மனக்காளான்

சென்டிமெண்டல் இடியட் என்பதன் சரியான மொழிபெயர்ப்பு ‘சுரணையுள்ளவன்’

எதையும் இன்றே செய்தாக வேண்டுமெனும் அவசியம் இல்லை; நாளை என்றொரு நாள் இருக்கையில். # de motivation corner

நவீன கவிதைகள் வாசிக்கையில் குமட்டல் ஏற்படுவது என் தனிப்பட்ட பிரச்சனையா அல்லது உங்களுக்கும் இப்படித்தானா?!

மாமல்லன் - ருத்ரன் - இத்தனை பொருத்தமாக பெயர் அமைவது அபூர்வம். நான்-ஸ்டாப் அடிதடி!

ஊஞ்சல் ஆடி உடம்பை குறைக்க இயலாது.

விழிதிகழ் அழகிகள் என்னை ட்வீட்டரிலும், முகநூலிலும் ஃபாலோ செய்தால் போதும். நேரில் வேண்டாமே. ப்ளீஸ்! # கோரிக்கை

நதியின் நினைவில் ரதியின் குளியல்!

வாழ்வு ஒரு மல்யுத்த மேடை. ஒரு ‘பஞ்ச்’ வாங்கி விழுந்து விட்டால், 10 எண்ணுவதற்குள் எழுந்தாக வேண்டும். நான் எழுவேன்.

தன்னையே பேசுதல் தற்கொலைக்குச் சமம்!

அப்பனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்!

நித்தியானந்தாவை அவரது குதிரை கீழே தள்ளிவிட்டதாம். எவ்ளோ ‘பெரிய குதிரைகளையெல்லாம்’ ஹேண்டில் பண்ணினவர் அவர்?! :)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; நின்னை நன்றாக நினைந்துருகுமாறு # காதல் பித்து

இந்தக்காலத்துல இப்படியொரு புள்ளையா என எனைப் பார்க்கும்போதெல்லாம் வியத்தலை தாய்மார்கள் கைவிடல் வேண்டும் # கோரிக்கை

இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்; அவரும் என்னுடைய பிறந்த நாளுக்கு மறக்காமல் வாழ்த்துவார் என நம்புகிறேன்.

‘ஸீ த்ரூ’ ஹெல்மெட் கிடைத்தால் கொஞ்சம் பெட்டர். உள்ளிருப்பவன் அழகன் என்று பாவையருக்கு தெரியவேண்டுமே # ஆதங்கம்

ஒரு விக்; காதோரம் கனத்த கிருதா; கருத்த முறுக்கு மீசை முடிந்தால் ஒரு மச்சம் என தன் கெட்டப்பை தங்கபாலு மாற்றினால் மட்டுமே அரசியல் எதிர்காலம்.

பிட்னெஸ் ஒன்னில் என்னுடன் ஏராளமான பெண்களும் உடற்பயிற்சி செய்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் என்னுடைய வாசகியர் என்று குழப்பமாக இருக்கிறது.

ஆர்மோனியம், தபேலா இல்லாமல் நாடகம் பார்க்க என்னவோ போல் இருக்கிறது # தியேட்டர் ஃபெஸ்டிவல்

இனி முகநூலில் உருப்படியான விஷயங்களை மட்டுமே எழுதச் சொல்லி ஒரு தோழி கேட்டுக்கொண்டாள். உருப்படி 1) அங்காடித் தெரு அஞ்சலி கோவையில் எழுந்தருளியுள்ளார்; உருப்படி 2) எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ரிங்டோன் ‘நான் போகிறேன் மேலே மேலே...’

’டேட்டா பேஸ்’ என்பது ஒரு சாவிதான். அதை ஜேப்பிலேயே வைத்துக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. பூட்டைத் திறந்தால்தான் புதையல் கிடைக்கும்.

தமிழக பள்ளிகளில் சொல்லித்தரப்படும் பெரும்பாலான உடற்பயிற்சிகள் ‘அந்தி வரும் நேரம்...’ பாடலில் இருந்து எடுக்கப்பட்டவை.

எல்லா டிக்ஸ்னரியிலும் தேடிப்பார்த்துவிட்டேன். ஜோவியல் என்பதற்கு பல்லிளித்தல் எனும் பொருளில்லையாம்.

எதையாவது ஒன்றைப் பற்றி ஓயாமல் கரைந்து கொண்டே இருப்பதை கவுன்சிலிங் என வரையறுக்கலாம்.

குழுவாக கூடி அடிக்கடி வெட்டித்தனமாகப் பேசிக்கொண்டிருப்பதை விட, சும்மாயிருத்தல் சாலச் சிறந்தது. கலெக்டிவ் உளறல்களை விட தனிநபர் உளறல்கள் கொஞ்சம் பரவாயில்லை ரகம்!

‘incentive' என்பது சாராயம் வாங்கிக்கொடுத்து சாக்கடையை சுத்தம் செய்யச் சொல்வது போலத்தான். # டீமோகார் ( டீ மோட்டிவேஷன் கார்னர்)

தகுதியானவன் அங்கீகாரம் மறுக்கப்படும் இடங்களை விட்டு மெளனமாக நகர்ந்து விடுகிறான்.

ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன். எனது கம்பார்ட்மெண்டில் கணிசமான பெண்கள். பக்கவாட்டு பர்த்தில் படுத்திருந்தவர் உற்சாகமாக விசிலில் பாடல்களை உருவாக்க முனைந்துகொண்டிருந்தார். உறங்கும் நேரம் நெருங்கியும் சேட்டை குறைகிற மாதிரி தெரியவில்லை. திடீரென நான் சத்தமாக “கிருஷ்ணா வந்தாச்சி...” என்றேன். கொல்லென சிரித்தது ரயில். அதன்பிறகு அவர் விசிலடிக்கவில்லை.

கோவை செல்ல செண்ட்ரல் வந்தோம். பத்தாவது பிளாட்பாரத்தில் சேரன் நின்று கொண்டிருந்தது. ஒன்பதாவது பிளாட்பாரத்தில் நிஜாமூதின் நகர்ந்துகொண்டிருந்தது. உடன்வந்த மருமகன் “மாமா... அந்த டிரெயின்தான் முதல்ல போகுது... வா ஓடிப்போய் ஏறிக்கலாம்...”

888 மார்க்குகள் வாங்கி அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங் ஹால் வாசலில் தேவுடு காத்துக்கொண்டிருக்கும்போது மருமகன் சொன்னான் “இந்தக் காலேஜ் கூட பரவால்ல மாதிரிதான் இருக்கு...வேணும்னா இங்கயே கூட படிச்சிக்கிறேன். ஒண்ணும் பிரச்சனையில்ல”

போன வாரத்தில் ஒருநாள் விசய் அவர்களின் தந்தையார் எஸ்.ஏ.சந்திரசேகர் கோவை வந்திருந்தார். ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். “எங்கள் அப்பாவே...!”

வடபழனியில் கண்டேன் “சிம்ரன்’ஸ் ஆப்பம் கடை!” சிம்ரன் ஆப்பக்கடை என்றால் கூட பரவாயில்லை. “ ‘ஸ் “ அப்பாவியான எனக்கே வேறு மாதிரியான அர்த்தங்களைக் கொடுக்கிறது.

மலைச்சரிவில் முன்னால் பயணிக்கும் காரிலிருந்து வீசப்படுகிறது ஒரு காலி பாட்டில். பைக்கை நிறுத்தி அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு தன் பயணத்தை தொடர்கிறான் ஓர் இளைஞன். எனக்கு அவனைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு இதற்கு மேல் எதுவும் தேவையில்லை.

”விஜய் டிவி புரொமோல டைரக்டர் விஜய் பேசிக்கிட்டு இருந்தாரு... தெய்வத்திருமகளுக்காக 3 வருஷம் உழைச்சேங்கிறாரு... ஏன்யா ஒரு டிவிடிய மனுஷன் 3 வருஷமாய்யா பார்ப்பான்...?!” - ரமேஷ் வைத்யா போனில்...

ஜல்லிப்பட்டி பழனிச்சாமி எனும் மகத்தான படைப்பாளி இலக்கிய உலகில் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் மர்மம் என்னவோ?!

மனம் உபன்யாசங்களிலும், ஆன்மிக சொற்பொழிவுகளிலும் நாட்டம் கொள்கிறது. உள்ளூர் தடித்தாண்டவராயன்கள் சிடிக்கள் கொடுத்து உதவவும் (நண்பர்கள்னு சொன்னா மட்டும் கொடுத்துடறாய்ங்களா...)

என்னோடு உரையாடிய பெண்கள் சாட்டினை வெளியிட்டால்தான் நான் எத்தனை கிரியேட்டிவானவன் என்பது தெரியவரும் # கோரிக்கை

பித்தேறிய சொற்கள்; களிம்பேறிய நினைவுகள்; பிரியத்தின் நிழற்தடம்; கட்டற்ற கனவுகள்; சொற்களின் மற்போர் என சில வார்த்தைகள் சிக்கி இருக்கின்றன. கவிதை தேறும் அபாயம் இருக்கிறது. மகனே செத்தீங்கடா...!

நான் எதையேனும் நேரம் ஒதுக்கி வாசித்து விட்டால், அதற்கு ஓர் இலக்கிய அந்தஸ்து வந்து ஒட்டிக்கொள்வதை அவதானிக்கிறேன்.

ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு எழுதிய 923 கோவை மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை. பெற்றோர்களிடம் ஐஐடி ஆசை காட்டி, உங்கள் பிள்ளைகளை அதற்கென தயார் செய்கிறோம் என பணம் பிடுங்கும் பயிற்சியகங்கள் கோவையில் ஏராளமாய் இருக்கின்றன. மூன்றாம் வகுப்பு பிள்ளைகளைக் கூட குறிவைத்து தாக்கும் கும்பல் அது. விதம் விதமாய் தேர்வுகள் நடத்துவார்கள். ஆயிரக்கணக்கில் பணம் கேட்பார்கள். ஒருவகையில் இந்த தோல்வி வரவேற்கத்தக்கது.

‘As god loves you, please give me 50 paisa...!' என தெளிவான ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி பிச்சையெடுக்கும் ஒருவரை இன்று கோவை ரயில் நிலையத்தில் கண்டேன். பார்வைக்கு கடும் பைத்தியம் போல இருந்தார். அழுக்கேறிய, இடுப்பிற்குக்கீழ் எதையும் மறைக்கவேண்டிய அவசியமில்லாத ஆடைகள். கக்கத்தில் பொறுக்கிச் சேர்த்த குப்பைகள் அடங்கிய சிறிய சிமெண்டு சாக்கு பை. கண்களில் குறுகுறுப்பான ஒளி; எனக்கு இயல்பிலேயே ஆங்கிலத்தோடு தகராறு என்பதால் அவர் பேசியதில் அடிக்கடி காதில் விழுந்தது ‘As god loves you, please give me 50 paisa...!' வாசகம் மட்டுமே. ‘உங்களையெல்லாம் நேசிக்கும் கடவுள் என்னை நேசிக்கத் தவறிவிட்டார். எனக்கு 50 பைசா கொடுக்க உங்களுக்கு என்ன கேடாம்..?!’ என்பதுதான் சப்-டெக்ஸ்ட் என நினைத்துக்கொண்டேன்.

கொஞ்சம் பிரயத்தனப்பட்டால், இவரது லைஃப் ஸ்டைலை மாற்றிவிடலாம். நான்கு பேர் பார்க்கிற மாதிரி இவரது காலில் விழுந்து வணங்கி, சட்டைப்பைக்குள் சில நூறு ரூபாய் தாள்களைத் திணித்து விட்டால் போதும். அதன்பிறகு இங்கிலீஷ் சாமியாரை வழிபடும் முறை, சிறப்பு கட்டணச் சேவை, அண்ணாரின் அருள்வாக்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் தேடி வந்து காலில் விழுதல், மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என பிஸியாகி விடுவார். பொறாமையில் ஒன்றும் செய்யாமல் நகர்ந்து விட்டேன்.

வறுத்த நிலக்கடலைப் பருப்புகளோடு, ஒரு துண்டு புதுக்கருப்பட்டியையும் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு... ஒரு சொம்பு தண்ணீரை குடித்து விட்டுப் படுக்கப்போகிறேன்.

கருத்து கணிப்பு நடத்தலாம் என எடிட்டோரியல் தலைமை முடிவு செய்தவுடன், ஏரியா நிருபர்களுக்கு தகவல் பறக்கும். கேட்க வேண்டிய கேள்விகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைப்பார்கள். ஏரியா ரிப்போர்ட்டர்கள் என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஏரியாவுக்கும் போய் செய்தி சேகரிக்கும் வழக்கம் எப்போதோ காலாவதியாகி விட்டது. உள்ளூர் தினசரிகள், செல்போன் மூலம் அல்லது புகைப்படக்காரரை அனுப்பி என அவர்களை வந்தடையும் செய்திகள் மூலமே ரீ-ரைட் பிழைப்பை நடத்துபவர்கள் அவர்கள். எனவே,கருத்துக்கணிப்பு படிவத்தை பார்த்ததும் அவர்களுக்கு குமட்டிக்கொண்டு வரும். செல்போனை நோண்டி தங்களுக்கு தெரிந்த ஒரு 10 பேருக்கு போனைப் போடுவார்கள். அந்த 10 பேரில் பாதி பேர் வாய்ச்சவாடல் வெங்கப்பயல்களாக இருப்பார்கள். ஓட்டு போடும் வழக்கம் இருக்காது. அவர்களது வெர்ஷனை வாங்கி படிவங்களை நிரப்பி அனுப்பி விடுவார்கள். கடைசியில் சிறுபிள்ளை வெள்ளாமை கதைதான். உண்மையான தகவல் வீடு வந்து சேராது.

இதைப் படிப்பவர்களே உங்கள் ஆயுளில் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு கருத்துக்கணிப்பை எதிர்கொண்டிருக்கிறீர்களா?! முகநூலில் இருக்கும் என் ஆயிரத்துச் சொச்ச நண்பர்களில் எவரும் எந்த கருத்துக்கணிப்பிலும் பேசி இருக்கமாட்டார்கள் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. உண்மையான வாக்காளர்கள் ஏரியா ரிப்போர்ட்டர்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் அளவிற்குச் செழிப்பானவர்கள் இல்லை. அதனால், அவர்களது அபிப்ராயம் வெளிவர வாய்ப்பில்லை. பத்திரிகைகள் தங்களது நிருபர்களை விட அலுவலக பியூன்களை அதிகம் நம்பலாம்.

முன்பெல்லாம் விம எனக்கு அவ்வப்போது போன் செய்து பேசுவார். இப்போது சுத்தமாக அவர் அழைப்பதில்லை. நான் இலக்கியத்திற்கு உள்ளே இருக்கிறேனா அல்லது வெளியே இருக்கிறேனா என்று அச்சமாக உள்ளது.

முதன்முதலாக ஏரோஃபிக்ஸ் வகுப்பில் கலந்துகொண்டேன். டிரெய்னர் உள்பட அத்தனை பேரும் இளம்பெண்கள். ‘கூச்சம் தவிர்’ என்று எண்ணித் துணிந்தேன். அகண்ட கண்ணாடியில் அஜீத்குமார் மாதிரியே யாரோ ஆடுகிறார்களே என்று ஊற்றுக் கவனித்தால், அடக்கடவுளே... அது நான்தான். நெற்றியில் கைக்குட்டையை கட்டி திருப்பிப்போட்டு குத்தும் ஆட்டங்களை விட எளிதான அசைவுகள்தான் எனினும், ஆடச்சிரமமாய் இருக்கிறது. பத்து நிமிடங்களில் குடல் வாய்க்கு வரும் அளவிற்கு மூச்சிரைக்கிறது. தொப்பையைக் குறைப்பதற்குள் நான் ஒருவழியாகி விடுவேன் போலிருக்கிறது.

முகமது கைஃப் மாதிரி உடம்பை இளைத்து, என் அதகள காமெடி அசைவுகளுக்கு நமுட்டுச் சிரிப்பை வெளிப்படுத்தும் சேட்டு ஃபிகர்களின் தூக்கத்தை கெடுப்பதே என் உடனடி லட்சியம். விஜிமேல் ஆணை

உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியவர்கள் என்று முகநூல் அழகழகான பெண்களை அறிமுகப்படுத்துகிறது. முகநூலின் இந்த துர்பிரச்சாரம் என்னை பதட்டப்பட வைக்கிறது. கேண்டிக்கு தெரிந்தால், நப்பி விடுவாள்.

பல்லிடுக்கு மாமிசமாய்
நினைவிடுக்கில் உறுத்துகிறாய்
சொல்லடுக்கின் சுடர் ஒளியே - நின்
கண்ணசைவில் கவி பிறக்கும்

ஊண் காட்டிச் சிரிக்கின்றாய்
உன்மத்தம் கொள்கின்றேன்
ஊரறிய முகநூலில்
உன் புகழை தெளிக்கின்றேன்

என்னுடைய அனுமதி இல்லாமல் புகைப்படங்களை முகநூலில் இருந்து தரவிறக்கம் செய்து பலரும் தங்களது கணிணியில் ஸ்கிரீன் சேவராகப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிகிறேன். இது குற்றம். படம் தேவைப்படுவோர் “உசுருக்குச் சமானம்டே கூலிங்கிளாசு” என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு தங்களது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து visalatchi.ram@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் செய்தால், என் முதன்மை வாசகியும், அணுக்கத் தொண்டருமான விஜி எனது லேட்டஸ்ட் படங்களை உங்களுக்கு அனுப்பிவைப்பார்.

Comments

க ரா said…
அப்பாவியின் அலப்பரைகள் :)))
CS. Mohan Kumar said…
சென்னை சார்ந்த ஒரு ட்விட்டு செமையாக சிரிக்க வைத்தது. அது? சரி வேணாம் விடுங்க

பல அருமை. ஒரே குறை நீங்க அடிக்கடி இங்கு எழுதாதது தான். (டுவிட்டர், பஸ் போன்றவை பல அலுவலகங்களில் banned)
மழை பெய்யும் நேரத்தில் காளான் சில்லி சாப்பிடும் அனுபவம்..!! :)
Prabu Krishna said…
ஹா ஹா ஹா சில ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் படித்தவை என்ற போதும் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன.

எங்களுக்கும் கொஞ்சம் இந்த வித்தைகளை சொல்லித் தாருங்கள்.
Chitra said…
வறுத்த நிலக்கடலைப் பருப்புகளோடு, ஒரு துண்டு புதுக்கருப்பட்டியையும் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு... ஒரு சொம்பு தண்ணீரை குடித்து விட்டுப் படுக்கப்போகிறேன்.

...... மண்ணின் மணம் கமழுகிறது .....
Chitra said…
எத்தனை விஷயங்களை - சரளமாக வெகு சில வரிகளிலேயே சொல்லி விடுகிறீர்கள். அடிக்கடி எழுதுங்கள்!
வணக்கம் சகோதரம்,

முதன் முதலாக உங்கள் வலைப் பூவினுள் இன்றைய தினம் நண்பன் பலேபிரபு தந்த லிங்கின் உதவியுடன் வந்திருக்கிறேன்,
இருங்க படிச்சிட்டு வாரேன்.
விழிதிகழ் அழகிகள் என்னை ட்வீட்டரிலும், முகநூலிலும் ஃபாலோ செய்தால் போதும். நேரில் வேண்டாமே. ப்ளீஸ்! # கோரிக்கை //

நச்சென்று ஒரு வசனம்

சுய பாதுகாப்பில் எப்பவுமே ஜாக்கிரதையாக இருப்பீங்க போல இருக்கே.
வித்தியாசமான முறையில் உங்களின் மன உணர்வுகளைத் தொகுத்திருக்கிறீங்க.

ஆரம்பத்தில் சிறிய கருத்துக்களையும், பின்னர் கவிதை மணக்கும் மனக் உணர்வுகளையும், இறுதியில் சமூக அக்கறையுள்ள உணர்வுகளோடு கூடிய கருத்துக்களைப் பெரிதாகவும் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன் பாஸ்.
KParthasarathi said…
படிக்க சுவையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.
அருமை.
ஒரே தடவையில் மொத்தமாக எழுதி விட்டீர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக தவணை முறையில் எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்.
butterfly Surya said…
” சல்லிப்பய”
தெய்வமே.. கலக்கிப்புட்டீங்க...
KSGOA said…
”மனக்காளன்” தலைப்பே நல்லாயிருக்கு.
தொகுப்பு அருமை.இங்கேயும் நிறைய
எழுதுங்க.
Anonymous said…
//தன்னையே பேசுதல் தற்கொலைக்குச் சமம்! //

சலிக்காமல் சிலதுங்க பேசும் போது நம்மையும் தற்கொலைக்கு தூண்டுவது புரியும்.. நிறைய அனுபவிச்சிருக்கேன்..

//இந்தக்காலத்துல இப்படியொரு புள்ளையா என எனைப் பார்க்கும்போதெல்லாம் வியத்தலை தாய்மார்கள் கைவிடல் வேண்டும் # கோரிக்கை //

நல்ல வேளை கோரிக்கைன்னு சொல்லிட்டீங்க..

//விழிதிகழ் அழகிகள் என்னை ட்வீட்டரிலும், முகநூலிலும் ஃபாலோ செய்தால் போதும். நேரில் வேண்டாமே. ப்ளீஸ்! # கோரிக்கை //

அடடா என்னே ஒரு பெருந்தன்மை..

//எதையும் இன்றே செய்தாக வேண்டுமெனும் அவசியம் இல்லை; நாளை என்றொரு நாள் இருக்கையில். # de motivation corner //

எதார்த்தம்..

//‘ஸீ த்ரூ’ ஹெல்மெட் கிடைத்தால் கொஞ்சம் பெட்டர். உள்ளிருப்பவன் அழகன் என்று பாவையருக்கு தெரியவேண்டுமே # ஆதங்கம் //

ம்ம்ம்ம் நெனப்பு தான் .......

ம்ம்ம்ம்ம்ம் நீண்ட பதிவாய் இருந்தாலும் அலுக்கவில்லை செல்வா.. nice snacks with superb coffee...
//வறுத்த நிலக்கடலைப் பருப்புகளோடு, ஒரு துண்டு புதுக்கருப்பட்டியையும் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு... ஒரு சொம்பு தண்ணீரை குடித்து விட்டுப் படுக்கப்போகிறேன்.\\
ஏன் சகோ அண்ணி சமைக்கலையா ?
நல்ல பதிவு, ரசித்தேன்
:)

ரமேஷ் வைத்யா போனில் கேட்டதுதான் மாஸ்டர் பீஸு!

காளான் நிறைய வளர்ந்திருச்சு! இருந்தாலும் ரசனை!

செல்வா!
சென்னை வந்தது தெரியாமலேயே போய்விட்டதே..! அடுத்தமுறை கட்டாயம் சொல்லிவிட்டு வரவும்..

சந்திக்க ஆவல்!
:)
ரசித்துப் படித்தேன். ஒருவர் சொன்னது போல மழைநேர காளான் சில்லி சாப்பிட்ட நிறைவு
ரமேஷ் வைத்யா உங்களிடமும் அதைக் கேட்டாரா...!!! :-))
uorodi said…
well said about Jallipatty Palanichamy...Really he is good creative writter
uorodi said…
well said about Jallipatty Palanisamy
''அகண்ட கண்ணாடியில் அஜீத்குமார் மாதிரியே யாரோ ஆடுகிறார்களே என்று ஊற்றுக் கவனித்தால், அடக்கடவுளே... அது நான்தான்.''
ஏ குட்டி முன்னால நி பின்னாலதான் துள்ளாதே... ஏதோ என் மனசுதான் படபடக்குது தினுசுதான் - அப்பவே ஆடியிருக்கிறாரப்பா அஜீத்... ஆர்.சி. ஸ்கூல்ல....
அகண்ட கண்ணாடியில் அஜீத்குமார் மாதிரியே யாரோ ஆடுகிறார்களே என்று ஊற்றுக் கவனித்தால், அடக்கடவுளே... அது நான்தான். ............
ஏ குட்டி முன்னால நி பின்னாலதான் துள்ளாதே... ஏதோ என் மனசுதான் படபடக்குது தினுசுதான் - அப்பவே ஆடியிருக்கிறாரப்பா அஜீத்... ஆர்.சி. ஸ்கூல்ல....
விஜி said…
டேஏஏஏஏஏஏஏஎய்ய்ய். அடங்கமாட்டியா நீ? இப்பத்தான் பார்த்தேன். ஒரு டைம் கூலிங்க்ளாஸ் போட்டு கண்ணு அவிஞ்சது பத்தாதா?


ரைட்டு விடு உனக்காக இது கூட செய்யலைன்னா எப்படி? அனுப்பறேன். ஆனா உன் ரசிகைகளை கொஞ்சம் அடக்கிவாசிக்க சொல்லு. அலும்பு தாங்கலை :)))))))))
விஜி said…
என்னோடு உரையாடிய பெண்கள் சாட்டினை வெளியிட்டால்தான் நான் எத்தனை கிரியேட்டிவானவன் என்பது தெரியவரும் # கோரிக்கை

மோனே செல்வா.. ஓவர் கான்பிடண்ட் உடம்புக்கு ஆவாது
விஜி said…
அகண்ட கண்ணாடியில் அஜீத்குமார் மாதிரியே /// இது இப்படி இருக்கனும்


கண்ணாடியில் அகண்ட அஜீத்குமார் மாதிரியே :)))
விஜி said…
விஜிமேல் ஆணை// டேய் ஏன்? என்னை நம்பி ஒரு ஹஸ்பெண்டும் ரெண்டு புள்ளங்களும் இருக்காங்க. உன் கேர்ஸ் ஃப்ரெண்ட்ஸ் விசயத்து சத்தியதுக்கெல்லாம் என்ன இழுக்காதே :))))
jalli said…
mudiyala............


by...pallelakka..balu..
shri Prajna said…
நல்லா சிரிக்க ரசிக்க வைத்தது உங்க ட்வீட்டுரைகள்..அப்புறம் கவிதை பற்றிய உரைகள் எழுதியும் post செய்யவிடாமல் தவிர்த்து விட செய்தது.கவிதை பற்றிய யோசனையே யோசிச்சுதான் வருது..ம்ம் நல்லாருங்க..விஜி அவங்க comments ரசிக்க வைத்தது..over confidence உடம்புக்காகதுங்ண்ணா...