Friday, January 30, 2009

வெண்ணிலா கபடி குழு
'வெண்ணிலா கபடி குழு' எனக்கு மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. திருப்தி நல்ல படமொன்றை பார்த்ததால். மகிழ்ச்சிக்குக் காரணம் என் மனதிற்கினிய நண்பர்கள் சிலரின் உழைப்பில் உருவான படம் என்பதால். இந்தப்படத்தின் கதையும் களனும் முன்வந்த படங்களின் மெல்லிய ஞாபகத் தீற்றல்களை ஏற்படுத்தலாம். ஆனால் அவை தவிர்க்க முடியாதது. என் அபிப்ராயத்தில் ஒரிரு பொறுக்க முடிகிற லேசான குறைபாடுகளுடன் கூடிய மிகச்சிறந்த படம் இது. நாளை முதல் ஊடகங்களின் மஞ்சள் ஓளி இந்த வெற்றியாளர்களின் மீது ஒளிரும். அந்தக் களேபரங்கள் ஓய்ந்ததும் படம் எனக்கு ஏற்படுத்திய உணர்வுகளை எழுதலாம் என்றிருக்கிறேன். இப்போதைக்கு மிகுந்த பெருமையுடன் இந்த படத்தை என் சகபதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.

பின்குறிப்பு:

1) இந்தப் படத்தை நல்ல தரமான ஒலி அமைப்புள்ள தியேட்டரில் பாருங்கள். வாய்ஸ் ஓவரில் கேட்கும் கபடி மற்றும் கிராமிய விளையாட்டுப் போட்டிகளின் 'கமெண்ட்ரி' முக்கியமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கிறது.

2) கபடி என்ற தமிழ்மண்ணின் பாரம்பரியம் மிக்க விளையாட்டின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு சென்றால், நீங்களும் கபடி விளையாடிய உணர்வை அடைவீர்கள்.

13 comments:

Truth said...

வெண்ணிலா கபடி குழு அப்படின்னு ஒரு படமா? ரிலீஸ் ஆயிடிச்சா? ஆயிடிச்சுன்னா, பாத்துடுவோம் :-)

Anonymous said...

நானும் பார்க்கனும்னு நெனைச்சிட்டிருக்கேன் செல்வா.

செல்வேந்திரன் said...

ட்ரூத், அண்ணாச்சி வருகைக்கு நன்றி... மிஸ் பண்ணிறாதீங்க... நல்ல படம்.

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

தாமிரா said...

கண்டிப்பா பாத்துறலாம் தல.!

கும்க்கி said...

கண்டிப்பா பார்கனும்னு தோணுது..ஆனா தியேட்டரிலா...அவ்வ்வ்வ்வ்வ்.

Anonymous said...

செல்வா படம் சூப்பர். அந்த புரோட்டா திங்கர காமெடி சான்சே இல்ல....

அந்த ஹீரோவ தேவை இல்லாம கொன்னுருக்க வேண்டாம் .............

வெயிலான் said...

// மகிழ்ச்சிக்குக் காரணம் என் மனதிற்கினிய நண்பர்கள் சிலரின் உழைப்பில் உருவான படம் என்பதால் //

நிச்சயம் படம் பார்க்கிறேன். ஆனால் மேலே உள்ள தகவல் புதிதாக இருக்கிறது. நண்பர்களுக்கு என் வாழ்த்துகளையும் சேர்ப்பித்து விடுங்கள்.

குசும்பன் said...

இங்கே லூசு பசங்க ஸ்டார் வேல்யூ இல்லைன்னு ரிலீஸ் பண்ண மாட்டானுங்க அண்ணாச்சி!

நான் கடவுளும் ரிலீஸ் கிடையாதாம்:(

செல்வேந்திரன் said...

தாமிரா, கும்கீ, அணானி, குசும்பன் வருகைக்கு நன்றி.

வெயிலான், படத்திற்கு தன் வசனங்களால் வலிமை சேர்த்திருக்கும் திரு. பாஸ்கர் சக்தியும், படம் நெடுக பின்னணியில் ஒலிக்கும் விளையாட்டு வர்ணனைகளைப் பேசிய 'தேனி' ஈஸ்வரும்தான் அடியேனின் இனிய நண்பர்கள். 'தேனி' ஈஸ்வர் விகடன் வாசகர்கள் நன்கறிந்த ஓளி ஓவியர். வண்ணதாசன், நாஞ்சில் நாடன் தொடர் பத்திகள், கிருஷ்ணவேனி தொடர்கதை, கருவாச்சி காவியத்தின் முகப்பு அட்டை போன்றவற்றின் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரிச்சயமான கலைஞர்.

Namakkal Shibi said...

/நான் ரசிக்கும் பதிவர்கள்//

நீங்க பதிவுகளை ரசிப்பீர்களா அல்லதா பதிவர்களையா?

Namakkal Shibi said...

இத்திரைப்படத்தை உங்களோடு அருகில் அமர்ந்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு!

ஆனா அடிக்கடி டிரான்ஸ்லேட் பண்ணி சொ்்றேன் பேர்வழின்னு என் உயிரை எடுத்துட்டீங்க!

HY said...

செல்வேந்திரன்,
நல்ல படம் தான். ஆனா கடைசியில் முடித்தவிதம் சரியில்லை. ஒரு நல்ல அருமையான உணர்வோடு போயிட்டிருந்தது ..... ஆனா கடைசி இட்லியில் சிக்கிய வண்டு போல அந்த முடிவு மொத்த படத்தின் ருசியையும் ரசிக்கவிடாமல் செய்தது..... வண்டை தூக்கி போட்டு சாப்பிடுபவர்களுக்கு இது ok. இல்லை வண்டை ருசித்து சாப்பிடுபவர்களுக்கு இந்த படம் மிக அருமை.