பெண் எப்போது அழகாகிறாள்?

ட்ரிங்....ட்ரிங்....

ஹலோ ராஜி சொல்லுமா...

எங்க இருக்கே?

ஆபிஸ்லதான்...

என்ன செஞ்சுகிட்டு இருக்கே?

சிஸ்டத்துல ஓர்க் பண்ணிகிட்டு இருக்கேன்...

ஆர்க்குட்ல மேஞ்சிகிட்டு இருக்கியா?

சே..சே... ரிப்போர்ட் ரெடி பண்ணிகிட்டு இருக்கேன்...

என்ன ரிப்போர்ட்?

ரெண்டு நாள் அபிசியல் டூர் போன ரிப்போர்ட்...

எப்ப முடிப்ப?

இன்னும் ஓன் ஹவர் ஆகும்

நேத்திக்கு என்ன சொன்னன்னு நிணைவிருக்கா?

இருக்குது... அஞ்சு மணிக்குள்ள கட்டாயம் வந்துடுவேன்

இப்பவே மணி நாலரை எப்படி வருவே?

அதான் வந்துர்றேங்கிறல்ல...

கிழிச்சே.... இப்படித்தான் போனவாரமும் சொன்னே என்ன நடந்திச்சின்னு தெரியுமுல்ல?

ஐயோ மா இன்னிக்கு கட்டாயம் இப்படி நடக்காது.... நீ இப்படி பேசிகிட்டே இருந்தா நான் ரிப்போர்ட்டை முடிக்க முடியாது....

இப்ப என்ன நான் போனை வைக்கனும்கிறீயா?

ஐயோ நான் அப்படி சொல்லல

வேற எப்படி சொன்ன?

நான் பேசினா ஒனக்கு கசக்குதுல்ல?

வேற எவகிட்ட இருந்து போன் வந்தாலும் மணிக்கணக்குல பேசுவ?

நான் கூப்பிட்டா மட்டும் ஒனக்கு ரிப்போர்ட்டு, டூர்னு ஆயிரத்தெட்டு வேலை வந்துடும் அப்படித்தான?

தலைப்பிற்கான விடை: "வாயை மூடிக்கொண்டிருக்கும்போது"

எத்தனையெத்தனைக் கேள்விகள்? கேள்விக்குறிகளின்றி ஏன் இவர்கள் வாசகங்கள் முடிவடைதில்லை? மூர்ச்சையடைய வைக்கும் இந்த கேள்விகளை ஆண்கள் விரும்புவதேயில்லையென இவர்களுக்கு எப்போதும் புரியும்?

Comments

சூப்பரு.
(அனுபவமா ?)
"தலைப்பிற்கான விடை: "வாயை மூடிக்கொண்டிருக்கும்போது""

ஹா ஹா 100% உண்மை, உண்மையை தவிர வேறு ஏதும் இல்லை!!
Jazeela said…
//எத்தனையெத்தனைக் கேள்விகள்? கேள்விக்குறிகளின்றி ஏன் இவர்கள் வாசகங்கள் முடிவடைதில்லை?// எல்லா பெண்களும் இப்படியல்ல. 'வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை'. சும்ம வேலை வெட்டியில்லாம சீரியல் பார்த்து கெட்டு போனவர்கள் மட்டும்தான் இப்படி :-)
Anonymous said…
சூப்பரு.
(அனுபவமா ?)

i don't think so.. but he might have come across with other's

my self never behaved like this
illaiya selva
அனுபவிச்சு எழுதியிருக்கீங்கப்பு.
பெண் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது அழகா இருக்கிறதா சொல்ல வறீங்களா?

இப்டி எல்லாம் கெளப்பிவிடாதிங்க ஆணியம் அது இதுனு சண்டைக்கு வந்திருவாங்க. உண்மைய எல்லாம் இப்டி பப்ளிக்ல பேசப்பிடாது
Anonymous said…
ஏதோ வெந்து, நொந்து போய் எழுதியிருக்கிற மாதிரி இருக்குது.
நான் பேசுனத ஒட்டுக்கேட்டு எழுதுன மாதிரியும் இருக்குது.
இருந்தாலும் நல்லாயிருக்குது.
நல்லாத்தான் எழுதறீங்க..
selventhiran said…
வெங்கட்ராமன், இப்படி பப்ளிக்காவா கேட்கறது?

'வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை// அட ஜெஸிலா சொல்றது நல்லாருக்கே

my self never behaved like this
illaiya selva // யாருங்க இந்த அணானி? பச்ச பயல குழப்புறீங்களே...

மங்களூர் சிவா, ரிஷான் வருகைக்கு நன்றி

வெயிலான், உங்க ஆளும் இதே சேம் பிளட் கேஸா?
உண்மைய சொன்னா கசக்கும்னு யாருங்க சொன்னது? அப்பப்ப இது மாதிரி, எப்பவாச்சும் இனிக்க கூட செய்யுது.

ஆமா, வீட்லயா இதெல்லாம் சொல்ல முடியும்? ஹி..ஹி
Anonymous said…
பச்ச பயல குழப்புறீங்களே...

ada paavee ennoda mobile la pesurappa ippadi pacha pulla mathiriya pesura... onna nambi.........
selventhiran said…
ஆழி, முகவை, அணானி வருகைக்கு நன்றி
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வேறு என்ன தான் செய்வார்கள் ? ஆண்கள் பாட்டுக்கு காலையில் அலுவலகம் சென்றால் இரவின் தொடக்கத்தில் இல்லம் திரும்புகிறார்கள்.
நேரம் முழுவதும் அலுவலக நண்பர்கள்.
பெண்கள் பாவம் !!!!!
Anonymous said…
//// வெயிலான், உங்க ஆளும் இதே சேம் பிளட் கேஸா?////

சேம்... சேம்....

கும்கியப் பாத்துட்டு திரும்ப இந்தப் பதிவ ரசிச்சுப் படிச்சு சிரிச்சுட்டு பின்னூட்டம் போடாம போனா எப்படின்னு தான்.....
selventhiran said…
சீனா மீண்டும் ஒரு முறை பதிவை படிக்கவும்.
Anonymous said…
:)))

எல்லாருமே இப்படி இருப்பதும் இல்லை.அவ்வளவுதான்.ஆனா செம காமெடியாக இருந்தது.இது உங்க சொந்த அனுபவமா?
//நான் பேசினா ஒனக்கு கசக்குதுல்ல?

வேற எவகிட்ட இருந்து போன் வந்தாலும் மணிக்கணக்குல பேசுவ?//

ஏதோ இடிக்குதே இந்த எடத்துல
அவர்கள் சொன்னதில் என்ன தவறு. தாய்க்குத்தானெ தெரியும் பிள்ளைகளின் அனுபவம். 270 நாள் கற்பத்தில் சுமப்பதால் உங்களது ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு நன்னாவே தெரியும். வழமைக்குமாறாக உங்களது செய்கைகள் மூலம் அவர்கள் எல்லாமே அறிந்துவிடுவார்கள்.தாயை ஒருபோதும் ஏமாற்றிவிட முடியாது. பிள்ளைகளின் செய்கைகளில் மாற;றம் நிகழ்கிறது என்றால் அவர்கள் அதற்குரிய காரணங்களை கண்டே பிடித்துவிடுவார்கள். நீங்கள் இப்படி பிளாக்கிலை எழுதி உங்கள் உழைச்சலை kaக்க வேண்டியது தான். அவா சொன்னதில் உண்மை இருக்கா இல்லையா? இருக்குத்தானே. அந்த ஒரு அழகு தான் தாய்.
selventhiran said…
துர்கா வருகைக்கு நன்றி.

புரட்சி எந்த இடத்துல இடிக்குது?

நளாயினி மேடம், கூடம் தெரியாம சாமி ஆடுறதுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? பதிவு அம்மாக்களை பற்றியதல்ல. உண்மையில் அம்மாக்களுக்கு இத்தனை கேள்விகள் தேவையுமில்லை. ஒரிரு கேள்வி அதற்கு வரும் பதில்கள் போதும் நிலைமையை கிரகித்துக்கொள்ள. மீண்டும் ஒரு முறை பதிவையும் பின்னுட்டங்களையும் படிக்கவும்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வேறு என்ன தான் செய்வார்கள் ? ஆண்கள் பாட்டுக்கு காலையில் அலுவலகம் சென்றால் இரவின் தொடக்கத்தில் இல்லம் திரும்புகிறார்கள்.
நேரம் முழுவதும் அலுவலக நண்பர்கள்.
பெண்கள் பாவம் !!!!!


ஓ..! இப்ப புரியிறது இப்ப புரியிறது. எனக்கு இந்த அனுபவமெல்லாம் இல்லை. வேலைக்கு போறதும் பிள்ளைகளை கவனிக்கிறதுமே போதும் போதும் என ஆகிறது.
தனியா வேலை வெட்டி ஏதுமே இல்லாத பெண்கள் எல;லாம் வீட்டில் இருந்thu என்ன பண்ணுவாங்கள் என அப்பப்போ நினைப்பதுண்டு. ஓ.. அதுவா இது. சரி சரி. ( விடுமுறை நாட்களில் நினைப்பதுண்டு.விடுமுறை நாட்கள் ஒரே போறிங்.)
பெருநாளும் அதுவுமா இன்னிக்கு செம சிரிப்பு. நன்றி செல்வேந்திரன்
நல்ல கேள்வி. அதற்கு மிகச் சரியான பதில்.