முடியலத்துவக் கவிதைகள்

பழங்காலத்தில் பல்சர் இருந்தது

அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்ககூடாது
என்னை உன்னிலிருந்து
அந்நியப்படுத்தியது எது?
இந்தக்கதவும் அறிவிப்பும் தானே

திப்பு கிழித்தெறிந்த வேங்கையின்
பேரப்புலி ஒன்று
இன்னும் வெறிகொண்டு திரிகிறது
வஞ்சம் தீர்க்க
அது பசித்தால்
பிஸ்கட் திங்கும் புலியாம்

பெருமழைக்கு பயந்த பெருச்சாளி
சமணகுகைக்குள் நுழைந்தது
மூலிகை வர்ணம் குழைத்து
வரையப்பட்ட நிர்வாண படங்களை பார்த்து
பெரும்பயம் கொண்டது பெருச்சாளி
ரப்பை பருத்த காவலர்
என் வண்டியை நிறுத்தி
தோசை ஏதேனும் இருக்கிறதாவென
சோதனை போடுகிறார்
அவரது சோதனையில்
என் கவிதைகள் சிக்காதிருக்கட்டும்
----------------------------------------
ஆதாம் கையில் கிடைத்த பால்பாயிண்ட் பேனா

பற்பல பிறவிகள் வாங்க
பிக்பஜார் செல்ல
நான்ஓடத்தில் ஏறினேன்
ரவுண்டானாக்களை கடக்க
திராணியில்லாத அந்த ஓடத்தின்
வெளிச்சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தது
பின் தொடர்ந்த ஆடுகள்
போஸ்டர்களைத் தின்றன
பிதாவே இவர்களை மன்னித்து
நன்றாக சமையுங்கள்

சிற்சில தவறுகள் செய்யுங்கள்
உபன்யாசகர் கெஞ்சிக் கேட்டுகொண்டார்
எவன் கேட்கிறான்
அவனவன் கையில் செல்போன்
அத்தனைபேரும் வேதவித்து

இன்னும் மிஞ்சியிருப்பது
இரண்டு ரொமாலி ரொட்டிகள்தான்
தொட்டுக்கொள்ள பஞ்சகவ்யமும்
தாகத்திற்கு இரண்டு நைல் ஷாம்பூ பாட்டில்களும்

உங்கள் குழந்தைகளுக்காக
கவலைகளை வாங்கி வைக்காதீர்கள்
மாறாக கவலைப்பட கற்றுக்கொடுங்கள்
பெருந்துன்பத்தின் வேர்களிலிருந்து
மூலிகை பெட்ரோல் கிடைக்கும்

அன்புத்தோழி ப்ரிவ்யூ ஷோவில்
காஸ்ட்ரோ குவிக்குவி விற்ற சுண்டலை
வாங்க எவனுக்கும்வக்கு இல்லை
ஜார்ஜ் புஸ்ஸூம் வந்திருந்தான்

சினிபிளெக்ஸ் தியேட்டர்களுக்குள்
அடைக்கப்பட்டிருக்கும் வெள்ளைப் பன்றிகள்
விடுதலையானதும்
நாம்பால்குக்கரை
அடுப்பிலிருந்து இறக்குவோம்

மனம் ஒரு குரங்கு
அதன் உடலெங்கும் சிரங்கு...
---------------------------------
பாதாள லோகத்தில் பானுப்ரியா

கசிந்து கொண்டிருந்த இசை
கயிற்றுக்கட்டில் மேல்
கட்டெறும்பாய் நகர்கையில்
குலுங்கி குலுங்கி அனைந்து போனது
தெருவிளக்குவெளிச்சம் இருந்த
வெளியெங்கும் இப்போது இசையை நிரப்பலாம்
அல்லது தோசையை திருப்பலாம்

அமெரிக்கா சென்ற அய்யோடியின் பிள்ளைகள்
அம்பரம்பாளையம் திரும்பி வந்த ஓரிரவில்
அய்யோடியின் கல்யாண வேட்டியில் ரத்தக்கறை
வயசுக்கு வந்திருப்பான்
அல்லது வத்தபொடி சிந்தியிருக்கும்

கடலைவாய்க்காரியை கலாய்க்கபின்
முன் நவீனத்துவம் போதவில்லை
எனதிருத்தக்க தேவர் டிரங்காலில் தெரிவிக்க
ஓட்டக்கூத்தர் நடு நவீனத்துவம் தேடி
பத்மாவுடன் பாங்காங் புறப்பட்டார்
நடுவழியில் பஞ்சரானது பஸ்

டிஞ்சர் வேண்டும்;
டிஞ்சர் வேண்டும் கதறியபடி ஓடி
எதிர்வந்த ஜம்போமாமி
மேல் மோதி விழுந்தான் மொக்கராசு
விழுவதற்கு முன் ஏன் டிஞ்சர்...?!
-------------------------------------

ஸ்பேனர்களின் தலையாட்டல்

நள்ளிரவுவரை நீளும்
நட்டடித்த கதைகளால்
புரண்டு படுக்கும் ரூம் மேட்டின்
போர்வை ஈரமானதற்குநானா காரணம்?

வகுப்பறையில் வயசுக்குவந்தவர்களின்
ஞாபகத்தில் எப்போதும் இருப்பது
எப்போதோ குடித்த பனங்கள்ளாகவும் இருக்கலாம்
அல்லது பரதேசிகளுக்குப் போட்ட பிச்சையாகவும் இருக்கலாம்

எச்சக்கலை கவிதைகள் தேடி
சில பன்னாட்டு நிறுவனங்கள்
என் கோமணத்தை அவிழ்த்துபார்த்தபோது
எட்டி நின்று வேடிக்கை பார்த்தவன்
சவுரவ் கங்குலி இல்லை

எப்போதும் இப்படித்தானா
எதிர்வீட்டு மாமி கேட்டபோது
மாமா இல்லாதபோது மட்டும்தான்
என பதில் சொல்லுமுன்பே
பறந்து போனதுபுளியமர காக்கை
எனவேதான் தோழர்களே
வீராப்பு பார்த்தவுடன்மோர் குடிக்கவும்...
-------------------------------------------------
முடியலத்துவம்

முந்தாநாள் அடித்தகஞ்சாவால்
மிஞ்சிய கிறுகிறுப்பின்
எஞ்சிய வார்த்தைகளைப்பிடித்துக்கொண்டு
சரயு நதிக்கரையோரம் நீந்திக்கொண்டிருந்தேன்
என் சக்களத்தி செத்துவிட்டாள்
கலோக்கியல் நடையில்
கருமாதிசெய்ய வேண்டும் என
சதிசாவித்திரி கலங்கியபடி
வந்தபோது பீறிட்டெழுந்தது
ஓரு கப்ஸா கவிதை
பின்நவீனத்துவத்தின் உள்ளிடற்ற
கரிபீயன் கல்லறை தீவில்
கபோதி ஒருவன்
காம்போதி பாடுகிறான்
ஞானமெனும் பெருங்கழுதை
கடன் வாங்கி திரிவதை
எதிர்வந்த யானை ஏளனம் செய்தபோது
சத்தியமாய் அவள் செத்துவிட்டாள்!
---------------------------------------

Comments

"முடியல" (???) த்துவம்.
உறுதியாக நம்புகிறேன்.
1. இவை பின் நவீனத்துவ கவிதைகள்.
2. சங்க காலப் பாடல்கள் புரிவது எளிது தான்.

எப்படி புரிஞ்சுக்கறதுன்னு சொல்லிக் கொடுத்தா, கூடவே வர இயலும்.
selventhiran said…
அரைபிளேடு:
வருகைக்கு நன்றி
முகவையார்:
முடியலத்துவம் என்பது தமிழ் கவிதை மரபில் மிக நவீன முயற்சிகளில் ஒன்று. வரும் காலங்களில் தமிழ் கவிச்சூழலில் முடியலத்துவம் முக்கிய இடம் வகிக்கும். தங்கள் வருகைக்கு நன்றி
கண்ணுவலிக்க படிச்சிட்டேன் சாமி ஆனா கடைசி வரைக்கும் ஒன்னும் புரியல :-(
Anonymous said…
கவுஜைகளின் புதுப்பிரிவுகள் வரவேற்கப்பட வேண்டியதுதான். வெளங்கிடும் :-) நல்லா இருங்கடே!

சாத்தான்குளத்தான்
என்னமோ சொல்ல வற்றீங்க
ஆனா சொல்லல

எதாவது நல்ல டாக்டரா ஒரு தடவை பாருங்களேன்.

இல்லைனா இத எல்லாம் படிச்சிட்டு நாங்க எல்லாரும் போக வேண்டியிருக்கும்
selventhiran said…
கோபிநாத், ஆசிப் மீரான், சிவா வருகைக்கு நன்றி....
Anonymous said…
ஆ.வி.யில் முடியலத்துவம் படிச்சேன்! கலக்குறீங்க..... வாழ்த்துக்கள்.
Anonymous said…
//ஆ.வி.யில் முடியலத்துவம் படிச்சேன்! கலக்குறீங்க..... வாழ்த்துக்கள்.
//

Especailly that nokia N23 one.. awesome.. :)

PK
selventhiran said…
வெயிலான், பிகே வருகைக்கு நன்றி! எல்லாம் வலையுலகம் தந்த உற்சாகமும் ஊக்கமும்தான் காரணம்.
sakthi said…
adakadavule ithuku per than unga dictionary la kavithaya????
Prince said…
Semaya irukku....!!!!!
பெருமழைக்கு பயந்த பெருச்சாளி
சமணகுகைக்குள் நுழைந்தது
மூலிகை வர்ணம் குழைத்து
வரையப்பட்ட நிர்வாண படங்களை பார்த்து
பெரும்பயம் கொண்டது பெருச்சாளி
ரப்பை பருத்த காவலர்
என் வண்டியை நிறுத்தி
தோசை ஏதேனும் இருக்கிறதாவென
சோதனை போடுகிறார்
அவரது சோதனையில்
என் கவிதைகள் சிக்காதிருக்கட்டும்

நல்லவேளை உங்கள் கவிதைக்குள்
அவர்கள் சிக்கவில்லை சிக்கியிருந்தால்
அவர்கள் நிலை என்ன ..............!!!! ஹி...ஹி ..ஹி ..வாழ்த்துக்கள் இன்னும் கவிதை எழுத முயற்சியுங்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள்
என் தளத்திற்கு ...........