கிளிஞ்சல்கள் பறக்கின்றன...

என்னதான் எஸ்.எம்.எஸ், இ-மெயில் என்று வந்து விட்டாலும் வாழ்த்து அட்டை ஏற்படுத்துகிற பரவசம் அலாதியானது என்பதால் மிக நெருங்கியவர்களுக்கு மட்டும் ஆண்டின் துவக்கத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது வழக்கம். வாழ்த்து அட்டைகளின் விலை, அஞ்சல் செலவுகளை விட்டுத் தள்ளுங்கள். அதை தேர்வு செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம், ஒவ்வொரு அட்டையிலும் வாழ்த்துச் செய்திகளை எழுதும் நேரம், அஞ்சலகம் செல்லும் நேரம் என சுமார் இரண்டரை மணி நேரங்களைச் செலவு செய்திருக்கிறேன்.


ஒருவரிடம் இருந்து கூட வாழ்த்து அட்டை கிடைத்தது என்கிற குறுஞ்செய்தி தகவல் கூட இல்லை. பதில்களை எதிர்பார்த்து அனுப்புவதில்லை என்ற போதும் பிரிய மனிதர்களின் தகவல் தொடர்பு எந்தளவில் இருக்கிறது என்பது ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. சாதனங்களும், சாத்தியங்களும் அதிகம் இருக்கும் நவ யுகத்தில் கூட ஹூயுமன் ரிலேசன்ஷிப்பின் லட்சணம் இப்படித்தான் இருக்கிறது.


***


கோவை வேளாண்பல்கலைக்கழகம் 09-01-10 மற்றும் 10-01-10 ஆகிய இரு தினங்களிலும் (சனி, ஞாயிறு) மலர்க் கண்காட்சியை நடத்துகிறது. கடந்த ஆண்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வண்டி கட்டிக்கொண்டு வந்து பார்த்தார்கள். கண்காட்சியில் பிரத்யேக மலராக நானும் ஓர் அரங்கில் பூத்திருப்பேன். உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


***


லீனா மணிமேகலையின் கவிதைகளை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று ‘வினவு வியாபாரிகள்’ லீனாவின் சொந்த வாழ்க்கையை ஊகங்களின் அடிப்படையில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இக்கட்டுரையின் மூலம் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் போன்ற வார்த்தைகளை உபயோகிக்கும் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள்.


பதிவைக்காட்டிலும் அதிக அதிர்ச்சி அளித்தது மருத்துவர் ருத்ரனின் பின்னூட்டமே. அவர் குறித்து முன் தீர்மானம் செய்து வைத்திருந்த அறிவு ஜீவி பிம்பம் உடைந்து விட்டது.


***


வம்சி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள கிளிஞ்சல்கள் பறக்கின்றன - கவிதைத் தொகுதியில் 'நேயன் விருப்பம்' எனும் எனது கவிதையும், பெருவெளிச் சலனங்கள் - கட்டுரை தொகுப்பில் 'கதைகளை தின்பவன்' எனும் எனது கட்டுரையும், மரப்பாச்சியின் சில ஆடைகள் - சிறுகதைத் தொகுப்பில் 'பதுங்கு குழி' எனும் எனது சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வோடு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


***


என்னுடைய முந்தைய கட்டுரை ‘வசந்த விழா!’அசுவாரஸ்யமாக இருந்தது என நண்பர்கள் பலர் தெரிவித்தார்கள். அக்கட்டுரை முழுக்க முழுக்க தகவல்களால் அடைக்கப்பட பொதி. ஒரு பத்திரிகைக்காக எழுதப்பட்டு அசுவாரஸ்ய காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.

Comments

butterfly Surya said…
செல்வா, அவசரத்தில் பதிவிட்டீர்களா..??

எல்லாம் இரண்டு முறை வருகிறது. அல்லது இதுவும் ஏதேனும் புதுமையா..??
//கண்காட்சியில் பிரத்யேக மலராக நானும்//

ரோஜாப்பூ, மல்லிப்பூக்களுகு இடையில் கப்பூவும் மலர்கிறதுன்னு சொல்றீங்களா சகா.. ரைட்டு

பதிவேற்றிய பின் பதிவை படிங்க.. கமெண்ட்ட ரிப்பீடலாம். பதிவில் பதிவையே ரிப்பீட் செஞ்சா எப்படி? :)))
எதுக்குங்க ஒரே விஷயத்தை மூணு தடவை எழுதியிருக்கீங்க?
selventhiran said…
தவறு சரி செய்யப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
selventhiran said…
கப்பூவும் மலர்கிறதுன்னு சொல்றீங்களா சகா.. ரைட்டு // கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Anonymous said…
ஒருவரிடம் இருந்து கூட வாழ்த்து அட்டை கிடைத்தது என்கிற குறுஞ்செய்தி தகவல் கூட இல்லை. பதில்களை எதிர்பார்த்து அனுப்புவதில்லை என்ற போதும் பிரிய மனிதர்களின் தகவல் தொடர்பு எந்தளவில் இருக்கிறது என்பது ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. சாதனங்களும், சாத்தியங்களும் அதிகம் இருக்கும் நவ யுகத்தில் கூட ஹூயுமன் ரிலேசன்ஷிப்பின் லட்சணம் இப்படித்தான் இருக்கிறது.

ஆமாம் என்னை மாதிரி வாழ்த்தே அனுப்பாதவர்களை என்ன சொல்லலாம் செல்வா?

உண்மையாகவே வெட்கித்தேன் நானும் எனக்கு வாழ்த்தனுப்பிய என் நணபர்களுக்கு நானும் நன்றியும் சொல்லலை வாழ்த்தும் சொல்லவில்லை...
கண்காட்சியில் பிரத்யேக மலராக நானும் ஓர் அரங்கில் பூத்திருப்பேன். உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


:)))))))))))))
//ஒருவரிடம் இருந்து கூட வாழ்த்து அட்டை கிடைத்தது என்கிற குறுஞ்செய்தி தகவல் கூட இல்லை//

இவையெதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப்போல் இன்னொன்றை?
(நன்றி: வீணாப்போன அண்ணா)
Karthik said…
எதுக்குங்க ஒரே விஷயத்தை ரெண்டு தடவை எழுதியிருக்கீங்க? :)
// செல்வேந்திரன் said...
தவறு சரி செய்யப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
//

தவறை கடைசி வரை சரிசெய்ய வேண்டும் என்பது மரபு:)

கவிதைக்கு வாழ்த்துக்கள்
//லீனா மணிமேகலையின் கவிதைகளை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று ‘வினவு வியாபாரிகள்’ லீனாவின் சொந்த வாழ்க்கையை ஊகங்களின் அடிப்படையில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இக்கட்டுரையின் மூலம் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் போன்ற வார்த்தைகளை உபயோகிக்கும் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள்.

பதிவைக்காட்டிலும் அதிக அதிர்ச்சி அளித்தது மருத்துவர் ருத்ரனின் பின்னூட்டமே. அவர் குறித்து முன் தீர்மானம் செய்து வைத்திருந்த அறிவு ஜீவி பிம்பம் உடைந்து விட்டது.//

சரியாகச் சொன்னீர்கள் செல்வேந்திரன்
\\ஒருவரிடம் இருந்து கூட வாழ்த்து அட்டை கிடைத்தது என்கிற குறுஞ்செய்தி தகவல் கூட இல்லை.// வருத்தமாக இருக்கிறது செல்வா! வாழ்த்து அனுப்பத்தான் நேரமில்லை, பிஸி(?) என்றால், வந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கக்கூட நேரமில்லை, மனமில்லை என்றால், இவர்கள் என்ன மனிதர்கள்? நான் எனக்கு வந்த வாழ்த்துக்களுக்கு நேரில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் நன்றி தெரிவித்தேன். அதற்கே, ஒரு கிரீட்டிங் கார்டு கூட வாங்கிப் போடமுடியவில்லையா என்று என் மனசு குறுகுறுத்துக்கொண்டு இருந்தது.
\\தவறு சரி செய்யப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!// சரி செய்யப்படவே இல்லையே, கடைசி பாரா இருமுறை வந்திருக்கிறதே? :)
Anonymous said…
தமாசு :)))))))))))))))))
i dont send or receive any wishes either
Kumky said…
தமாசு :))))))))))))))))

இதென்ன கலாட்டா..?
? said…
//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.