கேள்விகள்

பெயர் குறித்து...

மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில் முருகன், கணேசன், சுடலை, கருப்பசாமி போன்ற அதிகம் புழக்கத்தில் இருக்கிற தென்மாவட்ட பெயர்களை வைக்காமல் கொஞ்சம் 'யூனிக்'கான பெயரைப் பெற்றோர்கள் தேர்வு செய்ததால்.

கடைசி அழுகை...

பிரபாகரனின் மரணச்செய்தி கேட்டு

கையெழுத்து...

அது நாளுக்கொரு வேடம் போடுகிறது. பிடிக்கவில்லை.

மதிய உணவு...

சூடான சாதமும் அதை விட சூடாக மீன் குழம்பும்.

நட்பு குறித்து...

நானொரு நயவஞ்சகன். பெரும்பாலும் சுயலாபங்கள் கருதி.

குளியல்...

ஓடையில் அல்லது தாமரை பூத்த தடாகங்களில்

ஒருவரைப் பார்க்கும்போது எதை கவனிப்பீர்கள்?

நான் போலீஸ் அல்ல. எதையும் கவனிக்க மாட்டேன்.

பிடித்தது...

சக மனிதன் மீதான அன்பு

பிடிக்காதது...

பொறாமையும், பொய்யும்

துணையிடம் பிடித்ததும் பிடிக்காததும்...

பக்த மீராவைப் போன்ற அன்பு (இரண்டுக்கும் ஓரே பதில்)

அருகாமை குறித்த ஏக்கம்...

அப்பா

அணிந்திருக்கும் ஆடை...

முதுகுப்பக்கம் கிழிந்த வெள்ளை பனியனும், அதே நிற அரைக்கால் சட்டையும்

பாடல்...

'ஒரு வெட்கம் வருதே...வருதே...'

வர்ண பேனாவாக மாறினால்...

கடல் நீலம்

பிடித்த மணம்...

ஆரஞ்சு சுளையைப் பிரிக்கையில் வரும் மணம்.

நீங்கள் அழைக்கப்போகும் நபர்கள்...

யாரையும் அழைக்கப்போவதில்லை. காரணம் பல கேள்விகள் அபத்தம்.

பிடித்த பதிவு...

கார்க்கியின் குறும்படம்

பிடித்த விளையாட்டு...

கிரிக்கெட்

கண்ணாடி அணிபவரா...

இல்லை

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...

வாழ்க்கைக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் படங்கள்

கடைசி படம்...

பசங்க

பருவகாலம்...

மார்கழி

படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்...

'ஹூ வில் க்ரை வென் யூ டை'

டெஸ்க்டாப் படம்...

அடுத்த நல்லபடத்தை தாமிரா எடுக்கும் வரை

பிடித்த சத்தம்...

தப்புச் சத்தம்

பிடிக்காத சத்தம்...

'க்ரீச்..'

அதிகபட்ச தொலைவு...

மைசூர்

தனித் திறமை...

பதட்டமின்றி பொய் சொல்வது

ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம்...

குழந்தை தொழிலாளர்கள்

உள்ளிருக்கும் சாத்தான்...

காமம்

சுற்றுலா தலம்...

ஆபிஸ்

ஆசை...

எல்லோராலும் விரும்பப்படுபவனாக வாழ

மனைவி..
.
திருமணமாகவில்லை

வாழ்வு பற்றி...

'அறுபது வருட சமரசம்'

***
தாமிரா என் மீது கொண்டிருக்கும் அன்பின் அத்தனை சலுகையையும் எடுத்துக்கொள்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன். அவர் சொல்லி நான் செய்கிற முதல் காரியம் அனேகமாக இதுதான். 'ஆமூகி' பெயரிலேயே எழுத வலியுறுத்தியதன் மூலம் அவருக்கு பெருந்துரோகம் செய்த அவஸ்தை எனக்கு. தாமிரா என்ற பெயர்தான் அவருக்கு பொருத்தம்.

Comments

MSK / Saravana said…
//அடுத்த நல்லபடத்தை தாமிரா எடுக்கும் வரை//
//பதட்டமின்றி பொய் சொல்வது//

கலக்கல்..
MSK / Saravana said…
நீயா நானா -விற்கு வாழ்த்துக்கள்.. எழுதுவதை போலவே, நல்லாவும் பேசறீங்க.. குறிப்பாக "வேர்கள்", "யுவான்சுவாங்"
//தாமிரா என்ற பெயர்தான் அவருக்கு பொருத்தம். //
ரிப்பீட்ட்டேய்
//நானொரு நயவஞ்சகன். பெரும்பாலும் சுயலாபங்கள் கருதி.//

இதுதான் உண்மையானது .. வெகு சிலரே இதில் இருந்து விடுபட முடியும் ,
மற்ற அனைவரும் சுயலாபங்கள் கருதியே நட்பு பாராட்டுகிறார்கள்.
பட் பட்ன்னு போட்டு தாக்கிட்டிங்க ;)
எனக்கும் இந்த விளையாட்டு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனாலும் உன் நேர்மையான பதில்கள் கண்டு மகிழ்ச்சி :-)
iniyavan said…
முதலில் உங்களை எழுத கூப்பிட்டது நானா? இல்லை ஆமுகியா?
நறுக் பதில்கள்.
//பக்த மீராவைப் போன்ற அன்பு (இரண்டுக்கும் ஓரே பதில்)

அழகான பதில்கள்...
கேள்விபதில் எதார்த்தம் (முழு மனதில்லாமல் எழுதியதோ)
கேள்விகளை வேற நிறத்தில் போட்டிருக்கலாமே...

கார்க்கியின் குறும்படம்.. ஆவ்வ்வ்வ்..


இந்த ஆவ்வ்வ், நான் அந்தப் அப்டத்தில் வெறும் நடிகன் மட்டுமே.. கார்க்கி நடித்த குறும்ப்டம்ன்னு சொல்லுங்க.. ஏன்னா இயக்குனர் தானே முக்கியம்.. எப்பூடி?
சிறப்பான பதில்கள்...
இதனால் நாங்கள் தெரிந்து கொண்ட விசயம் என்ன?
//யாரையும் அழைக்கப்போவதில்லை. காரணம் பல கேள்விகள் அபத்தம்.//
:-)))
சுற்றுலா தலம்...

ஆபிஸ்\\


அட ...
Raju said…
இதுல எது கேள்வி ...எது பதில்.?
/
தனித் திறமை...
பதட்டமின்றி பொய் சொல்வது
/
கழுத்துல டை, கையில பை, வாயில பொய் இதுதான் மார்கெட்டிங் ஆளுக்கு அழகு இல்லையா??
:)

/
சுற்றுலா தலம்...
ஆபிஸ்
/
சேம் பிளட்
:))
RaGhaV said…
இப்படி, ஒரு திறந்த புத்தகமா இருக்கீங்களே.. எப்படி தல..?

:-))))
ரசனையான தடாலடி பதில்கள் எழுதிய விதம் பிடித்திருக்கிறது...
Sanjai Gandhi said…
இதுக்கு பதில் சொல்லாமலே இருந்திருக்கலாம். :)
சூப்பருங்க.
வெளிப்படையான உங்கள் பதில்கள் கவர்ந்தன.