அருங்கூத்து

நண்பர் ‘மணல் வீடு’ ஹரிகிருஷ்ணன் அழைத்திருந்தார். ‘நாயிவாயிச் சீல’ எனும் சிறுகதைத் தொகுப்பும், ‘அருங்கூத்து’ எனும் நிகழ்த்துக் கலை குறித்த நூலும் அவரது மிகச் சமீபத்திய இரு நூல்கள். வருகிற ஞாயிற்றுக்கிழமை நெருஞ்சி இலக்கிய வட்டம் கோவையில் ஏற்பாடு செய்துள்ள மூன்று புத்தகங்களின் அறிமுக விழாவில் அவரது அருங்கூத்தும் ஒன்று என்கிற தகவலைச் சொன்னார். நிகழ்வில் ‘சாக்பீஸ் சாம்பல்’ எனும் கவிதைத் தொகுதியும், ‘யாழி’ எனும் நாணற்காடனின் நூலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

விழாவில் வெ.மு.பொதியவெற்பன், மீனாட்சி சுந்தரம், மயூரா ரத்தினசாமி, பொன். இளவேனில் மற்றும் இசை இளஞ்சேரல் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இடம்: தாமஸ் ஹால், சாந்தி தியேட்டர் எதிரே, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில்

நாள்: 30-01-2011 - ஞாயிறு

நேரம்: மாலை 4:00 மணி

Comments

Vediyappan M said…
வாழ்த்துக்கள், நிகழ்வு சிறப்பாக அமையட்டும். புத்தக தேவைக்கு தொடர்புகொள்ளவும் http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
ADMIN said…
அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி..! செல்வேந்திரன்..!