எனவே மனிதர்களே...

மனிதர்களே, இன்னும் எத்தனை முறைதான் உங்களிடம் சொல்வது? என்னுடைய கோமணத்தை ஆராய வேண்டாமென்று .... உங்களுக்குத்தான் ஆண்கள், பெண்கள், பெரியவன், சிறியவன், மேலதிகாரி, போட்டி நிறுவனம் என்றெல்லாம் பாகுபாடுகள். என்னளவில் என் சுயத்தை மதிக்கின்ற, அன்பைப் பொழிகின்ற, மானுடத்தை மதிக்கத் தெரிந்த அத்தனை பேரும் என்னுடைய மனிதர்கள்தான். அவர்களோடு பழகுவதில் நான் மகிழ்கிறேன். நீங்களும் பழகினால் என்னிடத்தில் புகார் இல்லை. அவர்களோடு நான் கதைப்பேன், சிரிப்பேன், திரிவேன், முயங்கி கிடப்பேன், குடிப்பேன், புணர்வேன். அது என் தனிப்பட்ட சுதந்திரம். அது உங்களைப் பாதித்தால் என்னை சந்தித்து நேரில் சொல்லுங்கள். உங்கள் பேச்சை நான் கேட்டால் மகிழுங்கள் அல்லது என்னோடு மோதித் தொலையுங்கள். நானும் மகிழ்வேன். நாலு சுவற்றுக்குள் உங்களிடத்தில் சொல்ல வேண்டிய விடயங்களைகூட இந்த சூன்ய பெரு வெளியில் உரக்கச் சொல்லுமளவிற்கு நம் தகவல் தொடர்பு இருப்பதற்கு நான் காரணமில்லை என்பதை நீங்கள் உணரும்போது, எல்லா விதங்களிலும் உங்களை விட உயர்ந்து நிற்பேன். காரணம் உங்களைப் போல முகமுடிகளை அணிந்து திரிபவனல்ல நான். இருட்டில், தனிமையில், அதிகாரமிருக்கையில், வாய்ப்பு கிடைக்கையில் வெளிப்படும் உங்கள் குரூரத்தனங்களை நீங்களே அறியாமல் இருக்கிறீர்கள். நான் தெரிந்து வைத்திருக்கிறேன் அவ்வளதுதான் உங்களுக்கும் எனக்குமான ஒரே வேறுபாடு.

நான் வேறு எனது சல்லித்தனங்கள் வேறல்ல...... நான் சாமான்யன், நான் இப்படி இருப்பதில் எனக்கு பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை.

- பிரதியங்காரக மாசானமுத்து

Comments

Karthikeyan G said…
Full formல இருக்கீங்க போல.. :)
Unknown said…
யாரு இந்த ப்ரத்யங்கார மாசானமுத்து. இந்த ப்ரத்தியங்காரத்தை குழம்புல போடலாமா. போட்டா குழம்பு நல்லா வருமா?
selventhiran said…
விஜய், பிரதியங்காரகனை தெரியாமல் எப்படி தமிழ் எழுத்துலகில் இயங்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. கூகிளில் அவரைத் தேடிக் கண்டுகொள்ளுங்கள்.
Unknown said…
ஓ, அவரா நீங்க... மன்னிச்சிருங்கன்னா... ஆள் தெரியாம வெளையாடிட்டேன்... வீட்டுக்கு ஆட்டோல்லாம் அனுப்பிறாதீங்க...
selventhiran said…
விஜய் பிரதியங்கார மாசானமுத்துவின் நேர்காணல் எனது வலைப்பக்கத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது.