முனியாண்டி - கேண்டி எழுப்பும் கேள்விகள்
கேண்டி தன் புஜத்தில் ஒரு டாட்டூ வரைய விருப்பப்பட்டாள். வித்தியாசமான ஒன்றைத்தான் வரைய வேண்டும் என்பதற்காக அவளறிந்த ஒரே சிந்தனையாளனான என்னைத் தொடர்பு கொண்டாள். நான் சொன்ன பதிலில் அதிருப்தி அடைந்தவள் எனது எண்களை நிரந்த ஆட்டோ ரிஜக்டிற்கு ஆளாக்கி விட்டாள். எம்டன் மகன் ஏற்படுத்திய நம்பிக்கையும், பாஸ்கர் அண்ணாவின் கைவண்ணமும் இருப்பதால் அதன் மூலம் கேண்டியோடு ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவள் எப்போதும் திரியும் 'ஹாட் சாக்லேட்டில்' பிடித்துக்கொண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு கிளம்பினேன்.
'என்னதான் இருந்தாலும் ஒரு மனுஷன் இப்படியாய்யா ஏமாத்துவான்...?!' என்ற ரீதியில் இயக்குனர் ஏமாற்றி இருந்தார். இவரது முந்தைய படமான எம்டன் மகனில் கிஞ்சித்தும் தலைதூக்காத டிராமாத்தனம் இந்தப்படம் நெடுக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் கேண்டி என் முகத்தைப் பார்ப்பதும் நான் இளிப்பதுமாக நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது படம். அதெல்லாம் சரி கதை என்னய்யான்னு கேக்கறீங்களா? இருந்தாதானே பாஸூ சொல்றதுக்கு?
பூர்ணாவை என் அடுத்தத் தலைவியாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க அத்தனைத் தகுதியும் இருந்தும் அவளை சப்ப மூஞ்சின்னு கேண்டி கமெண்ட் அடித்துக்கொண்டே இருந்தாள். கழுதைகள் அறிவதில்லை கற்பூர வாசனையை என்பதால் பொறுமை காத்தேன். அத்தனைப் பிரச்சனையிலும் ஆறுதலாய் இருந்தது வடிவேலுதான். இந்திரலோகத்தின் தோல்விக்குப் பின் ச்சும்மா குதிரை மாதிரி எழுந்து நிற்கிறார் சிரிப்பு வைத்தியர் கம் பூசாரி. பின்னிப்புட்டாருல்ல...பொண்ணுங்க காலேஜூக்கு போகமா மலைக்கோவிலுக்கு போறாங்கண்ணதும் பசங்க தட்டாம்பூச்சியா மாறி கிர்ர்னு பறக்கது ஜூப்பருங்க. அப்புறம் எந்த ஊரு காலேஜூல பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு வர்றாங்க? சொன்னீங்கண்ணா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு கிளம்பிருவோம்ல...
பூர்ணாவை செருப்பால அடிக்கிறது... அவங்க அப்பனை செவுட்டுல அடிக்கிற சீன்களிலெல்லாம் பரத் நல்லா ந (அ) டிச்சுருக்காரு. பாவம் பழனி, நேபாளி பாதிப்புலருந்து இன்னும் மீண்டு வரல போலருக்கு. பூர்ணா கோபமா வீட்டுல இருக்கிற பொருட்களை போட்டு உடைக்கிற ஒரு சீன்ல காட்டுற கம்ப்யூட்டர் அதைக் கண்டுபிடிச்ச சார்லஸ் பாபேஜோடதாம். ஒர் அரிய பொருளை இப்படிப் போட்டு உடைக்கிறாங்களேன்னு கேண்டி ரொம்ப வருத்தப்பட்டாள்.
ஆக்சன்னு சொல்லி கிளாப் அடிக்கறதுக்கும் வசனம் பேசத் துவங்குறதுக்கும் இடையே இருக்கிற கால இடைவெளிகள் எல்லாம் எடிட்டிங்கில் ரொம்பத் துல்லியமா பதிவு செஞ்சிருக்காப்ல இருக்குதே இது ஏதாவது புதிய உத்தியான்னு நமுட்டுச் சிரிப்போடு கேண்டி கேட்டாள். கேட்டுச் சொல்றேன்னுட்டேன். அப்புறம் வைத்தியின் காமிரா ஆங்கிள்கள் சூப்பர். முனியாண்டியின் தோள்களில் இருந்து பார்க்கும் ஆங்கிள்கள் புதுசாக இருக்கிறது (எனக்கு).
இரண்டு வில்லன்களில் ஒருவர், கதாநாயகியின் தோழிமார்கள், போலீஸாக வருபவர்கள் எல்லாம் நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு நம்மகிட்டயே விசாரிக்கிறாங்க...டைரக்டர் சார் 'ரஷ்' பார்க்கிற பழக்கமெல்லாம் இல்லீங்களா?
ஒரு சீன்ல தென்னந்தோப்பு பத்தி எரியுது. பச்ச மரம் எப்படிய்யா எரியும்னு கேண்டி எரிச்சலா கேட்டா 'பத்தினிப் பையன் பத்தவச்சா பச்ச மரம் என்ன பச்சத் தண்ணியே எரியும்டீன்னு' கோபமா கெளம்பிட்டேங்க....

Comments
கடைசிவரைக்கும் என்ன டாட்டூ வரையச் சொன்னீங்கனு சொல்லவே இல்லையே? ;)
ரமேஷ் அண்ணா படத்தை ஒரு எட்டு பாத்துட்டு வாங்க...
இதே எழவுக்கு நானும் போனேன். கேண்டியோடு போகலை ஆனா ..ண்டி கிழிஞ்சு திரும்பி வந்தேன்.
பரத்தோட காலேசு பொஸ்தவத்தை அவங்க்ய்யா திருப்பும்போது ஒரே வெள்ளைத்தாளா இருக்கும். பயபுள்ள காலேசுக்கு எதுக்குப் போறான்னு டயரக்டர் டச்சுய்யா அது.
அது கம்பூட்டர் இல்ல. அந்த அக்கா போட்டு வைக்குற உண்டியல். என்ன கொஞ்சம் பெரிய சைஸ் உண்டியல் (தப்பா புரிஞ்சிக்கிட்டு உசுரை வாங்காதடே!) கம்பூட்டர்னா நாலஞ்சு வயராவது இருக்கணும்லாடே?
அப்போ நான் நெனச்சா பச்சத்தண்ணியும்பத்திக்கும்ங்குறே?! நல்லா இருடே!! கேண்டியை கேட்டதாச் சொல்லு