மனக்காளான் 2


* சுயமே ஜெயம்!

* யாதும் பாரே...யாவரும் குடிப்பீர்.

* கம்பும் சொம்பும் பிறர் தர வாரா...!

* ’சிரப்’பொக்கும் எல்லா இருமலுக்கும்.

* மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயம் நிறைவேறும். முந்தைய நாள் சுட்டு வலுவடைந்த மாநாட்டுத் தோசையும் விற்று விடும்.

* தமிழின் முதல், இடை மற்றும் கடை காவலனைக் கண்டடைந்த மகிழ்ச்சியில் திளைக்கிறது கோவை!

* எம்.டி. முத்துகுமாரசாமிக்கு புனைவை விட ட்வீட்டுகள் நன்றாக வருகிறது. பேயோனைப் படித்துவிட்டு பாதசாரி அபிப்ராயம்...

* மானேஜராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...!

* உங்கள் ஏர் பஸ்ஸில் ‘கருப்புப் பெட்டி’ உண்டா என்றேன். முறைத்தார்கள் கே.பி.என் காரர்கள்.

* அன்பே, உன்னைப் பார்க்கையில் பெருமையாகவும், எருமையாகவும் இருக்கிறது...

* உயில் எழுத ஆட்கள் தேவை. என் சொத்துக்களை சரிபாதியாகப் பிரித்து தமனாவிற்கும், த்ரிஷாவிற்கும் வழங்க நினைக்கிறேன்.

* எந்த கோர்ஸூக்கு நல்ல எதிர்காலம் என்று மெஸெஜினாள். இண்டர்கோர்ஸூக்கு என ரிப்ளைனேன்.

* ட்வீட்டுகள் எவருடைய மனதையும் புண்படுத்த அல்ல. மீறி புண்பட்டால் சல்ஃபானின் தடவுங்கள்.

* ஒவ்வொரு ஓவர் டேக்கிலும் ஒரு துளியேனும் உயிரைப் பணயம் வைக்க வேண்டி இருக்கிறது.

* கேண்டி பாடுகிறாள்: ‘பாடும் போது நான் தென்றல் காற்று...பதிவுலகில் நீ டம்பி பீஸூ’

* செக் புக் ரிக்வெஸ்ட் கூட அடிசனல் பேப்பர் வாங்கி எழுதுகிறான் பிரதியங்காரக மாசானமுத்து.

* அறச்சார்பு இல்லாத எழுத்தாளன் அவுட் கோயிங் இல்லாத செல்போனுக்கு சமம்.

* ஜெயமோகனை ஜெயன் என்று சுருக்குவதைப் போல பேயோனை ஏன் பேயமோகன் என விரிக்கக் கூடாது?!

* சுயம் பிரம்மாஸ்மி! உன்னையே நீ புகழ்வாய்.

* உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்...பணம் தர வேண்டும்...!

* வாசித்தாலும், யோசித்தாலும் துக்கமே எஞ்சுகிறது. தூக்கமோ கெஞ்சுகிறது!

* கேண்டி திமிர் தீரும் மட்டும் பேசும் திருநாட்டில் ஆணடிமை தீர்தல் முயற் கொம்பே!

* வாடகை தராத எறும்புகள். என் உணவையும் எச்சில் படுத்துகின்றன. அவை பெரும்பான்மை! நான் தனியன்.

* மனசாட்சியுள்ள பார்வையாளனா debonairblog-ன் சேவையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் ரேபிட்ஷேரைக் கண்டிக்கிறேன்.

* படைக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்று போனேன். களப்பணி ஏதும் தெரியாததால் தளபதி ஆக்கிவிட்டார்கள்.

* ஹிட்ஸ் பற்றி கேட்டார்கள். தமிழினியை 2000 பேர் படிக்கிறான்கள். கருப்பு பூனையையும், மியாவையும் 200000 பேர் படிக்கிறான்கள். எது உசத்தி?!

* துடைத்தலென்பது தூசிகளே இல்லாமல் இருக்கச் செய்வதல்ல. தூசிகளின் அளவை குறைப்பது.

* சமணப்புலவர்களுக்கு முலைகளின் மீது எத்தனைக் காதல் என்பதறிய சீ.சிந்தாமணி ஒரு சாம்பிள்!

* இந்தியாவின் மிகப்பழமையான வன ம்யூசியம் ’காஸ்’ கோவையில் இருக்கிறது. ஒரு பயலும் வருவதில்லை.

* அலெக்ஸாண்டர் சொன்னாரென்று 1000 கணக்கில் எஸ்ஸெம்மெஸ் வருகிறது. அவர் போட்டது வாள்ச் சண்டையா? வாய்ச் சண்டையா?

* காந்திக்கு ஹாரிலால். கதிரேசன் செட்டியாருக்கு நீ! # அவதாணிப்பு பை கேண்டி

* வட்டியால் பாதிக்கப்படாதவன் வானத்தின் கீழ் இல்லை.

* வாழ்வும் சாவும் எழுத்தோடுதான் என்றான் எழுத்தாள நண்பன். வடக்கிருந்து சாகத் தயாராகுங்கள் வாசகர்களே...!

* எங்கு சுவைத்தாலும் இனிக்கின்ற பேய்க்கரும்பு நீ!

* மொழி கலைத்து ஆடும் என் சிறுபிள்ளை விளையாட்டை நீ கவிதை என்கிறாய்...!

* அன்பெனும் மதயானை... எதைக் கொண்டு அடக்க?! எதைக்கொண்டு மறைக்க?!

* எனக்கான குயில் எல்லா இடங்களிலும் பாடத்தான் செய்கிறது. நானோ உனக்கான பாடலோடு மன்றாடிக் கொண்டிருக்கிறேன். # காதல்

* என் நினைவின் ஊற்றுக்கண்களில் நீயே கசிகிறாய். சாந்து வச்சி அடைக்கனும்.

*சம்பல்,வருவல்,அவியல்,பொறியல்,பிரட்டல்,பச்சடி,கூட்டு,துவரம்,மசியல்,துவையல்,தொக்கு - எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?!

* சிவாஜியைப் பார்த்து உணர்ச்சி வசப்படக் கற்றுக்கொண்டேன்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, சேரன் டைம்ஸ், மயிலாப்பூர் டைம்ஸ், குறிச்சி டைம்ஸ் அடடா... டைம்ஸ்தான் பெரிய மீடியாஹோம்!

* கன்னிராசிக்கு அதிர்ஷ்டம் என்றிருந்தது. அப்துல்லாவிற்குப் போன் செய்தேன். ஸ்விட்ச்டு ஆஃப்! நேற்று முயற்சி என்றிருந்தது. தமனாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

* மொபைல் போன் அடிக்கடி கீழே விழாமல் இருக்க பரிகார நிவர்த்தி ஏதேனும் இருக்கிறதா?! # சந்தேகம்

* எதிர் வீட்டுப்பெண் ப்லாக் எழுதுகிறாள். கட்டாய கமெண்ட் வற்புறுத்தலில் தப்புவது எப்படி?!

* ‘மனம் கொத்திப் பறவை’ தலைப்பு அவ்வளவாக அப்பீல் ஆகவில்லை. சுயம் கத்திப் பறவை பொருத்தமாக இருக்கும் # அவதானிப்பு

* கண்ட பேக்ல லேப்டாப்பை எடுத்துட்டுப் போறவனும், லேப்டாப் பேக்ல கண்டதை எடுத்துட்டுப் போறவனும் நல்லா சர்ஃப் பண்ணதா சரித்திரம் இல்லை.

* உங்கள் தேசிய கீதத்தை எழுதியவர் யாரென்றேன் கிரா டேலியிடம். சம் ஆஸ்கோல்ஸ் என்றாள். அவரை ஏற்கனவே படித்திருக்கிறேன் என்கிறார் எழுத்தாள நண்பர்.

* முன்னணி பத்திகையொன்றின் வலைப்பக்க அறிமுகப் பகுதிக்காக சிறந்த நகைச்சுவைப் பதிவர் யாரென்று கேட்டார்கள். சொன்னேன். இனி அழைக்கவே மாட்டார்கள்.

* பெண்கள் தங்கள் தியாகத்தால் காதலுக்கு தெய்வீக வர்ணம் பூசுகிறார்கள்.

* அபிமான எழுத்தாளனைச் சந்திக்கச் செல்கிறேன். என்ன வாங்கி வரட்டுமென கேட்டால் ‘ஆண்களுக்கான ஃபேர்னஸ் க்ரீம்’ என்கிறார்.

அரைகுறை அயோக்கியத்தனத்தை விட ஆபத்தானது எதுவும் இல்லை # தத்துவத் தெறிப்பு

இறைவா, தயைகூர்ந்து என் விளையாட்டுக்களனைத்தையும் வினையாக்கி விடு. வினையின்றி விருத்தி இல்லை. # பிரார்த்தனை

Comments

Vetri said…
எப்போதாவது பதிவு போட்டாலும்.....சூப்பரப்பு!
* முன்னணி பத்திகையொன்றின் வலைப்பக்க அறிமுகப் பகுதிக்காக சிறந்த நகைச்சுவைப் பதிவர் யாரென்று கேட்டார்கள். சொன்னேன். இனி அழைக்கவே மாட்டார்கள்.

:)))
Aranga said…
நல்லாத்தா இருக்கு ,

ஆனாl போன மனக்காளானில் பாதசாரி சாயல் தெரிந்தது (சில இடங்களில் தாண்டியும்),இந்த காளான் பேயோன் சாயலில்.

பேயோன் எம்.டி.முத்துக்குமாரசாமியா ? ஜெயமோகனா ? செல்வேந்திரனா ? மீண்டும் சந்தேகம்
Anonymous said…
see my blog http://thandapayal.blogspot.com/

if u like it get its template code here https://docs.google.com/document/edit?id=1MhobBFrAyBTaM2aFh0RKvrx7YX0r9qlvPaYCf2x0gfo&hl=en#

create an archive page using

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html
selventhiran said…
என் வலையுலக வாழ்க்கையில் வெயிலானைப் போன்றதொரு நுட்ப வாசகரைப் பார்த்ததில்லை.
selventhiran said…
அரங்கசாமிண்ணே, நான் பேயோன் இல்லை தூயோன் :)))
ஞாயிறுக்காக காத்திருக்கிறேன். நேரில் பாராட்ட...
Anonymous said…
முன்னணி பத்திகையொன்றின் வலைப்பக்க அறிமுகப் பகுதிக்காக சிறந்த நகைச்சுவைப் பதிவர் யாரென்று கேட்டார்கள். சொன்னேன். இனி அழைக்கவே மாட்டார்கள்.///

எனக்கும் தான் தெரியும்...:))
வினோ said…
செல்வா super... அலுவலகம் வந்தவுடன் படித்தேன்.... சிரிச்சுகிட்டே இருக்கிறேன்
சாயலற்ற சாயல் எதுவெனக் கேட்டான் மின்மயானத்தின் புகைப் போக்கியை காட்டினேன்

பாஸ் ! இந்த அங்கதம் நல்லா இருக்கு :)
/

* முன்னணி பத்திகையொன்றின் வலைப்பக்க அறிமுகப் பகுதிக்காக சிறந்த நகைச்சுவைப் பதிவர் யாரென்று கேட்டார்கள். சொன்னேன். இனி அழைக்கவே மாட்டார்கள்.
/

வினவு.காம்-னு சொல்லியிருந்தா பொற்கிழியும் குடுத்திருப்பாங்கல்ல
:)))
//வாடகை தராத எறும்புகள். என் உணவையும் எச்சில் படுத்துகின்றன. அவை பெரும்பான்மை! நான் தனியன்//

You rock selva..:-))
sakthi said…
கம்பும் சொம்பும் பிறர் தர வாரா...!

* ’சிரப்’பொக்கும் எல்லா இருமலுக்கும்.


mudiyala selventhirare mudiyala!!!!

ithuku per than

mudiyalathathuvamoo????
சீ.சிந்தாமணி : எழுதியவர் திருத்தக்க தேவர். நரிவிருத்தம் என்ற இவருடைய நூலைப் படித்தவர்கள் சமணர்களுக்கு களவியல் பற்றியும் இல்வாழ்க்கைப் பற்றியும் எழுதத் தெரியாது என்பதை பொய்ப்பிக்கவே, ஒரு சபதத்திற்காக எழுதியப் புத்தகம்தான் சீவக சிந்தாமணி. இதைப் படித்து இவருடைய பிரம்மச்சரியத்தைப் பற்றி ஐயமுற்றவர்களுக்கு தீயில் தன்விரலைச் சுட்டு தன் விரத்தை நிரூபணம் செய்தார்.

அங்காங்கே சில தெறிப்புகள் கவிதையில் எஞ்சிய வரிகளைப் போலுள்ளது.அருமை.
அட பாவி மனுசா? எம்புட்டு நாள் கேட்டேன் அவரு நீதானான்னு, ஒத்துக்கவே இல்லையே:((


//முன்னணி பத்திகையொன்றின் வலைப்பக்க அறிமுகப் பகுதிக்காக சிறந்த நகைச்சுவைப் பதிவர் யாரென்று கேட்டார்கள். சொன்னேன். இனி அழைக்கவே மாட்டார்கள்.
//

ஆக சிறந்த எழுத்தாளரை பதிவர் ஆக்கியபாவத்துக்கு இன்னும் இதுமாதிரி நாலு பதிவு போடும் ஒய்ய்ய்ய்ய்ய்
vaanmugil said…
//மனம் கொத்திப் பறவை’ தலைப்பு அவ்வளவாக அப்பீல் ஆகவில்லை. சுயம் கத்திப் பறவை பொருத்தமாக இருக்கும் # அவதானிப்பு//


சேம் பீலிங்!
* எந்த கோர்ஸூக்கு நல்ல எதிர்காலம் என்று மெஸெஜினாள். இண்டர்கோர்ஸூக்கு என ரிப்ளைனேன்.

excellent ....
butterfly Surya said…
தனியா இருக்கவரை தான் இப்படியெல்லாம் டிவிட்ட முடியும்..

எல்லாமே நல்லாதான் இருக்கு.
Anonymous said…
//* எதிர் வீட்டுப்பெண் ப்லாக் எழுதுகிறாள். கட்டாய கமெண்ட் வற்புறுத்தலில் தப்புவது எப்படி?!
//

அது விஜிராம் தானே :)
சூப்பர்காளான்
வட்டியால் பாதிக்கப்படாதவன் வானத்தின் கீழ் இல்லை.
Why Blood, Same Blood
இருப்பினும் வார்த்தை விளையாட்டு மிகவும் ரசித்தேன் எக்ஸலண்ட் செல்வா சார்
KARTHIK said…
முடியல(த்)துவம் :-))
சூப்பர் தல
வாடகை தராத எறும்புகள். என் உணவையும் எச்சில் படுத்துகின்றன. அவை பெரும்பான்மை! நான் தனியன்.

:) நல்லாருக்கு பலவையும்.
Anonymous said…
@ அம்மினி,,, ஐய்யே, அந்த அத்துவான காட்டில் குடியிருக்க எனக்கு என்ன பைத்தியமா? அது செல்வா கரெக்ட் பண்ண ட்ரை பண்ணும் 59வது ஃபிகரா இருக்கும்.. ( ஸ்ஸ்ப்பா போட்டுக்கொடுத்தாச்சு :)) )

Popular Posts