திருமண அறிவிப்பு
‘திருமணத்திற்குப் பின் என் வாழ்க்கையே தொலைந்து விட்டது. கல்யாணம் என் வாழ்நாளின் பெரும்கொண்ட தவறு’ எனும் அவலப்பட்டியல் வாசிப்போர் அனேகம் பேர் என்னைச் சுற்றி இருக்கிறார்கள். திருமணமாகியும் வாழ்வைப் பழிக்காத ஒருவனையாவது தேடிக் கண்டடைய வேண்டும் என்பது என் சங்கல்பம்.
என் மிக நீண்ட தேடலில் ஜெயமோகனைக் கண்டடைந்தேன். கிட்டத்தட்ட இரு பத்தாண்டுகளைக் கடந்து விட்ட இல்வாழ்வு அவருடையது. மனை மாட்சி பாகம் இரண்டு எழுதும் தகுதியுண்டு அவருக்கு. நான் காதல் திருமணம் செய்யப்போகிறவன் என்றதும் என் இரு கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டு காதல் திருமணத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பம்சங்களைக் கண்கள் ஒளிர ஜெயமோகன் சொல்லச்சொல்ல சிலிர்த்தேன்.
தன் மனைவி கசக்கி எறியும் காகிதத்தைக் கூட சேகரித்து வைத்துக்கொள்ளும் காதலனாகத்தான் இன்றும் ஜெயன் இருக்கிறார். அருண்மொழி அக்காவையும் ஜெயனையும் சேர்த்துப் பார்த்தால் அன்றைக்குத்தான் காதலிக்க ஆரம்பித்தவர்கள் போல இருக்கும். இலக்கியக்கூட்டங்களில் இருவரும் கைகோர்த்து வரும் காட்சியைக் கண்டவர் விண்டிலர் என்பர் என் இலக்கிய நண்பர்கள். திருமணம் காதலின் டெஸ்டினேஷன் அல்ல... டிபார்ச்சர்.
***
ஆயிற்று நண்பர்களே. பல காலம் போராடி இரு தரப்பின் சம்மதமும் பெற்று ஒரு வழியாய் நவம்பர் - 18ல் திருமணம் என முடிவாகி இருக்கிறது. சித்தர்களும், மன்னர்களும் கட்டி வைத்த பெரும் கல் மண்டபமொன்றில் நண்பர்கள் புடை சூழ, கடலலை கால் நனைக்க திருச்செந்தூரில் என் காதற் பெருமாட்டியின் கைத்தலம் பற்றுகிறேன். விரைவில் கல்யாணப் பத்திரிகையோடு வந்து கதவைத் தட்டுகிறேன் தோழர்களே.
***
திருமண விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் பொதுவாக எப்போது? எங்கே? பெண் என்ன செய்கிறாள்? - போன்ற கேள்விகள்தான் புறப்பட்டு வரும். அழைத்த நண்பர்களெல்லாம் ‘கல்யாணச் செலவுக்குப் பணம் எதுவும் தேவையா? என்கிறார்கள். வறுமையின் கூர்முனையில் நிற்கும் ரமேஷ் அண்ணா கூட துரத்துகிறார். நல்ல வாழ்க்கைத்தானடி வாழ்ந்திருக்கிறேன் என்றேன் கேண்டியிடம்...!
***
‘உன்னை இம்ப்ரெஸ் பண்ண ஒரு புக் படிச்சுக்கிட்டு இருக்கேன் ’ என்றொரு குறுந்தகவல் கேண்டியிடமிருந்து... ஆர்வத்தில் என்ன புத்தகமென்று ரிப்ளைனேன்.
‘எருமை வளர்ப்பு - அக்ரி யூனிவர்சிட்டி வெளியீடு’
எனக்காகப் பிரார்த்தியுங்கள் தோழர்களே!

Comments
:)
- என். சொக்கன்,
பெங்களூரு.
Nice label :)
எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்!!!!!
நவம்பர் 18, திருச்செந்தூரிலா...
நேரிலும் வாழ்த்த வருகிறேன்....
என்றும் சந்தோஷமாக வாழ்ந்திடுக
கேண்டிக்கு எனது ஆறுதல்களும்..
கோவை ரெசிடென்சில கூட அப்டி ஒருத்தரை பார்த்தீங்களே செல்வா? ;)
அன்பார்ந்த வாழ்த்துக்கள் செல்வா & கேண்டி
லேபிள்.. குசும்பு :))
:))
வாழ்த்துக்கள் செல்வா..
BTW, ஒரு தேர்ந்த மொழி நடையை வைத்துக் கொண்டு எப்போதாவது எழுதும் உங்களை என் நண்பர்களிடம் எப்படி அறிமுகப் படுத்துவது என்றே தெரியவில்லை :-) சீக்கிரம் ஜெயன் அளவுக்கு இல்லாவிட்டாலும் இருபதில் ஒரு பங்கு அளவுக்காவது எழுதுங்கள் நண்பரே.
ஜெயமோகன் அருண்மொழி போல நிறைவாய் வாழ் அன்பு வாழ்த்துக்கள்
லேபிளை நான் ரசித்தேன். கேண்டி ரசிப்பாரென்று உறுதியில்லை..
:-)
Congratulations!!!
Wish You All Good Luck !!!
நல்வாழ்த்துகள் - நவமபர் 18 - காதல் மணம் கை கூடியது குறித்து மிக்க மகிழ்ச்சி
நட்புடன் சீனா
\\திருமணமாகியும் வாழ்வைப் பழிக்காத ஒருவனையாவது தேடிக் கண்டடைய வேண்டும் என்பது என் சங்கல்பம். \\
நாளைக்கு ஒரு கவிதையாகவே (அப்படின்னு நெனச்சுப் படிக்கணும்)இதற்குப் பதில் சொல்கிறேன்.நீங்கள் தேடும் அந்த ஒருவன் அந்தக் கவிதையில் வருபவன்தானோ?!
எல்லாம் வல்ல கருங்குழைநாதன் .... எருமை வளர்ப்பை அருமை வளர்ப்பாய் மாற்றி அருள் புரிவார்..... :)
வாழ்க பல்லாண்டு...
அன்புடன்
மணியன்
‘எருமை வளர்ப்பு - அக்ரி யூனிவர்சிட்டி வெளியீடு’////////////
engayo kelvi patta mathiri irukke.....
மனமார்ந்த வாழ்த்துகள் செல்வா...
ரொம்ப லொள்ளுன்னு சொல்லி அறிமுகப்படுத்துங்க பாலா ஒண்ணும் பிரச்சனை இல்லை :)
லேபில் சூப்பர்..............! கோவைல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்
Natpudan,
Ovvakkaasu
‘உன்னை இம்ப்ரெஸ் பண்ண ஒரு புக் படிச்சுக்கிட்டு இருக்கேன் ’ என்றொரு குறுந்தகவல் கேண்டியிடமிருந்து... ஆர்வத்தில் என்ன புத்தகமென்று ரிப்ளைனேன்.
‘எருமை வளர்ப்பு - அக்ரி யூனிவர்சிட்டி வெளியீடு’
/
சரியான புத்தகம்தான் என எண்ணுகிறேன்
:)))
thanks
mrknaughty
click here to enjoy the life
வாழ்த்துக்கள் தம்பி.
// திருமணமாகியும் வாழ்வைப் பழிக்காத ஒருவனையாவது தேடிக் கண்டடைய வேண்டும் என்பது என் சங்கல்பம்.
//
அதான் போனவாரம் என்னையப் பாத்தீரே??
:):):)
உங்களுக்காக ப்ராத்தனை மட்டுமல்ல...அதே புத்தகத்தின் இன்னொரு பிரதி கூட அனுப்பி வைக்கிறேன்... ஹி ஹி...ஹி...
மகிழ்ச்சியான குடும்பஸ்தர்கள் பட்டியலில் ஜெமோ-வுக்கு அடுத்து இரண்டாவதாக சேரும் அளவுக்கு இல்லறம் அமையட்டும் உமக்கு.
iniya illaram amaiya
venkat
இதென்ன பேர் கேண்டி என்று?
ஆமா... நாங்க பொண்ணுவீட்டுக் காரங்கப்போய்..! பொண்ணுவீட்டு அழைப்பு எப்பயோ வந்தாச்சு!
முருகன் சந்நிதியில் சந்திப்போம்
மிக்க மகிழ்ச்சி...
நல்வாழ்த்துககள் !
நிச்சயம் நேரில் வந்து வாழ்த்த முயல்கிறேன்...
அன்புடன்,
மறத்தமிழன்.
:)