தேசத்தின் துடிப்பு
அக்ரி யுனிவர்சிட்டி மாணவர்கள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. வம்பு தும்புக்கு அலைய மாட்டார்கள். வேறெந்த மாணவர்களைக் காட்டிலும் வந்த வேலையை கவனிப்பவர்கள். அப்படி ஒரு இளங்கலை மாணவர்தான் சுந்தர். மாணவப் பத்திரிகையாளராக பசுமை விகடனில் கொஞ்ச காலம் இருந்தார். வெகுநாட்களுக்குப் பின், எதேச்சையாக கண்ணில் பட்டார்.
"நான் கும்பகோணத்துக்காரன். மழை கொஞ்சம் அடிச்சி பெய்தால் தண்ணீரில் நெற்பயிர்கள் நாசம்னு அடிக்கடி படிச்சிருப்பீங்கள்ல. அப்படி பயிர்கள் அழியக் கூடாதுன்னு புதுசா ஒரு நெல் ரகம் கண்டு பிடிச்சிருக்கேன். 14 நாட்கள் வெள்ளம் சூழ்ந்தாலும் தாக்குப் பிடிக்கும்" என்றார்.
"அடடா... சூப்பர் தம்பி. படிச்சு முடிச்சதும் என்ன பண்ண போறீங்க...?! வேலை விஷயமா எந்த ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கூப்பிடுங்க..."
"வேலையா...?! நான் பாக்டரி வைக்கப் போறேன். மரவள்ளிக் கிழங்கில் இருந்து சிட்ரிக் ஆசிட்டும், சாமந்திப்பூவிலிருந்து கொசுவை விரட்டும் ஆயிலும் எடுக்கிற டெக்னாலஜியில் இரண்டு தொழிற்சாலைகள்...நீங்க அவசியம் வரணும்"
முன்னது பிரேசிலிலும், பின்னது கென்யாவிலும் கனகாலமாய் நடைபெற்று வரும் தொழில்கள். இந்தியாவில் மரவள்ளியும், சாமந்தியும் விளைந்து தள்ளுகிறது. அதை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றினால் விளைவிப்பவன் வாழ்வான் என்பதை சுந்தர் மாதிரி நம்பிக்கை மனிதர்கள்தாம் நிரூபணம் செய்ய வேண்டும்.
***
சீயர் கேர்ள்ஸை
வேடிக்கை பார்க்கும் ஃபீல்டர்
பந்தை கோட்டை விடுகிறான்.
சபாஷ்! என் இனமடா நீ...!
போன ஜென்மத்தில் எழுதிய முடியலத்துவம். இந்திய அணியினருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. கையில் விளக்கெண்ணையை தேய்த்துக்கொண்டு வந்தவர்களைப் போல வாங்கி வழிய விடுகிறார்கள். மானம் போகிறது.
சேப்பல் சித்தப்பா இருந்த போது எது நன்றாக இருந்ததோ இல்லையோ ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது நிஜம். யுவராஜ் சிங், ரெய்னா போன்றவர்களை ஃபீல்டிங் இன்-சார்ஜாக நியமித்திருந்தார். ஆட்டத்தில் களப்பணியை சரிபார்ப்பது அவர்களது பொறுப்பு. இப்போதெல்லாம் இவர்களது பருப்பே வேகுவதில்லை.
"கேட்சஸ் ஆர் மேட்சஸ்" என்பதை சாகிற வரையில் வலியுறுத்திக்கொண்டிருந்தார் ஹேன்சி குரோஞ்ச். கொஞ்சம் லைன் அண்ட் லென்த் வீசுகிற பவுலர்களும், பறக்கிற ஃபீல்டர்களும் இருந்தால் 200 ரன்களை வைத்துக்கொண்டும் பட்டையைக் கிளப்பலாம். கிளப்பினார்கள் தெ.ஆப்பிரிக்கர்கள். நம் தம்பிமார்களோ நானூறு டார்கெட்டிற்கும் நாயடி படுகிறார்கள்.
இன் & அவுட் காலங்களில் பாய்ந்து பாய்ந்து ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, கவுதம் கம்பீர், விராத் கோலி ஆசாமிகளெல்லாம் இருப்பு ஸ்திரமாகி விட்டதால் இப்படி கோழி பிடிக்கிறார்களோ என்று எனக்கொரு சம்சயம்.
கேரி கிர்ஸ்டன் கொஞ்சம் பெண்டு நிமிர்த்த வேண்டிய நேரம் இது.
***
எதிர்முனையில் சதத்தினை நெருங்கி விட்ட சச்சின். வெற்றிக்கு தேவையோ இரண்டே ரன்கள். வெற்றிக்கான ஷாட்டை அடித்த தினேஷ் கார்த்திக்கோ மகிழ்வதற்கு பதில் துடிக்கிறார். "சச்சினால் சதம் அடிக்க முடியவில்லையே..."
சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்பது ஒரு தேசத்தின் துடிப்பு. அவர் சொந்த சாதனைகளுக்காக விளையாடுகிறார் என்று பிராது கொடுக்கிறவர்களுக்கு பதிலாக இருந்தது தினேஷின் வருத்தம்.
***
காஞ்சிபுரம் அர்ச்சகரை ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போதும் நூற்றுக்கணக்கான பெண்கள் துடைப்பங்களோடு நிற்கிறார்கள். கும்பிடுகிற கோவிலில் குஜால் பண்ணிவிட்டானே என்கிற ஆதங்கம் காரணமாக இருக்கலாம். சபாஷ்!
முள்வேலி முகாம்களில், அலுவலகங்களில், காவல் நிலையங்களில், கல்விக் கூடங்களில், ஸ்டூடியோக்களில், பனியன் கம்பெனிகளில், ஓடும் ரயிலில், வீராணம் குழாயில், வாழைத்தோட்டத்தில், பாலத்திற்கு அடியில், மூத்திர சந்தில் என புணர்ச்சி எங்கும் எப்போதும் இடையறாது நிகழ்ந்து வருகிறது. காதலி, அடுத்தவன் மனைவி, பள்ளி மாணவி, பச்சிளம் குழந்தை, சக ஊழியை, எதிர் வீட்டு சிறுமி, அக்கா, தங்கை, சித்தி, மகள், அத்தை என பெண்கள் அதிகாரத்தின் பெயரால் புணரப்பட்டு வருகிறார்கள். அவனவனுக்கு அவனவன் பணியிடம் வசதியாக இருக்கிறது. அர்ச்சகருக்கு கோவில்.
கோவில் கருவறை என்ற போதும் அவனிடத்தில் முயங்கிய பெண்கள், செல்போனில் படம் பிடிக்கப்பட்டதை தரவிறக்கம் செய்ய உதவியவர்கள், அதை சிடி போட்டு விற்றவர்கள், இணையத்தில் கடை விரித்தவர்கள், ப்ளூ டூத்தில் பரப்புபவர்கள் என அனைத்து பெண் திண்ணி நாய்களுக்கு எதிராகவும் இவர்களது துடைப்பங்கள் உயர கருவறையில் மவுனசாட்சியாக நின்ற பெருமாளை சேவிக்கிறேன்.
***
ஒப்பனக்கார வீதியில் கேட்டது:
"என்னங்க இந்த வருஷம் கிறிஸ்மஸூக்கு பஜார்ல ஒண்ணும் கூட்டத்தையே காணலையே...?!"
"இந்த வருஷம் கிறிஸ்மஸ் மாசக்கடைசில வருதுல்ல அதாங்"

Comments
நமது நாடு முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியது!
அரசியல்வாதிகளால் சாயம் போய் கொண்டிருக்கிறது!
சச்சின்.. இந்தியா முதல் பேட்டிங் அல்லது ஜெயிக்க இரண்டு ஓவர்களில் 10 ரன் என்றாலும் நீங்கள் சொல்வது சரி. இன்னும் 10 ஓவர் இருக்கிறது. 14 ரன் தேவை. ஏறி வந்து ஒரு சிக்ஸ், கடைசிப் பந்தில் ஒரு ஃபோர். அப்படியே பேட்டால அவனை அடிக்கலாம் போலிருந்தது. எவ்ளோ அருமையா ஆடினார் சச்சின்?
சரிதான்.
"இந்த வருஷம் கிறிஸ்மஸ் மாசக்கடைசில வருதுல்ல அதாங்"///
ஜூ.வி டயலாக்?!! நச்...
விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா.. முதல் இடத்துக்கு வந்தாச்சுல்ல.. அப்படித்தான் கண்டுக்கபிடாது..
ஓப்பனக்கார வீதியில நீங்க கேட்டது இருக்கு பாருங்க அதுதான் சூப்பர். (ஒரு சந்தேகம்.. இது நீங்க வேறு ஒருவருக்கு சொன்னதுதானே?)
ஆமா, சச்சின் ஏன் சென்சுரி அடிக்கனும்? அணி வெற்றி பெற அடிச்சா போதாதா?
இது தான் நம்ம ஊரு குசும்பு ..
simply suppppper
உடுங்க சச்சினின் 1,1 ரன்னும் சாதனைதான்
கிரிக்கெட் என்றால் காத தூரம் ஓடும் ஆள் நான்.
அர்ச்சகர் மாட்டிக் கொண்டதால் இப்படி.இது மட்டும் என்று இல்லை கருவறைக்குள் வேறு என்னவெல்லாம் நடக்கிறது என்பது வெளியே தெரிவதில்லை.தெரிந்தால் தலையில் அடித்துக் கொள்வீர்கள்.
அதையும் மீறி கார்த்திக்கின் முகத்தில் தெரிந்த வருத்தம் டெண்டுல்கர் மீது இருக்கும் பாசம் புலப்படுகிறது , ஆனால் டெண்டுல்கர் இப்போது எல்லாம் ரொம்ப அநிநாயத்துக்கும் நல்லவராகி வருகிறார் அது மட்டும் உண்மை
ராகவேந்திரன், தம்மம்பட்டி
வாழ்த்துக்கள்
வேடிக்கை பார்க்கும் ஃபீல்டர்
பந்தை கோட்டை விடுகிறான்.
சபாஷ்! என் இனமடா நீ...!//
அட்டகாசம்.. :-))
ஹான்சி க்ரோனியேவைத்தானே சொல்லியிருக்கீங்க. (cronje).
//கிருஸ்துமஸ் மேட்டர்//
அட ஆமா...
இப்பதான் நியூ இயரை ஏன் இவ்ளோ பிரமாதமா கொண்டாடுறாங்கன்னு தெரியுது!!
மாசத்தில் முதல் நாளே வருதுல்ல!!
சூப்பரு!
ராபின்சிங் அவர் விளையாடிய காலத்தில் பீல்டிங் செய்யும்போது பந்தை பிடிப்பதற்கு பதிலாக டைவ் அடித்து பந்தின் மேல் படுத்துக்கொள்வார். அவரை பீல்டிங் கோச்சாக வைத்திருந்ததின் பலன்தான் இது.
கோச்சுக்கு யாரும் கோச் குடுக்கவில்லையாட்டமிருக்கு...
நல்ல ஜோக்..