மனக்காளான் 2
* சுயமே ஜெயம்!
* யாதும் பாரே...யாவரும் குடிப்பீர்.
* கம்பும் சொம்பும் பிறர் தர வாரா...!
* ’சிரப்’பொக்கும் எல்லா இருமலுக்கும்.
* மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயம் நிறைவேறும். முந்தைய நாள் சுட்டு வலுவடைந்த மாநாட்டுத் தோசையும் விற்று விடும்.
* தமிழின் முதல், இடை மற்றும் கடை காவலனைக் கண்டடைந்த மகிழ்ச்சியில் திளைக்கிறது கோவை!
* எம்.டி. முத்துகுமாரசாமிக்கு புனைவை விட ட்வீட்டுகள் நன்றாக வருகிறது. பேயோனைப் படித்துவிட்டு பாதசாரி அபிப்ராயம்...
* மானேஜராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...!
* உங்கள் ஏர் பஸ்ஸில் ‘கருப்புப் பெட்டி’ உண்டா என்றேன். முறைத்தார்கள் கே.பி.என் காரர்கள்.
* அன்பே, உன்னைப் பார்க்கையில் பெருமையாகவும், எருமையாகவும் இருக்கிறது...
* உயில் எழுத ஆட்கள் தேவை. என் சொத்துக்களை சரிபாதியாகப் பிரித்து தமனாவிற்கும், த்ரிஷாவிற்கும் வழங்க நினைக்கிறேன்.
* எந்த கோர்ஸூக்கு நல்ல எதிர்காலம் என்று மெஸெஜினாள். இண்டர்கோர்ஸூக்கு என ரிப்ளைனேன்.
* ட்வீட்டுகள் எவருடைய மனதையும் புண்படுத்த அல்ல. மீறி புண்பட்டால் சல்ஃபானின் தடவுங்கள்.
* ஒவ்வொரு ஓவர் டேக்கிலும் ஒரு துளியேனும் உயிரைப் பணயம் வைக்க வேண்டி இருக்கிறது.
* கேண்டி பாடுகிறாள்: ‘பாடும் போது நான் தென்றல் காற்று...பதிவுலகில் நீ டம்பி பீஸூ’
* செக் புக் ரிக்வெஸ்ட் கூட அடிசனல் பேப்பர் வாங்கி எழுதுகிறான் பிரதியங்காரக மாசானமுத்து.
* அறச்சார்பு இல்லாத எழுத்தாளன் அவுட் கோயிங் இல்லாத செல்போனுக்கு சமம்.
* ஜெயமோகனை ஜெயன் என்று சுருக்குவதைப் போல பேயோனை ஏன் பேயமோகன் என விரிக்கக் கூடாது?!
* சுயம் பிரம்மாஸ்மி! உன்னையே நீ புகழ்வாய்.
* உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்...பணம் தர வேண்டும்...!
* வாசித்தாலும், யோசித்தாலும் துக்கமே எஞ்சுகிறது. தூக்கமோ கெஞ்சுகிறது!
* கேண்டி திமிர் தீரும் மட்டும் பேசும் திருநாட்டில் ஆணடிமை தீர்தல் முயற் கொம்பே!
* வாடகை தராத எறும்புகள். என் உணவையும் எச்சில் படுத்துகின்றன. அவை பெரும்பான்மை! நான் தனியன்.
* மனசாட்சியுள்ள பார்வையாளனா debonairblog-ன் சேவையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் ரேபிட்ஷேரைக் கண்டிக்கிறேன்.
* படைக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்று போனேன். களப்பணி ஏதும் தெரியாததால் தளபதி ஆக்கிவிட்டார்கள்.
* ஹிட்ஸ் பற்றி கேட்டார்கள். தமிழினியை 2000 பேர் படிக்கிறான்கள். கருப்பு பூனையையும், மியாவையும் 200000 பேர் படிக்கிறான்கள். எது உசத்தி?!
* துடைத்தலென்பது தூசிகளே இல்லாமல் இருக்கச் செய்வதல்ல. தூசிகளின் அளவை குறைப்பது.
* சமணப்புலவர்களுக்கு முலைகளின் மீது எத்தனைக் காதல் என்பதறிய சீ.சிந்தாமணி ஒரு சாம்பிள்!
* இந்தியாவின் மிகப்பழமையான வன ம்யூசியம் ’காஸ்’ கோவையில் இருக்கிறது. ஒரு பயலும் வருவதில்லை.
* அலெக்ஸாண்டர் சொன்னாரென்று 1000 கணக்கில் எஸ்ஸெம்மெஸ் வருகிறது. அவர் போட்டது வாள்ச் சண்டையா? வாய்ச் சண்டையா?
* காந்திக்கு ஹாரிலால். கதிரேசன் செட்டியாருக்கு நீ! # அவதாணிப்பு பை கேண்டி
* வட்டியால் பாதிக்கப்படாதவன் வானத்தின் கீழ் இல்லை.
* வாழ்வும் சாவும் எழுத்தோடுதான் என்றான் எழுத்தாள நண்பன். வடக்கிருந்து சாகத் தயாராகுங்கள் வாசகர்களே...!
* எங்கு சுவைத்தாலும் இனிக்கின்ற பேய்க்கரும்பு நீ!
* மொழி கலைத்து ஆடும் என் சிறுபிள்ளை விளையாட்டை நீ கவிதை என்கிறாய்...!
* அன்பெனும் மதயானை... எதைக் கொண்டு அடக்க?! எதைக்கொண்டு மறைக்க?!
* எனக்கான குயில் எல்லா இடங்களிலும் பாடத்தான் செய்கிறது. நானோ உனக்கான பாடலோடு மன்றாடிக் கொண்டிருக்கிறேன். # காதல்
* என் நினைவின் ஊற்றுக்கண்களில் நீயே கசிகிறாய். சாந்து வச்சி அடைக்கனும்.
*சம்பல்,வருவல்,அவியல்,பொறியல்,பிரட்டல்,பச்சடி,கூட்டு,துவரம்,மசியல்,துவையல்,தொக்கு - எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?!
* சிவாஜியைப் பார்த்து உணர்ச்சி வசப்படக் கற்றுக்கொண்டேன்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, சேரன் டைம்ஸ், மயிலாப்பூர் டைம்ஸ், குறிச்சி டைம்ஸ் அடடா... டைம்ஸ்தான் பெரிய மீடியாஹோம்!
* கன்னிராசிக்கு அதிர்ஷ்டம் என்றிருந்தது. அப்துல்லாவிற்குப் போன் செய்தேன். ஸ்விட்ச்டு ஆஃப்! நேற்று முயற்சி என்றிருந்தது. தமனாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
* மொபைல் போன் அடிக்கடி கீழே விழாமல் இருக்க பரிகார நிவர்த்தி ஏதேனும் இருக்கிறதா?! # சந்தேகம்
* எதிர் வீட்டுப்பெண் ப்லாக் எழுதுகிறாள். கட்டாய கமெண்ட் வற்புறுத்தலில் தப்புவது எப்படி?!
* ‘மனம் கொத்திப் பறவை’ தலைப்பு அவ்வளவாக அப்பீல் ஆகவில்லை. சுயம் கத்திப் பறவை பொருத்தமாக இருக்கும் # அவதானிப்பு
* கண்ட பேக்ல லேப்டாப்பை எடுத்துட்டுப் போறவனும், லேப்டாப் பேக்ல கண்டதை எடுத்துட்டுப் போறவனும் நல்லா சர்ஃப் பண்ணதா சரித்திரம் இல்லை.
* உங்கள் தேசிய கீதத்தை எழுதியவர் யாரென்றேன் கிரா டேலியிடம். சம் ஆஸ்கோல்ஸ் என்றாள். அவரை ஏற்கனவே படித்திருக்கிறேன் என்கிறார் எழுத்தாள நண்பர்.
* முன்னணி பத்திகையொன்றின் வலைப்பக்க அறிமுகப் பகுதிக்காக சிறந்த நகைச்சுவைப் பதிவர் யாரென்று கேட்டார்கள். சொன்னேன். இனி அழைக்கவே மாட்டார்கள்.
* பெண்கள் தங்கள் தியாகத்தால் காதலுக்கு தெய்வீக வர்ணம் பூசுகிறார்கள்.
* அபிமான எழுத்தாளனைச் சந்திக்கச் செல்கிறேன். என்ன வாங்கி வரட்டுமென கேட்டால் ‘ஆண்களுக்கான ஃபேர்னஸ் க்ரீம்’ என்கிறார்.
அரைகுறை அயோக்கியத்தனத்தை விட ஆபத்தானது எதுவும் இல்லை # தத்துவத் தெறிப்பு
இறைவா, தயைகூர்ந்து என் விளையாட்டுக்களனைத்தையும் வினையாக்கி விடு. வினையின்றி விருத்தி இல்லை. # பிரார்த்தனை
Comments
:)))
ஆனாl போன மனக்காளானில் பாதசாரி சாயல் தெரிந்தது (சில இடங்களில் தாண்டியும்),இந்த காளான் பேயோன் சாயலில்.
பேயோன் எம்.டி.முத்துக்குமாரசாமியா ? ஜெயமோகனா ? செல்வேந்திரனா ? மீண்டும் சந்தேகம்
if u like it get its template code here https://docs.google.com/document/edit?id=1MhobBFrAyBTaM2aFh0RKvrx7YX0r9qlvPaYCf2x0gfo&hl=en#
create an archive page using
http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html
எனக்கும் தான் தெரியும்...:))
பாஸ் ! இந்த அங்கதம் நல்லா இருக்கு :)
* முன்னணி பத்திகையொன்றின் வலைப்பக்க அறிமுகப் பகுதிக்காக சிறந்த நகைச்சுவைப் பதிவர் யாரென்று கேட்டார்கள். சொன்னேன். இனி அழைக்கவே மாட்டார்கள்.
/
வினவு.காம்-னு சொல்லியிருந்தா பொற்கிழியும் குடுத்திருப்பாங்கல்ல
:)))
You rock selva..:-))
* ’சிரப்’பொக்கும் எல்லா இருமலுக்கும்.
mudiyala selventhirare mudiyala!!!!
ithuku per than
mudiyalathathuvamoo????
அங்காங்கே சில தெறிப்புகள் கவிதையில் எஞ்சிய வரிகளைப் போலுள்ளது.அருமை.
//முன்னணி பத்திகையொன்றின் வலைப்பக்க அறிமுகப் பகுதிக்காக சிறந்த நகைச்சுவைப் பதிவர் யாரென்று கேட்டார்கள். சொன்னேன். இனி அழைக்கவே மாட்டார்கள்.
//
ஆக சிறந்த எழுத்தாளரை பதிவர் ஆக்கியபாவத்துக்கு இன்னும் இதுமாதிரி நாலு பதிவு போடும் ஒய்ய்ய்ய்ய்ய்
சேம் பீலிங்!
excellent ....
எல்லாமே நல்லாதான் இருக்கு.
//
அது விஜிராம் தானே :)
சூப்பர்காளான்
Why Blood, Same Blood
இருப்பினும் வார்த்தை விளையாட்டு மிகவும் ரசித்தேன் எக்ஸலண்ட் செல்வா சார்
சூப்பர் தல
:) நல்லாருக்கு பலவையும்.