வாசிப்பது எப்படி - இளையோருக்கான இலவசப் பயிற்சி வகுப்பு
ஓர் அறிவிப்பு - சிறிய திருத்தங்களுடன்*
வரும் திங்கள் முதல் வெள்ளி வரை (21-06-2021 – 25-06-2021) ‘வாசிப்பது எப்படி?’ எனும் பயிற்சி வகுப்பினை இலவசமாக நடத்தலாம் என்றிருக்கிறேன்.
இந்தப் பயிற்சி 16 முதல் 22 வயதினருக்கானது. இந்திய நேரப்படி தினமும் மாலை 6 முதல் 7 மணி வரை வகுப்புகள் இருக்கும். 5 நாட்களும் உறுதியாக தவறாமல் கலந்துகொள்ள முடியும் என்பவர்கள் மட்டுமே சேரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இது வாசிப்பை ஓர் அன்றாட செயல்பாடாக மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கான வகுப்புகள். தினமும் சில எளிய செய்முறை பயிற்சிகளும் தரப்படும். பயிற்சி வகுப்புகள் தமிழில் இருக்கும்.
இணைய விரும்புபவர்கள் k.selventhiran@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பவும்.
முதலில் விண்ணப்பிக்கும் 100 பேருக்கு வகுப்புகளின் ஜூம் லிங்க் அனுப்பிவைக்கப்படும்.
Comments