‘வெளங்குனாப்பலதான்’

ஊரில் மர வேலைகள் செய்யும் நண்பன் பெருநகர் காணும் ஆவலில் வந்திருந்தான். அவனை எனது அறையிலேயே தங்க வைத்து ஹோட்டல், சினிமா, காபி டே, ஐஸ் க்ரீம் பார்லர் என பல இடங்களுக்கு அழைத்துச் சென்று விட்டு கடைசியாக எனது அலுவலக கேபினுக்குள் நுழைந்தோம்.
"புஷ்ஷூங்கறது அவ்வளவு பெரிய கம்பெனியாடே எங்கன பாத்தாலும் அவங் கதவயே வாங்கி மாட்டிருக்கானுவ" என்றான் நண்பன்.
'என்னது புஷ் கதவுகளா?! நான் கேள்விப்பட்டதே இல்லையே' என்றேன். 'என்னடே வெளாடுதே... ஒங் ரூமு கதவுள கூட அவங்க கம்பெனி பேருதான் PUSH னு எழுதிருக்குல்லா...'
நல்லவேளை கதவின் பின் பக்கம் அவன் பார்க்கவில்லை. இல்லாவிட்டால் முன்பக்க கதவை புஷ்ஷூம், பின்பக்க கதவை புல் கம்பெனியும் செய்வார்களா என்று கேட்டிருப்பான்.
***
இப்போதெல்லாம் கேண்டியின் திமிர்தனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. ஒரு வேலையில் சேர்ந்தாலும் சேர்ந்தாள் எப்போது அழைத்தாலும் எடுப்பதில்லை. எடுத்தாலும் ‘கேச் யூ சூன்’ என்று சொல்லிவிட்டு வைத்து விடுகிறாள். ஜூன் ஆனாலும் அழைப்பதில்லை. சரி மெஸெஜ் அனுப்பலாம் என்று அனுப்பினால், அவளது பதில்கள் ஏடாகூடாமாகவே இருக்கிறது. (உ.ம் - 1) ‘ஐ ஹேவ் புரோமட்டட் அஸ் சேல்ஸ் எக்ஸ்க்யூட்டிவ்” ரிப்ளை: ‘ஹவ் லக்கி பிட்ச் யூ ஆர்?!’ (உ.ம் - 2) ‘ஐயாம் இன் மீட்டிங்... கால் யூ லேட்டர்” ரிப்ளை: ‘இஷ் ஷீ ஃபேர்?!” (உ.ம் - 3) ‘ஐயாம் ஆன் தி வே டூ ஹோட்டல்” ரிப்ளை: “ஹோப் யூ ஹவ் அ நைஸ் மோஷன்” இதனால் கேண்டிக்குப் பதில் ஒரு பாண்டியம்மாள் கிடைத்தாளும் போதும் என்ற முடிவிற்கு ஏகமனதாக வந்திருக்கிறேன். இளம்பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
***
பெட்ரோல் விலை ஒரு முடிவில்லாமல் ஏறிக்கொண்டிருப்பதால் மக்கள் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பார்கள். அதனால் விற்பனையில் தொய்வு ஏற்படும், பைக்குகளின் விலையைக் குறைக்க கம்பெனிகள் முன்வரும் என்றெல்லாம் கேயாஸ் தியரி எஃபக்டில் ஏகப்பட்ட கணக்குகள் போட்டு வைத்திருந்தேன். அத்தனையிலும் மண். இரும்பு விலை ஏற்றத்தினால் பைக்குகளின் விலை ஏறத்தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை. யூனிகார்ன் இரும்புக்குதிரையின் விலையும் ஏறி, ஆர்டர் செய்தால் மூன்று மாதங்கள் கழித்துதான் கிடைக்கும் என்ற கையறுநிலை. கோவையில் இருக்கிற இரண்டு டீலர்களிடமும் தமிழக முதல்வரைத் தவிர மீதமுள்ள அனைவரையும் சிபாரிசு செய்ய வைத்தும் வண்டி கிடைப்பதாக இல்லை. ரொக்கப்பணம் கொடுத்துதான் வண்டி வாங்குவது என்ற சங்கல்பத்தில் இருந்ததால் காலம் ஓடி விட்டது. காலத்தே பயிர் செய்வதைப் போல பைக்கும் வாங்கிக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது.
***
நான் ஒருவன் பதிவு எழுதாவிட்டால் / படிக்காவிட்டால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்தும் ஒரு போதைப்பழக்கத்தை போல சாயங்காலம் ஆகிவிட்டால் கம்ப்யூட்டரைத் தேடி அலைகிறேன். இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் நண்பர்கள் என்னைக் கண்டால் ஸ்டாப் பிளாக்கில் மறைய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு பத்து சதவீத ரோஷம் மிச்சம் இருப்பதால் செலவோடு செலவாக ஒரு லேப்டாப் வாங்கி விட உத்தேசித்து கொட்டேஷன்களை வாங்க துவங்கினேன். பின்நவீனத்துவம் எத்தனைத் தெரியுமோ அத்தனைதான் கணிணி குறித்தும் தெரியும் என்பதால் பெரும்குழப்பமே மிஞ்ச இணைய நண்பர்களுக்கு மின்னஞ்சல் எழுதி விபரம் கேட்டேன். நம்ம ஆட்கள்கிட்ட ஒரு விபரம் கேட்டா கொடுத்துட்டுத்தானே அடுத்த வேலையே... ‘வெளங்குனாப்பலதான்’ என்ற ஒரு மெயில் மட்டும் வந்திருந்தது கேண்டியிடமிருந்து...

Comments

மயிராடே வெளங்கும்?
என்ன ராசா, எஞ்ஜாமி, செல்லம், எப்புற்ருக்கே..?
உங்கள் நண்பனைக் காட்டு... நீ யார் என்று சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு. உங்க நண்பனைக் காட்டிட்டீங்க. அப்ப நீங்க...
சும்மாங்காட்டிதான்... முடிஞ்சா இந்த பிளாக்குலயும் இரு கண்ணோட்டம் வச்சிட்டுப் போங்க செல்வேதிரன்.
http://noorjin.blogspot.com/
படுத்து தூங்க தலையணை பத்தலையா உனக்கு..... லாப்டாப் தான் வேணுமா.....
ஏன் இப்படி....
selventhiran said…
Ramesh anna, Aasaad anna, vikky akka most welcome....
யுனிகார்ன் பைக்குக்கு அவ்வளவு டிமாண்ட்!!!!!!!!!!!!!!!


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Anonymous said…
இயல்பான நகைச்சுவையோடு, சுவாரஸ்யமாய் எழுதுவது உங்களுக்கு அசத்தலாய் வருகிறது. ( ஆமா.. நீ சொல்லித் தான் தெரியணுமா.. என நீங்கள் முணுமுணுத்தாலும்..) ரொம்பவே ரசித்தேன் :)
Karthikeyan G said…
எழுதவும்... Atleast once a Week..