மனக்காளான்

கேப்டன் விஜயகாந்த் துபாயில் இருக்கிறார். சம்பவம் நடந்தது இஸ்லாமாபாத்தில் என்கிறார்கள். இதில் ஏதோ குழப்பம் நீடிக்கிறது # ஓஸாமா மரணம்

உசுருக்குச் சமானம்டே கூலிங்க்ளாசு...

ஐபிஎல் ஆட்டங்களில் அகார்கர் அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி தேசிய அணியில் இடம் பிடிப்பது மாதிரி ஒரு துர்சொப்பனம் கண்டேன்.

மன ஊனம் மவுனம்.

மனுஸூம் அவரது நிலையவித்வான்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விருது கொடுத்து விளையாட ஒவ்வொரு ஆண்டும் ஏன் சுஜாதாவை சாகடிக்கிறார்கள்?!

சப்பாத்து என அமு எழுதினால் உறுத்தல் இல்லை. ஜெமோ எழுதினால் எரிச்சல் வருகிறது.

பரிசல்காரனுக்கு அபாரமான கலை மனது. ஆனால் கொடுவாளை வைத்து பென்சில் சீவுவது போல. சதா சிறிய காரணங்களுக்கே அதை பயன்படுத்துகிறார் # கவலை

சில நிறுவனங்களில் முதலாளிகள் முடிவெடுக்கிறார்கள். சில இடத்தில் மேலாளர்கள். பல இடங்களில் ஸ்டெனோகிராஃபர்கள் முடிவெடுக்கிறார்கள் # அயற்சி

அடி உனக்கும்
இங்கு எனக்கும்
தினம் நடக்கும்
பிணக்கும் ஓர் நாடகம்...!
நடத்து நீ நடத்து
உன் நடிப்பும் ஓர் நூதனம்...!

நான் டை கட்டினால் மட்டும் மொத்த ஆபிஸூம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது # என்னா ஒரு வில்லத்தனம்!

பகலெல்லாம் வெயிலை உள்வாங்கி அதை இரவில் கசிய விடுவதுதான் சேலத்தின் சிறப்பம்சம்.

பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் ஒரு தின்னெலிக்காரன் சக தின்னெலிக்காரனுக்கு உதவுவதைப் போல மலையாளிகள் கூட உதவ மாட்டார்கள். தாமிரபரணித் தண்ணீ வாக்கு அப்படில்லா...!

என்னதான் ரெப்யூடட் இன்ஸ்ட்யூட்டில் எம்பிஏ படித்து நாணயம் விகடனில் முதலீட்டு யோசனைகளை எழுதுகிற பெண் என்றாலும் மரபார்ந்த சேமிப்பு முறைகளில்தாம் நம்பிக்கை வைத்திருக்கிறாள். மனைவிக்குத் தெரியாமல் சமையல்கட்டில் முந்திரிபருப்பு டப்பாவைத் துளாவிக்கொண்டிருந்தேன். அகஸ்மாஸ்தாய் கையில் மாட்டிய கொள்ளு டப்பாவிற்குள் 3 நூறு ரூபாய் தாள்கள்! என்னடி இது என்றால் பழைய பேப்பர் விற்று வந்த பணமாம்.

வலைப்பதிவு வைத்திருப்போர் அனைவருக்கும் ஒரு சாகித்ய அகாதமி விருது இலவசம்னு அறிவிக்க என்ன கேடாம்...?!

சாலையில் தோற்றல் நலம்!

ஊரெங்கும் பூ வாசம்! ‘பவளவாய் கமலச் செங்கண்’ ஸ்ரேயா கோவையில் எழுந்தருளியுள்ளார்.

அந்தரங்க ரகசியமாக விட்ட ஜொள்ளை சகதோழியரிடம் சொல்லி எக்கச்சக்கமாக மாட்டி விடும் வழக்கத்தை மாதர் கைவிடல் நன்று # கோரிக்கை

நண்பரொருவர் ‘இளைஞன்’ பார்த்தமைக்கான அத்தாட்சியைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். பிற்காலத்தில் ஒரு எம்.எல்.சியாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கை...!

ரஷ்ய கலைக்குழுவின் பாடல்களை நேற்று ரசிக்கத் தலைப்பட்டேன். குழுவின் பிரதான பாடகியான தக்காளி நிறச் சிவப்பழகியோடு உடைந்த ஆங்கிலத்தில் உரையாடினேன். வாலண்டினா தெரஸ்கோவா பிறந்த கிராமத்திலிருந்து உங்களுக்கான குளிர்ந்த புன்னகையைக் கொண்டு வந்திருக்கிறேனென்று ஆரம்பித்தார். இரவு முழுவதும் மனதில் ஊறிக்கொண்டே இருந்தது ‘குளிர்ந்த புன்னகை’ எனும் பதம்.

‘அத்தான், இந்தத் தட்டின் அகலத்திற்கும் தட்டைமுறுக்கின் சுவைக்கும் நிகரானது என் காதல்’ - கேண்டி

‘எப்போ கூப்பிட்டாலும் ‘மீட்டிங்ல இருக்கேன்’னு கட் பண்றீயே... நீ வேலைக்குப் போறீயா... இல்லை மீட்டிங்குக்குப் போறீயா...?!’ - கேண்டி

அருகிலிருக்கையில்
அப்படியொன்றுமில்லை
நினைவுகளில்தான்
நிகழ்த்துகிறாய்
அலைக்கழிப்பை

எல்லோராலும் நல்ல கதை ஒன்றிட எழுதிட முடியுமென்றார் ஒரு எழுத்தாளர். இன்னொருவர் எல்லோரிடத்திலும் கதைகள் இருக்கின்றன. சிலர் எழுத விரும்புகிறார்கள்; பலர் விரும்புவதில்லை அவ்வளவுதான் வித்தியாசம் என்கிறார். மற்றொருவர் எழுத்தின் சவால்களை எழுத்திலே எதிர்கொள்ளுங்கள்; முதலில் எழுதுங்கள் என்கிறார். இவற்றின் மறைபொருள் ‘ங்ஙொய்யால... எழுதிப்பாருங்கடா...அப்பத்தான்டா புரியும்... உங்களுக்கு எழுதத் தெரியாதுங்கறது...’ என்பதாக நான் எடுத்துக்கொண்டேன்

Comments

taaru said…
//உசுருக்குச் சமானம்டே கூலிங்க்ளாசு...//
சரி தான்.. அதுக்கு ஏன் அப்டி கழுத்த வச்சுக்கிட்டு இருக்கீரு?

//அகார்கர் அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி//
Ishant எல்லாம் எடுக்கும் போது இந்த தங்கத்துக்கு என்ன?

// தண்ணீ வாக்கு//
இது தான் தண்ணீவாகு என்று மருவீருச்சோ? ஏன்ண்ணே?
வீணையை மீட்டுவது போல மொழியை ட்வீட்டுகிறீர்கள் செல்வேந்திரன்.

எல்லாமே இளமையின் குதூகலம் கொப்பளிக்கும் நறுக்குத் தெறிக்கும் புன்னகைக்க வைக்கும் வரிகள்.

சில எழுத்துக்களைப் படிக்கும் போது முன்னமே படிக்கத் தவறவிட்டுவிட்டோமே என்று தோன்றும்.

உங்களுடையதும் அப்படித்தான்.
//சாலையில் தோற்றல் நலம்!//

நச்’ன்னு பிடித்த வரி !


//மன ஊனம் மவுனம்.//


மனக்காளான் - படிக்கவும் நினைக்கவும் நல்லா இருக்கு! :)
என்னதான் ரெப்யூடட் இன்ஸ்ட்யூட்டில் எம்பிஏ படித்து நாணயம் விகடனில் முதலீட்டு யோசனைகளை எழுதுகிற பெண் என்றாலும்

//

இங்லீஷ் தெரியுமா?

:))))
Ashok D said…
பரவாயில்லை... நொறுக்கஸ்s நல்லாவே இருந்தது :)
Ashok D said…
புதுசா வசந்த & கோல பிரிட்ஜ்ஜோ, வாசிங்மிஷினோ ஏஸியோ வாங்கியிருக்கீங்க சரியா... (in New year?)
விஜி said…
போட்டாக்ராபருக்கு நன்றி சொல்ல மறந்துடுவியே :)))
Kumky said…
ஒரு நெடுநாள் பழைய காதலியுடன் சமகால நிகழ்வுகளை பரஸ்பரம் பேசிக்கொண்டது(இந்த பகிர்தல்னா ஒட்ட மாட்டேங்குது) போலிருக்கிறது செல்வா...

உசுருக்குச் சமானம்டே கூலிங்க்ளாசு...

இங்கிட்டு மறைஞ்சிருக்கு ஏழுகடல் ஏழு மலை கடந்த கிளியின் உசிரு...ரைட்டு.
Kumky said…
உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது, வலைப்பதிவு உரிமையாளரின் ஒப்புதலுக்கு பின்னர் காண்பிக்கப்படும்..

காண்பிக்கலைன்னாலும் பரவாயில்ல...ஆனா எச்சரிக்கைகளை எப்போதும் விரும்புவதில்லை என்னை போன்றோர்களின் மனம்...
உங்கள் நகைச்சுவை உணர்வு அபாரம்!

உங்கள் கண்ணாடியும்...!
Anonymous said…
//மனுஸூம் அவரது நிலையவித்வான்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விருது கொடுத்து விளையாட ஒவ்வொரு ஆண்டும் ஏன் சுஜாதாவை சாகடிக்கிறார்கள்?!//‘ங்ஙொய்யால... சரியாச் சொன்னீங்க ...நூத்துல ஒரு வார்த்தைனாலும் சூ..... அடிச்சா மாதிரி சொன்னீங்க ....
அகர்கர் பத்து விக்கெட் எடுக்கற மாதிரியில்ல நான் கனவு கண்டேன்
ஸ்வீட், காரம், காபி சாப்பிட்ட உணர்வு கிடைச்சுது உங்களோட இந்தப் பதிவைப் படிச்சப்போ!
Anonymous said…
https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some modifications in adding a label feed in google reader ....see it.d.
//அருகிலிருக்கையில்
அப்படியொன்றுமில்லை
நினைவுகளில்தான்
நிகழ்த்துகிறாய்
அலைக்கழிப்பை//

த பெஸ்ட்!
Thamira said…
மனுஸூம் அவரது நிலையவித்வான்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விருது கொடுத்து விளையாட ஒவ்வொரு ஆண்டும் ஏன் சுஜாதாவை சாகடிக்கிறார்கள்?!//

அட ஆமால்ல.. (என்னயும் அவங்க கன்சிடர் பண்ணின மாதிரியே தெரியலை..ஹிஹி)

பரிசல்காரனுக்கு அபாரமான கலை மனது. ஆனால் கொடுவாளை வைத்து பென்சில் சீவுவது போல. சதா சிறிய காரணங்களுக்கே அதை பயன்படுத்துகிறார் # கவலை//

ஆமா தல, சொல்றதயே கேக்கமாட்றான் அவன்.


சில நிறுவனங்களில் முதலாளிகள் முடிவெடுக்கிறார்கள். சில இடத்தில் மேலாளர்கள். பல இடங்களில் ஸ்டெனோகிராஃபர்கள் முடிவெடுக்கிறார்கள் # அயற்சி//

முடியலல்ல.. அவ்வ்வ்..

அந்தரங்க ரகசியமாக விட்ட ஜொள்ளை சகதோழியரிடம் சொல்லி எக்கச்சக்கமாக மாட்டி விடும் வழக்கத்தை மாதர் கைவிடல் நன்று # கோரிக்கை//

அதென்ன சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு. :-))

‘எப்போ கூப்பிட்டாலும் ‘மீட்டிங்ல இருக்கேன்’னு கட் பண்றீயே... நீ வேலைக்குப் போறீயா... இல்லை மீட்டிங்குக்குப் போறீயா...?!’ - கேண்டி//

நானும் போனம்யா நாலு வருசமா மீட்டிங்குக்கு.. சே.!

இவற்றின் மறைபொருள் ‘ங்ஙொய்யால... எழுதிப்பாருங்கடா...அப்பத்தான்டா புரியும்... உங்களுக்கு எழுதத் தெரியாதுங்கறது...’ என்பதாக நான் எடுத்துக்கொண்டேன்//

ஊஹூம்.. அப்படியெல்லாம் எடுக்கப்பிடாது. அப்புறம் நம்ப பிளான்லாம் என்ன ஆவுறது?