செய்தொழில்

லாகிரி வஸ்துகள், புகழ், அதிகாரம் இவையெல்லாம் தருகிற போதையினைக் காட்டிலும் கொடியது செய்தொழில் போதை. செய்கிற வேலையிலே உன்மத்தம் கொள்பவனின் உடலும், மனமும் வெறியேறி சுற்றம் பகைத்து, உறவுகள் பிரிந்து, சுயம் அழிந்து கடைசியில் எல்லாம் கட்ட மண்ணாவது கண்கூடு.

லெளகீகம் செழிக்க சம்பாத்தியத்தோடு மாறாத காதலும், தீராத பேரன்பும் முட்டுவழியாகின்றன. பத்திரிகை விற்பனையில் சில செக்மெண்டுகளுக்கு நான் ஒரு அத்தாரிட்டி என்பதை நிருவும் முயற்சியில் குடும்பத்தைத் தொலைத்து விட்டேன். மெய்வருத்தம் பாராத, பசி நோக்காத, கண் துஞ்சாத ஆறு வருட ஓட்டத்தில் ஓய்வுக்கு இடமில்லை. தினம் தினம் வேகத்தை கூட்டியாக வேண்டி இருக்கிறது. நான் என்னவாகப் போகிறேனென்பதில் செலுத்திய கவனத்தை நான் என்னவாக இருக்கிறேன் என்பதிலும் காட்டியிருக்க வேண்டும் போலும்.

***

சுஜாதாவிற்குப் பிண்டம் வைக்க பாலகுமாரன் கயா சென்ற செய்தி அறிந்து அதிர்ந்தேன். பிண்டம் வைப்பதன் பின்னால் இருக்கும் ஆன்மிக நம்பிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். தன் ரத்த சொந்தம் அல்லாத ஒருவருக்குப் பிண்டம் வைக்க நினைத்ததும், அதற்காக கயா வரை சென்றதும் சகஎழுத்தாளன் மீது பாலகுமாரன் கொண்டிருந்த பிரியத்தைக் காட்டுகிறது.

***

ஆம்புலன்ஸ் அலறிக்கடக்கும் ஒவ்வொரு முறையும் 'இறைவா உள்ளிருக்கும் உயிரைக் காப்பாற்று...' என்று அரற்றுகிற மனம்தான் சகலருடையதும் என்று நம்புகிறேன். நேற்று சிக்னலில் ஆம்புலன்ஸ் வந்ததும் பதறி வழி விட்ட ஜனங்களெல்லாம் அரை நொடி கடவுளென நினைத்துக்கொண்டேன்.

***

தொடர்மழைக் காலங்களின் மேகமூட்டம் மனதில் ஒரு மென்சோகம் கொடுக்கும் கவனித்திருக்கிறீர்களா?! எதையும் செய்யத் தோன்றாமல் வெறுமனே இருக்கத் தோன்றும். காஞ்சனா தாமோதர் கதையொன்றில் விஞ்ஞான ரீதி விளக்கம் கண்டேன் 'சூரிய ஒளி மூளையில் மெலட்டோனின் என்ற சுரத்தலை ஊக்குவிக்கிறதாம். இந்த சுரத்தலின் அளவு குறைகிறபோது புரியாத மனச்சோர்வு வந்துவிடும். குளிர் அல்லது மழைக்காலங்களில் பல கலாச்சாரங்களும் விளக்குப் பண்டிகைகள் கொண்டாடுவதும் காரணத்தோடுதான்' என்றொரு குறிப்பு இருந்தது.

***

கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஆர்.எஸ். புரம் - டி.பி சாலையில் இயங்கி வந்த தியாகு புக் செண்டர் காமாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும் இந்த லெண்டிங் லைபரரியை உள்ளூர் வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது என் அவா.

***


தெரு நாய்க்குச் சோறு வைக்காதே தினமும் வந்து நிற்கும். தண்ணீர் கேட்கும் அந்நியனா கவனம் நடுநிசியில் கன்னம் வைக்க நோட்டம் பார்க்க வந்திருக்கலாம். ராத்திரி நேரம் லிப்ட் கொடுக்காதே கழுத்தில் கத்தி வைக்கலாம். பர்ஸை பறிகொடுத்தேன் என கைநீட்டுபவனுக்கு பணம் கொடுக்காதே வாங்கிப் போய் குடிப்பான். சாலை விபத்தா நில்லாமல் பற உதவினால் உபத்திரவம். மனைவியைச் சாத்தும் குடிகாரனா தடுக்காதே வில்லங்கம். கை நீட்டும் கிழவிக்குப் பிச்சையிடாதே. உழைத்துப் பிழைக்கச் சொல். என்னிடத்தில் மட்டும் அன்பாயிரு!

என் அன்பே, ஊராள்வான் திருட்டையும், புரட்டையும் தண்டிக்கத் திராணி இல்லை. மன்னிக்கிறோம். விளிம்பு நிலைச் சீவன்களின் வயிற்றுப்பாட்டில்தான் நமக்கு எத்தனை எச்சரிக்கையுணர்வு?! 'ஏற்பது இகழ்ச்சி' என்று சொன்ன ஒளவைதான் 'இயல்வது கரவேல்', 'ஈவது விலக்கேல்', 'ஐயம் இட்டு உண்' என்றும் சொன்னாள்.


***

சமீபத்திய விகடனில் அதிஷாவின் கதையொன்றினைக் கடந்தேன். பஞ்சம் பிழைக்க பெருநகர் பெயர்ந்து வாழத் தலைப்பட்டு வேர்பிடிக்காத மனதின் புழுக்கமும், வெக்கையும். அபாரமான குறுங்கதை.

***

நாம் நடந்தால், வாழ்வும் நம்மோடு நடக்கும். - பாதசாரி

Comments

Anonymous said…
//
ஆம்புலன்ஸ் அலறிக்கடக்கும் ஒவ்வொரு முறையும் 'இறைவா உள்ளிருக்கும் உயிரைக் காப்பாற்று...' என்று அரற்றுகிற மனம்தான் சகலருடையதும் என்று நம்புகிறேன். நேற்று சிக்னலில் ஆம்புலன்ஸ் வந்ததும் பதறி வழி விட்ட ஜனங்களெல்லாம் அரை நொடி கடவுளென நினைத்துக்கொண்டேன்.//

touching words....
Ganesan said…
அருமை செல்வா
ullorla irukkira ungalukke ippadinnaa velai nimiththam veli naadu vanthu kaayum engal nilai ennaavathu.....?
வெளி said…
வாங்க! செல்வா ........,
taaru said…
//என் அன்பே, ஊராள்வான் திருட்டையும், புரட்டையும் தண்டிக்கத் திராணி இல்லை. மன்னிக்கிறோம்//
உண்மை...
கண்ணாடி முன் நின்று என் தலையை மேல் நோக்கி பார்த்து காரித்துப்பிக் கொ [ள்]ல்கிறேன்... அவ்ளோ அசிங்கமாய் இருக்கு....
//நான் என்னவாகப் போகிறேனென்பதில் செலுத்திய கவனத்தை நான் என்னவாக இருக்கிறேன் என்பதிலும் காட்டியிருக்க வேண்டும் போலும்//
பெரும்பான்மையானவர்களின் சிக்கல் இதுதான்..
Ashok D said…
பாலகுமாரன் - நெகிழ்ச்சியின் உச்சி

ஆம்புல்னஸ் - கடந்த 3 மாதங்களாக அதன் உள்ளே இருந்துயிருக்கிறேன்..

அதான் மேகமூட்டமிருக்கும்போது ஒரு தம்மோட வைக்குது போல :)

ஒளவை .. அந்த second para அழகு :)

என்னது அதிஷா இலக்கியவாதி ஆயாச்சா? ரொம்ப நல்லப்புள்ளையாச்சே அவரு.. வாழ்த்துகள் :)

நாம் ஓடினால் வாழ்வும் ஓடும்... அதான் 6 வருட வாழ்க்கை..

முதல் வரிதான் நெருடுகிறது...
செய்தொழிலின் முடிவு அப்படியா இருக்கும்?
Unknown said…
ஆம்புலன்ஸ் அலறிக்கடக்கும் ஒவ்வொரு முறையும் 'இறைவா உள்ளிருக்கும் உயிரைக் காப்பாற்று...' என்று அரற்றுகிற மனம்தான் சகலருடையதும் என்று நம்புகிறேன். நேற்று சிக்னலில் ஆம்புலன்ஸ் வந்ததும் பதறி வழி விட்ட ஜனங்களெல்லாம் அரை நொடி கடவுளென நினைத்துக்கொண்டேன்./////

SUPERB
வினோ said…
/ ஆம்புலன்ஸ் அலறிக்கடக்கும் ஒவ்வொரு முறையும் 'இறைவா உள்ளிருக்கும் உயிரைக் காப்பாற்று...' என்று அரற்றுகிற மனம்தான் சகலருடையதும் என்று நம்புகிறேன். நேற்று சிக்னலில் ஆம்புலன்ஸ் வந்ததும் பதறி வழி விட்ட ஜனங்களெல்லாம் அரை நொடி கடவுளென நினைத்துக்கொண்டேன். /

கடவுள் தாங்க...

பாலகுமாரன் - யோசிக்க முடியவில்லை.. அற்புதம்
அய்யனாரின் பதிவு படித்தீர்களா?
Thamira said…
அனைத்து பகுதிகளும் அழகு. முதல் பகுதியில் இருக்கும் மிகுந்த அழுத்தம் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. உண்மையான நேர்மையான உழைப்புக்காக நமக்குக் கிடைக்கும் பலன், எத்தனை அரிய வாழ்வை எத்தனை சிறிய மனிதர்களுக்காக தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்று புரியவைக்கிறது. தொழில் செய்வோர் பாக்கியவான்கள்.

அப்புறம் அது 'நிருவும்' அல்ல 'நிறுவும்'.
தியாகு இடமாற்றத் தகவலுக்கு நன்றி!

அப்புறம், நாங்கல்லாம் திருப்பூர்ல தான் இருக்கோம். அடிக்கடி ஞாவப்படுத்த வேண்டியிருக்குது :)
பத்மா said…
உங்கள் புலம்பல்களுக்கு நான்
ரசிகை ....
இதில் எல்லாம், எல்லாவற்றையும் மீறி வாழ்வின் மீதான காதல் மிளிர்கிறது ..அனைவருக்கும் தேவையான செலுத்தும் விசை அது தான் .....
சில முறை அந்த விசையாகவே நீங்கள் மாறிவிடுவதை போல ..

looks like u enjoy life against all odds ..keep it up
பத்மா said…
@ini oru vithi seivom

யப்பே!!! மிரட்டுகிறது உங்கள் புகைப்படம்
butterfly Surya said…
வாழ்க்கைகாகத்தான் வேலையே தவிர வேலைக்காக வாழ்க்கை இல்லை - ஒஷோ

Selva Rocks..

சீக்கிரம் மங்களம் உண்டாகட்டும்.
Saravana kumar said…
//தண்ணீர் கேட்கும் அந்நியனா கவனம் நடுநிசியில் கன்னம் வைக்க நோட்டம் பார்க்க வந்திருக்கலாம். விளிம்பு நிலைச் சீவன்களின் வயிற்றுப்பாட்டில்தான் நமக்கு எத்தனை எச்சரிக்கையுணர்வு?!

மிகவும் உண்மையான வரிகள் என்று சொல்வதன் முலம் உங்களின் கூற்றை ஏற்று இனியொரு விதி செய்வோம்.
செல்வா,

அது மெலடோனினா அல்லது செரடொனினா என சரி பார்த்தல் நலம்.

பழ.சந்திரசேகரன்.
vaanmugil said…
நம்ம ஊர்ல ஆம்புலன்சுக்கு வழி விடறாங்கலா? ஆச்சரியமா இருக்கு நண்பா, சந்தோசம்!
தினமும் மாலைல GP சிக்னல்ல ஒரு ஆம்புலன்சாவது அலறிக்கிட்டு இருக்கு யாரும் வழிவிடற மாதிரி தெரியல!. கோபம் தான் வருது.

\\தொடர்மழைக் காலங்களின் மேகமூட்டம் மனதில் ஒரு மென்சோகம் கொடுக்கும் கவனித்திருக்கிறீர்களா?! எதையும் செய்யத் தோன்றாமல் வெறுமனே இருக்கத் தோன்றும்.//

உண்மை தான்.

\\கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஆர்.எஸ். புரம் - டி.பி சாலையில் இயங்கி வந்த தியாகு புக் செண்டர் காமாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.//

நன்றி!
/ ஆம்புலன்ஸ் அலறிக்கடக்கும் ஒவ்வொரு முறையும் 'இறைவா உள்ளிருக்கும் உயிரைக் காப்பாற்று...' என்று அரற்றுகிற மனம்தான் சகலருடையதும் என்று நம்புகிறேன். நேற்று சிக்னலில் ஆம்புலன்ஸ் வந்ததும் பதறி வழி விட்ட ஜனங்களெல்லாம் அரை நொடி கடவுளென நினைத்துக்கொண்டேன். /

உண்மைதாங்க ... ஆனால் இது எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறதா என்பது சந்தேகமே ... எதற்கும் முன்னால் என்று சிக்னலில் கூட நிற்க மனமில்லாமல், சிக்னல் போடுவதற்குள் அரை அடி அரை அடியாக பாதி சிக்னலை கடந்துவிடும் நம் மக்கள் ஆம்புலன்சிர்க்கு இடம் விட எல்லா நேரத்திலும் மக்களுக்கு மனதில் இடம் கொடுப்பதில்லை ...
வாழ்த்துக்கள் செல்வா!

திருமணத்திற்குப்பிறகும் சந்தோஷித்து வாழும் இன்னொரு பிறவி இருக்கிறது.

தெரிந்து கொள்ள இங்கே வாங்க!
http://surekaa.blogspot.com/2010/05/blog-post.html

எல்லாம் நல்லா இருக்கும் பாஸு! சும்மா வந்திருவீங்களோன்னு பொறாமைல சொல்றது! தூள் கிளப்புங்க!

கதவெல்லாம் தட்டவேண்டாம். மெயிலினால் போதும்..! :)

வேலையில் தொலைத்தது எதுவும் வீணாய்ப்போவதில்லை! வெற்றியாக விரியும்... வாழ்த்துக்கள்!
செல்வா,

ஒவ்வொன்றும் ஒரு விதம்.
நல்ல மொழி நடை...

நீங்க சொன்ன முதல் காரணத்தால்தான் வலைப்பக்கம் வர இயலவில்லை.
அப்படி கண் துஞ்சாது உழைத்து இலக்கை அடைந்தவுடன் வரும் சந்தோசமும் தனி ரகம்.

அன்புடன்,
மறத்தமிழன்.
செய்தொழில் பகுதி யோசிக்க வைக்கிறது