1/1000

படைப்பு ஏற்படுத்தும் விவாதங்களைப் பொறுத்தே அதன் இடம் தீர்மானிக்கப்படுகிறது. அவ்வகையில் உ.போ.ஒருவனுக்குப் பிறகு அறிவார்ந்த பார்வையாளர்களின் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கின்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரவேற்கத்தகுந்த படமாகவே எனக்குப்படுகிறது. இதுமாதிரியான அதீத கற்பனையுள்ள ஃபேண்டஸித் திரைப்படங்களும் தமிழுக்குத் தேவைதானே?!

சோழர் குலம் இன்னும் நீடிக்கிறதா எனும் தேடலில் அவர்களது வாரிசுதாரர்களும், சிதைவுண்ட நகரங்களும் கண்டுபிடிக்கப்படுகிற தருணத்திலேயே எனக்கான படம் முடிந்துவிட்டது. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் கோணங்கியின் கதைகளைப் படிப்பது போல இருந்தது. முற்றான முடிவுகள் எதற்கும் வரமுடியாமல் தீவிரமான குழப்பத்தில் திரையில் க்ளூக்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.

வரலாறு புனைவுகளால் ஆனது அல்லது புனைவுகளே வரலாறாய் ஆனது என்கிற அய்யனாரின் வரிகள் மட்டுமே படம் முழுக்க மனதில் தோன்றியபடி இருந்தன. காட்டாறு போல பிரவகிக்கிற புனைவு மனதின் சிதறுண்ட வடிவங்களாகக் காட்சிகள் நகர்ந்துகொண்டிருந்தன. திரையில் தெறிக்கின்ற ரத்தம் பயத்தையோ, குரூர வன்முறையின் பரவசத்தையோ ஏற்படுத்தவில்லை. சுண்ணாம்புக்காளவாய், கழுமரம் போன்ற மூவேந்தர்களின் பிரத்யேக கொலைக்கருவிகளுக்கு முன் கொடுவாளின் ரத்தமும், துப்பாக்கிகளின் சத்தமும். ப்ச்!

காடு, மழை, தனித்திருக்கும் நாயக, நாயகிகள், நெருப்பு நடனம் போன்ற செல்வராகவனின் க்ளிஷேக்களும், இந்தியானா ஜோன்ஸ், அபோகலிப்டா, கிளாடியேட்டர் என பார்வையாளர்கள் ஒவ்வொரு ஆங்கிலப்படங்களையும் காட்சிக்கு காட்சி நினைவு கூர்வதும், மொக்கையான வசனங்களும், மோசமான பாத்திர தேர்வும் (குறிப்பாக அழகம்பெருமாள், பார்த்திபன்) படத்தின் பொது பலவீனங்கள்.

சாகஸ கதைகளுக்கேயுரிய உடல்வாகில் அழகான இரு நாயகிகள். நூறு சதவீத பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து ரவிக்கை இல்லாத புடவை, படிய வாரிய தலை, பில்லாக்கு, மெளனம் உறையும் முகமுமாக ’நாடோடிகள்’ அபிநயா கிருஸ்ணாபுரத்துச் சிற்பம் போல இருந்தார். திரைமுழுக்க தேடிக்கொண்டிருந்தேன் அந்த தேவதையை.

இசை, பின்னணி இசை இரண்டும் அதிஅற்புதம். குருவி தூக்கிச் சுமக்கும் பனங்காயாக ஆரம்பத்தில் பட்டாலும் இப்படம் ஜிவிப்ரகாஷின் இசை வாழ்வில் ஒரு மைல்கல்! முக்கியமான திரைப்படங்களைப் பார்க்க காலம் தாழ்த்தக்கூடாது என்பதற்கு திரும்பவும் ஒரு பாடம். ‘நெல்லாடிய நிலமெங்கே?’, ‘மாலை நேரம்...’ போன்ற பாடல்களை விழுங்கி விட்டார்கள்.

ஒளிப்பதிவும், கலையும், ஆடையலங்காரமும் இக்கலைஞர்கள் எந்தளவிற்கு இத்துறையில் துறைபோனவர்கள் என்பதற்குச் சான்று.


படத்தின் பிற்பாதியைப் பலரும் பல்வேறு விஷயங்களுடன் பொறுத்திப் பார்த்து பொருள் கொள்கின்றனர். குறிப்பாக ஈழப் பிரச்சனையோடு. எனக்கு அப்படியான காட்சிப்படிமங்கள் எதுவும் விரியவில்லை. மோசமான எடிட்டிங்கோ என்று சிலமுறையும், செல்வராகவன் ஜல்லியடிக்கிறாரோ என்று பலமுறையும் சந்தேகங்கள் எழுந்துகொண்டே இருந்தது.

செல்வராகவன் குழுவினரின் நெடும் உழைப்பும்,-தயாரிப்பாளர் திரைமுழுக்க கொட்டிச் செலவழித்திருக்கும் பணமும் மதிக்கத் தகுந்தது. மட்டரகமான மசாலா படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அனைவரும் ஆதரிக்க வேண்டிய படங்களுள் இதுவும் ஒன்று.

இதே திரைப்படம் வெளிநாட்டு இயக்குனரால் எடுக்கப்பட்டிருந்தால் இதன் புரியாத பகுதிகளை யானை தடவும் குருடன் போல வியந்தோதி நம் இலக்கியச்சிங்கங்கள் பதினாறு பக்கங்களுக்கு விமர்சனங்கள் எழுதித் தீர்த்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.

Hi Selva,
What is your view, I am 100 % agree with the following review. What is your comment about the movie.
Expecting your review about the movie in your blog.
***
Thanks,
Venkatraman.M
Hello Selventhiran sir,

This is Saravanan from KGF (Karnataka)
I like ur writings too much. Continuously i am reding ur blog.

plz write about Ayirathil oruvan film (review)

I want to see the film from ur point of view. (already i have seen the film)

Thanks & regards
Saravanan G
| Engineer - R&D|

தமிழ்நாட்டில் என்னுடைய அபிப்ராயத்திற்கும் இரண்டு பேர் இருக்கின்ற காரணத்தினாலே இந்தப் பதிவு 

Comments

இப்பொது என்னையும் சேர்த்து மூன்று பேர்
""""சோழர் குலம் இன்னும் நீடிக்கிறதா எனும் தேடலில் அவர்களது வாரிசுதாரர்களும், சிதைவுண்ட நகரங்களும் கண்டுபிடிக்கப்படுகிற தருணத்திலேயே எனக்கான படம் முடிந்துவிட்டது. ""


நானும் இதேதான் நினைத்தேன்
hiuhiuw said…
//இதே திரைப்படம் வெளிநாட்டு இயக்குனரால் எடுக்கப்பட்டிருந்தால் இதன் புரியாத பகுதிகளை யானை தடவும் குருடன் போல வியந்தோதி நம் இலக்கியச்சிங்கங்கள் பதினாறு பக்கங்களுக்கு விமர்சனங்கள் எழுதித் தீர்த்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.//

ஹா ஹா ஹா
hiuhiuw said…
//‘மாலை நேரம்...’ போன்ற பாடல்களை விழுங்கி விட்டார்கள். // மொத ஷோவே பாத்துட்டேன் அப்பவும் அந்த பாட்டு இல்ல
hiuhiuw said…
//மொக்கையான வசனங்களும், மோசமான பாத்திர தேர்வும் (குறிப்பாக அழகம்பெருமாள், பார்த்திபன்) படத்தின் பொது பலவீனங்கள்.//

வசனங்கள் மொக்கை தான் ....ஆனா பார்த்திபன் நல்ல சாய்ஸ்
hiuhiuw said…
இதுமாதிரியான அதீத கற்பனையுள்ள ஃபேண்டஸித் திரைப்படங்களும் தமிழுக்குத் தேவைதானே?!//

கண்டிப்பா !
தமிழ்நாட்டில் மட்டும் இல்லை பாஸ் - atleast Saravnan G கர்நாடகாவில் இருக்கிறார் (நானும்தான் :-))
Unknown said…
யாரை ஏமாத்தப் பாக்கறீங்க. ஒருதர்தான் தமிழ்நாட்டில இருக்காரு. சரவணன் கர்நாடகாவுல இருக்காரு. [ஒருவேளை செல்வா என்னை மனசுல வச்சு ரெண்டு பேருன்னு சொல்லிருபாரோ!!!]
Anonymous said…
தமிழ்நாட்டுல இருந்து ஒருத்தர்தாம்ப்பா. இன்னொருத்தர் கர்நாடகா. வரலாறு முக்கியம்.
Kumky said…
இடைவேளையுடன் எனக்கான படமும் முடிந்துபோய்விட்டது.
எனது வாகனம் வெளியே வர மறுத்துவிட்டதால் மீத குளறுபடிகளையும் பார்க்க நேரிட்டது..

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் என்று ஒரு சொலவடை உண்டு...இந்த விமர்சனத்தில் அது தெரிகிறது..

ஒரு குடும்பம் எங்களுக்கு முன்னால்., இரண்டு வயது வந்த பெண்களும், அவர்தம் பெற்றோரும்.
அப்பாவும், அம்மாவும் முறையே வலது இடது பக்கம் அவ்வப்போது பார்க்க, பெண்கள் இருவரும் தரையை பார்த்துக்கொண்டிருக்க திரையோ முன்னால்...

இருப்பதை வைத்து சிறப்பாக செய்திருக்கலாம்தான்...வாய்ப்பை தவற விட்டு விட்டார் செல்வா..
ஏ..இந்தப் பஞ்சாயத்த விடமாட்டீங்களாப்பா..

தமிழ்’ப் படம் குறித்த உங்கள் பார்வை ப்ளீஸ்..