முடியலத்துவம்



பிரம்மமாய்
நின்ற தோனி
பிளந்ததோர்
பிஸ்லா ஆணி
இழந்ததோ
நம்ம சீனி!

சித்தி
நித்தி
லத்தி
புத்தி!

ஏடா மூடா
அதிக சோடா
கேடா முடியும்
கேளடா நீயும்!

கரீம் பாய்
வெட்டி வீசிய
ஆட்டின் வால் ஒன்று
சாக்கடையில் எழுதிச் செல்கிறது
கறிக்கடைக்காரனின்
கனவுக் கவிதையை!

தார்க்குச்சியின் முனையில்
சோம்பியிருக்கிறது
மாட்டு ஈ
அதை ஓட்டு நீ!

எதைச்செய்ய
மறந்தாலும்
தமிழ் ட்வீட்டர்
பரிசலை
துதி செய்ய மறவாதே - மனமே

அனுஷ்கா
அதிசயா
அதிஷா
எவற்றின்
நடனமாடும் நிழல்கள் நாம்?!

எனக்கு நீயிருக்க
உனக்கு நானிருக்கேன்
நமக்கு நாயிருக்கு!

ராமச்சந்திரனா என்று கேட்டார்
போடா மயிரு என்றேன்
எந்திரிச்சு போயிட்டார்.

(பூனம் பாண்டேவுக்கு பிரிய முத்தங்களுடன்)

Comments

//அனுஷ்கா
அதிசயா
அதிஷா
எவற்றின்
நடனமாடும் நிழல்கள் நாம்?!//

இதெல்லாம் நெம்ப ஓவரு.. :))))))))))))))))
ஒரு ட்வீட் மனதை விட்டு அகல மறுக்கிறது!