
கோவை சுகுணா கல்யாண மஹாலில்
அக்ரி எக்ஸ்போ-07 எனும் பிரம்மாண்ட விவசாயக் கண்காட்சி இன்று (29-06-07) முதல் நான்கு தினங்கள் நடைபெற இருக்கிறது. பூச்சிமருந்துகள், உரங்கள், விதைகள், விவசாய கருவிகள், பண்ணை கருவிகள் உற்பத்தியாளர்களின் எண்ணற்ற ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளது. இன்று காலை முதல் கோவை, ஈரோடு வட்டார விவசாயிகள் படையெடுத்த வண்ணம் இருக்கும் இக்கண்காட்சியில் ஸ்டால் எண் டி-44ல் பசுமை விகடன் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய இதழ்கள் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
Comments