இலக்கிய வெறி
எல்லோர்க்குமான
கவிதையொன்றினை எழுதிடும்
முனைப்பு கொண்டேன்.
சொற்கட்டு
ஓசை நயத்தோடு
வார்த்தைச் சிக்கனத்தையும்
வசீகர சப்-டெக்ஸ்டுகளையும்
மனதிற்கொண்டேன்.
அழகியலும் முக்கியமல்லவா
உறுமீன் கொக்கைப் போல
வார்த்தைக்கு தவம் இருந்தேன்
சமூக பிரக்ஞையும் வேண்டும் என்றது மனசாட்சி
‘கொசுக்களின் இருப்பிடம்
நோய்களின் பிறப்பிடம்”
என்பதாக கவிதையை முடித்தேன்.
கவிதையொன்றினை எழுதிடும்
முனைப்பு கொண்டேன்.
சொற்கட்டு
ஓசை நயத்தோடு
வார்த்தைச் சிக்கனத்தையும்
வசீகர சப்-டெக்ஸ்டுகளையும்
மனதிற்கொண்டேன்.
அழகியலும் முக்கியமல்லவா
உறுமீன் கொக்கைப் போல
வார்த்தைக்கு தவம் இருந்தேன்
சமூக பிரக்ஞையும் வேண்டும் என்றது மனசாட்சி
‘கொசுக்களின் இருப்பிடம்
நோய்களின் பிறப்பிடம்”
என்பதாக கவிதையை முடித்தேன்.
Comments
ஓசை நயத்தோடு
வார்த்தைச் சிக்கனத்தையும்
வசீகர சப்-டெக்ஸ்டுகளையும்
மனதிற்கொண்டேன்.
அழகியலும் முக்கியமல்லவா
உறுமீன் கொக்கைப் போல
வார்த்தைக்கு தவம் இருந்தேன்
சமூக பிரக்ஞையும் வேண்டும் என்றது மனசாட்சி//
எழுதும் முன் தோன்றும் எண்ணமும் கவிதையாய்...முடித்தவிதமும் அழகு செல்வா..
கவிதையொன்றினை எழுதிடும்
முனைப்பு கொண்டேன்.//
எல்லோர்க்குமான கவிதையென்று சொல்ல முடியாது.. இது என்னை போன்ற சிறுவர்களானது என்று மட்டும் சொல்வேன் செல்வேன் ;)