தருணம்
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு
மழை வந்து விடுகிறது
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
யாராவது
வந்து வழி விசாரிக்கிறார்கள்
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலர்
தொடர்பு எல்லைக்கு வெளியிலே இருக்கிறார்கள்
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு
வயிற்றுப்போக்கு பெருக்கெடுத்துவிடுகிறது
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலரது
முதுகில் ஒட்டுப்புல் ஒட்டிக்கொள்கிறது
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலருக்கு
கள்ள சம்போகம் கிட்டுகிறது
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலர்
பரோட்டா சாப்பிடுகிறார்கள்
வாழ்வின்
இக்கட்டான தருணங்களில்
சிலர்
கவிதைகள் எழுதுகிறார்கள்.
(தினகரன் தீபாவளி மலரில் வெளியான கவிதை)
Comments
எப்போதுமே இக்கட்டான தருணம் தானா ....?!