பெரும்வெற்றுக் காலம் - ரமேஷ் வைத்யா
காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட்டல்; கோபம் என்றாலும் குறைவாய் கூறல்; பரந்ததைச் சிற்சில பதங்களில் காட்டல்; உள்ள இலக்கணத்தை உணர்வுக்காக மீறல்...
இப்படி ஒரு நடை எப்படி இருக்கும்? இந்த நூலின் நடை அதை விளக்கும்.
தனிமை, வெறுமை, தைரியமின்மை, பொறுமை இல்லா போக்கிரித்தன்மை - எல்லாம் எதிர்மறை. செல்வேந்திரன் எழுத்தினால் அவை அத்தனையும் அறிமுறை.
தனது கதை போல் செல்வேந்திரன் சொல்வது உங்கள் கதைதான். படியுங்கள், ஆமென்பீர். நகைச்சுவையாளன் போல் ஒரு தோற்றம். உள்ளே கிடப்பது அணையா நெருப்பு. ரசித்து ரசித்துப் படித்துவந்தாலும் முடித்து வைக்கையில் மூளைக்கு வேலை. பொழுதுபோக்குக்கு நான் உத்தரவாதம். இந்தப் புத்தகம் இரண்டாம் முறை படிக்கவும் பத்திரம் ஆகும் - ரமேஷ் வைத்யா
Comments