Sunday, October 3, 2010

திருமண அறிவிப்பு

‘திருமணத்திற்குப் பின் என் வாழ்க்கையே தொலைந்து விட்டது. கல்யாணம் என் வாழ்நாளின் பெரும்கொண்ட தவறு’ எனும் அவலப்பட்டியல் வாசிப்போர் அனேகம் பேர் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். திருமணமாகியும் வாழ்வைப் பழிக்காத ஒருவனையாவது தேடிக் கண்டடைய வேண்டும் என்பது என் சங்கல்பம்.

என் மிக நீண்ட தேடலில் ஜெயமோகனைக் கண்டடைந்தேன். கிட்டத்தட்ட இரு பத்தாண்டுகளைக் கடந்து விட்ட இல்வாழ்வு அவருடையது. மனை மாட்சி பாகம் இரண்டு எழுதும் தகுதியுண்டு அவருக்கு. நான் காதல் திருமணம் செய்யப்போகிறவன் என்றதும் என் இரு கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டு காதல் திருமணத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பம்சங்களைக் கண்கள் ஒளிர ஜெயமோகன் சொல்லச்சொல்ல சிலிர்த்தேன்.

தன் மனைவி கசக்கி எறியும் காகிதத்தைக் கூட சேகரித்து வைத்துக்கொள்ளும் காதலனாகத்தான் இன்றும் ஜெயன் இருக்கிறார். அருண்மொழி அக்காவையும் ஜெயனையும் சேர்த்துப் பார்த்தால் அன்றைக்குத்தான் காதலிக்க ஆரம்பித்தவர்கள் போல இருக்கும். இலக்கியக்கூட்டங்களில் இருவரும் கைகோர்த்து வரும் காட்சியைக் கண்டவர் விண்டிலர் என்பர் என் இலக்கிய நண்பர்கள். திருமணம் காதலின் டெஸ்டினேஷன் அல்ல... டிபார்ச்சர்.

***

ஆயிற்று நண்பர்களே. பல காலம் போராடி இரு தரப்பின் சம்மதமும் பெற்று ஒரு வழியாய் நவம்பர் - 18ல் திருமணம் என முடிவாகி இருக்கிறது. சித்தர்களும், மன்னர்களும் கட்டி வைத்த பெரும் கல் மண்டபமொன்றில் நண்பர்கள் புடை சூழ, கடலலை கால் நனைக்க திருச்செந்தூரில் என் காதற் பெருமாட்டியின் கைத்தலம் பற்றுகிறேன். விரைவில் கல்யாணப் பத்திரிகையோடு வந்து கதவைத் தட்டுகிறேன் தோழர்களே.

***

திருமண விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் பொதுவாக எப்போது? எங்கே? பெண் என்ன செய்கிறாள்? - போன்ற கேள்விகள்தான் புறப்பட்டு வரும். அழைத்த நண்பர்களெல்லாம் ‘கல்யாணச் செலவுக்குப் பணம் எதுவும் தேவையா? என்கிறார்கள். வறுமையின் கூர்முனையில் நிற்கும் ரமேஷ் அண்ணா கூட துரத்துகிறார். நல்ல வாழ்க்கைத்தானடி வாழ்ந்திருக்கிறேன் என்றேன் கேண்டியிடம்...!

***

‘உன்னை இம்ப்ரெஸ் பண்ண ஒரு புக் படிச்சுக்கிட்டு இருக்கேன் ’ என்றொரு குறுந்தகவல் கேண்டியிடமிருந்து... ஆர்வத்தில் என்ன புத்தகமென்று ரிப்ளைனேன்.

‘எருமை வளர்ப்பு - அக்ரி யூனிவர்சிட்டி வெளியீடு’

எனக்காகப் பிரார்த்தியுங்கள் தோழர்களே!

95 comments:

Karthik said...

Congratulations! :-)

சென்ஷி said...

என் மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா...

கென்., said...

வாழ்த்துகள் செல்வேந்திரா , நானும் இந்த காதல் திருமண விபத்தில் சமீபத்தில் சிக்கி விட்டேன் ஆக நான் தான் சீனியர்

:)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ராசா ;))

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ராசா ;))

RR said...

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாழ்த்துக்கள் எங்க ஊரு மாப்பிள்ளைக்கு...

Anonymous said...

வாழ்த்துகள் செல்வேந்திரன்!

- என். சொக்கன்,
பெங்களூரு.

எறும்பு said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன்.

Nice label :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மகிழ்ச்சி செல்வேந்திரன். வாழ்த்துகள்.

sakthi said...

வாழ்த்துக்கள் செல்வா!!!!

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்!!!!!

பழமைபேசி said...

வாழ்த்துகள் செல்வா!!!

Prabhaharan said...

Congratulations.........................காதல் திருமணம்!!கசக்குமா என்ன? ............Congradulations

ராகவேந்திரன் said...

@ முதலில் பிடியும் அட்வான்ஸ் வாழ்த்துக்களை, எனது ஆதர்ச எழுத்தாளர் ஜெயன் போலவே எனது திருமண வாழ்வும் 11 ஆண்டுகளாக சர்க்கரை கரும்பாக இனிக்கிறது செல்வா, எந்த ஒரு கவலையும் வேண்டாம், உங்களது வளமான வருங்கால திருமண வாழ்வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,

சுரேஷ் கண்ணன் said...

congrats friend. :) all the best.

தாரணி பிரியா said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன் :)

மாதவராஜ் said...

ஆஹா, வாழ்த்துக்கள் தம்பி.
நவம்பர் 18, திருச்செந்தூரிலா...
நேரிலும் வாழ்த்த வருகிறேன்....

manjoorraja said...

இனிய வாழ்த்துகள்.

D.R.Ashok said...

வாழ்த்துகள் :)

செல்வராஜ் ஜெகதீசன் said...

என் மனமார்ந்த வாழ்த்துகள் செல்வேந்திரன்.

டம்பி மேவீ said...

வாழ்த்துக்கள் ...

என்றும் சந்தோஷமாக வாழ்ந்திடுக

வினோ said...

வாழ்த்துக்கள் செல்வா

கும்க்கி said...

உமக்கு எனது வாழ்த்துக்களும்.,
கேண்டிக்கு எனது ஆறுதல்களும்..

பேரரசன் said...

எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..

பித்தன் said...

best wishes may the ALMIGHTY SHOWER YOU WITH ALL THE HAPPINESS & JOY

காயத்ரி சித்தார்த் said...

//திருமணமாகியும் வாழ்வைப் பழிக்காத ஒருவனையாவது தேடிக் கண்டடைய வேண்டும் என்பது என் சங்கல்பம்.//

கோவை ரெசிடென்சில கூட அப்டி ஒருத்தரை பார்த்தீங்களே செல்வா? ;)

அன்பார்ந்த வாழ்த்துக்கள் செல்வா & கேண்டி

லேபிள்.. குசும்பு :))

பத்மா said...

congrats ...life is beautiful

இளங்கோ said...

Congrats :)

ஆயில்யன் said...

வாழ்த்துகள் பாஸ் :)))))

DHANS said...

wow congratzzzzzz

ச்சின்னப் பையன் said...

என் மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா...

நாதஸ் said...

Congrats !

சிதம்பரம் said...

//Labels: ஸாரி கேர்ள்ஸ்//

:))

வாழ்த்துக்கள் செல்வா..

பாலா அறம்வளர்த்தான் said...

மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா!!!

BTW, ஒரு தேர்ந்த மொழி நடையை வைத்துக் கொண்டு எப்போதாவது எழுதும் உங்களை என் நண்பர்களிடம் எப்படி அறிமுகப் படுத்துவது என்றே தெரியவில்லை :-) சீக்கிரம் ஜெயன் அளவுக்கு இல்லாவிட்டாலும் இருபதில் ஒரு பங்கு அளவுக்காவது எழுதுங்கள் நண்பரே.

kalapria said...

எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ஜெயமோகன் அருண்மொழி போல நிறைவாய் வாழ் அன்பு வாழ்த்துக்கள்

விஜி said...

வாழ்த்துக்கள் செல்வா :))

Arangasamy.K.V said...

என் அன்புகள் பிரியத்துக்குறிய சின்ன தம்பி .

Anonymous said...

வாழ்த்துக்கள் செல்வா..மலரும் மணமும் போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்....

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள்...

பாலகுமார் said...

வாழ்த்துகள் செல்வேந்திரன்...

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் செல்வா!

லேபிளை நான் ரசித்தேன். கேண்டி ரசிப்பாரென்று உறுதியில்லை..

:-)

ICANAVENUE said...

Heartiest congratulations! Wish you all the best!

பாலராஜன்கீதா said...

எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள் செல்வேந்திரன்.

krish-online said...

Dear Selvendran,

Congratulations!!!
Wish You All Good Luck !!!

cheena (சீனா) said...

அன்பின் செல்வேந்திரன்

நல்வாழ்த்துகள் - நவமபர் 18 - காதல் மணம் கை கூடியது குறித்து மிக்க மகிழ்ச்சி

நட்புடன் சீனா

Balaji saravana said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன்..

Gopi Ramamoorthy said...

வாழ்த்துக்கள்.

\\திருமணமாகியும் வாழ்வைப் பழிக்காத ஒருவனையாவது தேடிக் கண்டடைய வேண்டும் என்பது என் சங்கல்பம். \\

நாளைக்கு ஒரு கவிதையாகவே (அப்படின்னு நெனச்சுப் படிக்கணும்)இதற்குப் பதில் சொல்கிறேன்.நீங்கள் தேடும் அந்த ஒருவன் அந்தக் கவிதையில் வருபவன்தானோ?!

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் செல்வா

taaru said...

வாழ்த்துக்கள் செல்வே!!!
எல்லாம் வல்ல கருங்குழைநாதன் .... எருமை வளர்ப்பை அருமை வளர்ப்பாய் மாற்றி அருள் புரிவார்..... :)

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் செல்வா :)

Deepa said...

திருவுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா!

மணியன் said...

வாழ்த்துக்கள் செல்வா,

வாழ்க பல்லாண்டு...

அன்புடன்
மணியன்

ஜெ.ஜெ said...

உன்னை இம்ப்ரெஸ் பண்ண ஒரு புக் படிச்சுக்கிட்டு இருக்கேன் ’ என்றொரு குறுந்தகவல் கேண்டியிடமிருந்து... ஆர்வத்தில் என்ன புத்தகமென்று ரிப்ளைனேன்.

‘எருமை வளர்ப்பு - அக்ரி யூனிவர்சிட்டி வெளியீடு’////////////

engayo kelvi patta mathiri irukke.....

நா.இரமேஷ் குமார் said...

//ஆயிற்று நண்பர்களே. பல காலம் போராடி இரு தரப்பின் சம்மதமும் பெற்று ஒரு வழியாய் நவம்பர் - 18ல் திருமணம் என முடிவாகி இருக்கிறது.//

மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா...

விஜி said...

ஒரு தேர்ந்த மொழி நடையை வைத்துக் கொண்டு எப்போதாவது எழுதும் உங்களை என் நண்பர்களிடம் எப்படி அறிமுகப் படுத்துவது என்றே தெரியவில்லை :-)//

ரொம்ப லொள்ளுன்னு சொல்லி அறிமுகப்படுத்துங்க பாலா ஒண்ணும் பிரச்சனை இல்லை :)

மணிஜீ...... said...

என் பிறந்த நாளை , திருச்செந்தூரில் கொண்டாட உத்தேசித்திருக்கிறேன்..வாழ்த்துக்கள் தம்பி.....

கார்க்கி said...

congrats saga..

சங்கவி said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன்....

சிவசங்கர். said...

:)

நாவிஷ் செந்தில்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துகள் செல்வேந்திரன்!

Saravana kumar said...

வாழ்த்துக்கள் அண்ணா.

லேபில் சூப்பர்..............! கோவைல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்

ஒவ்வாக்காசு said...

Congrats and All the best, Selva.

Natpudan,
Ovvakkaasu

பாசகி said...

மனமார்ந்த வாழ்த்துகள் ஜி

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துகள் :)

யாத்ரா said...

வாழ்த்துகள் செல்வேந்திரன் :)

வால்பையன் said...

இத்தருணத்திற்காக வெயிட்டிங்!

வால்பையன் said...

உங்க ஊர்ல தானே தல கல்யாணம்!

மங்களூர் சிவா said...

/
‘உன்னை இம்ப்ரெஸ் பண்ண ஒரு புக் படிச்சுக்கிட்டு இருக்கேன் ’ என்றொரு குறுந்தகவல் கேண்டியிடமிருந்து... ஆர்வத்தில் என்ன புத்தகமென்று ரிப்ளைனேன்.

‘எருமை வளர்ப்பு - அக்ரி யூனிவர்சிட்டி வெளியீடு’
/

சரியான புத்தகம்தான் என எண்ணுகிறேன்
:)))

butterfly Surya said...

வாழ்த்துகள் செல்வா. மிகுந்த மகிழ்ச்சி.

தாமோதர் சந்துரு said...

என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

காவேரி கணேஷ் said...

உன்னையும், உன் எழுத்தினையும் ரசித்தவன் என்ற முறையில் ,அதுவும் இந்த 21 ம் நூற்றாண்டில் காதலித்தவளையே கைப்பிடிக்கிறாய் என்னும் பொழுது , உன் மீது மரியாதை கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் தம்பி.

விழியன் said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன்.

seetha said...

Congratulation both of us.

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்தை நேரில் சொல்லுகிறேன்

// திருமணமாகியும் வாழ்வைப் பழிக்காத ஒருவனையாவது தேடிக் கண்டடைய வேண்டும் என்பது என் சங்கல்பம்.

//

அதான் போனவாரம் என்னையப் பாத்தீரே??

Giri said...

வாழ்த்துகள் நண்பா! உனக்கு திருமணம் என்றதும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஜெரி ஈசானந்தன். said...

Smart Label....feelin wild..congrats my dear..DON'T forget to invite me.

ஸ்ரீ said...

மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துகள் செல்வேந்திரன்.

Margie said...

Congrats Selvendiran...Hope you write more...

Margie said...

Congrats Selvendiran...Hope you write more atleast after marriage :-)

சேவியர் said...

வாழ்த்துக்கள். திருமண வாழ்க்கை ஆனந்தமானது ! அழகானது. வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது.... கவலைப்படாதீங்க !

360 கோணம் said...

எருமை வளர்ப்பு - ஹா ஹா ஹா...
:):):)
உங்களுக்காக ப்ராத்தனை மட்டுமல்ல...அதே புத்தகத்தின் இன்னொரு பிரதி கூட அனுப்பி வைக்கிறேன்... ஹி ஹி...ஹி...

deepanbalaji said...

மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா...

deepanbalaji said...

மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா...

jeev said...

many more happy return of the day . every day better than perivous day .

முத்துகுமரன் said...

மனமுருக பிராத்தனைகள் செல்வா :-)

ஸ்ரீவி சிவா said...

வாழ்த்துகள் செல்வா.

மகிழ்ச்சியான குடும்பஸ்தர்கள் பட்டியலில் ஜெமோ-வுக்கு அடுத்து இரண்டாவதாக சேரும் அளவுக்கு இல்லறம் அமையட்டும் உமக்கு.

மனுஷம் said...

manamaarntha nalvaazthukkal

iniya illaram amaiya

venkat

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் தலைவா!

இதென்ன பேர் கேண்டி என்று?

பேரு முருகேஷ் பாபு said...

ஆனந்தா... எங்க கண்ணையே உன்கிட்டே ஒப்படைக்கிறோம்... அதிலே...
ஆமா... நாங்க பொண்ணுவீட்டுக் காரங்கப்போய்..! பொண்ணுவீட்டு அழைப்பு எப்பயோ வந்தாச்சு!
முருகன் சந்நிதியில் சந்திப்போம்

கார்த்திக் said...

விதி யாரவிட்டுது :-))

கார்த்திக் said...

வாழ்த்துக்கள் தல :-))

மறத்தமிழன் said...

செல்வா,

மிக்க மகிழ்ச்சி...

நல்வாழ்த்துககள் !

நிச்சயம் நேரில் வந்து வாழ்த்த முயல்கிறேன்...

அன்புடன்,
மறத்தமிழன்.

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள் அண்ணே!
:)

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்..