மனக்காளான்


விரையும் மணல் லாரியிலிருந்து சொட்டடிக்கும் நீர் ஆற்றின் குருதியெனக் கொள்க!

நண்பர் ஒரு கனரக வாகனம் வாங்கி இருக்கிறார். பெயர் 'இன்னோவா'வாம்.

என் பெரும்பாலான வஞ்சி புகழ்ச்சியை சம்பந்தப்பட்ட பெண்கள் 'வஞ்சகப் புகழ்ச்சியென' கொள்கின்றனர் # வருத்தம்

முதிர் கன்னிகளை, வாழாவெட்டிகளை, விதவைகளை வெளித் தெரியாமல் புணர்பவன் செத்துச் சொர்க்கம் போவான்.

உலக மொழிகளிலேயே அதிகம் மொன்னைக் கவிதைகள் எழுதப்பட்ட மொழி எனும் பெருமையும் தமிழுக்கு உண்டு # மொழி ஆய்வு

பகைவனுக்கு அருள்வதும் பிழை! மருள்வதும் பிழை!

அறச்சார்பை குத்தகைக்கு விடலாம் என்றிருக்கிறேன். தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாலோயர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அரசாங்கம் வரி விதிக்கலாம் # யோசனை

ரொம்பவும் அயோக்கியனை அய்யோக்கியன் என்றெழுதலாம் # தமிழ்க் கொடை

உதித் பாடி ஹிட்டடிக்காத தமிழ்ப் பாடலே இல்லை # ஆய்வு

ஆம்லெட்டைக் கண்டுபிடித்தவன் தான் வாழ்ந்த காலத்தில் கவுரவிக்கப்பட்டிருப்பானா என்பதே என் நீண்டகால கவலையாக இருக்கிறது.

ஓடி ஓடி இளைக்கனும். ஊத்தை வயிறைக் குறைக்கனும். ஆடிப்பாடி சிரிக்கனும். ஆஞ்சியோவைத் தவிர்க்கனும் # விழிப்புணர்ச்சி

தானே வளரும் பிரண்டை போன்ற தாவரங்களை நான் ‘தன்செய்’ என அழைக்கலாமென்றிருக்கிறேன். # தமிழ்க் கொடை

அன்பு கலக்காத கலவி. வம்பு வளர்க்காத கிழவி

விதியெனில் விலக்கும், வீதியெனில் விளக்கும் அவசியமாகிறது. பள்ளத்தால் பல் இழக்கப் பார்த்தேன்.

உண்மையான அன்பு பாட்டிலுக்குள் இருக்கும் சாராயம் போல. குடித்தாலன்றி போதையை உணர முடியாது. # தத்துவமுத்து

பென் ட்ரைவ் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

அற்பங்களின் மீதான அதீத ஆர்வம் வரலாற்றை வடிவமைத்தது.

குருவை மிஞ்சியாக வேண்டிய நிலை ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்படத்தான் செய்கிறது. அதுவே நியதியும் கூட. குருவை மிஞ்ச முடியாதவர்களின் வாழ்வு சீடனாகவே அஸ்தமித்துப் போய்விடுகிறது. தன்னைத் தாண்டி ஓட முடிகிறவனை வாழ்த்தி வழியனுப்புகிற குருவா நீங்கள்...?!

எழுதுவது என் பொழுதுபோக்கு. எழுத்துக்களை விற்பது என் தொழில். என் பொழுதுபோக்கிற்காகப் பேசப்படுவதை விட தொழில் நேர்த்திக்காகப் பேசப்படுவதையே பெரிதும் விரும்புகிறேன். தவிர, வாரக்கடைசி எழுத்தாளனாக வாழ்வதைக்காட்டிலும் வாசகனாக நீடிக்க முயல்வதே எழுத்துலக முன்னோடிகளுக்குச் செய்யும் மரியாதை என நினைக்கிறேன். இனிய இரவு.

நண்பர்களே, பார்வர்டு மின்னஞ்சல்களையும், குப்பை குறுஞ்செய்திகளையும் எனக்கு அனுப்புகையில் நாம் கட்டிய நட்பு பாலத்தின் மீது நீங்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்...!

எழுத்தாளத் துடிப்பில் இருப்பவனுக்கு இணையமும், அதன் வாசகர்களும் முக்கியம் என்று நினைத்திருந்தேன். கடந்த ஐந்தாண்டில் எந்த உருப்படியான வேலைகளையும் செய்யாமல் இருந்ததற்கு இணையம் ஒரு பிரதான காரணம்!

சமூக வலைதளங்களின் செயற்பாட்டாளனாய் இருத்தல் யானையை வைத்து பிச்சையெடுத்தலுக்குச் சமம். அதிலும் புறத்தியானுக்காக எடுக்கும் பிச்சை. இணையங்களின் வழியே கடுகளவு அறிவும், மலையளவு காலவிரயமும் நேரிடும் என்பது என் அவதானிப்பு. முதற்கட்டமாக எழுநூற்றிச் சொச்சம் நபர்களோடு நட்பு கொண்டிருந்த ஆர்க்குட்டை அழித்தெறிந்தேன்.

இறைவா, எனக்கு கூடுதலாக எட்டு மணி நேரம் கொடு. அல்லது புறத்தியார் நேரத்தை 16 மணி நேரமாக குறைத்து விடு # கோரிக்கை

முக்கியமானவனாக நடத்தப்பட முக்கியமானவற்றை மட்டும் செய்!

Comments

//விதியெனில் விலக்கும், வீதியெனில் விளக்கும் அவசியமாகிறது. பள்ளத்தால் பல் இழக்கப் பார்த்தேன்.//

:) சூப்பர்
மிக நன்று.

இந்த ட்வீட்டுகளெல்லாம் என்னை வந்தடையவே இல்லையே? உங்களைத் தொடர்கிறேனே நான்?

என்ன குழப்பம்?
Anonymous said…
//விரையும் மணல் லாரியிலிருந்து சொட்டடிக்கும் நீர் ஆற்றின் குருதியெனக் கொள்க! //
# வருத்தம்

//எழுத்தாளத் துடிப்பில் இருப்பவனுக்கு இணையமும், அதன் வாசகர்களும் முக்கியம் என்று நினைத்திருந்தேன். கடந்த ஐந்தாண்டில் எந்த உருப்படியான வேலைகளையும் செய்யாமல் இருந்ததற்கு இணையம் ஒரு பிரதான காரணம்!//

# உண்மை
மணிஜி said…
கல்யாணம் ? பெண்ட்ரைவ்!!
Thamira said…
வாரக்கடைசி எழுத்தாளனாக வாழ்வதைக்காட்டிலும் வாசகனாக நீடிக்க முயல்வதே எழுத்துலக முன்னோடிகளுக்குச் செய்யும் மரியாதை என நினைக்கிறேன். //

நோ நோ.. அப்பிடில்லாம் டக்குபுக்குனு முடிவு எடுக்கக்கூடாது. அப்புறம் நாம் இணைந்து போட்டு வைத்த திட்டமெல்லாம் என்னாகுறது.?

சிறுகதை.. மாசானமுத்து.. தமிழ்ச்சூழல்.. ஆளுமை..
Thamira said…
பல ட்விட்டுகள் ரசனை.!

அப்புறம் பரிசலுக்கு ஒரு ரிப்பீட்டு. :-(
//அன்பு கலக்காத கலவி. வம்பு வளர்க்காத கிழவி//

ok welcome to the elite married group.............

Advance wishes
Anonymous said…
பயனுள்ள தகவல்கள் நல்ல பகிர்வு அருமை அழகு அற்புதம் பிடிச்சிருக்கு எப்படிங்க இப்படி இதையே பழகிய கைகள் புதுசா ஒரு கருத்தை சொல்லத் தெரியாமல் நினைச்சதை புலம்பிட்டு போறேனே...
//விதியெனில் விலக்கும், வீதியெனில் விளக்கும் அவசியமாகிறது. பள்ளத்தால் பல் இழக்கப் பார்த்தேன்.//


அருமை...கலக்குங்க...
sakthi said…
என் பெரும்பாலான வஞ்சி புகழ்ச்சியை சம்பந்தப்பட்ட பெண்கள் 'வஞ்சகப் புகழ்ச்சியென' கொள்கின்றனர் # வருத்தம்


ஹ ஹ ஹ ஹ

செல்வா ::)))
sakthi said…
ஓடி ஓடி இளைக்கனும். ஊத்தை வயிறைக் குறைக்கனும். ஆடிப்பாடி சிரிக்கனும். ஆஞ்சியோவைத் தவிர்க்கனும் # விழிப்புணர்ச்சி


அட அருமையான கட் அவுட் வாசகமொன்று
செல்வா,

எல்லாமே நல்லாயிருக்கு...

அடிக்கடி எழுதுங்கள்...

அட்லீஸ்ட் திருமணத்திற்கு பிறகாவது....
க ரா said…
அருமை ட்வீட்டுகள் :)
விஜி said…
ரொம்ப பிசின்னு சீன் போடறதை இதுல சேர்த்தலையா?
vaanmugil said…
\\விரையும் மணல் லாரியிலிருந்து சொட்டடிக்கும் நீர் ஆற்றின் குருதியெனக் கொள்க!//

அருமை!

\\வாசகனாக நீடிக்க முயல்வதே எழுத்துலக முன்னோடிகளுக்குச் செய்யும் மரியாதை என நினைக்கிறேன்.//

மிளிர்கிறது. இருப்பினும் நீங்கள் எழுதியே ஆகவேண்டும்.

\\எழுநூற்றிச் சொச்சம் நபர்களோடு நட்பு கொண்டிருந்த ஆர்க்குட்டை அழித்தெறிந்தேன்.//

வடை போச்சே! நானும் லிஸ்ட்ல இருந்தேன்.
Saravana kumar said…
//குருவை மிஞ்சியாக வேண்டிய நிலை ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்படத்தான் செய்கிறது. அதுவே நியதியும் கூட. குருவை மிஞ்ச முடியாதவர்களின் வாழ்வு சீடனாகவே அஸ்தமித்துப் போய்விடுகிறது. தன்னைத் தாண்டி ஓட முடிகிறவனை வாழ்த்தி வழியனுப்புகிற குருவா நீங்கள்...?!...//

ஜென் கதை படித்த உணர்வு.

நல்ல வேலை நான் இதுவரைக்கும் எந்த குண்டும் நம்ம பாலத்துல போட்டது இல்ல....!

//முக்கியமானவனாக நடத்தப்பட முக்கியமானவற்றை மட்டும் செய்!

பின்பற்ற முயற்சிக்கிறேன் ...
அன்பின் செல்வா,
இத்தனை பரபரப்புகிடையிலும் உங்களது அருமையான டீவீட்டுகள் நெஞ்சை அள்ளுகின்றன, தொடரட்டும் உங்களது எழுத்துப் பணி , எழுதும் விஷயத்தில் ஜெயமோகன் சாரினை பின்பற்றுங்கள், எனக்கு தெரிந்து அவர் இரண்டு கையிலும் எழுதுவார் என நினைக்கிறேன்
அன்புடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
வணக்கம். உங்கள் வலைப்பூவின் புதிய வாசகன். முதலில் திருமண வாழ்த்துக்கள்.

சில கருத்துக்கள் (ட்வீட்-கள்) சுள் என்று உரைக்கிறது. சர்வ நிச்சயமாக ட்வீட் என்பது வார்த்தை விளையாட்டு தான். சிறந்த மொழிப் புலமை இல்லாமல் இதில் விளையாட முடியாது. நீங்கள் இந்த விளையாட்டில் கை தேர்ந்தவர். இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்.

ட்வீட்-ஐ புத்தகமாக போடும் எண்ணம் உண்டா?
RRSLM said…
//வாசகனாக நீடிக்க முயல்வதே எழுத்துலக முன்னோடிகளுக்குச் செய்யும் மரியாதை என நினைக்கிறேன். இனிய இரவு//
//கடந்த ஐந்தாண்டில் எந்த உருப்படியான வேலைகளையும் செய்யாமல் இருந்ததற்கு இணையம் ஒரு பிரதான காரணம்!//

இது ஏதோ சுயமா எடுத்த முடிவு போல தெரியலையே.......நவம்பர் 18 க்கு அப்புறம் "முதலில் குடும்பம் பிறகு அனைத்தும்" என்று எங்கேயோ இருந்து வந்த கட்டளை போல இல்ல இருக்கு இது.
:-)
Unknown said…
இறைவா, எனக்கு கூடுதலாக எட்டு மணி நேரம் கொடு. அல்லது புறத்தியார் நேரத்தை 16 மணி நேரமாக குறைத்து விடு # கோரிக்கை

கோரிக்கை சூப்பர்ங்க...!!
Jayasree said…
orkuta அழிச்சுட்டு facebookல வந்து சேந்தீராக்கும், இதுக்கு எதுக்கு பெரிய சாதன செஞ்ச மாத்ரி உருமுரீரு?? ;) I am also loitering in the not-so social space of facebook and redefining my purpose of existence as "No purpose", just FYI.