேறின ரமேஷ் பொறுப்பாசிரியராய் உயர்ந்திருக்கிறார். ‘பிணவறைக்குள்ளிருந்தும் பின்னூட்டமிடுவேன்டா...ராஸ்கல்...!’ என்கிற நறநறத்த குரலில் ஒரு தன்முனைப்பு இருக்குமில்லையா. அதுதான் நெட்டித் தள்ளுகிறது.

***

உறக்கம் கிறக்கம் வணக்கம்.

Comments

வார்த்தைகளில் விளையாடுகிறீர் நண்பரே! சில சமயம் காத்துகிடக்க வேண்டியிருக்கிறது உமது வார்த்தைகளுக்கு!
RRSLM said…
நானும் இருக்கிறேன்!
RRSLM said…
//தொலையட்டும் சனியனெனெ வீசியெறியவும் முடியாது. !//
வீசி எரிய வேண்டாம்.....எங்க கிட்ட குடுத்தா நாங்க பத்திரமா வெச்சிருப்போமில்ல
இருக்கிறேன்
வினோ said…
வாங்க செல்வா... ரொம்ப நாள் ஆச்சு..
Anonymous said…
கூலர்ஸ், ஐபாடு, இசைத்தட்டுக்கள், ஜீன்ஸ், காலணிகள் இவையெல்லாம் ஏன் பரிசுப் பொருட்களுக்குரிய அந்தஸ்தினை அடையவில்லை?!//
இதான் உன் பிரச்சனையா? ஒரு மாச சம்பளம் என்கிட்ட தரவும், இவை அனைத்தும் தரப்படும், அன்புப்பரிசாக :))
கவியுடனான சந்திப்பு எப்படி என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே....
நல்லாயிருக்கீங்களா செல்வா...?
படித்தவுடன் ஒரு சின்ன நிறைவை தரும் பதிவுகள் உங்களுடையவை. கிறக்கம், அழுத்தங்களுக்கிடையில் இன்னும் அதிக நிறைவை தாருங்கள். வாழ்த்துக்கள்.
Saravana kumar said…
நீங்க யாரை பத்தி சொல்றிங்கன்னு எதுவுமே தெரியாது. இருந்தாலும் முழுவதுமாக படித்து விட்டேன். உங்களோட வார்த்தை பிரயோகம் மிகவும் அருமை அண்ணா
Thamira said…
எல்லாம் அழகு. பரிசுப் பகுதி இன்னும்.

1. மதுப் போத்தல்களை எனக்கு அனுப்பி வைக்கலாம், ஒன்றும் சங்கோஜப்படவேண்டாம்.

2. புத்தகமூட்டைகள் மனதை அழுத்துவது அப்பட்டம் செல்வா. அழுத்துகிறது.

3. நீங்கள் சொன்ன லிஸ்டை அடுத்த முறை என்னைப் பார்க்க நேர்கையில் நினைவில் கொள்க.
அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன், ஒரு போன் கூட பண்ணல
Ganesan said…
நிரம்ப ஆர்வமாய் இருக்கிறது.
கொடிவேரி பற்றி பதிவு போடப்பா..

கூலர்ஸ், ஐபாடு, இசைத்தட்டுக்கள், ஜீன்ஸ், காலணிகள் இவையெல்லாம் ஏன் பரிசுப் பொருட்களுக்குரிய அந்தஸ்தினை அடையவில்லை?!

ஜயா, வருந்தி பரிசளிப்பவர்களே,, இப்பவாது புரிந்ததா?
நான் தாரேன் அண்ணாச்சி..

‘காவிரில குளிச்சிட்டு இட்லியும் குடல் கறியும் சாப்பிடறது ஸ்பெஷல்னு சொன்னாங்க... சோலார்ல இருக்கேன்.

சோலார் பற்றி சொல்லவும்.
நகரத்து புகையில் நுரையீரல் விடம் மிண்டி கிடக்கிறது, ஏதாவது சொர்க்கம் இருந்தால் சொல்லேன்.
Venkatramanan said…
செல்வா!
ஜெயமோகனே தொடுப்பு கொடுத்திருக்கார்!
நீங்க எங்கியோ போயீட்டீங்க பாஸ்!

அன்புடன்
வெங்கட்ரமணன்
sakthi said…
புத்தகப் பரிசுகள் வேறு ரகம். ஏற்கனவே படிக்க வேண்டிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் இருக்க பாவ மூட்டை போல் சுமையேறிக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடிக்காத புத்தகம் உருவாக்கும் மன அழுத்தம் கடுமையானது.

சரிதான் பா நல்ல புத்தகங்களை என் சகோவிடம் குடுத்தனுப்பு நான் வாசித்து சொல்கிறேன். உன் மன அழுத்தம் அப்போதேனும் குறையுமா???
sakthi said…
கூலர்ஸ், ஐபாடு, இசைத்தட்டுக்கள், ஜீன்ஸ், காலணிகள் இவையெல்லாம் ஏன் பரிசுப் பொருட்களுக்குரிய அந்தஸ்தினை அடையவில்லை?!

நல்லதொரு சந்தேகம்
Unknown said…
மதுப் பரிசு சூப்பருங்கோ....