என்னுடைய வாழ்த்து செய்தி!
"நாட்டிலோ, வீட்டிலோ நமக்கு வழங்கப்பட்டிருக்கிற சுதந்திரங்கள் தனித்த வரம்புகளை உடையது. அதன் எல்லைகளை மீறுவோர் சுதந்திரத்தை இழக்க நேரிடும். உணர்ச்சிவசமிக்க தேசபக்தியை விட ஆபத்தானது எதுவும் இல்லை. அதனால் தேசத்திற்கும் பலனில்லை. உண்மையில் தேசத்தை யாரும் வளர்க்க முடியாது. அது தானே வளரும் தன்மை உடையது. அதன் வளர்ச்சிக்கு இடையூறு செய்யாமல் வேண்டுமானால் நம்மால் இருக்க இயலும். தனிமனிதனாய் அவரவர் கடமையை சரிவர செய்தால் தானும், தேசமும் உயர்வதை தத்தம் கண்களாலேயே உணரமுடியும். தன் கடமைகளை சரிவர செய்பவர்களை உரிமைகளும், சலுகைகளும் தேடிவரும் என்பதை உங்கள் வாழ்க்கையில் இருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். விவசாயத்தை கெடுக்கும் பார்த்தீனியத்தைவிடவும் கொடியது அலட்சியம். நம் கண்முன்னே நிற்கும் பெரிய சவால் தேசம் முழுவதும் பரவிக்கிடக்கும் அலட்சியம் எனும் பொதுஎதிரியை விரட்டி அடிப்பதுதான். விரட்டி அடிக்க முயற்சிப்போம். வந்தேமாதரம். சுதந்திரதின வாழ்த்துக்கள்!"
Comments
விவசாயத்தை கெடுக்கும் பார்த்தீனியத்தைவிடவும் கொடியது அலட்சியம். நம் கண்முன்னே நிற்கும் பெரிய சவால் தேசம் முழுவதும் பரவிக்கிடக்கும் அலட்சியம் எனும் பொதுஎதிரியை விரட்டி அடிப்பதுதான்.
**********************************
செல்வேந்திரன் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.
உணர்ச்சிவசமிக்க matha unarvum manitha kulathaiyae vaeroda saaithuvida koodiya apaayakaramanathu...
porumai ...ethaiyum arivupoorvamaga seerthookipaarthal..pothuvana unarvu...pothu nanmai ponta nalla seyalkal vendum... kurippaka ethaiyum saaraamai..