மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியீட்டு விழா

பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார், லட்சுமண பெருமாள் ஆகிய மூன்று எழுத்தாளர்களையும் ஒருங்கிணைக்கும் புள்ளி ஒன்று இருக்கிறது. அது ‘மானுட வாழ்வு தரும் அழுத்தத்தை அங்கலாய்ப்புகள் இன்றி அங்கதச் சுவையில் வெளிப்படுத்தக் கூடியவர்கள்’ என்பதுதான். இம்மூவர்களின் படைப்புகளையும் இதழோர புன்னகையின்றி வாசிக்க முடியாது. இந்த புத்தகக்கண்காட்சிக்கு வம்சி புக்ஸ் மூவரது தொகுப்புகளையும் கொணர்ந்திருக்கிறது. அவற்றின் வெளியீட்டு விழா வருகிற 30.01.10 அன்று சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் ஸ்பென்ஸர் பிளாஸா ‘புக் பாயிண்ட் அரங்கத்தில்’ நிகழ இருக்கிறது. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் திரைத்துறையினர் பெருமளவில் கலந்துகொள்ளும் இவ்வி்ழாவில் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொள்ளும்படி ‘அண்ணன்மார்கள்’ சார்பில் அன்போடு அழைக்கிறேன்.

பாஸ்கர்சக்தியின் “கனகதுர்கா”

வரவேற்புரை – கே.வி.ஷைலஜா
வெளியிடுபவர்:
இயக்குனர் மகேந்திரன்
பெறுபவர்:
பத்திரிகையாளர் ஞாநி
உரை:
கவிஞர் யுகபாரதி
இயக்குனர் சிம்பு தேவன்

க.சீ.சிவக்குமாரின் ”உப்புக் கடலைக்குடிக்கும் பூனை”

வெளியிடுபவர்:
கவிஞர் சுகுமாரன்
பெறுபவர்:
கு.கருணாநிதி
உரை:
கவிஞர் இரா.சின்னசாமி

எஸ்.லட்சுமணபெருமாள் கதைகள்

வெளியிடுபவர்:
பத்திரிகையாளர் விஜயசங்கர்
(ஃப்ரண்ட் லைன்)
பெறுபவர்:
கவிஞர் நா.முத்துகுமார்
உரை:
இயக்குனர் ராம்
நிகழ்ச்சி தொகுப்பு:
கவிஞர்கள் உமா ஷக்தி
தி.பரமேஸ்வரி
சிறப்பு விருந்தினர்:
ஓவியர் காயத்ரி கேம்யூஸ்
நன்றியுரை:
பி.ஜே.அமலதாஸ்

Comments

அண்ணன்மார்கள் அனைவருக்கும் என் சார்பில் வாழ்த்துகளை சொல்ல வேண்டுகிறேன் செல்வா !

:)

பகிர்வுக்கு நன்றி
வாழ்த்தி வரவேற்கிறேன்...
Ganesan said…
செல்வாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன், ஆனால் இந்த வாரம் மதுரை செல்ல வேண்டியுள்ளது.மீண்டும் சந்திக்க காலம் வழி செய்யட்டும்.
/மானுட வாழ்வு தரும் அழுத்தத்தை அங்கலாய்ப்புகள் இன்றி அங்கதச் சுவையில் வெளிப்படுத்தக் கூடியவர்கள்’/

நான் படிச்சவரை, கொங்கு வட்டார எழுத்தாளர்களுக்கே பொதுவாக உள்ள அம்சம் இது என்பது.
Kumky said…
அண்ணன்மார்களுக்கும் அதைச்சொன்ன பெரியண்ணனுக்கும் சேர்த்து வாழ்த்துகிறேன்..
வணக்கம், செல்வா. க.சீ.சிவக்குமாரை நான் மிகவும் கேட்டதாக சொல்லுங்கள்.

பாஸ்கர்சக்தி மற்றும் லட்சுமண பெருமாள் இருவர்ருக்கும் என் வணக்கத்தை சொல்லுங்கள்.