கும்கீகளோடு கொஞ்ச நேரம்
விஜயதசமியும் அதுவுமாய் ஏதாவது ஒன்றை புதியதாய் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சங்கல்பத்தில் பொட்டீயை நோண்டியதில் யூட்யுப்பில் வீடியோவை இணைப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டேன். ஒன்று தெரிந்து விட்டால் சும்மா விடுவோமா என்ன? உடனே முன்பே எடுத்து வைத்த வீடியோக்களை போட்டுக் காண்பித்து பெருமை அடித்தால்தானே ஆச்சு... அதான் இந்த வீடியோ பதிவு. இந்த வீடியோவில் இருக்கும் குட்டியானைதான் டாப்ஸ்லிப்பின் அழகு குட்டி செல்லம். மூன்றே வயதான இந்த குட்டி யானையின் பெயர் குல்லூ. கும்கீ யானைகளுக்கான பயிற்சிமுகாம் ஊழியர்கள், வனக்காவலர்கள், ரேஞ்சர்கள், முகாமைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் கவரும் லிட்டில் சூப்பர் ஸ்டார் இந்த குல்லூ. குல்லூவோடு சேர்ந்து நான் எடுத்துக்கிட்ட வீடியோவைத்தான் போட்டிருக்கேன்.
Comments
ன்னு வருது தல, கொஞ்சம் கவனிங்க.
உங்க சட்டைக்கு பின்னாடி இருக்கிறது என்ன
மக்கள் தொலைக்காட்சியா ?
இல்ல
பசுமை விகடனா. .?
ஆமா.இந்த உச்சா போற சீனையெல்லாம் வீடியோ பண்ணினா இந்தியாவுல உச்ச பட்ச தண்டனை என்ன பாஸ்?