நல்லா கேக்குறாய்ங்கய்யா டீடெய்ல்ஸூ.....!

கல்யாண வீடு. விருந்தில் பரிமாறப்பட்ட அத்தனை பதார்த்தங்களையும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டான் நம்ம அய்யாக்கண்ணு. கண்டபடி தின்று விட்ட அய்யாக்கண்ணுவால் இருந்த இடத்தை விட்டுக்கூட எழுந்திருக்க முடியவில்லை. பேசவே சிரமாய் இருந்தது. மூச்சு வாங்கியது. அவனது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட ஒருவர் 'ஏலே அய்யாக்கண்ணு... இப்படியாடே கண்டபடி திங்கறது... சரி வாய்க்குள்ள ரெண்டு வெரல விட்டு வாந்தியெடுலே சரியாய் போயிடும்' என்றார். அதற்கு அய்யாக்கண்ணு "யோவ் சுத்த வெவரங்கெட்டவரா இருக்கீறே.... ரெண்டு வெரல வைக்கிறதுக்கு இடம் இருந்தா... ரெண்டு பழம் சாப்பிட மாட்டேனாவேய்...!"

Comments

அந்த ஆள் நீங்கதான உண்மைய ஒத்துக்கோங்க :)
Unknown said…
அதானே!!!

:))
selventhiran said…
வாங்க வெங்கட்ராமன், கோபிநாத், விஜயன்.
அனுசுயா, இதெல்லாம் ரொம்ப ஓவரூ....
சொந்த அனுபவம் தானே?
//
அனுசுயா said...
அந்த ஆள் நீங்கதான உண்மைய ஒத்துக்கோங்க :)
//

எப்டிங்க இப்டி எல்லாம் கரிக்டா கண்டுபிடிக்கிறிங்க?
selventhiran said…
ரிஷான் செரீப், மங்களூர் சிவா, வருகைக்கு நன்றி, சிவா அனுசுயா இதுக்கு முன்னாடி க்யூ பிராஞ்ச்ல கொஞ்ச நாள் ஓர்க் பண்ணியிருக்காங்க