ரிங்கரர்கள்
செல்போன் டவர்கள் மற்றும் செல்போன்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கம் மனிதர்களைப் பாதிக்கலாம் என்ற 'டெலிகம்யூனிகேஷன் எஞ்சீனியரிங் சென்டரின் ஆய்வறிக்கை வெளியான நாளிதழைக் கையோடு எடுத்து வந்திருந்தார் சிவசங்கர். மேற்படி நிறுவனம் டெலிகாம் துறையில் கீழ் இயங்கி வருகிறது. செல்போன் கதிரியக்கம் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் போன்ற செய்திகள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன என்ற போதும் இந்த முறை வெளியான செய்திகள் கொஞ்சம் அதிர்ச்சியூட்டுவதாகவே இருக்கின்றன. 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோரை இக்கதிர்கள் பெரிதும் பாதிக்கின்றன. தொடர்ந்து செல்போனை பல மணி நேரங்கள் உபயோகிப்பவர்களின் மூளைத் திசுக்கள் பாதிப்படையும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம். ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகிப்பதன் மூலம் அதனை ஓரளவு குறைக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாம் இதற்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை என்றும் 'மூளை' இருப்பவர்களுக்கானப் பிரச்சனைதான் அது என்றும் சிவசங்கருக்கு ஆறுதல் சொன்னேன்.
Comments