சிங்கப்பூர் வருகிறேன்
நான்கு நாட்கள் பயணமாக அலுவலக நண்பர்களோடு சிங்கப்பூர் வருகிறேன். வரும் 23ம்தேதி இரவு சென்னையில் புறப்பாடு. 24 முதல் 27-ஆம்தேதி வரை கிச்சனர் சாலையிலுள்ள ‘ஹோட்டல் பார்க் ராயல்’ விடுதியில் ஜாகை. அனேகமாக தினமும் காலை வேளையில் சிறிய கலந்துரையாடல் அதன் பிற்பாடு ஊர்சுற்றிப் பார்த்தல் என்பதுதான் பயணத்திட்டமென தெரிகிறது. நண்பர்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
அடியேனின் இணையப் புழக்கம் மிகக் குறைவு என்பதால் ரோஸ்விக், சிங்கை நாதன், கோவி. கண்ணன், ஜோசப் பால்ராஜ் தவிர பிற நண்பர்கள் எவரெல்லாம் சிங்கையில் இருக்கிறீர்கள் என்பதறியேன். உங்களை எங்கனம் சந்திப்பது?! எப்படி தொடர்பு கொள்வது?! இப்பயணத்தை சிக்கலின்றி முடிக்க உங்கள் ஆலோசனைகள் ஆகியனவற்றை வரவேற்கிறேன். இந்திய தொடர்பு எண்கள்: 9003931234 / மின்னஞ்சல்: k.selventhiran@gmail.com
தவிர, சந்திக்க வரும் நண்பர்களுக்கு தமிழின் மிக முக்கியமான சிந்தனையாளர் ஒருவர் எழுதிய நூலினை அன்பளிக்க திட்டமிட்டிருக்கிறேன் :)
Comments
varumpothu gopal palpodi pocket onru vaangi varavum. nandri.
மெயில்ல நம்பர் அனுப்புறேன் . 25 ஆம் தேதி சந்திப்போம்.,
அட் லீஸ்ட் ஒரு பத்து நம்பராவது எதிர்பார்த்தேன். சப்புன்னு ஒரு நம்பர் கொடுக்குறீங்க.
Under the Singapore law, you are required to open, unpack and pack your baggage when the checkpoint officer wishes to conduct an examination of your baggage. This is to give you full control over the entire proceeding. You can determine the manner of the opening, unpacking and packing of your personal belongings. This would also prevent any unintentional damage to your baggage or belongings.
http://ica.gov.sg/page.aspx?pageid=97&secid=94
http://ica.gov.sg/page.aspx?pageid=106