Wednesday, April 25, 2007

ஆர். சி. பள்ளி பழைய மாணவர்கள்

சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1997 வாக்கில் என்னோடு பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திசைக்கு ஒன்றாய் சிதறிப்போயினர். அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தீராத ஆவலில் துவங்கிய தேடலில் சிலரை கண்டறிந்திருக்கிறேன். பலரைக் காணவில்லை. கிடைத்தவர்கள் குறித்த சுவாரஷ்யமான குறிப்புகளோடு, அவர்களது தொடர்பு முகவரிகளையும் பதிவுசெய்ய இருக்கிறேன்.

சுயம்புராஜா

சு. வம்புராஜா என சில ஆசிரியர்களாலும், தொடை இல்லாதவர் என்று பிச்சைக்கண்ணனாலும் மங்களாசனம் செய்யப்பட்ட இவர் பள்ளிக்கு அணிந்து வரும் பெரிய டவுசர்கள் பெரிதும் கவனிக்கப்பட்டது. மிகுந்த அப்பிராணியான இவர் ஒரு ரோசத்தில் மூன்றாண்டுகள் என்னோடு பேசாமல் இருந்தார். தற்போது சென்னை அம்பத்தூரில் ஒரு பேக்டரியில் பணியாற்றுகிறார். தொடர்பு கொள்ள: 9841474677

கலையரசன்

"ஜான் பொன் மலையரசன், கலையரசன்" என இவரது பெயர் மவுண்ட்ரோட்டை விட நீளம் என்றாலும் தேன் மிட்டாய் என்றழைக்கப்படுவதையே மிகவும் விரும்புவார். குழந்தை, குட்டிகளோடு சாத்தான்குளத்தில் வாழ்ந்துவரும் இந்த புருஸ்லீயைத் தொடர்புகொள்ள: 919344636926

அந்தோணி

அப்பண்ணா என்று அழைக்கப்பட்ட இவர் அடிக்கடி பல்வேறு கெட்டப்புகளில் காட்சியளிப்பார். தற்போது சாத்தான்குளத்தில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளாராகவும், செய்தித்தாள்கள் ஏஜெண்டாகவும் செயல்படும் இந்த இளமைப்புயலோடு பேச: 9362958345

மில்டன்

ஒலிம்பா, ஜிம்பா என ஒருமார்க்கமாகவே பெயர் வைத்துக்கொண்டு திரியும் மூவர் (டேனியல், அந்தோணி, மில்டன்) கூட்டணியில் முக்கியமான ஒருவர். தற்போது ஈரோட்டில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரைக்கூப்பிட்டு பருப்பு விலை விசாரிக்க: 9443897334

மணிகண்டன்

மங்காத்தா என்றே அறியப்பட்ட இந்த உயர்ந்த மனிதர், முன்பிருந்ததைவிட 2 செண்டிமீட்டர்கள் அதிகம் வளர்ந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ திரு. ஏ.எஸ். தென்னரசுவின் உதவியாளராக வேலுரில் இருக்கிறார். இவரை அழைத்து கண்டபடி கிழிக்க: 9361121515

முருகன்

இரண்டு முருகன் இருந்ததால், சில காலம் எஸ்.எம். முருகன் என அழைக்கப்பட்ட இவர் கறாரான போலீஸ்காரராக புதுக்கோட்டையில் பணியாற்றி வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக வெறித்தனமாக படித்துவரும் இவர் அடிக்கடி சொல்வது "நான் போலீஸ் இல்லை... பொறுக்கி.." ஏட்டய்யாவை அழைக்க: 9865509719

குற்றாலம்

பால்மணம் மாறாத பாலகனாய் பன்னம்பாறையிலிருந்து வரும் இவரது ஒரே ஆசை க்யூவில் நிற்கும்போது அருணாசலத்துரைக்கு அடுத்ததாவது நிற்கவேண்டும் என்பதுதான். அது கடைசிவரை நிறைவேறவில்லை. தற்போது தூத்துக்குடியில் ஸ்வீட் ஸ்டால் நடத்திவரும் இவரைத் தொடர்புகொள்ள: 9965114078

வேல்கண்ணன்

நண்பர்கள் "விளக்கெண்ணெய்" என அன்போடு அழைக்கும் இந்த காதல் மன்னர் ஒரு தசாவதாரம். டீக்கடை, டெயிலரிங், கந்துவட்டி என ஆரம்பித்த இவரது புரொபைலில் தற்போது டிசில் நிறுவனத்தில் மார்க்கட்டிங் பிரிவில் உயரதிகாரி. தினமும் சில பல பீர்களைப் போட்டுக்கொண்டு "வாழ்க்கைங்கறது ஒரு வட்டம்டானு" இவர் விடும் டயலாக்குகளைக்கேட்டு காதுகிழிந்தவர்களில் நானும் ஒருவன். தொடர்பு எண்: 9894218872

சண்முகசெந்தில்

படிப்பாளிகளின் வரிசையில் முதல் ஐந்துக்குள் இடம்பிடிக்க எப்போதும் முட்டிமோதும் மொக்கராசு. இவர் தற்போது மென்பொருளாளர். சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் நிரல்கள் எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் கொள்ளை சம்பளம் வாங்க இருக்கும் செந்திலின் நுனிநாக்கு ஆங்கிலத்தைக் கேட்க: 9884144311

ஆறுமுகநயினார்

பார்க்க கொஞ்சம் அப்பிராணியாக இரண்டாவது பெஞ்சின் இடது ஓரத்தில் இருக்கும் இந்தக்கருங்கடல் சிட்டிஷன் தற்போது வசிப்பது சென்னையில்... ஐசிடபிள்யூ, சி.ஏ இன்னும் ஏதேதோ படிப்புகளைப் படித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. படிப்பு விஷயத்திற்காக தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம் எனும் இவர் சகநண்பர்களோடு நட்பு பாராட்டுவதில் இன்னொரு செல்வேந்திரன். தொடர்புக்கு: 9840660226

விஸ்வராஜன்

பயங்கர அமுக்கானாக அறியப்பட்ட இவர்தான் சாத்தான்குளத்திற்கு சிம்பு, எஸ்.ஜே. சூர்யா எல்லாம். சின்னவயசிலேயே ஓஷோ, கிஷோ என ஜல்லியடிப்பதில் வல்லவர். இவரது ஆட்காட்டி விரல் மிகவும் புகழ்மிக்கது. ஊமைக்குசும்பரான இவர் தற்போது சென்னையில் ஒரு முன்னனி மருந்துக் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இந்தியா முழுவதும் கம்பெனி செலவில் சுற்றித்திரிகிறார். அனைத்து விஷயங்களிலும் எனக்கு முன்னோடி. தொடர்புகொள்ள: 9443562187

டெல்சன் பாக்கியநாதன்

கடைசிவரைக்கும் லீடராகவே இருந்த இவர் தம்மால் முடிந்த அளவிற்கு இம்சையை கொடுப்பதில் வல்லவர். "காந்திகாத்தான் தம்பி" என பால்துரை ஆசிரியரால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் மிகச்சிறந்த விளையாட்டு வீரரும் கூட. நன்கு படிக்ககூடியவரான இவர் தற்போது வேலூர் தந்தை பெரியார் இன்ஸ்டிடியூட் அஃப் டெக்னாலஜியில் எம்.சி.ஏ. படித்துக்கொண்டிருக்கிறார்.(ஏத்தனை இவர்...?) பெங்களூருவில் புரொஜக்ட் வொர்க்கிற்காக தங்கியிருக்கும் டெல்சனைத் தொடர்புகொள்ள: 9994614233

பிச்சைக்கண்ணன்

வகுப்பின் அத்தனை மாணவர்களின் விருப்பத்திற்குரிய காமெடியனாக இருந்த பிச்சைக்கண்ணன். சுப்பையா சார், சந்திரா டீச்சர், பிரேமா டீச்சர், மரியஞானபுஷ்பம் டீச்சர், லீமா டீச்சர், சொர்ணம் சார் என அத்தனை பேரையும் அப்படியே பாடிலேங்வேஜ், மிமிக்ரி செய்வதில் வல்லவர். இவரது சிறப்பான சாதனைகளுள் ஒன்று எட்டாம்வகுப்பு கணித தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்ததும், அதைத் தொடர்ந்து பால்துறை ஆசிரியர் மறுதேர்வு வைத்ததும், இவர் "தி ஜேக்டா" என்ற ஓரே ஒரு ஆங்கில கட்டுரையை மட்டும் மனப்பாடம் செய்து பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததும் இன்றளவும் நிணைவுகூறப்படுகிறது. சென்னையில் பணியாற்றும் இவரது தொலைபேசி எண்கள்: 9884422939

செல்வேந்திரன்

இந்த வலைப்பூவின் சொந்தக்காரரும், உங்களத்தனைபேரின் அபிமானத்தையும் பெற்ற செல்வேந்திரனாகிய நான் தற்போது பணியாற்றுவது ஆனந்தவிகடன் வார இதழின் விற்பனை பிரிவில். கோவையில் வசித்துவரும் என்னோடு பேச 9840903578

மிகவிரைவில் எஸ்.எம்.ராஜா, முட்டிதினகர் போன்ற ருசிகர கேரக்டர்களின் தொடர்புஎண்களோடு உங்களை சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.

No comments: